அன்னையைக் கண்டு கொண்ட அந்தத் தருணத்தில்....!

The Mother left her physical body on 17th November in 1973
 

அறியாமல் இருந்த பொழுதிலும், புரிந்து கொள்ள முடியாத நிலையிலும் கூட ஸ்ரீ அரவிந்த அன்னையே! நீ இவனிடத்தில் காட்டிய பேரருளை என்னவென்று சொல்வது அம்மா!

பத்து அல்லது பதினோரு வயதுச் சிறுவனாக இருந்த போது, இவனது உடன்பிறந்தவன் ஒரு கல்லூரிகளுக்கிடையிலேயான போட்டியில் கலந்து கொள்வதற்காக பாண்டிச்சேரி ஜிப்மெர் கல்லூரிக்குப் போய் விட்டு, அப்படியே ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கும் போய் விட்டு வருகிறான். வரும்போது, சில புத்தகங்களையும் வாங்கி வருகிறான். அதிலே ஒரு புத்தகம். ஸ்ரீ அன்னையின் உரையாடல்கள்-கரடு முரடான மொழிபெயர்ப்பு, தவிர இவனுக்கோ கையில் கிடைக்கிற எல்லாவற்றிலும் தூய தமிழில் தன் பெயரை எழுதிப் பார்ப்பது தவிர புத்தகத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய சிந்தனை இல்லை.அந்தப் புத்தகத்திலும், இன்றைய அரசியல்வாதிகள் போல, தன் பெயரை முகப்பு, மற்றும் உள்ளே இரண்டு பக்கங்களில் பொரித்தாயிற்று.

அந்தப் புத்தகத்திலே உள்பக்கத்தில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் கருப்பு வெள்ளைப் புகைப்படம், அதைப் பார்க்கும் போதெல்லாம், "அட,.இவள் எங்க அம்மா போல இருக்கிறாளே" என்று தோன்றும். அடிக்கடி அந்தப் புத்தகத்தை எடுப்பதும், படத்தைப் பார்த்து, "இவள் எங்க அம்மா போலவே இருக்கிறாளே" என்று நினைப்பதும், ஒன்றிரண்டு பக்கங்களை சும்மா அப்படிப் புரட்டிப் பார்ப்பதும், இப்படியாக சில காலம்.

உண்மையில், இவனைப் பெற்ற அன்னையின் முக சாயலுக்கும், அந்தப் புகைப்படத்தில் இருந்த உருவத்திற்கும் சம்பந்தமே இல்லை.

ஸ்ரீ அரவிந்த அன்னையே இவனது அன்னையின் சாயலில் அடிக்கடி தோன்றி இருக்கிறார் என்பது இவனுக்குப் புரிய நீண்ட நாட்கள் ஆயிற்று.

இடையில், ஏகப்பட்ட சோதனைகள்.வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புரிந்து கொள்ளமுடியாமல், ஒரு சவலைப் பிள்ளையைப் போலத் தடுமாறி தடம் புரள இருந்த நேரத்தில் சத்குரு ஸ்ரீ சாதுராம் சுவாமிகளுடைய கருணைப்பார்வை இவன் மேல் விழ, அறுந்த பட்டம் போல இலக்கில்லாமல் காற்றடிக்கிற பக்கமெல்லாம் போய்க்கொண்டிருந்த நிலைமாறியது.

அதுவும் கொஞ்ச காலம் தான். மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிக் கொண்டு ஆட்டிப் படைக்க, ஊரைத்திருத்தப் புறப்பட்ட வெட்டிக்கூட்டத்தில் இணைந்து கொண்டு நாத்திகமும் பேச ஆரம்பித்தான் அவன். தொழிற்சங்கம், இடது சாரிச் சிந்தனைகள், நாத்திக வாதம், இப்படி ஏகப்பட்ட அடைசல்கள்.

சாதிக்க முடிந்தவன் சாதிக்கிறான்; முடியாதவன் போதிக்கிறான் என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள்.

உண்மைதான்.

தன்னையே ஒரு ஒழுங்கு, கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கத் தெரியாதவன், ஊரைத் திருத்தப் போகிறேன், சீர் திருத்தம் கொண்டு வரப் போகிறேன், புரட்சி செய்யப் போகிறேன் என்று சொல்லித் திரிவதை விட ஒரு அயோக்கியத்தனம் இருக்க முடியாது. இப்படி அயோக்கியர்களோடு அயோக்கியனாக கொஞ்ச காலம் இருந்த பிறகு, மறுபடி ஸ்ரீ அன்னையை அறிந்து கொள்ளத் தவிக்கும் ஒரு நேரமும் வந்தது.

மாற்றத்திற்கான விதை உள்ளே விதைக்கப் பட்டிருப்பது ஒருவாறாக புரிய ஆரம்பித்தது.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்னைச் சரண் அடைகிறேன்.

எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளிலேயே சமர்ப்பிக்கிறேன். இவை அனைத்தும் இறைவனது சித்தத்தின்படி இயங்க வேண்டிய கருவிகள். அறியாமையினால் இவை என்னுடையது என்று மயங்கி இருந்தேன்.

மயக்கம் தெளிவித்து என்னை வழி நடத்துவாய் தாயே!

மறுபடி மறுபடி உன்னைச் சரண் அடைகிறேன்.

உன்னைச் சரணாக ஏற்க மறுக்கும் இருண்ட பகுதிகள் மாற்றத்திற்குள்ளாகும் வரை இவனது சிறு முயற்சி வேண்டியிருப்பதும், 'கவலை கொள்ளாதே உன்னுடைய சிறு முயற்சியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்' என்று அபயமளிப்பதும் இப்படி எதுவானாலும் உன்னுடைய சித்தத்தின் படியே நடந்தேறட்டும்.
When I pine at misfortune and call it evil, or am jealous and disappointed, then I know that there is awake in me again the eternal fool.

What is this "misfortune" and why does it come?

"If you act in order to obtain a result and if the result obtained is not the one you expected, you call this a misfortune. As a general rule, any event that is unexpected or feared is considered by ordinary minds to be a misfortune. Why does this misfortune come? 

In each case the reason is different; or rather, it is only after the event that the need to explain things makes us look for reasons. But most often our evaluation of circumstances is blind and mistaken. We judge in ignorance. It is only later on, sometimes very much later on, when we have the necessary perspective and view the train of events and the overall results, that we see things as they really were. Then we perceive that what seemed bad to us was in truth very useful and helped us to make the necessary progress.

Sri Aurobindo describes the state of one who is sunk in ignorance and desire and who judges everything from the point of view of his narrow and limited ego as that of "eternal fool". To be able to understand and feel things correctly one must have a universal vision and be conscious of the Divine Presence and Will in all things and in all circumstances.

Then we know that whatever happens to us is always for our good, if we take the point of view of the spirit in the unfolding of time."
16 March 1960

(The Mother’s commentaries on Sri Aurobindo’s Thoughts and Aphorisms were given over a twelve-year period from 1958 to 1970 as oral replies to  questions submitted beforehand in writing by the students, teachers and disciples of the Ashram. All the Mother’s commentaries were spoken or written in French. We start with the first selection clubbed under ‘Knowledge’).

புகைப்படங்கள்,தரிசன நாள் செய்தி-- ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு, ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டிக்கு நன்றியுடன்!


 

கேள்வி பிறந்தது அன்று! நல்ல பதிலும் கிடைத்தது இன்று!கவியரசர் கண்ணதாசனின் இந்தத் திரைப்படப் பாடல் வரிகள் நினைவில் இழையோட, இது தொடர்பாக முந்தி எழுதிய பதிவொன்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

கேள்வி என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்,

"இங்கேயே, இப்போதே கூட விடை கிடைத்து விடலாம்! அது நாம் எவ்வளவு நம்பிக்கையோடும், ஆர்வத்தோடும் தேடுகிறோம் என்பதைப் பொறுத்தது மட்டுமே."

இறைவனது அருள், நாம் அறியாமலேயே, நம்மை ஒரு பேரருள் திட்டத்தின் படி நடத்திக் கொண்டே இருக்கிறது. நம்முடைய சம்மதம், அல்லது மறுப்பு எதுவானாலும் சரி, சூத்திரதாரியாக இருந்து நம்மை வழிநடத்திச் செல்லும் நாயகன் ஒருவன், நமக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து நடத்திக் கொண்டே இருக்கிறான்.

"
எங்கேயடா இருக்கிறான் உன் ஹரி?" என்று உறுமுகிறான் இரணியன்.

"
எங்கே இல்லை ஹரி? அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், இல்லை, இல்லை என்று நீங்கள் மறுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே, அந்தச் சொல்லிலும் இருப்பான்" என்கிறது குழந்தை பிரகலாதன்.

கதை சொல்லிகள், சுவாரசியத்திற்காக இப்படிச் சொல்கிறார்கள். பிரகலாதன், தூணில் இருக்கிறான் என்று சொல்லிவிட்டானே, எந்தத் தூண் என்று கூடச் சொல்லத் தெரியவில்லையே, அதனால் அங்கிருந்த எல்லாத் தூண்களிலும் எம்பெருமான் நிறைந்திருந்தானாம். அதில் ஒரு தூணை இரணியன் எட்டி உதைக்க, தூண் பிளந்து அங்கே சிங்கப் பிரானாய் எழுந்து அவனை முடித்தான். அங்கே எம்பிரான் எல்லாத் தூண்களிலும் எழுந்தருளினான் என்றது, கதை கேட்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. எல்லாத் தூண்களிலும், துரும்பிலும், அவனை இல்லை, இல்லை, என்று மறுத்துச் சொன்ன நாத்திக வார்த்தைகளிலும் அவன் அப்போது மட்டுமல்ல, எப்போதுமே இருக்கிறான்.

கதை சொல்லி, அதற்குள் ஒரு கருத்தையும் வைத்துச் சிந்திக்க வைக்கலாம் என்று தான் நம்முடைய முன்னவர்கள், நிறையச் சொல்லிப் போய் ருக்கிறார்கள். கதையை உல்டா அடிக்கக் கற்றுக் கொண்ட அளவுக்கு, உள்ளேருக்கும் கருத்தைத்தெரிந்து கொள்ள சோம்பல் கொள்ளும் ஒரு தலைமுறை பின்னால் உருவாகும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!!

கேள்வி பிறந்தது அன்று! நல்ல பதிலும் கிடைத்தது இன்று!

நீங்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில், இருக்கிறீர்கள்; சில சம்பவங்கள் நிகழ்கின்றன. பெரும்பாலும் நீங்கள் ஆசைப்பட்டதற்கு நேர்மாறாக, அல்லது இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதற்கு மாறாகத் தான் நடக்கும்.அப்படி நடக்கும்போது நினைத்தபடி நடக்கவில்லையே என்று ரொம்ப ஃபீல் பண்ணி, "இது மட்டும் இப்படி நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும், இது மட்டும் அல்லது அது மட்டும் இப்படி இருந்திருந்தால்......." என்று வருத்தப் படுவோமா, இல்லையா?

நாட்கள்,வருடங்கள் ஓடும். நிகழ்வுகளில் மறைத்து வைத்திருந்தது, மலர்ந்து வெளிப்பட ஆரம்பிக்கும். அனுபவம் உங்களைக் கொஞ்சம் முன்னேறச் செய்திருக்கும்இன்னும் அதிகமான விழிப்புணர்வுடன் இருப்பீர்கள், புரிந்து கொள்வதென்பது எளிதாக இருக்கும். திரும்பிப் பார்க்கிற போது, கவனித்துப் பார்த்தீர்களேயானால், முதலில் ஆச்சரியமாக இருக்கும், அப்புறம் சிரிப்புக் கூட வரும்! ஆரம்பத்தில்,எவையெல்லாம் மிக மோசமான அனுவவம் என்றும், சாதகமற்றதாகவும் தோன்றியதோ, அவைகளே பின்னால் திரும்பிப் பார்க்கையில், உண்மையில் நீங்கள் முன்னேறுவதற்குத் தேவைப் பட்டதாகவும், சிறந்ததாகவும் தெரிய வரும்போது சிரிப்பு வராமல் என்ன செய்யும்?

"உண்மையிலேயே, இறைவனது கருணை எல்லையற்றது" என்பதையறிந்து நன்றிசொல்லவும் தயங்க மாட்டீர்கள்!

கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!
அறிந்ததென நினைப்பதையும் நம்பாதே, அதுவும் ஏமாற்றும்!

இப்படி வாழ்க்கையில் பல முறை நடந்து அதைத் திரும்பிப்பார்க்கவும் செய்கிற தருணங்களில் தான், மனிதன் கண்மூடித்தனமாகவே இருந்த போதிலும்அறிவோடு செய்வது கூடக் கண்ணைக் கட்டுகிற மாதிரி இருக்கும் போதிலும் கூட, இறைவனது கருணை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.

"ஒவ்வொரு உண்மையும், அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறது"

எது எந்த நேரத்தில் எப்படி நடக்க வேண்டுமோ, அது உலகத்தில் அந்தந்தச் சூழலுக்கேற்றபடி நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதைத் தான், "ஒவ்வொரு உண்மையும், அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கி ருக்கிறது" என்று சொல்கிறோம். உண்மை எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது, அதை நாம்கண்டு கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தைத் தான் உண்மை வெளிப்படுவதற்கான நேரம் என்று சொல்கிறோம்.

ஏனென்றால், நம்முடைய பார்வை மிகக் குறுகியதாய் இருந்தது. நம்முடைய ஆசைகள், விருப்பு-வெறுப்புக்கள் பார்வையை மறைத்து விடும் போது, உண்மையை, உள்ளது உள்ளபடிக்கே பகுத்து அறிய முடியாது.

ஆப்பிள் பழுத்துக் காலங்காலமாகக் கீழே உதிர்ந்து கொண்டு தான் இருந்தன. ஏன் அப்படி கீழேயே விழ வேண்டும், இந்தப் பக்கமாகவோ, அந்தப் பக்கமாகவோ, இல்லை மேல்நோக்கியோ போகவில்லை என்பதில் எவரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை, ஐசக் நியூடன் வந்து அதைக் கவனித்துச் சொல்கிற வரை!  

ஆப்பிள் கீழே விழுவதற்கு புவியீர்ப்பு விசை தான் காரணம் என்கிற உண்மை வெளிப்படவும், ஒரு கால நேரம் வரவேண்டியிருந்தது.

ஒரு அதிசய நிலைக்குள் நுழைகிறோம் !

இப்படிக் கவனிக்கத் தொடங்கும்போதே, விவரிக்க ஒண்ணாத ஒரு அதிசய நிலைக்குள் நுழைகிறோம். வெளியே தெரிகிற தோற்றங்களுக்குப் பின்னால், இறைவனது கருணையை அறிந்துகொள்ளத் தலைப்படும்போது, முடிவு இல்லாததாய், எல்லா வல்லமையும் படைத்ததாய், எல்லாம் அறிந்ததாய், அனைத்தையும் திட்டமிட்டு, ஒழுங்குபடுத்தி, நம்மை வழி நடத்துவதாய் உணர்கிறோம்!

நாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, நமக்குத் தெரிந்து இருந்தாலும், இல்லையென்றாலும், ஒரு உன்னதமான லட்சியத்தை நோக்கி, இறைவனது கருணை நம்மை வழிநடத்திக் கொண்டே இருக்கிறது. இறை அருள் திறத்தையும், இறைவனோடு சேர்வதையும் அறியும் திறமே அது! இறைவனை அடைவதென்பதே அது!

அதற்கடுத்த நிலையில், ஒவ்வொரு செயலிலும் அசைவிலும் இறைவனது கருணையை உணர்வதாய், அற்புதமான வலிமையுடன், அதே நேரம் முழுமையானதும், அமைதியானதுமான எதனாலும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூடிய ஒரு ஆனந்த மயமான வாழ்க்கையைத் தொடருகிறோம்.

எந்த அளவுக்கு முழுமையான ஏற்புத் திறனுடன், முழுமையான ஈடுபாட்டுடன் ஒருவர் இருக்கிறாரோ, அந்த அளவுக்கு தெய்வீகச் செயலுக்கு எதிரான பூமியின் எதிர்ப்புத் தன்மை மறைந்து விடுகிறது. இதுவே தெய்வ சித்தத்தோடு நாம் ஏற்படுத்திக் கொள்ள முடிகிற கூட்டு.

அப்படிப்பட்ட நிலையில், இறைவன் என்ன செய்யக் கருதியிருக்கிறான் என்பதை அறிய முடியும்! அப்படிப்பட்ட விழிப்புணர்வில், அவனது சித்தத்தோடு இசைந்து செயல்படவும் முடியும்!

-ஸ்ரீ அரவிந்த அன்னையின் அமுத மொழிகள், அன்னை நூற்றாண்டு விழாத் திரட்டு, தொகுதி 8 பக்கம் 257-258 இலிருந்து -அடிப்படையாகக் கொண்டு எழுதியது. ஆங்கில மூலத்தைப் படிக்க இங்கே
The Divine does not want a partial and passing victory. His victory must be total and everlasting - that is why we have to endure and wait for the proper time to come. However, with faith and confidence, even the endurance becomes easy.”

The Mother 
  • White Roses, 6th Edition, 1999, page 141
ஸ்ரீ அரவிந்த அன்னையின் மகாசமாதி  தினத்தை ஒட்டி, இது ஒரு மீள்பதிவு 

ஒத்த ரூபாயுந்தாரேன்- ஒரு ஒன்னப்பத் தட்டும் தாரேன்!ஒத்த ரூபாயுந்தாரேன்- ஒரு ஒன்னப்பத் தட்டும் தாரேன் 
ஒத்துக்கிட்டு வாடி நாம ஓடைப் பக்கம் போவோம்!

என்று ஆரம்பித்து,

பத்து ரூபாய் தாரேன் பதக்கம் சங்கிலி தாரேன் 
பச்சக் கிளி  வாடி படப்புப் பக்கம் போவோம் 

மச்சு வீடு தாரேன் பஞ்சு மெத்தை போட்டுத் தாரேன் 
..................


இப்படி கணக்குப் பண்ணுகிற பசப்பு வாசகங்களைக் கொண்ட நாட்டுப் புறப் பாட்டு ஒன்றை, "நாட்டுபுறப் பாட்டு" திரைப்படத்தில் குஷ்பூ பாடி  ஆடிய பாட்டு அன்றைய நாட்களில் மிகவும் பிரபலம்!   

அதுவே இன்றைக்கு நடப்பு அரசியலுக்குப் பொருத்தமாக இருப்பது காலம் செய்த கோலம்!

ஆ! ராசா! என்று கேள்விப்பட்ட எவருமே மூக்கில் விரல் வைத்துத் திறந்த வாய் மூடாத அளவுக்குப் பெரும் தொகை ஊழலாக வெடித்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட், எப்படி இந்த மனிதரை இன்னமும் மந்திரியாக நீடிக்க விட்டிருக்கிறார்கள் என்று தன்னுடைய ஆச்சரியத்தைக் கேள்வியாக வைத்ததில் அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது, சி பி ஐ என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்கு இன்று நவம்பர் 15 அன்று பதில் சொல்லியாக வேண்டிய நிலை.

தணிக்கைத் துறை, ஸ்பெக்ட்ரம் 2G ஏலம் விடப் பட்டதில் நடந்த முறைகேடுகளில் அரசுக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடியில் இருந்து ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிட்டு நூற்றெட்டுப் பக்கம் கொண்ட தனது இறுதி அறிக்கையை அரசிடம் அளித்திருக்கிறது.  

இன்று திங்கட்கிழமை, இந்த அறிக்கையைப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தே ஆக வேண்டிய நிலைமை.

இதை விட மிகக் குறைவான, அல்லது அலட்சியப் படுத்தி விடக்கூடிய தம்மாத்தூண்டு தொகைக்காகவே சசி தரூர் பதவி விலகும்படி அறிவுறுத்தப் பட்டார். கொஞ்சம் கூடுதலான தொகைகளுக்காக வேறு காங்கிரஸ் அமைச்சர்கள் பொறுப்பாக்கப் பட்டு பதவியில் இருந்து விலக்கப் பட்டிருக்கிறார்கள். இப்படிச் செய்யப் பட்ட ஒவ்வொரு தருணத்திலும், காங்கிரஸ் தலைமை குறிப்பாக சோனியா காண்டி மற்றும் குடும்பத்தினர் இவைகளில் சம்பந்தப்படாத பரிசுத்தவான்களாகக் காட்டுவதற்கு முயற்சி நடந்திருக்கிறது. 

ஆ! ராசா! விவகாரம் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல் போல இருக்கிறது! 

சசி தரூருக்குக் கிடைக்காத சோனியா கடாட்சம் ராசாவுக்குக் கிடைத்தது. கூட்டணி தர்மம் என்று ஏதோ காங்கிரஸ் கட்சி தர்ம நியாயங்களுக்குக் கட்டுப் பட்ட கட்சி போலவும், ஆ! ராசா! தவறே செய்யாத நியாயவான் போலவும் நேற்று இரவு வரை காங்கிரஸ் கட்சியால் தாங்கப் பட்டார். வெறும் பதினெட்டு எம் பிக்களை வைத்துக் கொண்டிருக்கிற திமுக "மிக முக்கியமான கூட்டாளி" அந்தஸ்தை எதை வைத்து அடைந்தது என்பதை ஜெயலலிதா நகர்த்திய ஒரு துருப்புச் சீட்டுஅம்பலத்துக்குக் கொண்டு வந்தது. 

"ஆட்சி கவிழ்ந்து விடும் என்று நினைத்தால், நான் அந்தப் பதினெட்டு எம்பிக்கள் ஆதரவை, வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே பெற்றுத் தருகிறேன்" என்று ஜெயலலிதா பகிரங்கமாக அறிவித்த பிறகு, முக்கியத்துவம், கூட்டணி தர்மம் என்பதெல்லாம் எம்பிக்களின் எண்ணிக்கையில் இல்லை, வேறெங்கோ இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிப் போனது. ஜெயலலிதாவை மேடத்துக்குப் பிடிக்காது என்பது கூட முழு உண்மை இல்லை, பிடித்தது என்ன என்பதைக் கொஞ்சம் கோடிட்டுக் காட்டுவதாகக் கூட இருக்கலாம்!

அந்த வேறு எங்கோ என்பதென்ன என்பது புரியாதவர்கள், குஷ்பூ ஆடிப்பாடுவதை பார்த்து விட்டு, அதற்கப்புறமும் புரியவில்லை என்றால், பேசாமல் ஏதாவது இலவசத் தொல்லைக் காட்சியில் மானாட மயிலாட பார்க்கப் போய் விடுங்கள்!
கூட்டணி தர்மம் வெளியே தெரியவந்தால் இப்படித்தான் நாறுமோ?!

காங்கிரஸ் எந்த அளவுக்கு முதுகெலும்பு உள்ள கட்சியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளப் போகிறது என்பது இந்த வாரமே சூசகமாகத் தெரிந்து விடும். பீகார் தேர்தல் முடிவுகள் வெளி வருகிற இருபத்தைந்தாம் தேதி வரைக்கும் கூடக் காத்திருக்க வேண்டாம்!

ஒரு தொல்லைக் காட்சி நிகழ்த்தியில் சொல்லப்படும் பஞ்ச லைன் இது! 

ஒரே வார்த்தை, ஓகோன்னு வாழ்க்கை! 

இந்தப் பதிவில் சொல்ல வருவதும் ஒரே வரி தான்! 

காங்கிரஸ் கட்சியைத் தூக்கி எறியுங்கள்!

தூக்கி எறிந்தால், ஓகோன்னு வாழ்க்கை உயர்ந்து விடும் என்று பொய் சொல்வதற்காக அல்ல! இப்போதிருப்பதை விட இன்னும் கேவலமாகப் போய்விடாது என்பது மட்டுமல்ல, நல்ல மாற்றங்கள் வருவதற்கும் அதுவே தொடக்கப் புள்ளி என்பதற்காக!

காங்கிரஸ் கட்சி வெறும் கசங்கிப் போன காகிதப்பூ தான்! தூக்கி எறிவது, குப்பை கூளங்களற்ற அரசியலுக்கு முதல் படி. 

ஊழலில் புரளும் புள்ளிகள்! மிரளும் காங்கிரஸ்! கூட்டணி தர்மம்!


காங்கிரசைப் பற்றிப் பதிவெழுதாமல் ஒரு மாதமாவது இருக்க முடியுமா என்ற முந்தைய பதிவில் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் கேட்டிருக்கிறார்!

காங்கிரசுக்கு நெகடிவ் விளம்பரம் கூடக் கொடுக்கக் கூடாது தான்! ஆனால், இந்த தேசத்தைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிற நேரு பரம்பரைப் பிரபாவமாகக் காங்கிரஸ் இருக்கும்போது எப்படி அதைப் பற்றி எழுதாமல் இருக்கமுடியும் என்று எனக்குத் தெரியவில்லை.இங்கே வலைப் பதிவுகளில் எழுதுவதால் மட்டுமே, அதுவும் குறைந்த எண்ணிக்கையில் வாசகர்கள், பின்தொடர்பவர்கள் என்றிருக்கிற இந்த வலைப்பூவில் எழுதுவதால் என்ன ரிசல்ட் கிடைத்து விடப்போகிறது என்று கணக்குப் பார்த்துத் தான் எழுத வேண்டுமா என்ன!

இணையத்தில் கருத்தைப் பகிர்ந்துகொள்வதால் மிகப் பெரிய விளைவுகள் கிடைத்துவிடப்போகிறது என்று நம்பி எதையும் எழுதுவதில்லை. மனதில் சரி என்று படுகிற விஷயங்களை மட்டுமே இந்தப்பக்கங்களில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். சொல்லப்பட்டதில், நேர்மையற்றதாகவோ, தவறானதாகவோ எதுவும் இருந்தால், அதைத் திருத்திக் கொள்வதில் எந்தத் தயக்கமும் எனக்கு இருந்ததே இல்லை.

ஒரு கருத்துப் பரிமாற்றம், ஆரோக்கியமான விவாதம் நிகழ வேண்டும் என்பதற்காகவே, பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். பதிவுகளைப் படிக்க வரும் அத்தனை பேருமே தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பதிவு செய்வதில்லை, அல்லது ஒரு அர்த்தமுள்ள விவாதத்தை நடத்தவேண்டும் என்று முனைவதில்லை. தங்களுடைய மனதில் என்ன தோன்றுகிறது என்பதை, கூச்சமில்லாமல், பதிவில் பேசப்பட்ட விஷயங்களை விட்டு விலகாமல், பின்னூட்டங்களில் ஒரு ஆரோக்கியமான விவாதமாக, இந்தப்பக்கங்களில் நிகழவேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை, முந்தைய பதிவுகள் சிலவற்றிலும் சொல்லியிருக்கிறேன்.

ஸ்ரீராம் உபயத்தில், அந்த வேண்டுகோள்  இப்போது மறுபடியும்! வேண்டுகோளை மீள்பதிவாக வெளியிடக் காரணமாக இருந்த காங்கிரசை மட்டும் மறந்து விடலாமா? அதற்காக, மீண்டும் நினைவு படுத்திக் கொள்வதற்காக..............சிவப்புச் சேலை என்பது  ஒரு புத்தகம்!  

சிவப்புச் சேலை:வாழ்க்கையே அதிகாரத்தின் விலை! ( The Red Saree: When Life is The Price of Power)!

ஐ மு கூட்டணிக் குழப்பத்திற்குத் தலை தாங்குகிற சோனியா காந்தியின் கதையை ஜேவியர் மோரோ என்ற ஸ்பானிஷ் எழுத்தாளர், ஸ்பானிஷ் மொழியில் எழுதி இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்த பிறகு, அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியாகத் தயாராக இருப்பது காங்கிரசின் ஒப்பற்ற தலைவிக்கு தர்ம சங்கடத்தைத் தோற்றுவித்திருக்கிறது.  


ஏற்கெனெவே இந்தப் புத்தகம்  பிரெஞ்சு, இத்தாலிய, போர்த்துகீசிய மொழிகளிலும், பிரேசிலியன், கடலா மற்றும் டச்சு மொழிகளிலும் வெளியாகி விட்டதைப் புத்தக ஆசிரியரின் வலைப்பக்கங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறதுபுத்தகத்தின் முகப்பிலேயே " dialogues, conversations and situations found therein are the product of the author's own interpretation and do not necessarily reflect authenticity."  

உரையாடல்கள், சம்பவங்கள் எல்லாம் ஆசிரியர் புரிந்துகொண்ட விதத்தில் இருந்து உருவாக்கப் பட்டவை; அப்படியே அச்சு அசலாக நடந்ததாகச் சொல்லவில்லை என்று சொல்லி விட்டு இந்த அறுநூறு ப்ளஸ் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில், மோதிலால் நேரு, ஜவஹர், ராஜீவ், சோனியா என்று மேற்கத்திய வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு வசதியாக நடப்பைத் தொகுத்திருப்பதாக ஆசிரியர் சொன்னதை, காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை.  

சோனியாவின் புகழுக்குக் களங்கம் விளைவித்திருப்பதாக வழக்கறிஞர் நோடீஸ் அனுப்பப் பட்டிருக்கிருக்கிறது.

நோடீசை அனுப்பியிருப்பவர், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி! இந்தப் புள்ளி காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் மட்டுமல்ல  யூனியன் கார்பைடின் புதிய முக மூடியான டவ் கெமிகல்சின் வழக்கறிஞரும் கூட!  யூனியன் கார்பைடுக்கு வக்காலத்து வாங்குகிற காங்கிரசின் கோர முகங்களில் ஒருவர்.

காங்கிரஸ் கட்சி சிவப்புச் சேலையைக் கண்டு மிரள்கிற மாடு மாதிரி மிரளும்படிக்குப்  புத்தகத்தில் அப்படிஎன்னதான் சொல்லி
ருக்கிறாராம்?

1977 இல் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றவுடன் சோனியா, ராஜீவ் மற்றும் தன்  குழந்தைகளை  அழைத்துக் கொண்டு இத்தாலியில் குடியேற விரும்பினாராம்! அதே மாதிரி, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டவுடன் சோனியாவின் அம்மா போலோ மைனோவும், அக்கா அனுஷ்காவும் சோனியாவைக் குழந்தைகளோடு  இத்தாலியில் அவர்கள் சொந்த கிராமமான ஆர்பசானோவுக்கே குடிபெயர்ந்துவிடுமாறு வலியுறுத்தியதும் சொல்லப் பட்டிருக்கிறதாம்.

நேருவின் வீரப்பரம்பரை  வரலாற்றுக் கற்பிதத்துக்கு இப்படிச் சொல்லியிருப்பது, களங்கம் விளைவித்து விட்டதாம்! வீரத்தாய் இந்திரா பெற்ற வீரத் திருமகன் ராஜீவைத்  திருமணம் செய்து கொண்டதாலேயே வீராங்கனை ஆகிப் போன சோனியாவின் புகழுக்கு இந்தப் புத்தகம் குற்றம் கண்டுபிடித்துச் சொன்னதால், இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டுமாம்! மற்ற மொழிகளில் ஏற்கெனவே வெளிவந்த பதிப்புக்களுக்கு....?

அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை! ஓட்டை இருப்பது இந்தியாவுக்குள் மட்டும் தெரியக் கூடாது! அம்புட்டுத்தேன்!

ஜேவியர் மோரோ நன்றாகத் தான் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்! தன்னுடைய புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறவர்களிடம் அவர் முன் வைக்கும் கேள்வி இது தான்!

"ஏற்கெனெவே வெளியான புத்தகங்களில் இருப்பதைத் தான் நானும் சொல்லி
ருக்கிறேன். பரம்பரை என்ற புத்தகத்தில் ஜாட் ஆடம்ஸ் சொல்லி இருப்பது, பப்புல் ஜெயகர் எழுதிய இந்திரா காந்தி: அணுக்கமான சரிதையில் சொன்னது, அப்புறம் கேதரைன் பிராங்க்ஸ் எழுதிய இந்திரா நேரு காந்தியின் வாழ்க்கை இவைகளில் சொல்லிருப்பதன் அடிப்படையில் தான் நானும் சொல்லி ருக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்கு எதிராக எவரும் எதுவும் பேசவில்லையே!"


சாதாரண  சர்டிபிகேட் கோர்ஸ் படித்ததையே பெரிய பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோது ராஜீவுடன் காதல் கொண்டதாக இங்கே பில்டப் கொடுத்து சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கிறவர்களிடம், அம்மா சும்மா ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சாதாரணமான மனுஷிதான். கல்யாணம் பண்ணிக் கொண்டு வீட்டோடு மனைவியாக இருக்க விரும்பிய கதையை எல்லாம் எடுத்து விட்டால் தாங்குவார்களா?

காங்கிரஸ்காரர்கள் அடிக்கும் கூத்துக்களை, ஜேவியர் மோரோ தன் வலைப் பக்கங்களிலேயே சுட்டி கொடுத்து
காண்பித்திருக்கிறார்! காங்கிரஸ் காமெடியைத் தாங்கிக் கொள்ள முடிகிறவர்கள் போய்ப் படித்துக் கொள்ளுங்கள்!
இன்னும் கொஞ்சம் பொறுமை அவகாசம் இருப்பவர்கள், நம்மூர் சுப்பிரமணியம் சுவாமி தன்னுடைய வலைப் பக்கங்களில் ஜேவியர் மோரோ சொன்னதை விடக் கொஞ்சம் அதிகமாகவே சொல்லிருக்கிறார், அதில்  மூன்று பொய்கள் என்ற பகுதியை
இங்கே பார்க்கலாம்!

சொந்தக் கதையே காற்றில் பறந்து கொண்டிருக்கும்போது ஆ! ராசா விவகாரம் வேறுஇளித்துக் கொண்டிருக்கிறது !இந்த லட்சணத்தில் "கூட்டணி தர்மம்" பற்றிய தம்பட்டம் வேறு!

அதெல்லாம் இருக்கட்டும்! சேலையைப் பற்றிப் புத்தகம் எழுதினால் மிரளுகிற நேருவின் வீரப்பரம்பரை விசுவாசிகள், எங்கே போய் ஒளிந்து கொள்கிறார்கள் என்பதை ஹிந்து நாளிதழில் நேற்று  சுரேந்திரா வரைந்த இந்தக் கேலிச் சித்திரம், இவர்களை இன்னமும் விட்டு வைத்திருக்கிற இந்தியப் பிரஜைகள் அத்தனைபேரையும் சேர்த்தே கேலி செய்வதாக இருப்பதை கவனித்தீர்களா?

என்ன செய்வதாக உத்தேசம்?!மெய்ப் பொருள் காண்பதறிவு...!


Golden Drops of Light

Hidden in an earthly garment that survives,
I am the worldless being vast and free.
-Sri Aurobindo

March 1, 1914

“IT is in one’s own self that all the obstacles lie,

IT is in one’s own self that all the difficulties are found,

IT is in one’s own self that there is all the darkness and ignorance.

Were we to travel throughout the earth, were we to go and bury ourselves in some solitude, break with all our habits, lead the most ascetic life, yet if some bond of illusion held back our consciousness far from Thy absolute Consciousness, if some egoistic attachment cut us off from the integral communion with Thy divine Love, we would be no nearer Thee despite all outer circumstances.

Can any circumstances be considered more or less favorable? I doubt it; it is the idea we have about them which enables us to profit much or little by the lessons they give us.

O Lord, I implore Thee! Grant that I may be perfectly conscious and master of all that constitutes this personality, so that I may be delivered from myself and Thou alone mayst live and act through these multiple elements.


To live in Love, by Love, for Love, indissolubly united to Thy highest manifestation....


Always more light, more beauty, more truth!”

-The Mother
“Prayers and Meditations”

தமிழிலே ஒரே விஷயத்தை இரண்டு கோணங்களில் இருந்து எடுத்துச் சொல்லும்  அழகான முதுமொழிகள்  உண்டு:

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
 

"எண்ணம் போல வாழ்வு"

நம்முடைய துயரம், வறுமை, நோய் முதலான எல்லாம் வெளியில் இருந்தே வருவதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அது போலவே, மகிழ்ச்சி முதலானவையும் வெளியில் இருந்து வருவதாக எண்ணி மயங்கிக் கிடக்கிறோம். உண்மையில், சந்தோஷமோ, துக்கமோ வெளியில் இருந்து வருவதில்லை. தீது, நன்று எனப் பேதப்படுத்திப் பார்க்கிற எதுவும் நமக்கு வெளியிலிருந்து வருவதுமில்லை.

காளிப் பாட்டிலே பாரதி அருமையாகச் சொன்னான்:


"யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நீ நிறைந்தாய்!
தீது நன்மை எல்லாம் நின்றன் செயல்களன்றி இல்லை!"


இதுவரை இவனுக்கு இந்த நுட்பம் ஏனோ தெரியாமலே போயிற்று.  தன்னைச் சுற்றி உள்ளவர்களுடைய குறைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தருணத்திலும், தன்னுடைய முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல, இவனது அகத்தில் இருந்த அழுக்குத் தான் பிறரிடத்தில் இவன் பார்த்துக் கொண்டிருந்தது என்பது புரியாமலேயே போயிற்று.


தன்னைச் சுற்றியிருக்கிற உலகத்தைப் புரட்சிகரமாக சீர்திருத்தம் செய்யப் போகிறேன் என்று கிளம்பிய இவனுக்கு  சீர்திருத்தம் என்பது முதலில் தன்னிடத்தில் இருந்து தான் தொடங்குகிறது என்பது ஏனோ புரியவே இல்லை. புரட்சி என்று பகட்டான வார்த்தையில் சொல்லப் படுவது, ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவிலே நடத்திக் காட்ட வேண்டிய திருவுரு மாற்றம் என்பதோ, அப்படிப் பட்ட மாற்றம், வெறும் ஆவேசத்தினாலோ, வார்த்தை ஜாலங்களினாலோ, எதையோ ஒன்றை கரித்துக் கொட்டுவதாலோ, வெறுப்பை உமிழ்வதாலோ சண்டை, சச்சரவுகள், கலகங்கள், ரத்தக் களறிகளாலோ நிகழ்வதில்லை என்கிற உண்மையை ஒரு விதமாகப் புரிந்து கொள்ளவே  இவ்வளவு நாட்கள் ஆயிற்று.


உண்மையைத் தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை. அதிகப் பகட்டோடு வரும் பொய்கள் திசை திருப்புவதில் மயங்குகிற போது, எது உண்மை என்பதைப் புரிந்துகொள்வதில் மயக்கம் வருவது இயற்கைதானே!


அனுபவ சாத்தியமாகிற வரைக்கும், உண்மை என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத் தானிருக்கும் என்பதும், நிறையவே பட்டும், சுட்டும் கொண்ட பிறகு தான் புலப்பட தொடங்கியது.

"குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை" என்பது நிதர்சனமாகத் தெரியத் தொடங்கின நேரத்தில், பழைய பழக்கங்களில் ஊறிப் போன பிடிமானமும், வெளிச் சூழ்நிலைகளும் சேர்ந்து,'மாறப் போகிறாயா என்ன? ஒன்ணும் காமெடி கீமடி பண்ணலையே" என்று வடிவேலு ரேஞ்சுக்கு ரேக்கி விட்டுப் போய்க் கொண்டிருப்பதையும், கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்து கொள்ள முடிந்தது.


“Can any circumstances be considered more or less favorable? I doubt it; it is the idea we have about them which enables us to profit much or little by the lessons they give us.”

ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த பிரார்த்தனையை மறுபடி படிக்கிற போது தான் சில வெளிச்சக் கீற்றுக்கள் இருண்ட மனத்தின் ஏதோ ஒரு மாற மறுக்கிற பகுதியின் மேல் விழுவதை உணர முடிகிறது. 


பத்து வருடங்களுக்கு முன்னால் என்னுடைய இடத்தை அடுத்த மனைக்காரர் ஆக்கிரமித்து,  அந்தப் பிரச்சினையின் தன்மை பரிமாணம் என்ன என்பதே இப்போது தான் வெளிப்படத் தொடங்கி இருக்கிறது. காசு பணம் இருந்தால் எதைவேண்டுமானாலும் செய்து விடலாம் என்ற துணிவோடு ஒரு குடும்பமும் , காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு கும்பலும் சேர்ந்து கொண்டு கொக்கரிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பதற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை என்ற பலவீனம் ஒரு புறம், என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை ஒருபுறம், உதவமுன்வந்த சில மனிதர்களுமே கூட, ஒரு எல்லைக்கு மேல் எதையும் செய்ய முடியாமல் நின்று விடுவதையும், நியாயம் கேட்டு எடுத்திருக்கும் முயற்சிகள் ஒரு விதமான மந்தத் தன்மையோடு தொடர்வதையும் பார்த்த பிறகு,நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடுகிற என்னுடைய இயல்பை முதலில் சோதித்து, சரி செய்து கொண்டாக வேண்டியதை உணர்கிறேன்.

இந்தப் பிரச்சினை கூட, எனக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துவதற்காகவே வந்திருக்கலாம். என்னை சோதனை செய்து கொள்ளவேண்டிய ஒன்றை நினைவு படுத்துவதற்காக வந்திருக்கலாம்.

"என்னை எனக்கறிவித்தருள் செய்து" என்று விநாயகர் அகவலில் அவ்வைக் கிழவி சொல்லி வைத்ததற்கும் ஒரு விசேஷமான பொருள் இருப்பதை ஒருவிதமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உனது திருவடிகளைச் சரண் அடைகிறேன்.


எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

உனது ஒளியினால் இவனது அகமும், புறமும் நிறைவு செய்யப் படட்டும், உனது எல்லையற்ற கருணையினால், பழக்கங்களின் அடிமையாகவே இருக்கச் சோம்பிக்கிடக்கிற பகுதிகளும், உனது ஒளியினால் தூய்மை பெறட்டும்.

தடைகளை அகற்றுவாய் தாயே! த்ரிதேக சுத்தியை அருள்வாய்.

உனது சித்தப்படி இயங்குகிற கருவியாக இவனை ஏற்றுக் கொள்வாய் தாயே!


"உன்னை விட்டு ஒருபோதும் விலகி இருப்பதில்லை. ஏனென்றால் நானே நீ! நீயே நான்!" என்ற உறுதியை அளித்திருக்கிறாய்!"Look for the inner causes of disharmony much more than the outer ones. It is the inside which governs the outside."

The Mother

Words of The Mother, Vol.IIஸ்ரீ அரவிந்த அன்னையே! நீ கூட இருக்கிறாய் என்ற ஒரு நினைப்பே எவ்வளவு பெரிய வலிமையாக இருக்கிறது!! 

காங்கிரசுக்குத் தான் வெட்கம், சுரணை இல்லை! நமக்குமா....?சின்ன மீன்களைப் பலி கொடுத்துவிட்டுத் திமிங்கிலங்கள் தப்பித்துக் கொள்கிற அதிசயத்துக்கு இன்னொரு பெயர், நேரு குடும்பத்து வாரிசுகளால் வழி நடத்தப்படுகிற இந்திய ஜன நாயகம்! 

காங்கிரஸ் கட்சி மேலிடப் பார்வையாளரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ கே அந்தோணி, ஆதர்ஷ் சொசைடி ஊழல் தொடர்பாக விசாரித்து விட்டு  சி பி ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கட்சிக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்! 

ஊழல் அம்பலமாகிப் போன பின்னாலும் கூட, அசோக் சவான், தான் தவறே செய்யவில்லை என்றும் உண்மை விரைவில் வெளியே வரும் என்றும், காங்கிரஸ் உயர்ந்த தார்மீக நெறிகளைக் கடைப் பிடிப்பதாகவும் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் பாருங்கள், அங்கே தான் காங்கிரஸ் கட்சியின் லட்சணம் வாலறுந்த நரி மாதிரி, எல்லோருக்கும் அதன் உண்மையான யோக்கியதையைப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது!

கல்மாடி, சவான் இரண்டு பேர் மட்டும் தான் ஊழல் செய்தார்களா? 


இவர்களைப் பதவி விலகச் சொன்னதனால் மட்டுமே காங்கிரசும், சோனியா குடும்பமும் ஊழலற்ற பரிசுத்தவான்களாக ஆகிவிட முடியும் என்றால், இந்தக் கொடுமைக்கு வேறென்ன சொல்வது? 

ஆ! ராசா! என்று வாயைப் பிளந்து கொண்டே சும்மா  நின்றுவிட வேண்டியது தானா?! 

செய்வதெல்லாம் செய்துவிட்டு, சும்மாக் கொஞ்சம் இலவசங்களை அள்ளியிறைத்துவிட்டு, தப்பித்துக் கொண்டு விட முடியும் என்றால், அதற்குப் பெயர் ஜன நாயகம் தானா?


 


இந்த வீடியோவைப்பாருங்கள்! தலை குனிந்து நிற்க வேண்டியவர்கள், அரசியலில் தலையெடுக்கவே முடியாதபடி ஒதுக்கித் தள்ளப் பட வேண்டியவர்கள் எல்லாம் எவ்வளவு தெனாவெட்டாக நிற்கிறார்கள்!


காங்கிரசைத்  தலையெடுக்க முடியாதபடி, அழுத்தமான ஒரு பாடம் புகட்ட முடியாவிட்டால் இந்த தேசத்தை எவருமே காப்பாற்ற முடியாது!


இனிமேலும் நம்புவதில்லை! அங்கே சொன்ன மாதிரி இங்கேயும்....!435 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கும், நூறு உறுப்பினர்களைக் கொண்ட செனேட்டிற்கும் கடந்த செவ்வாய்க் கிழமையன்று நடந்த இடைத் தேர்தலில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெருத்த பின்னடைவை சந்தித்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தில், ஒபாமா மீது அமெரிக்க வாக்காளர்கள் கொண்டிருந்த பெருத்த நம்பிக்கையும் கூட பின்னடைவை சந்தித்திருக்கிறது. 

ந்தப் பின்னடைவிற்குத் தானே காரணம் என்று ஒரு தரமல்ல, நான்கு முறை  ஒபாமா ஒத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை! கோபத்தோடு கொந்தளிக்கும் வாடிக்கையாளர்களிடம் ஒரு விற்பனை மேலாளர்  உணர்ச்சி பொங்கப் பேசுவது போல ஒபாமா பேசியதாக இந்த செய்தி சொல்கிறது.பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி இப்படிப்பட்ட  சரிவை 1948 இல் தான் சந்தித்திருப்பதாகவும் இந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.

Yes We can! என்று நம்பிக்கையோடு ஆட்சியைப் பிடித்த ஒபாமா,சீரழிந்த அமெரிக்கப் பொருளாதாரத்தின் போக்கில் குறிப்பிடத் தகுந்த மாற்றம் எதையுமே செய்ய முடியாத நிலையில்,  ஜனங்களுடைய ஆதரவை வேகமாக இழந்திருக்கிறார். 

பொருளாதாரச் சீரழிவுக்குப் பெரிய அளவு காரணமாக இருந்த ரிபப்ளிகன் கட்சி, இந்த அதிருப்தியை, நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

ந்த வருடம் ஜனவரியில் எழுதிய ஒரு நாள் போதுமா என்ற இந்தப்பதிவில், ஒபாமா தொடர்ந்து ஜனங்களுடைய ஆதர
வை இழந்துவருவதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பேசியிருந்தது நினைவிருக்கிறதா?

காங்கிரஸ் சபைக்கு இதுவரை தெரிந்த முடிவுகளில், ஜனநாயகக் கட்சிக்கு 188, ரிபப்ளிகன் கட்சிக்கு 239, முடிவு தெரிய வேண்டியவை 8 என்ற எண்ணிக்கையில், காங்கிரஸ் ரிபப்ளிகன் கட்சியின் வசம் வந்து விட்டது.செனேட் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு 53 இடங்களும், ரிபப்ளிகன் கட்சிக்கு 46 இடங்களும், முடிவு தெரியாமல் ஒரு இடமும் இருப்பதாகக் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பார்த்த செய்தி தெரிவிக்கிறது.  


ந்த நிலையில் ஆசிய நாடுகளில் பத்து நாள் சுற்றுப் பயணமாக, அதில் முதல் மூன்று நாட்கள் இந்தியாவில் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிஷெல்  மற்றும் பரிவாரங்களுடன் வந்து மும்பையில் இறங்கியிருக்கிற செய்தியை தொலைகாட்சி செய்திகளில் பார்த்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க அதிபரின் இந்த வி
யத்தில், வெறும் வாயை மெல்லப் பழகி விட்ட ஊடகங்களுக்குக் கொஞ்சம் கலர் கலராகப் பஞ்சுமிட்டாயைக் கட்டித் தொங்க விட்டுக் காண்பிக்கிற மாதிரி, அமெரிக்க அதிபரின் "வரலாறு காணாத விஜயத்தைப் பற்றி" கதை விட ஒரு சான்ஸ் கிடைத்திருக்கிறது என்பதைத் தவிர, ஒபாமாவின் இந்த விஜயத்தினால் சொல்லிக் கொள்கிற மாதிரி எந்த ஒரு பயனும் கிடைத்து விடப் போவதில்லை!

பொதுவாகவே ஜனாயகக் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம், இந்தியாவுக்குத் தொந்தரவுதான்! அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையில், பாகிஸ்தானுக்கு இருக்கும் முக்கியத்துவம், இந்தியாவுக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனால், சீனாவிடம் பொருளாதார ரீதியாகத் தோற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவை முழுமையாகப் புறக்கணிக்க முடியாத சூழ்நிலையும் அமெரிக்காவுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நிர்பந்தம்.

தாஜ் ஹோட்டலில் தங்கி, தீவீரவாதிகளுக்கு ஒபாமா, ஒரு அழுத்தமான செய்தியைக் கொடுத்திருப்பதாக ஒரு சிரிப்புச் செய்தியைப் பார்க்க முடிந்தது.


ர்விங் வாலஸ் எழுதிய ஒரு புதினம், The Man. இந்தக் கதையின் விமரிசனத்தை இந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம் நினைவிருக்கிறதா? 

ந்த மாதிரி எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த ஒபாமாவின் அரசியல் இந்த இரண்டு ஆண்டுகளுக்கு சற்றுக் குறைவான காலத்திலேயே புஸ்வாணமாகப் போனதைப் பார்க்கும் போது சற்று வருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒபாமா, தான் எங்கே சறுக்கினோம் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படுவதாகவோ, இவர் தேறி விடுவார் என்று அமெரிக்க வாக்காளர்கள் நம்புவதாகவோ எந்த அறிகுறியும் இல்லை. இர்விங் வாலஸ் படைத்த அந்த உறுதியான ஆப்ரோ அமெரிக்கனைக் கற்பனையில் மட்டும் தான் பார்க்க முடியும் போல.


இனிமேலும் நம்புவதில்லை என்று அமெரிக்க வாக்காளர்கள் சொல்லிவிட்டார்களே!
 
மெரிக்க ஜனாதிபதியின் இந்த விஜயத்துக்கு அமெரிக்கா ஒரு நாளைக்கு இருபது மில்லியன் டாலர்கள் அல்லது சுமார் தொள்ளாயிரம் கோடி ரூபாய்கள் செலவு செய்வதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல, அமெரிக்கர்களுடைய தாராளத்துக்குப் பின்னால் என்னென்ன ஏமாற்றங்களை இந்த தேசம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது இன்னும் சிறிது காலத்துக்குள்ளேயே தெரிந்து விடும்.

இந்தப் பதிவில் சொல்லியிருந்ததை மறுபடி நினைவு படுத்திக் கொள்வது மிக மிக அவசியம் என்றே கருதுகிறேன்!

மீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை!

லிகளுக்கு, ஊசிப்போன வடையோ வெங்காயமோ எதுவானாலும், கருணையினால் வைக்கப் படுவது இல்லை.

யேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான்! அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு  திரும்புகிறான்!

தே மாதிரித் தான்!

மூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்!

சுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல!


ப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்?

ப்போதிலிருந்தாவது.---

லவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு !

லகத்  தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல்,

ங்கோ என்னமோ நடக்கிறது  எனக்கென்ன என்றிருக்காமல், சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு, பொறுப்போடு --- 

ருக்க முயற்சியை ஆரம்பிப்போமா! 

ப்படிப் பட்ட முயற்சியின் முதல் படி காங்கிரஸ் கட்சியை
முற்றொட்டாக நிராகரிப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை தானே!