ஒத்துக்கிட்டு வாடி நாம ஓடைப் பக்கம் போவோம்!
என்று ஆரம்பித்து,
பத்து ரூபாய் தாரேன் பதக்கம் சங்கிலி தாரேன்
பச்சக் கிளி வாடி படப்புப் பக்கம் போவோம்
மச்சு வீடு தாரேன் பஞ்சு மெத்தை போட்டுத் தாரேன்
..................
இப்படி கணக்குப் பண்ணுகிற பசப்பு வாசகங்களைக் கொண்ட நாட்டுப் புறப் பாட்டு ஒன்றை, "நாட்டுபுறப் பாட்டு" திரைப்படத்தில் குஷ்பூ பாடி ஆடிய பாட்டு அன்றைய நாட்களில் மிகவும் பிரபலம்!
அதுவே இன்றைக்கு நடப்பு அரசியலுக்குப் பொருத்தமாக இருப்பது காலம் செய்த கோலம்!
அதுவே இன்றைக்கு நடப்பு அரசியலுக்குப் பொருத்தமாக இருப்பது காலம் செய்த கோலம்!
ஆ! ராசா! என்று கேள்விப்பட்ட எவருமே மூக்கில் விரல் வைத்துத் திறந்த வாய் மூடாத அளவுக்குப் பெரும் தொகை ஊழலாக வெடித்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட், எப்படி இந்த மனிதரை இன்னமும் மந்திரியாக நீடிக்க விட்டிருக்கிறார்கள் என்று தன்னுடைய ஆச்சரியத்தைக் கேள்வியாக வைத்ததில் அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது, சி பி ஐ என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்கு இன்று நவம்பர் 15 அன்று பதில் சொல்லியாக வேண்டிய நிலை.
தணிக்கைத் துறை, ஸ்பெக்ட்ரம் 2G ஏலம் விடப் பட்டதில் நடந்த முறைகேடுகளில் அரசுக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடியில் இருந்து ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிட்டு நூற்றெட்டுப் பக்கம் கொண்ட தனது இறுதி அறிக்கையை அரசிடம் அளித்திருக்கிறது.
இன்று திங்கட்கிழமை, இந்த அறிக்கையைப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தே ஆக வேண்டிய நிலைமை.
இன்று திங்கட்கிழமை, இந்த அறிக்கையைப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தே ஆக வேண்டிய நிலைமை.
இதை விட மிகக் குறைவான, அல்லது அலட்சியப் படுத்தி விடக்கூடிய தம்மாத்தூண்டு தொகைக்காகவே சசி தரூர் பதவி விலகும்படி அறிவுறுத்தப் பட்டார். கொஞ்சம் கூடுதலான தொகைகளுக்காக வேறு காங்கிரஸ் அமைச்சர்கள் பொறுப்பாக்கப் பட்டு பதவியில் இருந்து விலக்கப் பட்டிருக்கிறார்கள். இப்படிச் செய்யப் பட்ட ஒவ்வொரு தருணத்திலும், காங்கிரஸ் தலைமை குறிப்பாக சோனியா காண்டி மற்றும் குடும்பத்தினர் இவைகளில் சம்பந்தப்படாத பரிசுத்தவான்களாகக் காட்டுவதற்கு முயற்சி நடந்திருக்கிறது.
ஆ! ராசா! விவகாரம் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல் போல இருக்கிறது!
சசி தரூருக்குக் கிடைக்காத சோனியா கடாட்சம் ராசாவுக்குக் கிடைத்தது. கூட்டணி தர்மம் என்று ஏதோ காங்கிரஸ் கட்சி தர்ம நியாயங்களுக்குக் கட்டுப் பட்ட கட்சி போலவும், ஆ! ராசா! தவறே செய்யாத நியாயவான் போலவும் நேற்று இரவு வரை காங்கிரஸ் கட்சியால் தாங்கப் பட்டார். வெறும் பதினெட்டு எம் பிக்களை வைத்துக் கொண்டிருக்கிற திமுக "மிக முக்கியமான கூட்டாளி" அந்தஸ்தை எதை வைத்து அடைந்தது என்பதை ஜெயலலிதா நகர்த்திய ஒரு துருப்புச் சீட்டுஅம்பலத்துக்குக் கொண்டு வந்தது.
"ஆட்சி கவிழ்ந்து விடும் என்று நினைத்தால், நான் அந்தப் பதினெட்டு எம்பிக்கள் ஆதரவை, வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே பெற்றுத் தருகிறேன்" என்று ஜெயலலிதா பகிரங்கமாக அறிவித்த பிறகு, முக்கியத்துவம், கூட்டணி தர்மம் என்பதெல்லாம் எம்பிக்களின் எண்ணிக்கையில் இல்லை, வேறெங்கோ இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிப் போனது. ஜெயலலிதாவை மேடத்துக்குப் பிடிக்காது என்பது கூட முழு உண்மை இல்லை, பிடித்தது என்ன என்பதைக் கொஞ்சம் கோடிட்டுக் காட்டுவதாகக் கூட இருக்கலாம்!

அந்த வேறு எங்கோ என்பதென்ன என்பது புரியாதவர்கள், குஷ்பூ ஆடிப்பாடுவதை பார்த்து விட்டு, அதற்கப்புறமும் புரியவில்லை என்றால், பேசாமல் ஏதாவது இலவசத் தொல்லைக் காட்சியில் மானாட மயிலாட பார்க்கப் போய் விடுங்கள்!
கூட்டணி தர்மம் வெளியே தெரியவந்தால் இப்படித்தான் நாறுமோ?!
காங்கிரஸ் எந்த அளவுக்கு முதுகெலும்பு உள்ள கட்சியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளப் போகிறது என்பது இந்த வாரமே சூசகமாகத் தெரிந்து விடும். பீகார் தேர்தல் முடிவுகள் வெளி வருகிற இருபத்தைந்தாம் தேதி வரைக்கும் கூடக் காத்திருக்க வேண்டாம்!
ஒரு தொல்லைக் காட்சி நிகழ்த்தியில் சொல்லப்படும் பஞ்ச லைன் இது!
ஒரே வார்த்தை, ஓகோன்னு வாழ்க்கை!
இந்தப் பதிவில் சொல்ல வருவதும் ஒரே வரி தான்!
காங்கிரஸ் கட்சியைத் தூக்கி எறியுங்கள்!
தூக்கி எறிந்தால், ஓகோன்னு வாழ்க்கை உயர்ந்து விடும் என்று பொய் சொல்வதற்காக அல்ல! இப்போதிருப்பதை விட இன்னும் கேவலமாகப் போய்விடாது என்பது மட்டுமல்ல, நல்ல மாற்றங்கள் வருவதற்கும் அதுவே தொடக்கப் புள்ளி என்பதற்காக!
காங்கிரஸ் கட்சி வெறும் கசங்கிப் போன காகிதப்பூ தான்! தூக்கி எறிவது, குப்பை கூளங்களற்ற அரசியலுக்கு முதல் படி.