சண்டேன்னா மூணு!பொருளாதாரம்! அரசியல்! நம்மூரில் படும்பாடு!

இங்கே பதிவுகளில் சேனல் விவாதங்களையே அதிகம் எடுத்துக் கொண்டு எழுதுவதாக நண்பர்களுக்கு கொஞ்சம் சலிப்பு, சந்தேகம் எழுந்திருக்கலாம்! எங்கள்Blog ஸ்ரீராம் ஒருவர் மட்டும் தான் சின்னச்சின்ன வீடியோக்களைத் தாண்டி மற்றவற்றைப் பார்ப்பதில்லை என்று சொல்லியிருக்கிறார். இருந்தாலும் சேனல் விவாதங்களிலும் கூட சமயங்களில் பல நல்ல விஷயங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஆனால் முழுமையாக அல்லது அர்த்தமுள்ள விவாதமாக நடப்பதில்லை என்கிற குறை எனக்கிருக்கிறது.


இந்த விவாதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்! சமீபத்தைய நிகழ்வுகளில் முக்கியமானதாக பொருளாதாரம் சார்ந்து, கல்விக் கொள்கை சார்ந்து சிலவிஷயங்களை விவாதிக்க எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணன் பொருளாதாரத்தில் சுணக்கநிலை பற்றி தெளிவாகவே பேச ஆரம்பிக்கிறார். ஆனால் தவறான அல்லது நடைமுறைக்கு உதவாத பல விஷயங்களைத் தீர்வாக வைக்கிறார். தினமலர் வெங்கடேஷுக்கு பொருளாதாரம், கல்விக் கொள்கை பற்றிய ஞானம் எவ்வளவு என்பது எனக்குத் தெரியவில்லை, அவர் ஒரு ட்ராக்கில் விவாதம் செய்கிறார். சேனல் நெறியாளருடைய ஞானம் படுசுத்தம், வாயைப்பிடுங்கி ஏதாவது சிக்குமா என்பதிலேயே கவனமாக இருந்து, வழக்கம்போல ஒரு தெளிவில்லாமலேயே விவாதம் முடித்து வைக்கப்படுகிறது. தமிழில் talk show /debate நடத்துவது எப்படி என்பது தெரியாமலேயே நடத்தப்படுகின்றன என்பது எனக்கிருக்கும் மனக்குறை. கொஞ்சம் முன்தயாரிப்புடன், குறைந்தபட்சத்தெளிவுடன் செய்யப்படவேண்டிய நிகழ்ச்சி, நடத்துகிறவர்களுடைய போதாமையினால் கேலிக்குரிய ஒன்றாக ஆகிவிடுகிறது.  

இந்த விவாதத்தின் துவக்கத்தில் Business Standard நாளிதழில் வெளியான ஒரு செய்தி: 42 பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதா தனியார்வசம் கொடுத்துவிடலாமா என்ற முடிவை மத்திய அரசு முதல் 100 நாட்களுக்குள் எடுக்க வேண்டிவரும் என்று நிதி ஆயோக் தரப்பிலிருந்து தகவல். பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்கவேண்டும் என்பதில் at what cost என்ற கேள்விக்குத் தெளிவான விடை தெரிந்தாக வேண்டுமே! மொத்தமே 10 மாணவர்கள் கூட இல்லை. ஆனால் அப்படி மாணவர்கள் இல்லாத அரசுப்பள்ளிகளை மூடக்கூடாது என்றால், அது யாருக்காக?  நண்பர்கள் இந்தக் கேள்விகள் மீதான தங்கள் கருத்தை முன்வைத்து இங்கே ஒரு பயனுள்ள விவாதமாக எடுத்துச் செல்வீர்கள் என்று நம்புகிறேன்.  
            

இங்கே அரசியல், அரசியல்வாதிகளிடம் சிக்கிக்கொண்டு என்ன பாடு படுகிறது என்பதை வெளிப்படுத்தும் படங்கள், செய்திகள்!
   



சிறுபான்மையினர் மீதான பாசம், ஓட்டுக்காகப் போடும் வெறும் வேஷம் தான் என்பதை தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் எப்போது புரிந்துகொள்வார்களாம்? 

இங்கே மத்திய அமைச்சரவையில் எந்தெந்த மாநிலங்களுக்கு பிரதிநிதிகள் இல்லை என்று மிக அபத்தமான வாதம்! வேறு உருப்படியான வேலை எதுவும் இல்லையென்றால் இதற்கு முந்தைய மந்திரிசபைகளையே எடுத்துக்கொண்டு, எந்தெந்த மாநிலம் எதனால் விடுபட்டது என்று ஒப்பிட்டுப் பார்க்கட்டுமே.
   

சதீஷ் ஆசார்யாவுக்கு லொள்ளு கொஞ்சம் ஜாஸ்தியாகி விட்டது! மம்தாவின் கரங்கள் கர்நாடகா வரை நீளாது என்ற தைரியமோ என்னவோ?!  

மீண்டும் சந்திப்போம்.
 

7 comments:

  1. ஆளாளுக்கு மோடி அரசு என்னென்ன செய்யவேண்டும் என்று தலையங்கங்களில் அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் அறிந்தவர்கள்!

    ReplyDelete
    Replies
    1. யோசனை சொல்வதில் தவறே இல்லை ஸ்ரீராம்! யோசனை சொல்வதற்கு முன் சம்பந்தப்பட்ட சப்ஜெக்டில் தங்களுடைய ஞானம் என்ன என்று ஒருகணம் யோசித்துப்பார்த்துவிட்டுச் சொன்னால் நன்றாக இருக்குமே!

      Delete
  2. இந்த யோசனைகளெல்லாம் யார் படிக்கப்போகிறார்கள்? உதாரணமா விகடன் போன்ற கட்சி சார்பு பத்திரிகைகள் சொல்வதை, அந்தக் கட்சி ஆட்களே சீரியஸா எடுப்பாங்களான்னு சந்தேகம்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லை! இங்கே ஆவி ஆசாமிகளைப் பற்றி பேசவில்லை. புதியதலைமுறை சேனலில் நடந்த ஒரு விவாதத்தில் அரசியல், பொருளாதாரம் இரண்டும் என்ன பாடுபட்டது என்பதைச் சொல்லியிருக்கிறேன். விவாதம் அரைகுறையாக முடிக்கப்பட்டதென்றாலும் முன்வைக்கப்பட்ட விஷயங்கள் முக்கியமானவை. அருள்கூர்ந்து வீடியோவை நேரமிருந்தால் பார்த்துவிட்டு, அதன்மீது கருத்தைச் சொல்லுங்கள்!

      Delete
  3. >>> யோசனை சொல்வதற்கு முன் சம்பந்தப்பட்ட சப்ஜெக்டில் தங்களுடைய ஞானம் என்ன என்று ஒருகணம் யோசித்துப்பார்த்துவிட்டுச் சொன்னால் நன்றாக இருக்குமே!..<<<

    ஞானம்!?...

    ReplyDelete
    Replies
    1. துரைராஜு சார்! கொக்கிபோட்டு இழுக்கிறீர்கள்! :-)))

      Delete
    2. துரை செல்வராஜூ சார்! பெயரைத்தட்டச்சியதில் பிழை! அருள்கூர்ந்து மன்னிக்கவும்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!