எது பொருளோ அதைப் பேசுவோம்! #அரசியல்

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? இப்படி வழக்குச் சொல் ஒன்றைக் கேட்டிருப்போம்! ஆனால் அரசியல்வாதிகளுக்கு அவையெல்லாம் கேட்காது  போல! நாடாளுமன்றத்தேர்தலில் பிஜேபி பயமுறுத்துகிற அளவுக்கு மேற்குவங்கத்தில் 18 தொகுதிகளில் வெற்றிபெற்ற பிறகு, 2021 சட்டசபைத் தேர்தல் பயம் மம்தா பானெர்ஜிக்கு வந்துவிட்டதையும், மே.வங்க  அசெம்பிளியிலேயே   பிஜேபியைத் தோற்கடிப்பதற்காக, இடதுசாரிகள், காங்கிரசுடன் சேர்ந்து செயல்படலாம் என்று சொன்னதையும் ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம்!  


இங்கே  கொஞ்சம் மம்தா செய்தது, செய்யத்தவறியது எல்லாம் பேசுகிறார்கள். ஆனால் மம்தா பானெர்ஜியின் அன்பு, அழைப்பு, எப்படிப்பட்டது என்பதை அனுபவபூர்வமாக அறிந்து வைத்திருக்கும் காங்கிரசும் இடதுசாரிகளும் இதைப்பற்றி என்ன சொல்கிறார்களாம்? மம்தா பானெர்ஜியின் புனர்வாழ்வுக்காக உழைக்கப்போவதில்லை என்று இடதுசாரிகள் புறந்தள்ளிவிட்டார்கள். வழக்கம் போல பிஜேபி, TMC இரண்டையும் ஒரேதட்டில் கூட்டாளிகளாகப் பார்க்கிற தவறு வெளிப்பட்டிருக்கிறது. காங்கிரசும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை! அவர்களுக்கு ராகுல் காண்டி குடைச்சலே பெரிதாகத் தெரிவதில், yes boss  yes boss என்று தாங்களும் தோல்விக்கு காரணமே என்று பஜனை செய்ய ஆரம்பம் செய்து வைத்திருப்பவர் மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத்! 


இங்கே கரண் தாப்பர், ஹிந்துஸ்தான் டைம்சின் வினோத் ஷர்மா, ஹிந்துவின்  முன்னாள் ஆசிரியர் முகுந்த் பத்மநாபன், The Wire தளத்தின் சித்தார்த்  பாட்டியா, பத்தி எழுத்தாளர் நிலாஞ்சன்  முகோபாத்யாய், CSDS இயக்குனர் சஞ்சய் குமார் இந்த ஐவரோடு எதிர்க்கட்சிகள் சரிகிறதா என்ற கேள்வியை, பிஜேபியை எதிர்க்க ஆளே இல்லையா என்கிற ஆதங்கத்தோடு விவாதிக்கிறார். கவனித்துக் கேட்க வேண்டிய விவாதம்! 

    
இந்தப்படம் என்ன பேசுகிறதாம்? ராஜ்யசபா எம்பியாகத் தொடர முடியுமா என்றே தெரியாத நிலையில் மன்மோகன் சிங்! 

மீண்டும் சந்திப்போம்.
           

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!