அரசியல் அயோக்கியர்களுடைய கடைசிப்புகலிடம் என்று ஜார்ஜ் பெர்னார்ட் ஷா சொன்னதில் ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் காலம் சேர்த்திருக்கிறது. அரசியல் கடைசிப் புகலிடமாக மட்டுமே அல்ல, அயோக்கியர்களுக்கு முதல் புகலிடமாகவும் ஆகிக் கொண்டிருக்கிறது என்பது தான் அது. சந்தேகம் இருந்தால் மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜியின் போக்கைக் கவனித்துப் பாருங்கள், போதும்!
மருத்துவர்கள் போராட்டத்தை இந்து முஸ்லிம் பிரச்சினையாக்க முயன்றது எடுபடாததால் மம்தா பானெர்ஜி வங்காளம் வங்காளிகளுக்கே என்று திடீரென்று மொழிவழிப் போர்க்குரல் எழுப்பியிருக்கிறார்! இதில் தவறென்ன இருக்கிறது என்று கூட உங்களுக்குத் தோன்றலாம்!காரணம் தமிழ்நாட்டில் இந்தமாதிரிக் கிறுக்குத்தனத்தை நீண்டகாலமாகவே பார்த்துக்கொண்டு வருவதால் இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறதென்று தான் தோன்றும். மேலே உள்ள வீடியோவைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள்! கொல்கத்தா உயர்நீதி மன்றம் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி நேற்று அறிவுறுத்தியிருக்கிறது. அடுத்த நாடகத்துக்கு மம்தா பானெர்ஜி என்ன ஸ்க்ரிப்ட் எழுதுகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
நம்மூர் நிலவரம் எப்படி? முகநூலில் ஒரு சாம்பிள் பார்த்து விடலாமா? தாக்கப்பட்டேன் என்று செய்தியாக்குகிறார் ஜெமோ
ஜெயமோகன் நேற்று இரவு கடை ஒன்றில் தரமற்ற பொருளைத் திருப்பித் தர சென்றபோது தாக்கப் பட்டிருக்கிறார்.கீழே தள்ளப்பட்டு காலால் உதைக்கப் பட்டிருக்கிறார்.சிறிய காயங்கள் உள்ளன.தாக்கியவர் வீட்டுக்கு வந்து அருண்மொழியையும் சைதன்யாவையும் மிரட்டி இருக்கிறார்.மிரட்டுகிறவர் 'நீ கதை எழுதறவன் தானே?'"என்று எகத்தாளமாக பேசியிருக்கிறார்.சைதன்யா மிகவும் பயந்து போயிருக்கிறாள்.ஜெயமோகன் இரவு முழுவதும் அலைக்கழிக்கப் பட்டிருக்கிறார்.லட்சுமி மணிவண்ணன் மட்டும் உடன் இருந்திருக்கிறார். இன்று காலை நானும் தயாளனும் விஷயம் அறிந்து ஆசாரிப் பள்ளம் மருத்துவ மனைக்கு சென்றோம்.கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்.வழக்கு பதியப் பட்டிருக்கிறது.
Jaroon Sylus மளிகை கடையில லைட்டா அடிச்சாங்க.. 😪
இணைய வெளியில் வெய்ட்டா அடிக்கிறாங்க..😭
#புளிச்சமாவு #ஜெமோ
இணைய வெளியில் வெய்ட்டா அடிக்கிறாங்க..😭
#புளிச்சமாவு #ஜெமோ
நம்மூர் அரசியல் எல்லாம் அறிவாலயம், அதிமுக தலைமைக்கழகம், ஊடகங்கள் தாண்டி நாரோயில் தான் தீர்மானிக்கிறது போல!
ஆனால் மாரிதாஸ் போன்ற இளைஞர்கள், குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுகிற தமிழக அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் போல அல்லாமல் பரந்த பார்வையுடன் செய்திகளை அறிந்துகொள்ளத் தருகிறார்கள். இந்த வீடியோவில் பாகிஸ்தானிய பொருளாதாரம் ஏழே ஆண்டுகளில் திவாலாகிற அளவுக்கு வந்திருப்பதைப் பற்றி சொல்கிறார். தெரிந்துகொள்ளவேண்டிய சப்ஜெக்ட்.
தந்தி டிவிக்கு ஒரு பரிதாபமான நிலைமை வந்துவிட்டது உண்மைதான் போல இருக்கிறது. தமிழக சவால்களை சமாளிப்பாரா மோடி என்று விவாதிப்பதில் அர்த்தம் ஏதாவது இருக்கிறதா? ஒரு காமெடிக்காக வேண்டுமானால் 49 நிமிடம் ஒதுக்கிப் பாருங்களேன்!
பெங்களூரு IMA மோசடி குறித்து ஏற்கெனெவே இங்கே பேசி இருக்கிறோம் இல்லையா? அபிமான கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
கவலை வேண்டாம், மோசடியும் ஹலால் செய்யப்பட்டதுதான் என்கிறார். ஹலால் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் கூகிளில் தேடித் தெரிந்துகொள்ளலாம்.
இதுகூட சிலநாள் பழசுதான். ஆனால் நிலவரம் அப்படியே உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கிறது என்பது எத்தனை நாள் தாக்குப்பிடிக்கும்?
மீண்டும் சந்திப்போம்.
சுவாரஸ்யம்.
ReplyDeleteதினமலரில் ஜெமோ செய்தி படித்த போது
வெற்றிலை பாக்குக் கடை என்று படித்தேன்.
ஊதி ஊதி இவ்வளவு பெரிதாகிவிட்டதா.
மம்தாசுரியை அடக்க எந்த அவதாரம் வரவேண்டுமோ.
வாருங்கள் அம்மா! ஜெமோ பதிவுக்கு இங்கே லிங்க் இருக்கிறதே!
Deleteமம்தா பானெர்ஜியின் மமதையை அடக்க வாக்காளர்களே போதும். 1994உச்சநீதிமன்றத் கொட்டுக்குப் பிறகு ஆர்டிகிள் 356 அவ்வளவாக உபயோகிக்கப்படுவதில்லை