அரசியல் என்பது எதிர்பாராத திருப்பங்களால் ஆனது!

அரசியல் என்பது சற்றும் எதிர்பாராத திருப்பங்களால் ஆனது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், உண்மை என்னவோ கிட்டத்தட்ட அதுதான்! கர்நாடக அரசியலில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சில நிகழ்வுகள் கூட அதைத்தான் தெளிவாகச் சொல்கின்றன போல! முதலில் ராகுல் காண்டிக்கு பிறந்தநாள் பரிசாக மாநில காங்கிரஸ் கொடுத்திருப்பதாக கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா சொல்வது இப்படி!


மாநிலத்தலைவர்  வேணுகோபாலை பபூன் என்று சொன்னதற்காக கர்நாடக மாநில காங்கிரஸ்  MLA  ரோஷன் பெய்கை கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்து அதையே ராகுலுக்குப் பிறந்தநாள் பரிசாக! IMA Jewllery அப்பாவி முஸ்லிம்களை     நம்ப வைத்து ஆயிரக்கணக்கான கோடிகளை அபேஸ் செய்ததில் லம்ப்பாக 400 கோடி ரூபாயை லவட்டியதற்கான  நடவடிக்கை எதுவும் இல்லை என்பதை சேர்த்துப் பார்க்க வேண்டும். ஊழலும் காங்கிரசும் பிரித்துப் பார்க்க முடியாதவை என்பது புதிய செய்தி அல்ல. 


தேவே கவுடா திடீரென்று ஒரு ஸ்டன்ட் அடித்திருக்கிறார்.  அதாகப் பட்டது காங்கிரசோடு கூட்டணி வைத்தபோது மல்லிகார்ஜுன கார்கேவைத்தான் கூட்டணியின் முதலமைச்சராகவேண்டும், தனது  மகன் குமார சாமியை அல்ல என்று சொன்னாராம்!  காங்கிரஸ் களவாணிகள் இவரைவிடக் கில்லாடிகள்! முதல்வர் பதவியை குமாரசாமிக்குக் கொடுத்து விட்டு, வரும்படி வருகிற துறைகளை எல்லாம் காங்கிரசே வைத்துக் கொண்டிருப்பதில் சௌகரியம் என்னவென்றால் ஆட்சியைக் கவிழ்த்து விடுவேன் என்று குமாரசாமியால் மிரட்ட முடியாது! தேவே கவுடா பழைய கதையைப் பேசுவதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறது. 



பிப்ரவரியில் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ஒரே ஒருமுறை தான் ராணுவம் பதிலடியாக     பாலாகோட்டில் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை நடத்தியது. வாலாட்டிக் கொண்டிருந்த பாகிஸ்தான் வாலை  சுருட்டி வைத்துக் கொள்ள அதுவே போதுமானதாக இருந்தது. ஆனால், ராகுல் காண்டிக்கு தேர்தலில் மரணஅடி கொடுத்தபிறகும்கூட,அது  போதுமானதாக இல்லை என்பது மிகப்பெரிய பரிதாபம்.  


ஆந்திராவில் 4 தெலுகு தேசியக் கட்சியின் ராஜ்யசபா எம்பிக்கள்  பிஜேபிக்குத் தாவியது சந்திரபாபு நாயுடு மீது நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று வர்ணித்து இந்த விவாதம் தொடங்குவதில், ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. நவம்பர் 2020 இற்குள் ராஜ்யசபாவில் பிஜேபிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்றிருக்கிற நிலையில், பிஜேபி அவசரப்படுகிறதா என்ன?


ஜெயகுமார்கள் எச்சரிக்கை செய்தென்ன பலன்? துக்ளக் இதழில் அதிமுக மீதான விமரிசனங்கள் ஓய்ந்தபாடில்லை!


விஜயகாந்த் அரசியல்கட்சி ஆரம்பித்ததில்  இன்றைக்கு இப்படி சொத்துக்கள் ஏலத்துக்கு வந்திருப்பது ஒன்று தான் கண்ட பலன்!  

மீண்டும் சந்திபோம்.    
     

8 comments:

  1. பாவம் விஜயகாந்த்!

    ReplyDelete
    Replies
    1. மச்சானை நம்பிக் கெட்டார் என்கிறார்கள் ஸ்ரீராம்!

      Delete
    2. மனைவியையும் என்று சேர்த்துக்கொள்ளலாம் கிருஷ் ஸார்.

      Delete
    3. விஜய்காந்த் இந்த நிலைமைக்கு வருவதற்கு மனைவி, மச்சான், மகன்கள் என்று அவர் கட்டை மீறிப்போய்விட்ட விஷங்கள் நிறைய இருக்கும்போலத் தெரிகிறது ஸ்ரீராம்! குடும்பத்தின் தலையீட்டில் அவருடைய நலம் விரும்பும் நண்பர்களை வெளியேற்றியதில் இருந்தே இந்தச் சரிவு தொடங்கி விட்டதாகவும் சொல்கிறார்கள்.

      Delete
  2. //மச்சானை நம்பிக் கெட்டார் என்கிறார்கள் ஸ்ரீராம்! //

    புரியவில்லை. மச்சான் தான் பி.ஜே.பி.யுடன் கூட்டுச் சேர வற்புறுத்தினாரா?

    வெந்த புண்ணில் ஏன் வேலைப் பாய்ச்ச வேண்டும்?..

    ReplyDelete
    Replies
    1. ஜீவி சார்! மச்சான் சுதீஷ் ஒரு அவசரக் குடுக்கை, திமுகவோடு சேரவே விரும்பினார் என்பது அரதப்பழசாகிப்போன செய்தி. இங்கே பேசிக்கொண்டிருப்பது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்றைக்கு வெளியிட்டிருக்கும் விஜய்காந்தின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறித்தானது. இது குறித்த அதிகத்தகவல்களை சுவாசிக்கப்போறேங்க தளத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

      Delete
  3. //திமுகவோடு சேரவே விரும்பினார் என்பது அரதப்பழசாகிப்போன செய்தி. இங்கே பேசிக்கொண்டிருப்பது.. //

    திமுகவுடன் சேர்ந்தவர்கள் எல்லாம் அவசரக்குடுக்கைகளா?.. சரியான காரியவாதிகள்.
    தேர்தல் கூட்டணிகளெல்லாம் அரசியல் கூட்டணி அல்ல என்பது தானே நிகழ் அரசியலின் பால பாடம்?..

    ReplyDelete
    Replies
    1. இதை இன்னொருவிதமாகவும் பார்க்கலாம் ஜீவி சார்! தன்னுடைய விருப்பத்தை தேதிமுக (பிரேமலதா & சன்) மீது திணிக்கிற அளவுக்கு சுதீஷ் பலம் வாய்ந்தவர் அல்ல. ஆனால் இங்கே பேசிக்கொண்டிருப்பது தேதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை பற்றி அல்லவே!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!