அடுத்தவீடு ஆந்திரா! YSRCPயின் நாடகத்தனமான அரசியல்!

இன்று முக்கியச் செய்திகளில் ஆந்திராவின் YSR காங்கிரஸ் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பகட்டான அறிவிப்புகளில் முதலிடம் வகிக்கிறார் என்பதில் சமீபகாலமாக ஆந்திர அரசியலுக்குப்  பழகிப் போன நாடகத்தனம் வெகுவாக முன்னுக்கு வந்து இளிக்கிறது. இதை ஜனரஞ்சகமான அரசியல் என்று வேறு வர்ணிக்கிறார்கள்! சாதிக்கக் கூட வேண்டாம், சாதிக்கப்போவதாக பில்டப் கொடுத்து, ஜனங்களும் அதை நம்பிவிட்டாலே போதுமானது  என்கிற அளவில் ஆந்திர அரசியல் காய்ந்து போய்க் கிடக்கிறது.    

துணை முதல்வர், துணைப்பிரதமர் என்ற பதவிகளுக்கு அரசியல் சட்டபூர்வமான அங்கீகாரமில்லை.  வெறும் அலங்கார வார்த்தை என்பதற்கு மேல் வேறொரு அர்த்தமும் இல்லை என்பதைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?  அதே மாதிரி, 30 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர்கள் மாற்றப்பட்டு, புதியவர்கள் அந்த இடத்துக்கு வருவார்கள் என்று அறிவித்திருப்பதில் விபிசிங், கருணாநிதி இவர்களையெல்லாம்  மிஞ்சிய சமநீதி, சமூகநீதி அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறதே, அதை முக்கியமாகக் கவனித்தீர்களா?   


எதற்கு இரண்டரை வருடங்கள்? ஜெகன் மோகன்ரெட்டி தவிர்த்து 150 MLA க்கள் இருக்கிறார்நேர கள். ஒவ்வொரு வருடமும் 30 MLA க்கள் மந்திரியாக என்றால் ஐந்து வருடங்களில் அத்தனை பேருமே மந்திரியாக இருந்து சாதனை செய்து விடலாமே! இப்படி யோசனை சொல்ல ஜெகன் மோகன் அருகே யாருமில்லையா?  இதைவிட சமத்துவம் யாராவது செய்து காட்டிவிட முடியுமா? இந்தக் கேள்வியை விட, தேர்தல் நேர வாக்குறுதிகளாக அள்ளி விட்ட எல்லாவற்றையும் நிறைவேற்றப் பணம் எங்கேயிருந்து வரும் என்ற கேள்விதான் முன்னுக்கு வந்து நிற்கிறது. அப்பாவிஜனம் எப்படிக் கேட்குமாம்?  
  

ஆந்திராவில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப் படும் என்று அறிவித்திருப்பது எந்த அளவுக்கு சாத்தியம்? இங்கே கொஞ்சம் அலசுகிறார்கள். 

ஜெகன் மோகன் ரெட்டி சாதனை நாயகனாக அறியப்படுவது கொஞ்ச காலத்துக்குத்தான்!

சாதித்துக் காட்டவேண்டிய சோதனைக்காலம் இனி ஆரம்பம் ஆகிறது!   

மீண்டும் சந்திப்போம்.

2 comments:

 1. // சாதிக்கக் கூட வேண்டாம், சாதிக்கப்போவதாக பில்டப் கொடுத்து, ஜனங்களும் அதை நம்பிவிட்டாலே போதுமானது //
  This was a copyrighted technique by BJP. Others cant master it.

  ReplyDelete
  Replies
  1. திரு ரஹீம்! பிஜேபியை அளவுக்குமீறி வெறுப்பதால் அவர்களை பற்றிய கண்ணோட்டமும் கொஞ்சம் அதீதமாகவே இருக்கிறது! இந்த விஷயத்தில் பிஜேபி அமெச்சூர்கள் என்றுதான் சொல்வேன்! ராஜசேகர ரெட்டி 2004 இலும் 2009 இலும் ஜெயித்து வந்த பின்னணியோடு, ஜெகன் ஓரம்கட்டப்பட்ட கதையை முழுதுமாக அறிந்தால் நீங்கள் சொன்னதை நீங்களே ஒப்புக்கொள்ளமாட்டீர்கள்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!