கரண் தாப்பர்! அதிர் ரஞ்சன் சௌதுரி! ராகுல் காண்டி!

இங்கே தமிழ் சேனல்களில் தொடர்ந்து நடிகர் சங்கத் தேர்தல் விவகாரங்களையே பேசிக் கொண்டிருக்கிற நேரத்தில் ஆங்கில சேனல்களில் என்னென்ன செய்திகளுக்கு முதலிடம் கொடுத்து விவாதிக்கிறார்கள் என்பதை ஒரு ரவுண்டு பார்த்து விடலாமா? 

பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வி வலுவாக இருந்த மேற்கு வங்கத்தில் இளம் மருத்துவர்கள் கொஞ்சம் கூடத் தயங்காமல் மம்தா பானெர்ஜி மாதிரி ஒரு சர்வாதிகாரிக்கு ஒருவார கால வேலைநிறுத்தத்தில் தெளிவான பதிலைத் தந்திருக்கிறார்கள். ஆனால் TMC எம்பி சௌகதா ராய் வேறு மாதிரி சமாளிக்கிறார். நீண்டகாலத்துக்குப் பிறகு, கரண் தாப்பருடைய கூர்மையான கேள்விகளைப் பார்க்கமுடிந்த விவாதம் இது என்பது கூடுதல் சுவாரசியம்!


பொதுவாக வக்கீல்கள், மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்வதில் அவ்வளவாக உடன்பாடு இல்லாத முன்னாள் தொழிற்சங்கவாதி நான்! இந்த வேலைநிறுத்தத்தையுமே கூட புருவ நெறிப்புடன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தவன், இங்கே பதிவுகளிலும் தொடர்ந்து பதிவுசெய்து  கொண்டிருந்தவன் என்பதை அறிவீர்கள். ஆனால் மம்தா பானெர்ஜி இந்த வேலைநிறுத்தத்தைக் கையாண்ட விதம் ஆரம்பத்திலிருந்தே தவறாக இருந்ததை கரண் தாப்பர் சரியாகவே கேள்விகளில் தெளிவுபடுத்தி இருக்கிறார். போராட்டம் வெளியாட்களால் தூண்டப்பட்டது, முஸ்லிம்களுக்கு வைத்தியம் பார்க்கக்கூடாதென்று பிஜேபி தூண்டுகிறது, வங்காளத்துக்கு வருகிறவர்கள் வங்காளத்தில் தான் பேசவேண்டும் என்று திசைதிருப்ப முயன்றதெல்லாம் பலிக்காமல், வெகுஜன அதிருப்தி அதிகமாகிக் கொண்டே வருகிறதென்பது மம்தாவுக்குப் புரிய வைக்கப்பட்ட பிறகுதான் சுருதி இறங்கி மருத்துவர்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அதன்பிறகே  வேலைநிறுத்தமும் கைவிடப் பட்டது. சௌகதா ராய்  தன்னுடைய கட்சித்தலைவியின் இமேஜை வெகுவாகவே தாங்கிப்பிடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்!  


முன்னாள் நக்சலைட் , இந்நாள் காங்கிரஸ்காரர், மார்க்சிஸ்டுகளையும் மம்தா பானெர்ஜியையும் எதிர்ப்பது ஒன்றைத்தாண்டி வேறொன்றையும் அறியாதவர் இன்றைக்கு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்குத் தலைவர்! அதிர் ரஞ்சன் சௌதுரி!  


இன்னொரு சுவாரசியமான விவாதம் மக்களவைக்  காங்கிரஸ் குழுவுக்குத் தலைவராக வங்காளத்திலிருந்து அதிர் ரஞ்சன் சௌதுரியை எதற்காக, எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்பது! அவருக்கு மம்தா பானெர்ஜியைப் பிடிக்காது! ஆனால் அவரை மாதிரியே பிடிவாதக்காரர் என்பதெல்லாமா தகுதி? சோனியாG சாய்சுக்கெல்லாம்  காரணம் கண்டுபிடித்து விடமுடியுமா என்ன?


இந்தச் செய்தி மூன்றுநாள் பழசுதான்! 164 இடங்களில் ஜெயித்து விடுவோம் என்று ராகுல் காண்டியை நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டார்களாம்! இசுடாலின் பிரதமராக முன்மொழிந்த போதே சுதாரித்திருக்க வேண்டாமா? 😏😒

மீண்டும் சந்திப்போம்.
  
         

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!