திராவிடம் போய் நிற்கும் முட்டுச் சந்தும் முட்டுக் கொடுக்கும் கூட்டாளிகளும்!

விகடன், ஒன் இந்தியா கும்பலுக்கு திடீரென்று அதிமுக மீது பாசம், ஓபிஎஸ் மகனுக்கு மந்திரிபதவி கிடைக்காத சோகம் என்று   நாடகம்  நடத்தக் கிளம்பிவிட்டார்கள். துக்ளக் இதழில் சத்யா வரைந்த கார்டூன் ஒன்று சாக்காகக் கிடைத்துவிட்டது. துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை,  பிஜேபியைத்  தூற்றுவதற்காகவே இந்த திடீர் அதிமுக பாசம் என்று கொண்டையை மறைக்கத்  தெரியாமலேயே நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  கார்டூன் என்னவோ நாலாதிசைகளிலும் நடக்கிற அரசியல் கூத்துக்களை சொல்கிற மாதிரித்தான் இருக்கிறது. என்றாலும் மந்திரிபதவிக்காக அதிமுக பிச்சை எடுக்கிற மாதிரி, எச்சில் இலைக்காகக் காத்திருக்கிற மாதிரி இடதுபுறம் முதல் படம் கேவலப்படுத்திவிட்டதாக இவர்கள் நீலிக் கண்ணீர் விடுகிறார்கள்.

திராவிட அரசியலின் அடித்தளமே  எங்கே  எழவு விழுந்தாலும் அதை வைத்து ஒரு ஒப்பாரி, பிலாக்கணம் பாடி அப்படியே அரசியல் செய்வதுதான் என்பதை, திராவிடக் கட்சிகளின் வரலாறு தெரிந்தவர்களுக்குத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை. இப்போது ஹிந்தி எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு என்று பழைய ஆகிவந்த எழவு அரசியலை மறுபடியும் கையில் எடுத்திருக்கிறார்கள்.

நீட் தேர்வில் வெற்றி பெறாததால் தற்கொலை - எதிர்மறை அரசியல் செய்யும் ஸ்டாலின் ஆவேசம்
மாநில பாடதிட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெறாதவர்கள் கூட தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள்...அதற்காக எந்த தேர்வும் வேண்டாம் என்பாரா...? எதிர்மறை அரசியல் செய்யும் ஸ்டாலின்.
ஏன் இந்த ஸ்டாலின் என்றாவது...மாணவ சமுதாயத்தை பார்த்து நம்பிகையூட்டும் விதமாக பேசியிருப்பாரா...?
ஸ்டாலின் போன்ற மக்கள் விரோத, எதிர்மறை அரசியல் செய்யும், மக்களுக்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைக்கும் தலைவர்கள் இருக்கும் வரை..இது போன்ற தற்கொலைகளை தவிர்க்க முடியாது.
மருந்துகளில் எப்படி காலாவதியான மருந்துகள் ஆபத்தோ...அது போல் தமிழகத்தில் மூளை காலாவதியான தலைவர்களால் எதிர்கால சந்ததிகளுக்கு ஆபத்து...
சிந்தனை வற்றிபோன தலைவர்களை புறம்தள்ளி..புதிய நற்சிந்தனைக்கு ஆதரவு தாருங்கள் என்கிறார் முகநூல் பகிர்வில்  


தமிழர்களுக்கு ஹிந்தி மட்டும் தெரிந்திருந்தால் மோடி ஒன்று அல்லது இரண்டு கூட்டங்களிலேயே தமிழ்நாட்டையும் தன்வசப்படுத்தியிருப்பார் என்கிறார் திருமா, சந்தேகமிருந்தால் வீடியோவை 5 நி 50 நொடிகளில் இருந்து பாருங்களேன்!  

திருமா காமெடி போக, இன்றைய காமெடி அரசியலாக! இரண்டு செய்திகள்! 


கிஷோர் கே சுவாமி அந்தநாட்களில் அதிமுக ஆதரவாளராக இணையதள திமுக சண்டியர்களோடு முகநூலில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தவர் என்ற அளவில் தெரியும்! இப்போது ட்வீட்டரிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் போல!
   
ஆயிரம் கிஷோர் கே சுவாமிகள் வந்தாலும் தமிழ்நாட்டின் ஆஸ்தான காமெடியன் வைகோ மாதிரி வருமா? வருமா?!
        
 

திராவிட மொழிக் கொள்கை - நீண்ட நாளைய கொள்கைத் திட்டம் - அனுபவரீதியாக ஏற்கப்பட்ட, பகுத்தறிவு வரைவுத் திட்டம்!
"நீ பார்ப்பான்/BC/SC யாராக வேண்டுமானாலும் இரு; காசு இருக்கா உன்னிடம்? போய் நல்ல CBSE/ இதர இந்தி கற்பிக்கும் தனியார் பள்ளியில் போய் இந்தி படித்துக்கொள்"
"நீ CBSE அல்லது இதர இந்தி கற்பிக்கும் தனியார் பள்ளியில் சேர வக்கில்லாத விளிம்பு நிலைச் சமூகமா? நீ படிச்சு என்னத்தைக் கிளிக்கப் போற?"
"அதிகபட்சம் 50 ரூபாய்க்கு ப்ளாட்ஃபாரத்துல விக்கற டி-ஷர்ட் வாங்கிப் போடுவ; 500 ரூபா முதல் தவணை கட்டி ஒரு டூ வீலர் வாங்கப் போற; ஒத்தைக் காதுல வளையம் மாட்டிக்கிட்டு, கழுவாத ஜீன்ஸை மாட்டிகிட்டு பைக்ல 'சர் -சர்'னு காலேஜ் பொண்ணுங்களை 'கரெக்ட்' பண்ணப் போற!"
"அம்மாவுடைய கம்மலை அடகு வச்சி எவனோ ஒரு நடிகன் கட்-அவுட்டுக்குப் பால் ஊத்தப் போற!"
"உனக்கு சயின்ஸோ, சரித்திரமோ, சரியான தமிழோ ஒரு மண்ணும் தெரியாது! 'நான் தமில் அண்டா'னு ழ,ல,ன,ண எந்த எழவும் தெரியாம பனியன்ல எழுதிகிட்டு சுத்தப் போற!"
"எவன் போராட்டத்தைத் தூண்டி விட்டாலும், எந்தக் கேள்வியும் கேட்காமல் பள்ளிக்கூடமோ, காலேஜோ மூடிவிட்டு வெளியே வரப் போற!"
"எதுவானாலும் 'மோடி ஒயிக'னு எதிர்க் கேள்வி எதுவும் கேட்காம பிரியாணிப் பொட்டலத்தை வாங்கிட்டு கோசம் போடப் போற!"
"உன்னை மாதிரி பசங்களுக்கு எதற்கு இந்தி? நீ என்ன இந்தி படிச்சு எதுனாச்சும் உருப்படியா வேலைக்குப் போகப் போறியா?"
"நாலாவது தலைமுறை - ஐந்தாவது தலைமுறை வாரிசு எவர் வந்தாலும் "வாழ்த்த வயதில்லாமல் வணங்கி"- போஸ்டர் ஒட்டிகிட்டு இருக்கப் போறவன் நீ! இந்தி படிச்சு என்ன பண்ணப் போற?"
"இதோ எங்க திராவிட மேட்டுக் குடிகளிலேயே பலர் கண்ணும் கருத்துமா படிச்சு, இன்ஜினீயர், டாக்டர், ஆசிரியர்னு வெளிநாடுகள் உட்படப் போய் செட்டில் ஆகிட்டாங்க - அது போதும் எங்களுக்கு!"
"அவன் திராவிட மேட்டுக்குடி! நீ திராவிடன் ஆனாலும் சாதா 'டாஸ்மாக்' குடி! உனக்கு எதுக்கு நவோதயா? உனக்கு எதுக்கு மூணாவது மொழி? ஒரு கண்டக்கடர் வேலைக்கு வந்து, 'ரைட்..'னு சொன்னாக்க பஸ் போவும் - அந்த அளவு இங்கிலீஸே உனக்குப் போதும்! இருமொழித் திட்டமே ரொம்ப சிரமம் உனக்கு!"
"இப்படியே பயனில்லாமல் வாழ்க்கையை ஓட்டி, வாழ்க்கை முழுக்க வீணாக்கி நீ செத்தாய் என்றால் யாருக்கு லாபம்?"
"குறைந்த பட்சம் நீ வாழ்ந்ததற்கு ஒரே ஒரு நோக்கமாவது இருக்க வேண்டாமா? அதற்காகத்தான் தமிழுக்காக 'உயிரை விடு வா'- என்று உன்னை அறைகூவி அழைக்கிறோம்!"
"அதனால் தம்பி, மீண்டும் சொல்கிறோம் - எவனாகவோ இருக்கட்டும், பார்ப்பான் ரெட்டியாரு, பிள்ளைமார், கவுண்டரு,நாயுடு, SC,... எந்த சாதியாவோ இருந்துட்டுப் போவட்டும் - காசு இருக்கறவன் எதுலயோ சேர்ந்து எத்தனையோ மொழி படிக்கட்டும்"
"எள்ளுதான் எண்ணைக்குக் காயணும் - எலிப் புழுக்கை எதற்குக் காயணும்?"
"அதனால் காசே இல்லாத நீ அதுக்கெல்லாம் ஆசைப்படக் கூடாது - உனக்கென்று இனவழியில் நின்று போராட ஆயிரம் பணிகள், மொழிமானம் காப்பது, தீக்குளிப்பது போன்ற அரிய செயல்கள் காத்து இருக்கின்றன!"
"எனவே உனக்கு விருப்பமான நடிகனின் கட் அவுட்டுக்குப் பாலூற்றிவிட்டு, மண்ணெண்ணை டின்னோடு வா மொழி மானம் காக்க!"
"உன் படத்துக்கு மாலையிட்டு, உன் தியாகத்தைக் கல்வெட்டில் பொறித்து வைக்க மானமிக்க பேரியக்கம் காத்து இருக்கிறது!"
(காலங்காலமாக நீர்த்துப் போகாத, தடம் மாறாத, உறுதி மிக்கது திராவிடக் கல்விக் கொள்கை!)
எப்படிப் போனாலும் முட்டுச்சந்துக்கே அனுப்பி  திராவிடன் மூக்கிலேயே குத்த ஆரம்பித்து விட்டார்களே! அய்யகோ! என்ன கொடுமை!  
மீண்டும் சந்திப்போம்.
  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!