கரண் தாப்பர்! சீதாராம் யெச்சூரி! பா.ரஞ்சித்!

செய்தி , விவாதங்களுக்காக ஆங்கில சேனல்களைத் தொடர்ந்து பார்க்கிறவர்களுக்கு கரண் தாப்பர் என்ற பெயர் மிகவும் பரிச்சயமானது. 63 வயதாகும் தாப்பர் டூன் ஸ்கூல் அப்புறம்  கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் படித்த  பிரபலமான பத்திரிகையாளர். 2007 அக்டோபரில்  அஹமதாபாத்துக்குப் போய் நரேந்திர மோடியைப் பேட்டி காணச் சென்றார். பிரிடிஷ் உச்சரிப்புடன் குற்றம் சாட்டுகிற தொனியில் தோண்டித்துருவுகிற கேள்விகளுடன் ஆரம்பித்தவரை, மூன்றே நிமிடங்களுக்குள் அந்தப் பேட்டி மோடியால் முடித்து வைக்கப்பட்டது என்பது சுவாரசியமான பழைய கதை. பாருங்கள்! என்று இன்னொரு வலைப்பக்கங்களில் எழுதியது  இங்கேயும் ஒரு அறிமுகமாக.


மேற்குவங்கத் தேர்தலில்  பலத்த அடி  வாங்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் புண்கள் ஆறாதநிலையில் கொடுத்த நேர்காணல் என்று சொல்லிக் கொளகிறார்கள். திரிணாமுல் எம்பி சௌகாதா ராய் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதற்கான சப்பைக்கட்டு கட்டுகிறார். ஆனால் இதைவிட முக்கியமான நேர்காணலாக மே 29 அன்று ஒளிபரப்பான சீதாராம் யெச்சூரியின் மழுப்பலான பதில்கள் இருப்பதை  நண்பர்கள் கவனமாகப் பார்ப்பார்கள், பார்க்க வேணடும் என்று வேண்டிக் கொள்கிறேன்.


தேர்தலில் செம அடி வாங்கியபிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, சரிந்த செல்வாக்கை மீட்கவும் மாநில ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும், தேர்தல் உத்திகள் & மார்க்கெட்டிங் ஆசாமி பிரஷாந்த் கிஷோருடைய சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருப்பதாக இன்றைய செய்திகள் சொல்கின்றன. West Bengal Chief Minister Mamata Banerjee, who is still smarting from losing ground to the BJP in last month's national election, today met with poll whiz kid Prashant Kishor, whose latest success is Jagan Mohan Reddy's victory in Andhra Pradesh. After a reported two-hour meeting in Kolkata, Mamata Banerjee has signed up for Prashant Kishor's election-winning package. Her Trinamool Congress has nosedived from 34 to 22 seats in 42-seat Bengal in the parliamentary election. The BJP, which had two, shot up to 18 seats, establishing its growing base in the state என்கிறது என்டிடிவி செய்திகள்.  

Left emerges as No. 1 among biggest losers in this election

ஆனால் மேற்குவங்கத்தில் சுத்தமாகத் துடைத்தெறியப் பட்டதற்கோ கேரளாவில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்ததற்கோ மார்க்சிஸ்டுகள் உண்மையான சுயபரிசோதனை செய்துகொள்ளத் தயாராக இல்லை என்பது ஒருபுறம்! மார்க்சிஸ்டுகளை விட மிக மோசமான சீரழிவில் இருக்கும் வலது கம்யூனிஸ்டுகள் CPI, சந்தடிசாக்கில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இணைத்துவிடலாமென்கிற அரதப்பழசான யோசனையை மறுபடியும் முன்வைத்திருப்பது மறுபுறமுமாக இடதுசாரிகள் சாரமிழந்துபோன இயக்கம்தான் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இங்கே தமிழகத்தில் மார்க்சிஸ்டு அருணன்களும்  சரி, CPI யின் தா பாண்டியன் போன்ற தலைவர்களும் சரி மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்று பேச ஆரம்பித்திருப்பது குழப்பத்தின்        உச்சகட்டம். மார்க்சீயத்தை தமிழகத்துக்கேற்றமாதிரி உருவகம் செய்ய முயன்ற மணலி கந்தசாமி. SA டாங்கே வழியில்போய், பிறகு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி  என்று ஆரம்பித்த எம் கல்யாண சுந்தரம் போன்றவர்களின் கதை கண்முன்னே நிழலாடுகிறது.  


 • நீட் தேர்வு கடினமானது இல்லை, 11,12ஆம் வகுப்பு பாடங்களை படித்தாலே தேர்வில் வெற்றி பெறலாம் நீட் தேர்வில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த கார்வண்ண பிரபு கரூரில் பேட்டி.. திரு அவர்களே கேட்டுக்கோங்க. வாழ்த்துக்கள் டாக்டர்
  💐
  #NEETResult2019 #NEET
  1:33 PM · Jun 6, 2019

 • Will u think about suicide when u fail a movie? Or u will try to do next movie better? Or will u protest to ban movies?
  Quote Tweet
  ·
  நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது #ரிதுஶ்ரீ_வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு #நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்!
  12:00 PM · Jun 6, 2019

  நீட் தேர்வின் மீதான பழைய சந்தேகங்கள், புரளிகள் எல்லாம் பொய்யென்று ஆகி,  மாணவர்களே ஏற்றுக் கொண்ட பிறகும் கூட, ஒப்பாரிவைக்கும் நபர்களுக்கு சரியான கேள்வியைத்தான் நடிகை/ நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் கேட்டிருக்கிறார். ஆனால் சொரணை இருக்கிறவர்களுக்குத்தானே உறைக்குமாம்!

  ஈவெரா 1938 இல் ஹிந்தியை எதிர்த்தார் என்று சொல்பவர்கள் 1965 இல் அதே ஈவெரா ஹிந்தியை எதிர்த்தாரா என்று சொல்ல மாட்டார்கள். அதே போல அம்பேத்கரை வழிகாட்டியாகச் சொல்கிற திருமாவோ பா. ரஞ்சித்தோ ஹிந்தியைக் குறித்து  அம்பேத்கர் என்ன சொன்னார் என்பதை சௌகரியமாக மறைத்து, மறந்து  விடுவார்கள்!  மீண்டும் சந்திப்போம்.
    

  No comments:

  Post a Comment

  ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!