சாரு நிவேதிதா நேற்றைக்கு எழுதியது இப்படி:இந்தியாவில் வாழ்வதே அவலம் என்றால் இந்திய கிராமங்கள் அவலத்திலும் அவலம். யார் எந்தப் பக்கத்திலிருந்து தாக்குவான் என்று தெரியாது. ஜெயமோகன் ஒரு கிராமத்து ரௌடியிடம் மாட்டி தாக்கப்பட்டது பற்றி என் கடும் கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன். தாக்கியவனுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க அரசும் மற்ற நீதித்துறையினரும் காவல் துறையினரும் ஆவன செய்ய வேண்டும். தமிழ்நாடே வெட்கித் தலை குனிய வேண்டிய சமாச்சாரம். ஜெயமோகன் அவரது தாய்மொழியான மலையாளத்தில் எழுதியிருந்தால் இந்நேரம் கேரளத்தின் தலைமகனாக, முதல் மந்திரி போன்றவர்களே வீடு தேடி வருபவராக இருந்திருப்பார். அவர் தலையெழுத்து, தமிழில் எழுத முடிவு செய்தது. இன்னும் நிறைய எழுத வேண்டும். கோவை விமானத்தைப் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறேன்.
என்னாது? சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா? என்கிற காமெடி ரேஞ்சுக்குப் போய்க்கொண்டிருக்கிற சமாசாரம் இது. தமிழ் நாட்டில் அரசியல் காமெடிகள் ஒன்றும் சரியாக இல்லாத நேரம், அக்கப்போர்களையே எதிர் பார்த்துக் கிடப்பவர்களுக்கு இதுமாதிரி இலக்கியக் காமெடிகள் தான் கைகொடுக்கும் போல!
புளித்துப் போன தோசை மாவுக்காக தமிழ்நாட்டின் எங்கோ ஒரு இடத்தில் தினமும் ஒரு சண்டை நடந்து கொண்டுதானிருக்கிறது. ரத்தக்காயத்தில் முடிபவை உட்பட பல தோசை மாவு சண்டைக ள் மனதிற்குள் மட்டும் கறுவியபடி சாதாரணர்களைப் பொறுத்தவரை முடிந்து விடுகிறது.
நேற்று ஓஎமாரில் தற்செயலாகப் பார்க்க நேர்ந்த நட்ஸ் அன்ட் ஸ்பைஸில் பொருட்கள் வாங்கிவிட்டு கல்லாவில், ‘பை வேணுமா, எட்டு ரூபாய்’ என்ற சிப்பந்தியிடம் ‘கல்கத்தா, கன்ஸியூமர்’ என்று ஏதோ சொல்ல முயன்றவன் தயக்கத்தில் ‘சரி இருக்கட்டும்’ என்றேன்.
எட்டு ரூபாய்க்கு நன்றாயிருந்த துணிப்பையில் இயலாமையை ஒளித்துக் கொண்டாலும், ‘ஜெயமோகனாயிருந்தால் சண்டை போட்டிருக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டேன். என்று முகநூலில் எழுதுகிறார் வழக்கறிஞர் பிரபு ராஜதுரை.
Rajesh Kumar ஜெயமோகனை பக்கத்து தெருக்காரருக்கு அடையாளம் தெரியாமல் அடித்ததை விட ஆச்சர்யம் ஜெயமோகனை தெரிந்தவர்கள் அதற்கு அடைந்த களிப்பு. சமூக அறம்! இது அதற்கு வந்த ஒரு பின்னூட்டம்.
இந்தச் செய்தியின் ஸ்க்ரீன்ஷாட்டையும் போட்டு இன்னொரு பகிர்வில் பிரபு ராஜதுரை சொல்லியிருக்கிற சிலவிஷயங்கள் தான் நெருடுகின்றன.
திமுகவும் அதிமுகவும் ஏன் தமிழகத்தில் வேர் பரப்பி நிற்கிறார்கள், காங்கிரஸ் கருகி உதிர்ந்து விட்டது என்பதற்கான காரணம் இதுதான்.
உங்கள் கூடப்பிறந்தவர், வெளியே சென்ற இடத்தில் ஏதோ பிரச்னையாகி கைது செய்யப்பட்டுள்ளார் என்றால் என்ன செய்வீர்கள்?
உடனடியாக காவல்துறையை அணுகி ‘என்ன பிரச்னை’ என்று அறிய முயல்வீர்கள். ஒருவேளை வழக்கு சிறிய கைகலப்பிற்காக எனும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவரை அணுகி உங்களது சகோதரர் சார்பாக பேசி அவரை மன்னித்து வழக்கை திரும்பப் பெற கோருவீர்கள்.
ஆனால் எல்லோருக்கும் சகோதரர்கள் இருப்பதில்லை. ஒரு பிரச்னை என்றால் ஓடி வர சக ஊழியர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள் இருப்பதில்லை.
அவர்களுக்காக கட்சிக்காரன் வருவான்.
அவரும் சமரச எண்ணத்துடன் வந்திருக்கிறார். ஜெயமோகனுக்கு உடல் காயத்தை விட மனக்காயம் அதிகமிருந்திருக்கலாம். மறுத்து விட்டார். ஆனால், சாதாரணமாக நிகழ்ந்த தூது முயற்சிக்கு அரசியல் சாயம் பூசியிருக்க வேண்டியதில்லை.
அடித்தவனும் திமுக கட்சி என்கிறது ‘தி ஹிந்து’வின் தலைப்பு.
................................................................................
திமுககாரன் சொந்தப் பிரச்னைக்கு தெருச்சண்டையில் இறங்குவது கூடவா, இங்கு தலைப்புச் செய்தி?.
வழக்கறிஞருடைய லாஜிக்கைப் பார்த்துவிட்டு என்ன சொல்வது என்று புரியாமல் இன்னமும் விழித்துக் கொண்டு இருக்கிறேன்.முகநூலில் கிடைக்கிற செய்திகளைத் தொகுத்துப் பார்த்தால் ஜெமோ மீது அனுதாபம் கொஞ்சமும் வரவில்லை. தாக்கப்பட்டேன் என்று அந்த வரலாற்று நிகழ்வைப் பதிவு செய்த எழுத்தாளர் தன தளத்தில் இருந்து அதை நீக்கி இருப்பதே நிறைய செய்திகளை சொல்கிறது.
நன்றி மறப்பது நன்றன்று
உதயசூரியன் சின்னத்தில் நின்று திமுகவால் வென்ற விசிக எம்பி பாஜக எழுத்தாளருக்கு ஆதரவாக திமுகக்காரரைக் கைது செய்யச் சொல்லி போலீசுக்கு அழுத்தம். திமுக கூட்டணி உடையும் அபாயமா?
செம கடுப்பில் உடன்பிறப்புகள்🤪
எது பொருளோ அதையும் கொஞ்சம் பேசுவோமா?
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் பிரதமர் நரந்திரமோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பேச்சுவார்த்தை நடத்தும் சாத்தியம் இல்லை என்று இந்தியத்தரப்பில் தெளிவாகவே அறிவிக்கப்பட்டபிறகுதான் பிரதமருடைய பயணமே தொடங்கியது. அங்கே நடந்த பாகிஸ்தானிய கோமாளித்தனங்களைப் பற்றிய விவாதம் இது. கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொண்டு பாருங்கள்.
இதனால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு .....
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!