Showing posts with label எது செய்தி. Show all posts
Showing posts with label எது செய்தி. Show all posts

சண்டேன்னா மூணு! திருவள்ளுவர்! H ராஜா! பார்த்ததும் படித்ததும்!

திருவள்ளுவர் விரும்பினாரோ இல்லையோ அவரையும் நம்மூர் அரசியவாதிகள் ஒரு காவி ஆடை சர்ச்சையில் இழுத்துத் தெருவில் இழுத்து விட்டு விட்டார்கள். ஏதோ ஒரு சர்ச்சை அல்லது வெட்டி அக்கப்போரிலேயே  தமிழ் நாட்டு அரசியல் இயங்கிக் கொண்டிருக்கவேண்டும் என்று தலைவிதியா என்ன?


தந்தி டிவியில் ரங்கராஜ் பாண்டே இருந்தவரை மிகவும் சுவாரசியமான நிகழ்ச்சியாக கேள்விக்கென்ன பதில் இருந்தது. அவருக்குப் பின்னால் அந்த நிகழ்ச்சியைத் திறம்பட நடத்துகிறவர் எவருமில்லாமல் தள்ளாடுவது தெளிவாகவே தெரிகிற மாதிரி இருந்ததால், இப்போது நான் தந்திடிவி நிகழ்ச்சிகளை, செய்திகளைப் பார்க்க விரும்புவதில்லை. இருந்தாலும், தமிழக அரசியலும் சரி ஊடகங்களும் சரி  என்ன மாதிரியான செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதற்கு அவ்வப்போது கொஞ்சம்  சாம்பிள் பார்க்க வேண்டி இருக்கிறதே! வீடியோ 41 நிமிடம்.


அயோத்தி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பு,  இந்தியாவுக்குள் 4 கி.மீ, பாகிஸ்தானுக்குள் 5கி.மீ. என்று மிகமிகச் சிறியதுதான் என்றாலும் சீக்கிய மக்களுடைய மத  உணர்வுகளில்,   கர்தார்பூர் வழித்தடம் எவ்வளவு முக்கியமானது இப்படி மிக முக்கியமான செய்திகளைக் கூட ஒதுக்கித் தள்ளிவிட்டு வள்ளுவரை தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாக்குவது என்னமாதிரியான ஊடக அரசியல்? அயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு மீது  புதிய தலைமுறை சேனலில் நேர்பட பேசு என்று  ஓரு 93 நிமிட விவாதம், news 7 சேனலில் வியூகம் என்ற நிகழ்ச்சியில் பழ.கருப்பையாவுடன் ஒரு 45 நிமிட நேர்காணல் இருந்ததையும் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். முதல் முறையாக தமிழக சேனல்களில் ஒரே விஷயத்தைப் பற்றியே கூவிக் கொண்டிருப்பது சிறிது மாறியிருக்கிறது என்பது ஒருநாள் கூத்து தானா?  

படித்ததில் பிடித்தது: 

"நாடா? காடா? தீர்ப்பு உங்கள் கையில்"
ஶ்ரீஅருண்குமார்*
புல் புல் புயல் உருவாகியுள்ளதைப் பற்றி உங்கள் கருத்தென்ன? இன்று காலையில் மழை பெய்தது. அதை நீங்கள் வரவேற்கிறீர்களா?
இப்படித்தான் இருக்கிறது அயோத்யா விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்பதும்.
ரஜினி கட்சி தொடங்கினால் வரவேற்கிறோம் என்று கூறலாம். ஆனால் நீதிமன்றத் தீர்ப்புக்கு எவ்வாறு இது பொருந்தும்?
அனைவரும் அமைதி காக்க வேண்டும். மதநல்லிணக்கம் பேண வேண்டிய நேரமிது. இத்தகைய அறிக்கைகள், பொதுவாக குண்டுவெடிப்பு அல்லது மதக்கலவரம் நிகழ்ந்த சூழலில் வெளியிடப்படும்.
இப்போது இத்தகைய அறிக்கைகளை வெளியிடுவது, ஏதோ இந்தத் தீர்ப்பால் அமைதி குலையும் என்ற தோற்றத்தை உருவாக்கவில்லையா?
நம்பிக்கைகளா? சட்டமா?
ஆச்சரியம் என்னவென்றால் அயோத்தி தீர்ப்பில் சட்டத்தைவிட நம்பிக்கையே மேலோங்கியுள்ளது என்று குறை கூறுவோர், முத்தலாக் விஷயத்தில் சட்டத்தைவிட நம்பிக்கையே பெரிது என்று வாதிட்டனர்.
மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தீர்ப்புகள் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது, சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இல்லையென்றால் சட்டத்தையே திருத்தலாம் என்ற கோரிக்கையும் எழுகிறது. இது நீதிமன்றங்களின் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும். தீர்ப்பு மக்களைக் கட்டுப்படுத்தாது என்ற நிலையை உருவாக்கும். இதன் விளைவு? முல்லைப் பெரியாறு மற்றும் காவேரி விவகாரத்தில் கேரள, கர்நாடக அரசுகள், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுக்கின்றன.
மக்கள் விருப்பமே தீர்ப்பாக வேண்டுமென்றால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல்வாதிகளுக்கு தண்டனையே கூடாதே?
மேலும், மக்கள் விருப்பம் என்பதை யார் தீர்மானிப்பது? சமூக ஊடகங்களா? செய்தி ஊடகங்களா? அரசியல் கட்சிகளா? இவையெல்லாம் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை உடையவை அல்லது சட்ட வழிமுறைகளுக்குட்பட்டவை?
அல்லது ஒவ்வொரு விஷயத்திலும் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா? அப்படியே பொது வாக்கெடுப்பு நடத்துவதாகவே வைத்துக் கொள்வோம். புதியதாக ஒரு மெட்ரோ ரயில் சேவை தொடங்க வேண்டும். தேசிய அளவில் வாக்கெடுப்பென்றால் உ பி தான் வெல்லும். மாநில அளவிலென்றால் சென்னைதான். காரணம் மக்கள்தொகை.
இப்போது சொல்லுங்கள் மக்கள் கருத்தை எப்படி அறிவது?
நீதிமன்றத் தீர்ப்பு என்பது சட்ட நுணுக்கங்கள், ஆதாரங்கள், வாதங்கள், முன்னுதாரணங்கள் என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்படுபவை. இதனை எதிர்த்து மேல் முறையீடு மறுசீராய்வு என்றெல்லாம் சட்டவழிமுறைகள் உள்ளன. ஆனால் இதன் முதல் படி — தீர்ப்பை ஏற்கிறோம். ஆனால் தீர்ப்பில் உடன்பாடில்லையென்பதால் முறையீடு செய்கிறோம் என்பதுதானே தவிர welcome என்பதற்கோ GoBack என்பதற்கோ இடமில்லை.
சட்டம் நம் எல்லோரையும் விட மேலானது. தீர்ப்பில் உடன்பாடில்லாமல் போகலாம். ஆனால் தீர்ப்பை அவமதிப்பதோ அல்லது மறுதலிப்பதோ சட்ட விரோதம் மட்டுமன்று, சட்டத்தின் மாட்சிமையைக் குலைக்கும் செயலும் கூட. சட்டத்தின் மாட்சிமை குலைந்தால் அது நாடல்ல — காடு.  

இதே விஷயத்தின் மீது இன்னொரு பார்வை 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில் இளைஞனாக இருந்து வன்முறை, கலவரம் எல்லாம் செய்து கொண்டிருந்த ஒருத்தனின் மனநிலை, இன்றையத் தீர்ப்பை என்ன மாதிரி பார்த்திருக்கும்?? அன்று தான் செய்தது தவறு என உணர்ந்திருக்குமா? இந்தத் தீர்ப்பை ஏற்காமல் எனக்கே நிலம் சொந்தம் என்றோ, அவனுக்கு எதற்கு அதிக நிலம் என்றோ கேட்டிருக்குமா?? நிஜமான ஆன்மீகம், கடவுளை ஒரு சிறிய இடத்தில் அடைக்காது என்கிற பக்குவத்தை அடைந்திருக்குமா? இனி அந்த இடத்தில் வெறும் கட்டிடம் மட்டுமே இருக்கும், 'போங்கடா நீங்களும் உங்க மதமும்' எனக் கடவுள் கிளம்பிப் போயிருப்பாரோ என்கிற ஐயம் கொண்டிருக்குமா??? அல்லது அன்றைய அதே வெறியில் இன்றும் இருக்குமோ??? ரத்தம் சுண்டிப் போனதால் மனதுக்குள் வெறும் வஞ்சத்துடன் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்குமோ?? எவர் கண்டார்..
ஆனால் ஒவ்வொரு டிசம்பர் 6ம் தேதியும், ஏதோ அசம்பாவிதம் நடைபெற்று விடப் போவதைப் போன்ற பிம்பத்தையே பார்த்து வளர்ந்த எங்களைப் போன்ற 90s கிட்ஸ் இனி அந்தப் பீதி இல்லாமல் இருப்போம். அன்றைய இளைஞர்கள் செய்தத் தவறைத் தாங்கள் எந்நாளும் செய்யவே மாட்டோம் என்பதை இன்றையத் தீர்ப்புக்குப் பின் மிகத் தெளிவாகவே உணர்த்தி விட்டார்கள் இன்றைய இளைஞர்கள்.
இனி டிசம்பர் 6ம் தேதிகளில் சுவரை மொய்க்கும் துக்க நாள், ராமர் கோவில் போன்ற போஸ்டர்கள் இருக்காது. கொஞ்சம் கொஞ்சமாக இந்தச் சம்பவத்தை மக்கள் மறந்துவிடுவார்கள்.. இப்போதுமே கூட பலரும் அதை மறந்து விட்டதால் மட்டுமே இந்தத் தீர்ப்பு இத்தனைச் சாதாரணமாகக் கடக்கப் பட்டிருக்கிறது.. தேர்தலுக்குத் தேர்தல் ஒலிக்கப்பட்ட பாபர் மசூதி, ராமர் கோவில் போன்ற வாக்குறுதிகள் இனி இல்லாமல் போகப்போவதை நினைத்தும் மனது லேசாக ஆசுவாசப் படுகிறது..
ரொம்ப சிம்பிளாகச் சொல்வதாக இருந்தால், 90களின் தொடக்கத்தில் வேலைவாய்ப்பின்மையால் ராமர், பாபர் எனப் பொங்கிக் கொண்டிருந்த கும்பல் எல்லாம், LPG என்னும் பொருளாதாரத் தாராளமயமாக்கலுக்குப் பின், ஒழுங்காகப் படித்து, முன்னேறி, தங்களைப் போல் தங்கள் வாரிசுகளும் காட்டு மிராண்டிகளாய் இருக்கக் கூடாது என உணர்ந்து, ஒரு ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறது.. மதவெறியை விட, படிப்பும் பொருளாதார முன்னேற்றமும் மட்டுமே ஒரு சமுதாயத்தை உருப்பட வைக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் நடந்த காலமும், தீர்ப்பு வந்த காலமும் மிக அருமையான உதாரணம்..
நிலப்பரப்பில் உலகின் 7வது மிகப்பெரிய நாடு, வெறும் ரெண்டரை ஏக்கர் நிலப்பரப்பிற்காக 27ஆண்டுகளாக அடித்துக் கொண்டிருந்தது என்கிற களங்கம் இன்றோடு துடைக்கப்பட்டது.. வாழ்த்துகள் இந்தியா..
மீண்டும் சந்திப்போம்.        

இன்றைய தேவை! செய்திகளை சரியாகப் புரிந்துகொள்வது!

தென்னவோ எப்போதும் பூனைக்குட்டிகள் தான் முதலில் வெளியே வருவதாக! ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்டது, ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டது என்ற மத்திய அரசின் முடிவின் மீது காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது என்பதே தெளிவாக இல்லாதபடி இரு கூறாகப் பிரிந்து பேசிக்கொண்டிருந்தாலும் சோனியாவோ ராகுலோ நாடாளுமன்றத்திலும் சரி வெளியிலும் சரி தங்கள் அபிப்பிராயத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை. பூனைக்குட்டி வெளியே வந்த கதையாக ப்ரியங்கா வாத்ரா இப்போது வெளிப்படையாக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மனவோட்டம் என்னவென்று பேசியிருக்கிறார்.


பானாசீனா, மணிசங்கர் ஐயர், குலாம் நபி ஆசாத் அதிர் ரஞ்சன் சௌதுரி போன்றவர்கள் ஏற்கெனெவே பேசியதுதானே!    பிரியங்கா அப்படி என்ன புதிதாகப் பேசிவிட்டார் என்று அப்பாவியாகக் கேட்கிறவர்களுக்காக! சல்மான் குர்ஷீத், கரன்சிங், ஜோதிராதித்ய சிந்தியா போன்ற பலர் அரசின் முடிவை ஆதரித்திருக்கிறார்களே! இப்படி  இரண்டு விதமாகக் காங்கிரசில் குரல் எழுந்தாலும் முதலாளி என்ன சொல்கிறாரோ அதுதானே final decision ஆக இருக்கும்! அந்த Final word இப்போது சொல்லப்பட்டிருக்கிறது என்பதுதான் விஷயம்! பிரியங்கா முதலாளியா என்றால் முதலாளி குடும்பத்தில் எவர் சொன்னாலும் அது சோனியா சொன்ன மாதிரியே கருதப்படும் என்றுதான் புரிந்துகொள்ளப்படும். இந்த வீடியோ 19 நிமிடம் தான்! கொஞ்சம் பாருங்கள். இந்த final word யாருக்குச் சாதகம்? சந்தேகமே வேண்டாம்! பாகிஸ்தானுக்கு  இந்திய எதிர்ப்புப் பிரசாரம் செய்ய, BBC, அல்ஜசீரா முதலான விஷமத்தனமான ஊடகங்கள் செய்திகளைத் திரித்துச் சொல்ல உதவியாக இருக்கும் என்பதைத்  தவிர காங்கிரஸ் கட்சிக்கோ இந்த தேசத்துக்கோ எந்த விதமான பயனையும் தரப்போவது இல்லை. 
  
     
BJP Now Main Opposition in Sikkim as 10 MLAs from Ally Sikkim Democratic Front Join Party இப்படி ஒரு செய்தியை நேற்றைக்கு எத்தனை நண்பர்கள் கவனித்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது. சிக்கிம் மிகச்சிறிய மாநிலம் என்பது மட்டும் காரணமாக இருக்க முடியாது. இங்கே திராவிடங்கள் நமக்கு மாட்டிவிட்டிருக்கிற குறுகிய பார்வை அப்படி என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்!      

நீண்டகாலமாக முதலைமைச்சராக இருந்தவர் என்கிற மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசுவின் சாதனையை முறியடித்த பவன் குமார் சாம்லிங், சிக்கிம் ஜனநாயக முன்னணியின் தலைவர், இப்போது எதிர்க்கட்சித்தலைவர். கடந்த சட்டசபைத் தேர்தலில் பிஜேபி இவருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதில் ஓர் இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. மொத்தமுள்ள 32 சீட்டுகளில்  15 இடங்களில் SDF ஜெயித்து எதிர்க்கட்சியானது.  இப்போது அதிலிருந்து 10 MLA க்கள் பிஜேபியில் சேர்ந்திருக்கிறார்கள்.

ந்தப் பின்னணியோடு The Print தளத்தில் சேகர் குப்தா இதைக் குறித்து என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேளுங்கள்! வீடியோ 13 நிமிடம் தான்! கூடுதல் தகவலாக ஹிந்து ஆங்கில நாளிதழ் செய்தி என்ன சொல்கிறது என்பதை சேர்த்துப் பார்ப்பது நல்லது. ஒருபக்கச் சார்பான விஷயங்களை மட்டுமே நானோ இங்கே வரும் நண்பர்களோ பார்க்கவேண்டாமே என்பதற்காகத்தான் பிஜேபி ஆதரவு நிலை எடுக்காத இடங்களில் இருந்தும் தகவல்களைப் பகிர்ந்து வருகிறேன்.  


விஸ்வரூபம் எடுக்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி?  இப்படி மூக்கில் விரலைவைக்கிற அளவுக்கு வாய்க்கொழுப்பு பானா சீனாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.இந்த வீடியோ 4 நிமிடம்தான்! பொருளாதார சீர்திருத்தம் கொண்டுவந்தது நரசிம்மராவோ மன்மோகன் சிங்கோ இல்லை! பொருளாதாரப் புலி பானாசீனாதான் என்றொரு சிரிப்பு குண்டை கே எஸ் அழகிரி வீசியிருப்பது இன்றைய அரசியல் காமெடியாக

மீண்டும் சந்திப்போம்.
            

சண்டேன்னா மூணு! தமிழரசி தாக்கப்பட்டாரா! சாரு ஜெமோ! அரசியல்!

சாரு நிவேதிதா நேற்றைக்கு எழுதியது இப்படி:இந்தியாவில் வாழ்வதே அவலம் என்றால் இந்திய கிராமங்கள் அவலத்திலும் அவலம். யார் எந்தப் பக்கத்திலிருந்து தாக்குவான் என்று தெரியாது. ஜெயமோகன் ஒரு கிராமத்து ரௌடியிடம் மாட்டி தாக்கப்பட்டது பற்றி என் கடும் கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்.  தாக்கியவனுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க அரசும் மற்ற நீதித்துறையினரும் காவல் துறையினரும் ஆவன செய்ய வேண்டும்.   தமிழ்நாடே வெட்கித் தலை குனிய வேண்டிய சமாச்சாரம்.  ஜெயமோகன் அவரது தாய்மொழியான மலையாளத்தில் எழுதியிருந்தால் இந்நேரம் கேரளத்தின் தலைமகனாக, முதல் மந்திரி போன்றவர்களே வீடு தேடி வருபவராக இருந்திருப்பார்.  அவர் தலையெழுத்து, தமிழில் எழுத முடிவு செய்தது.  இன்னும் நிறைய எழுத வேண்டும். கோவை விமானத்தைப் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறேன். 


என்னாது? சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா? என்கிற   காமெடி ரேஞ்சுக்குப் போய்க்கொண்டிருக்கிற சமாசாரம் இது. தமிழ் நாட்டில் அரசியல் காமெடிகள் ஒன்றும் சரியாக இல்லாத நேரம், அக்கப்போர்களையே எதிர் பார்த்துக் கிடப்பவர்களுக்கு  இதுமாதிரி இலக்கியக் காமெடிகள் தான் கைகொடுக்கும் போல!   
புளித்துப் போன தோசை மாவுக்காக தமிழ்நாட்டின் எங்கோ ஒரு இடத்தில் தினமும் ஒரு சண்டை நடந்து கொண்டுதானிருக்கிறது. ரத்தக்காயத்தில் முடிபவை உட்பட பல தோசை மாவு சண்டைக ள் மனதிற்குள் மட்டும் கறுவியபடி சாதாரணர்களைப் பொறுத்தவரை முடிந்து விடுகிறது.
நேற்று ஓஎமாரில் தற்செயலாகப் பார்க்க நேர்ந்த நட்ஸ் அன்ட் ஸ்பைஸில் பொருட்கள் வாங்கிவிட்டு கல்லாவில், ‘பை வேணுமா, எட்டு ரூபாய்’ என்ற சிப்பந்தியிடம் ‘கல்கத்தா, கன்ஸியூமர்’ என்று ஏதோ சொல்ல முயன்றவன் தயக்கத்தில் ‘சரி இருக்கட்டும்’ என்றேன்.
எட்டு ரூபாய்க்கு நன்றாயிருந்த துணிப்பையில் இயலாமையை ஒளித்துக் கொண்டாலும், ‘ஜெயமோகனாயிருந்தால் சண்டை போட்டிருக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டேன். என்று முகநூலில் எழுதுகிறார் வழக்கறிஞர் பிரபு ராஜதுரை.

Rajesh Kumar ஜெயமோகனை பக்கத்து தெருக்காரருக்கு அடையாளம் தெரியாமல் அடித்ததை விட ஆச்சர்யம் ஜெயமோகனை தெரிந்தவர்கள் அதற்கு அடைந்த களிப்பு. சமூக அறம்! இது அதற்கு வந்த ஒரு பின்னூட்டம். 


இந்தச் செய்தியின் ஸ்க்ரீன்ஷாட்டையும் போட்டு இன்னொரு பகிர்வில் பிரபு ராஜதுரை சொல்லியிருக்கிற சிலவிஷயங்கள் தான் நெருடுகின்றன.

திமுகவும் அதிமுகவும் ஏன் தமிழகத்தில் வேர் பரப்பி நிற்கிறார்கள், காங்கிரஸ் கருகி உதிர்ந்து விட்டது என்பதற்கான காரணம் இதுதான்.
உங்கள் கூடப்பிறந்தவர், வெளியே சென்ற இடத்தில் ஏதோ பிரச்னையாகி கைது செய்யப்பட்டுள்ளார் என்றால் என்ன செய்வீர்கள்?
உடனடியாக காவல்துறையை அணுகி ‘என்ன பிரச்னை’ என்று அறிய முயல்வீர்கள். ஒருவேளை வழக்கு சிறிய கைகலப்பிற்காக எனும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவரை அணுகி உங்களது சகோதரர் சார்பாக பேசி அவரை மன்னித்து வழக்கை திரும்பப் பெற கோருவீர்கள்.
ஆனால் எல்லோருக்கும் சகோதரர்கள் இருப்பதில்லை. ஒரு பிரச்னை என்றால் ஓடி வர சக ஊழியர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள் இருப்பதில்லை.
அவர்களுக்காக கட்சிக்காரன் வருவான்.
அவரும் சமரச எண்ணத்துடன் வந்திருக்கிறார். ஜெயமோகனுக்கு உடல் காயத்தை விட மனக்காயம் அதிகமிருந்திருக்கலாம். மறுத்து விட்டார். ஆனால், சாதாரணமாக நிகழ்ந்த தூது முயற்சிக்கு அரசியல் சாயம் பூசியிருக்க வேண்டியதில்லை. 

அடித்தவனும் திமுக கட்சி என்கிறது ‘தி ஹிந்து’வின் தலைப்பு.
................................................................................
திமுககாரன் சொந்தப் பிரச்னைக்கு தெருச்சண்டையில் இறங்குவது கூடவா, இங்கு தலைப்புச் செய்தி?.

வழக்கறிஞருடைய லாஜிக்கைப் பார்த்துவிட்டு என்ன சொல்வது என்று புரியாமல் இன்னமும் விழித்துக் கொண்டு இருக்கிறேன்.முகநூலில் கிடைக்கிற செய்திகளைத் தொகுத்துப் பார்த்தால் ஜெமோ மீது அனுதாபம் கொஞ்சமும் வரவில்லை. தாக்கப்பட்டேன் என்று அந்த வரலாற்று நிகழ்வைப் பதிவு செய்த எழுத்தாளர் தன தளத்தில் இருந்து அதை நீக்கி இருப்பதே நிறைய செய்திகளை சொல்கிறது.  

நன்றி மறப்பது நன்றன்று ‬
‪உதயசூரியன் சின்னத்தில் நின்று திமுகவால் வென்ற விசிக எம்பி பாஜக எழுத்தாளருக்கு ஆதரவாக திமுகக்காரரைக் கைது செய்யச் சொல்லி போலீசுக்கு அழுத்தம். திமுக கூட்டணி உடையும் அபாயமா? ‬
‪செம கடுப்பில் உடன்பிறப்புகள்🤪



எது பொருளோ அதையும்  கொஞ்சம் பேசுவோமா?


ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் பிரதமர் நரந்திரமோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பேச்சுவார்த்தை நடத்தும் சாத்தியம் இல்லை என்று இந்தியத்தரப்பில் தெளிவாகவே அறிவிக்கப்பட்டபிறகுதான் பிரதமருடைய பயணமே தொடங்கியது. அங்கே நடந்த பாகிஸ்தானிய கோமாளித்தனங்களைப் பற்றிய விவாதம் இது. கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொண்டு பாருங்கள்.

இதனால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு .....

 மீண்டும் சந்திப்போம்.  
  

செய்திகளில் அரசியல்! செய்திகளே அரசியல்!

ரெண்டு முருகன் என்றால் இதுநாள்வரை ஞாபகத்துக்கு வந்ததெல்லாம் அவருடைய நக்கல், நையாண்டி, பவுடர் பூச்சு, லிப்ஸ்டிக் என்று இருந்ததோடு இப்போது IT ரெய்டும் சேர்ந்து கொண்டிருக்கிறது!அதனால்  பொருளாளரைக் கதறவிடுவது என்பதில்  சொந்தக் கட்சிக்காரர்களுமே  கூட சேர்ந்து கொண்டு கூத்து அடிக்கிறார்களோ? 

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாகிவிடுமோ என்று கூட பரப்பரப்பைக் கூட்டி, கடைசியில் இதெல்லாம் வீண் வதந்தி என்றாகிவிடப் போகிறது! ஆனாலும் இந்த மாதிரிக் கிளப்பிவிடுவதன் பின்னணி என்ன? இந்தத் தொலைக்காட்சி விவாதத்தில் திமுக இந்துவிரோதக் கட்சியல்ல என்று இசுடாலின் சொல்ல வேண்டி வந்ததைப்பற்றியும் பேசுகிறார்கள்.

திமுகவின் வரலாறு என்ன, பகுத்தறிவின் வடிவங்கள் என்னென்ன என்பதை இந்த கார்டூனில் அடடே! மதி சொல்லியிருப்பதைத் தாண்டி சுப வீ செட்டியார் என்ன பெரிதாகச் சொல்லிவிட்டார்?
சுப வீ செட்டியார் காசுக்கு கூவுகிற திராவிடம்!  திராவிடப் புளுகில் உண்மை எப்போதுமே இருக்காது!  அதனால் நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வதற்காக இன்னொரு கார்டூன்! 

தான் படிப்படியாகக் கழகப்பணியாற்றி இப்போதைய நிலைக்கு வந்தவன் என்று இங்கே  இசுடாலின் சொல்கிறார். ஆனால் அதெல்லாம் இல்லாமலேயே  தயாநிதி மாறனை   தேர்தலில் ஜெயித்தவுடனேயே எப்படி தாத்தா மத்திய மந்திரியாக்கி அழகுபார்த்தார் என்பதைச் சொல்ல ஏன் மறுக்கிறார்? செலக்டிவ் அம்னீஷியாவா? 

    
சரி, அரக்கோணம் வேட்பாளர் ஜகத் ரட்சகன் குடும்பம்  26000 கோடி ரூபாயை இலங்கையில் முதலீடு செய்ததாக செய்தி வந்ததே, அதைப்பற்றி பேசினாரா? குறைந்தபட்சம், அது ஜகத் ரட்சகன் கல்வித்தந்தை தொண்டாற்றிச் சம்பாதித்தது, திமுக தலைமையின் பினாமி பணமல்ல என்றாவது தெளிவுபடுத்தினாரா? 

DMK is not anti-Hindu, says DMK chief M K Stalin. #Dmk #DmkAgainstHindus #selectivesecularism கேட்கவே வேடிக்கையாக இருக்கிறதே! ஒரு பகுத்தறிவு டெஸ்ட் எடுத்துப்பார்த்துவிடலாமா?  

     
என்ன செய்தார் மோடி? கேள்வி கேட்பவர்கள் பதில்  என்ன என்று தெரிந்து கொள்ள முனைந்தார்களா?

வீடியோ  என்னவோ நாலேமுக்கால் நிமிடங்களுக்கும் குறைவுதான்! பதிலைத் தெளிவாகச்   சொல்கிறது!