இன்றைய தேவை! செய்திகளை சரியாகப் புரிந்துகொள்வது!

தென்னவோ எப்போதும் பூனைக்குட்டிகள் தான் முதலில் வெளியே வருவதாக! ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்டது, ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டது என்ற மத்திய அரசின் முடிவின் மீது காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது என்பதே தெளிவாக இல்லாதபடி இரு கூறாகப் பிரிந்து பேசிக்கொண்டிருந்தாலும் சோனியாவோ ராகுலோ நாடாளுமன்றத்திலும் சரி வெளியிலும் சரி தங்கள் அபிப்பிராயத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை. பூனைக்குட்டி வெளியே வந்த கதையாக ப்ரியங்கா வாத்ரா இப்போது வெளிப்படையாக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மனவோட்டம் என்னவென்று பேசியிருக்கிறார்.


பானாசீனா, மணிசங்கர் ஐயர், குலாம் நபி ஆசாத் அதிர் ரஞ்சன் சௌதுரி போன்றவர்கள் ஏற்கெனெவே பேசியதுதானே!    பிரியங்கா அப்படி என்ன புதிதாகப் பேசிவிட்டார் என்று அப்பாவியாகக் கேட்கிறவர்களுக்காக! சல்மான் குர்ஷீத், கரன்சிங், ஜோதிராதித்ய சிந்தியா போன்ற பலர் அரசின் முடிவை ஆதரித்திருக்கிறார்களே! இப்படி  இரண்டு விதமாகக் காங்கிரசில் குரல் எழுந்தாலும் முதலாளி என்ன சொல்கிறாரோ அதுதானே final decision ஆக இருக்கும்! அந்த Final word இப்போது சொல்லப்பட்டிருக்கிறது என்பதுதான் விஷயம்! பிரியங்கா முதலாளியா என்றால் முதலாளி குடும்பத்தில் எவர் சொன்னாலும் அது சோனியா சொன்ன மாதிரியே கருதப்படும் என்றுதான் புரிந்துகொள்ளப்படும். இந்த வீடியோ 19 நிமிடம் தான்! கொஞ்சம் பாருங்கள். இந்த final word யாருக்குச் சாதகம்? சந்தேகமே வேண்டாம்! பாகிஸ்தானுக்கு  இந்திய எதிர்ப்புப் பிரசாரம் செய்ய, BBC, அல்ஜசீரா முதலான விஷமத்தனமான ஊடகங்கள் செய்திகளைத் திரித்துச் சொல்ல உதவியாக இருக்கும் என்பதைத்  தவிர காங்கிரஸ் கட்சிக்கோ இந்த தேசத்துக்கோ எந்த விதமான பயனையும் தரப்போவது இல்லை. 
  
     
BJP Now Main Opposition in Sikkim as 10 MLAs from Ally Sikkim Democratic Front Join Party இப்படி ஒரு செய்தியை நேற்றைக்கு எத்தனை நண்பர்கள் கவனித்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது. சிக்கிம் மிகச்சிறிய மாநிலம் என்பது மட்டும் காரணமாக இருக்க முடியாது. இங்கே திராவிடங்கள் நமக்கு மாட்டிவிட்டிருக்கிற குறுகிய பார்வை அப்படி என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்!      

நீண்டகாலமாக முதலைமைச்சராக இருந்தவர் என்கிற மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசுவின் சாதனையை முறியடித்த பவன் குமார் சாம்லிங், சிக்கிம் ஜனநாயக முன்னணியின் தலைவர், இப்போது எதிர்க்கட்சித்தலைவர். கடந்த சட்டசபைத் தேர்தலில் பிஜேபி இவருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதில் ஓர் இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. மொத்தமுள்ள 32 சீட்டுகளில்  15 இடங்களில் SDF ஜெயித்து எதிர்க்கட்சியானது.  இப்போது அதிலிருந்து 10 MLA க்கள் பிஜேபியில் சேர்ந்திருக்கிறார்கள்.

ந்தப் பின்னணியோடு The Print தளத்தில் சேகர் குப்தா இதைக் குறித்து என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேளுங்கள்! வீடியோ 13 நிமிடம் தான்! கூடுதல் தகவலாக ஹிந்து ஆங்கில நாளிதழ் செய்தி என்ன சொல்கிறது என்பதை சேர்த்துப் பார்ப்பது நல்லது. ஒருபக்கச் சார்பான விஷயங்களை மட்டுமே நானோ இங்கே வரும் நண்பர்களோ பார்க்கவேண்டாமே என்பதற்காகத்தான் பிஜேபி ஆதரவு நிலை எடுக்காத இடங்களில் இருந்தும் தகவல்களைப் பகிர்ந்து வருகிறேன்.  


விஸ்வரூபம் எடுக்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி?  இப்படி மூக்கில் விரலைவைக்கிற அளவுக்கு வாய்க்கொழுப்பு பானா சீனாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.இந்த வீடியோ 4 நிமிடம்தான்! பொருளாதார சீர்திருத்தம் கொண்டுவந்தது நரசிம்மராவோ மன்மோகன் சிங்கோ இல்லை! பொருளாதாரப் புலி பானாசீனாதான் என்றொரு சிரிப்பு குண்டை கே எஸ் அழகிரி வீசியிருப்பது இன்றைய அரசியல் காமெடியாக

மீண்டும் சந்திப்போம்.
            

3 comments:

 1. இன்றைய காங்கிரஸ் கட்சியினால் இந்த தேசத்துக்கு ஏதாவதொரு பயனும் இருக்குமோ..

  எதற்கும் கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டு யோசிப்போம்!...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை செல்வராஜூ சார்! கண்ணாடியைக் கழட்டவும் வேணாம் கண்ணை மூடிக் கொண்டு யோசிக்கவும் வேணாம்! இன்னைக்கிருக்கிற காங்கிரஸ் சோப்ளாங்கி காங்கிரஸ்! காசுவருதுன்னதும் ஆ!ராசா கிட்ட கைநாட்டு வச்சு சிக்கிக் கொண்ட முட்டாள்களின் கூட்டம்! வாரிசுங்க சம்பாதிச்சதை விட ஜாமீன் பரம்பரை பசி சம்பாரிச்சது எக்கச்சக்கம்! இதுங்களால உருப்படியா எத்தையும் செய்ய முடியாது, ஊழலைத்தவிர!

   Delete
 2. இன்றைய காங்கிரஸ் கட்சி வேஸ்ட். அதில் உள்ளவர்களில் பெரும்பான்மையினர் ஊழலின் குத்தகைதாரர், ப.சி உட்பட.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!