தடுமாறும் பாகிஸ்தான்! சேர்ந்து தடுமாறும் காங்கிரஸ்!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திரமோடி அரசு எடுத்திருக்கும் அதிரடி முடிவில் பாகிஸ்தான் அரசு தடுமாறுவது, தள்ளாடுவது எல்லாம் கடந்த இருநாட்களாக பாகிஸ்தானிலும் நடைபெற்றுவந்த பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில் நடந்த காரசாரமான விவாதங்களில் மிகப் பரிதாபமாக வெளிப்பட்ட செய்தியைத் தமிழக சேனல்கள் ஒரு பொருட்டாக எடுத்துப்  பேசமாட்டார்கள் என்பது தெரிந்த செய்தி. கொஞ்சம் தொடர்ந்து பாருங்கள்! தடுமாறும் பாகிஸ்தான்! சேர்ந்து தடுமாறும் காங்கிரஸ்! என்று தலைப்பு வைத்த்தில் வேறு அர்த்தம் இருக்கிறதா என்பதும் புரியும்! 



இந்த 23 நிமிடச் செய்தித் தொகுப்பில், பாகிஸ்தானிகளிடம் என்னமாவது செய்ய வேண்டும் என்ற தவிப்பும் என்ன செய்வது என்கிற ஆப்ஷன்களே இல்லாமல் தூதரக உறவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்வது, ஆனால் எந்த அளவுக்கு என்பதை முடிவு செய்யக் கூட முடியாமல் அதிலும் தடுமாறுவதைச் சொல்கிறார்கள்!


காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம்  எல்லாம் முடிந்த பிறகு டில்லியில் அவசர அவசரமாகக் கூடி ஆர்டிகிள் 370 மீதான கட்சியின் நிலைபாட்டை முடிவுசெய்தார்களாம்! இதில் மிகவும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தலைவர் பதவியை உதறிவிட்டு ஓடிப்போன ராகுல் காண்டியே தலைமை தாங்கி நடத்தியது ஒன்று! காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கொள்கையை முடிவு செய்வதற்காக ஒரு குழு இருந்ததாக(?!!) , நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சொதப்பிய பிறகு கூட்டப்பட்ட கூட்டம் இது. பாலிசி பிளானிங் க்ரூப்பில் ஒருவரான குலாம் நபி ஆசாத், காஷ்மீர் விவகாரம் இன்னதென்ற விவரமும் தெரியாது , காங்கிரசின் வரலாறு என்னவென்றும் தெரியாது என்று நொந்துபோய்ப் பேசியது மற்றொன்று. முதல்முறையாக காகா கமிட்டிக் கூட்டத்தில் மூத்த தலைவர்களுக்கு ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே தெரியாது என்று அரசுக்கு ஆதரவாக, சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருப்பது சோனியாG நேரடி அரசியலுக்கு வந்த பிறகு முதல்முறையாக எழுந்திருப்பதுதான் கூடுதல் விசேஷம்!
        

காங்கிரஸ் கட்சி என்பதுஆதாயத்துக்காகக் கூடுகிற சுயநலக் கும்பல் ஒன்றால் நடத்தப்படுகிற கட்சி என்பது இங்கே வரும் நண்பர்களுக்கு நன்றாகவே தெரிந்த ஒன்றுதான்! ஆர்டிகிள் 370 விஷயத்தில் அவர்களுக்குள்ளேயே ஒருமித்த கருத்தில்லை என்பது மட்டுமே இங்கே விஷயமில்லை. நரேந்திர மோடி அரசை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுக்கக் கூடத் தயங்காத சோனியாG மற்றும் வாரிசுகளைப் பற்றி இந்தப் பக்கங்களிலும் அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்திலும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலே இந்த 35 நிமிட விவாதமே காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானின் நிலையை அப்படியே பின்பற்றுகிறதா என்பதுதான்!

சோனியாG காங்கிரசை இன்னமும் சகித்துக் கொண்டிருக்க  வேண்டுமா? சோனியாG காங்கிரசைத் தலைமுழுக வேண்டியநேரமும் அவசர அவசியமும்   வந்துவிட்டதா இல்லையா?

மீண்டும் சந்திப்போம்.  
   

2 comments:

  1. இன்றைய நகைச்சுவை!

    https://www.kalaignarseithigal.com/india/2019/08/07/mission-kashmir-modi-executed-the-top-secret-task

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து! இணைப்பில் பார்த்தேன். கலீஞர் செய்தியெல்லாம் படிக்கிற அளவுக்குப் பொறுமை, நேரமெல்லாம் இருக்கிறதா? :-)))
      இதில் காமெடியோ செய்தியோ இருக்கிற மாதிரித் தெரியவில்லை. யாரோ ஒரு இடதுசாரி மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை இங்கே அப்படியே விஷமாகக் கக்கியிருக்கிற மாதிரித் தெரிகிறது. விவரம் புரிந்து எழுதிய மாதிரி இல்லை.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!