இன்றைக்கென்ன புதுத் தகவல்? செய்திகளில் ஒரு உலா!

இந்தியா பாகிஸ்தான் என்றால் பெரும்பாலானோருக்கு கிரிக்கெட் மேட்ச் மட்டும்தான் ஞாபகம் வரும்! ஆனால் ஒரு நூறு ஆண்டுகாலத்துக்கும் மேலாக தொடர்ந்து வெறுப்பில் எரிந்து கொண்டிருக்கும்  இஸ்லாமியப் பிரிவினை வாதம் நாடு துண்டாடப்பட்ட பிறகும் கூட அடங்கவில்லை என்பது கண் முன்னால் நடந்துகொண்டிருக்கும் நிகழ்கால சரித்திரம் கூடப் புரியாத அளவுக்கு நம் கண்ணை மறைப்பது எது? 


Pakistan: Where no elected prime minister has managed to complete one full term but where army chiefs get two.
9:42 PM · Aug 19, 2019

Pakistan Army chief General Qamar Javed Bajwa's term has been extended for another three years by Prime Minister Imran Khan in view of the "regional security environment", an official announcement said on Monday. General Bajwa, 58, who was appointed as the Chief of Army Staff by former prime minister Nawaz Sharif in November 2016, was to retire in November. இது நேற்றைய செய்தி. சரி, பாகிஸ்தானில் என்ன நடந்தால் நமக்கென்ன? அங்கே ராணுவத்தளபதி க்வாமர் ஜாவேத் பாஜாவ்க்கு பதவி நீட்டிப்புக் கொடுத்தால் என்ன கொடுக்கா விட்டால் தான் என்ன என்று இருக்க நினைப்பவர்கள் இந்த இடத்திலேயே அப்பீட்டாயிக்கலாம். செய்தியில் என்ன புதுத்  தகவல் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்புகிற நண்பர்களுக்காக மட்டும் ஆரம்பவரிகளில் முன்னோட்டமாக கொஞ்சம் வரலாறு, நாம் பாடமாக எடுத்துக்கொண்டாலும் புறக்கணித்தாலும் எப்படி நம்மை விடாமல் துரத்திக் கொண்டு இருக்கிறது என்பதை சொல்வதற்காக. பகை, நெருப்பு மாதிரியான சிலவிஷயங்களை கொஞ்சம் கூட மிச்சம் வைக்கக் கூடாது என்று முன்னோர்கள் சொன்னது  கொஞ்சம் கூடப்பொய்யில்லை என்பதை மேலே சேகர் குப்தா ஒரு 12 நிமிட வீடியோவில் கொஞ்சம் வேறு வார்த்தைகளில் செயதியின் பின்னால் என்ன என்பதைச் சொல்கிறார்! கொஞ்சம் பாருங்களேன்!


From now on Pakistan’s initiative on Kashmir will depend largely on the valley taking the lead | ThePrint
லண்டனில் இருந்துகொண்டு எழுதுகிற இந்த பாகிஸ்தானிய ஸ்காலருக்கு சேகர் குப்தா வேண்டுமானால் தன்னுடைய தளத்தில் இடம் கொடுக்கலாம்!  லண்டன் பல்கலையில் ரிசர்ச் அசோசியேட் கப் பணிபுரிந்துவரும் இந்தப்பெண்மணி தன்னுடைய கட்டுரையின் முத்தாய்ப்பாக இப்படி முடித்து இருப்பது கொஞ்சம் கவனிக்க வைக்கிறது. 

Pakistan would either have to wait for a very long time and wait for the moment when the Western world needs Pakistan again to return to its older policy framework. The alternative is to work doubly hard to re-build its relation with China to the level of where it was during the Nawaz Sharif days. Visionary and imaginative diplomacy that could negotiate the complex global geopolitics of modern times may be the only way forward. Of course, the success of Pakistan’s diplomacy will depend on the human rights scene in India.

ஆனால் இதற்கும் ட்வீட்டரில் பதில் எப்படி வருகிறதென்றும் பாருங்கள்!

Replying to
I believe you are underestimating Indian diplomacy(Just ask Leaders inMaldives, Nepal and Sri Lanka). Other then Londonistanis and China(Uighurs indoctrination) can you name any other companion in this journey?
2:29 PM · Aug 19, 2019


பாவம் இந்த விஷயங்களெல்லாம் சோனியாGக்குப் புரியும் என்று எதிர்பார்ப்பதே கூடக் கொஞ்சம் அதிகப்படி தான் இல்லையா!

  
இன்றைக்கு ஹிந்து ஆங்கில நாளிதழில் சுரேந்திரா வரைந்த கார்டூன் இது. சோனியாG காங்கிரஸ் எப்படி ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்ட விஷயத்தில், வழிதவறிப்போன என்று கூட இல்லை, குருடர்களாகிக் கிடக்கிறது என்று சொல்கிற மாதிரி! 

ஆனால் நாட்டில் வேறெங்கும் இல்லாத அதிசயமாக தி மு கழகம் இந்தவிவகாரத்தில் நாளைமறுநாள் தலைநகர் டில்லியில் காஷ்மீர் விவகாரத்தைக் கண்டித்து கைது செய்யப் பட்ட காஷ்மீர் தலைவர்களை விடுதலைசெய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப போவதாக அறிவித்திருக்கிற கேலிக்கூத்து! புதியதலைமுறை டிவி விவாதத்துக்குச் செய்தி, தீனி வேண்டாமா?


திமுகவின் மனுஷ்ய புத்திரன் வாங்குகிற காசுக்கு மேலேயே கூவுகிற ரகம்! இதற்குமேல் சொல்வதற்கென்ன இருக்கிறது?

மீண்டும் சந்திப்போம்.
  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!