பாகிஸ்தானும் சோனியாG காங்கிரசும் நம்பிய மாதிரி ஆர்டிகிள் 370 தூக்கப்பட்டதில் காஷ்மீர் ஒன்றும் கொந்தளித்துப் பொங்கவில்லை என்பதில் காம்ரேடுகள் சிலருக்கு ரொம்பவே வருத்தம் போல! அதெப்படி ஒரு கல்லெறி ஒரு துப்பாக்கிச்சூடு இல்லாமல் இருக்கலாம் என நினைத்தோ என்னவோ இடது சீதாராம் யெச்சூரியும் வலது D ராஜாவும் ஸ்ரீநகருக்குப் போனார்களாம்!
சாயம்போன இடதும் வலதுமாக
"Both of us had written to the J&K governor requesting him that there should be no hurdles for our visit. Despite that we have been detained. I wanted to meet my ailing colleague and our comrades who are here," Yechury said. கவர்னருக்கு கடுதாசி எழுதினாங்களாம்! வாங்க அப்படீன்னு அவர் சொன்னாராமா? ஸ்ரீநகரிலேய தடுத்து நிறுத்தப்பட்டு டில்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி. இடதும் வலதுமாக உடைந்து கிடப்பவர்கள், கடிதம் எழுதுவதில் மட்டும் ஒன்று சேர்ந்தார்களா? அதிசயம் தான்!
ஐக்கிய நாடுகள் சபை ஏதோ முதல் உலகப்போருக்குப் பின் தோன்றிக் காலாவதியான League of Nations மாதிரி ஆகிவிடாமல் தருமத்துக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் காஷ்மீர் பஞ்சாயத்து என்று கேட்டுக்கேட்டு காதுபுளித்த்துப் போய்க்கிடக்கிறவர்கள் என்னசெய்வார்களாம்? மீண்டும் பஞ்சாயத்தைக்கூட்டு என்று பாகிஸ்தான் காஷ்மீர் விஷயம் எடுத்துக்கொண்டுபோனதில் நிராகரித்து விட்டார்களாம்!
நாங்கள் சொன்னால் தாலிபான்கள் கேட்பார்கள் என்று பாகிஸ்தான் ISI யும் ராணுவமும் அமெரிக்காவிடம் கித்தாப்பு காட்டிக்கொண்டிருக்கும் நேரம் பார்த்து, தாலிபான்கள் வேறு மாதிரி பாகிஸ்தானுக்கு மூக்குடைப்பு நடத்தியிருக்கிறார்கள்.காஷமீர் விவகாரத்தோடு ஆப்கானிஸ்தான் பிரச்சினையை முடிச்சுப் போடவேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம்!
தயாநிதி மாறன்! ஒருமாதிரி கையைநீட்டி அல்லது ஆட்டிப் பேசுவதைப் பார்ப்பதே செம காமெடி! கவனியுங்கள், பேச்சைக் கேட்பதில் அல்ல! நவரசம்! 5 நிமிட nonstop comedy!
போனவெள்ளிக்கிழமைதான் Jallianwala Bagh National Memorial (Amendment) Bill, 2019 குரல் வாக்கெடுப்பிலேயே நிறைவேற்றப் படுவதற்குமுன் மூன்றுமணிநேர காரசார விவாதத்தின் போதுதான் இந்தக் கெஞ்சல், சரித்திரம் படித்ததாகச் சொல்லிக் கொண்ட தயாநிதியிடமிருந்து! இந்தச் சட்டத்திருத்தம் எதற்காக? Jallianwala Bagh National Memorial Act, 1951 இன் படி ஒரு தேசிய நினைவுச் சின்னம் அமைப்பதற்கான ஒரு ட்ரஸ்ட் அமைக்கப்படும். இந்த ட்ரஸ்டின் தலைவராக பிரதம மந்திரியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர், கலாசாரத்துறை மந்திரி, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர், பஞ்சாப் ஆளுநர் பஞ்சாப் முதலமைச்சர், அப்புறம் மத்திய அரசால் நியமனம் செய்யப் படுகிற மூன்று உறுப்பினர்கள் ஆகியோர் இருப்பார்கள் என்றிருந்ததில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித்தலைவரை பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வழி செய்கிற திருத்தம் தான் சென்ற ஜூலையில் சபையில் அறிமுகம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 2 அன்று நிறைவேறியது.
அய்யய்யோ!ட்ரஸ்டிகள் பட்டியலில் இருந்து காங்கிரசை நீக்கலாமா? வரலாற்றைத் திருத்தலாமா? என்று கூக்குரல்கள்! 1951 இல் இருந்த அந்த காங்கிரசா இன்றைக்கிருப்பது? 1984 இல் இந்திரா இறந்தபோது சீக்கியர்களைத் தேடித்தேடி படுகொலை செய்ததில் இறந்தவர்களை விட ஜாலியன் வாலாபாகில் இறந்தவர் எண்ணிக்கை மிகவும் கம்மிதான்! இன்றைக்கிருப்பது இந்திய தேசிய காங்கிரசல்ல! இது வெறும் சோனியாG காங்கிரஸ் தானே!
மீண்டும் சந்திப்போம்.
திமுக டிஆர் பாலு பேசும் போது நாங்களும் பாஜக வும் நண்பர்கள் தான் என்பதனை தவறாமல் குறிப்பிடுகின்றார். எல்லாமே அதற்குள் அடக்கம்.
ReplyDeleteஜோதிஜி! தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடிகிறதோ இல்லையோ சம்பாதித்ததைக் காப்பாற்றிக் கொள்ளவும் வழக்கு விசாரணைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் திமுக தலைமையே விரும்புகிறது என்று கூட புரிந்துகொள்ளலாம்.
Delete