சிதம்பரம் மட்டுமல்ல! சோனியாG காங்கிரசும் நாட்டுக்கு கேடு!

பானாசீனா விஷயத்தில் நண்பர் திருப்பூர் ஜோதிஜிக்கு இன்னமும் கொஞ்சம் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது போல! கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, மற்றும் காங்கிரசின் வழக்கறிஞர் அணிக்கு ஈடுகொடுக்கிற அளவுக்கு அரசுத்தரப்பிலும் அசகாய சூரர்கள் இருந்தால் தான் முடியும் அப்படி யார் இருக்கிறார்கள் என்றமாதிரி ஒரு பின்னூட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.



இந்தமாதிரி தருணங்களில்தான் இந்திய அரசியலில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி போன்றவர்கள் தேவையும் இருப்பது நன்றாக வெளிப்படுகிறது. 5 நிமிட வீடியோதான்! விசாரணை நீதிமன்றத்தில் நேற்றைக்கு  கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி இவர்களுடைய வாதங்களை அரசுதரப்பு முறியடித்திருப்பது குறித்து சிரித்துக் கொண்டே சில விஷயங்களைச் சொல்கிறார். நாளை உச்சநீதிமன்றத்திலும் இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறதே என்கிற கேள்விக்கும் பதில் சொல்கிறார்.கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள்!


சுப்ரமணியன் சுவாமி இங்கே கொஞ்சம் தெளிவாகவே தமிழில் சொல்கிறார்.தெரிந்த விஷயம்தான் என்றாலும் இன்னமும் சால்வை அழகர் உத்தமர் என்றே பேசிக்கொண்டிருந்தால் எப்படியாம்?  


INX Media விவகாரம் பற்றி நம்முடைய நினைவில் என்ன இருக்கிறது? அல்லது நமக்கு எந்த அளவுக்கு விஷயங்கள் தெரியும்? இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆனதன் பின்னணி என்ன? சிறையிலேய அவரை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி நடந்ததைப் பற்றி ஏதாவது தெரியுமா? மாரிதாஸ் சில விஷயங்களை இங்கே புட்டு வைக்கிறார்.வீடியோ 16 நிமிடம்.

     
மாரிதாஸ் சொல்வது ஒருவிதம்! நேரெதிராக, சேகர் குப்தா என்ன சொல்கிறார் என்பதையும் பார்த்து விடலாம்! வீடியோ 10 நிமிடம்.    

Shared by Venkatesh
கொண்டாடும் திமுக!
‘2ஜி விவகாரத்துல அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லி பிரணாப் முகர்ஜி மூலமா கலைஞருக்கே நெருக்கடி கொடுத்தது சிதம்பரம்தான். ‘ராஜினாமா செய்யச் சொல்லிடுங்க. பிரச்சினை பெரிசாகாம பாத்துக்கலாம்’ என்று கலைஞரிடம் பிரணாப்பை விட்டு பேச வைத்து அதன் பின்னர் ஆ.ராசாவை கைது செய்தது மட்டுமில்லாமல், கனிமொழியையும் இந்த வழக்கில் பிணைத்தவர் சிதம்பரம்தான். இந்த ஊழல் புகார்களால் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் வரைக்கும் வாங்கிக் கொண்டதற்குக் காரணமும் சிதம்பரம்தான். அறிவாலயத்தில் திமுக -காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே, அதே வளாகத்தில் இருக்கும் கலைஞர் டிவியில் ரெய்டு நடத்தி தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தியது சிபிஐ.
இதுபற்றியெல்லாம் அப்போது திமுக முக்கியப் புள்ளி ஒருவர் உள்துறை அமைச்சராக சிபிஐயை கையில் வைத்திருந்த சிதம்பரத்துக்கு போன் போட்டு, ‘ஏன் இப்படி பண்றீங்க? தலைவர் ரொம்ப வேதனையில இருக்காரு’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ப.சிதம்பரம், ‘இது கட்சி, அது ஆட்சி’ என்று கூட்டணிப் பேச்சையும், சிபிஐ ரெய்டையும் ஒப்பிட்டுப் பதில் கொடுத்திருக்கிறார். சிதம்பரத்தின் வார்த்தைகள் அப்படியே கலைஞருக்கு கொண்டு செல்லப்பட்டபோது கொதித்துவிட்டார் அவர்.
2ஜி ஊழல் மூலம் திமுகவை தமிழக அரசியலில் இருந்தே ஓரங்கட்டிவிட்டு காங்கிரசை பலப்படுத்தி தான் மாநில அரசியலுக்குத் திரும்புவது என்ற திட்டமும் சிதம்பரத்துக்கு இருந்தது. ஆனால் சிதம்பரத்தின் திட்டப்படி திமுக வீழ்ந்ததே தவிர, காங்கிரஸ் வளரவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் சிதம்பரத்தின் தாயார் மறைந்துவிட்டார். தனது நீண்ட நெடிய பொதுவாழ்வில் அரசியல் மாச்சரியங்களை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு எதிர்முகாமைச் சேர்ந்தவர்களின் இறப்புக்கு கூட அஞ்சலி செலுத்துவதும் இரங்கல் வெளியிடுவதும் கலைஞரின் வழக்கம். ஆனால் ப.சிதம்பரத்தின் தாயார் மறைவுக்கு கலைஞர் அஞ்சலி செலுத்த செல்லவில்லை. வீட்டில் சிலர், ‘நாங்க போய் பார்த்துட்டு வந்துடட்டுமா’ என்று கலைஞரிடம் கேட்டுப் பார்த்ததற்கு, ‘வெட்கம் , சூடு , சொரணை இல்லாதவன் தான் அங்க போவான்’ என்று பதில் சொன்னார் கலைஞர். மறப்போம், மன்னிப்போம்னு எப்போதும் சொல்கிற கலைஞரே அந்த அளவுக்கு பதில் சொன்னார் என்றால்... கடைசி காலத்தில் அரசியல் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் கலைஞர் அனுபவித்த வேதனைகளுக்கு சிதம்பரம் எவ்வளவு தூரம் காரணமா இருந்திருப்பார்னு பார்த்துக்கங்க. கலைஞரே மன்னிக்க முடியாத சிதம்பரத்தை நாங்க எப்படி மன்னிப்போம்’ என்கிறார்கள் கலைஞரின் குடும்ப வட்டாரத்தில். இந்த சூழலில்தான் சிதம்பரம் விவகாரம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘அவர் சட்ட வல்லுநர். தன்னைக் காப்பாற்றிக் கொள்வது எப்படினு அவருக்குத் தெரியும்’ என்று பூடகமாக ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறார். ஆக சிதம்பரம் கைதானால் திமுகவினர் வெடிவெடிக்காத குறையாய் கொண்டாடுவதுதான் தமிழக அரசியல் நிலவரம்’
இந்த ட்வீட்டில் சொல்கிறமாதிரி நிஜமாகவே மிரட்டல் விடுக்கப் பட்டதா என்றெல்லாம் கேட்காதீர்கள்! சோனியாG எப்பேர்பட்டவர் என்று நமக்கு என்ன தெரியும்?


ஆனால் அம்மணி எவ்வளவு பெரிய பொய்யர் என்பது நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் எப்போதுமில்லாத அதிசயமாக ராஜீவ் காண்டியின் 75ஆம் பிறந்தநாளை ஒரு வருடம் கொண்டாடப்போவதாக ஆரம்பித்துப் பேசிய பொய்களை, அக்ஷய் சந்தர் கார்டூனில் கிண்டல் செய்கிறார். 

ஒரே ஒரு கேள்விதான்! 

இன்னும் எத்தனை நாளைக்கு சிதம்பரம்,   சோனியாG  காங்கிரசை சகித்துக் கொடிருக்கப்போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.
  

10 comments:

  1. சுசா வீடியோ பார்த்தேன். மற்ற வீடியோக்களின் சாரம் என்ன என்று கொஞ்சம் சுருக்க விளக்கமாகக் கொடுத்தால் தேவலாம்! ஹிஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. கடவுளே! வீடியோவுக்கும் விளக்க உரையா? ஸ்ரீராம், இது நியாயமா? :)))

      Delete
    2. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒரு காலத்தில் கதறியுள்ளார். காரணம் காங்கு வக்கில்கள் போட்ட ஆட்டம். மிரட்டல் தொனி. இன்னமும் அவர்கள் பிடிமானம் உள்ளது என்பதற்காகவே அப்படி குறிப்பிட்டேன். பத்து சதவிகிதம் தான் நம்பிக்கை வந்துள்ளது. திங்கள் தெரியும். அடுத்த வாரம் வென்று விட்டால் 35 மதிப்பெண்கள் தருவேன்.

      Delete
    3. எனக்கு மார்க் போடுவது, பாஸா இல்லையா என்றெல்லாம் பார்ப்பதற்கு முன்னால்..............

      1.அரசு நிர்வாகத்தில் சிதம்பரத்துக்கு இனி பழைய நாட்கள் மாதிரி உள்ளடி வேலைகள் செய்வதற்குக் கூட்டாளிகள் கிடைப்பது கடினம். ஏற்கெனெவே நிதியமைச்சகத்தில் கொஞ்சம் போலக் களையெடுப்பு நடந்ததிலேயே பாபுக்கள் கழிய ஆரம்பித்து விட்டார்கள் 2. நீதிமன்றத்திலும் நிறைய மாற்றங்கள்! நள்ளிரவில் ஒரு போன் காலிலேயே ஜாமீன் வாங்கித்தரமுடிந்த கபில் சிபல் இப்போது ஊடகங்கள் முன்னால் கதறுகிறார். வாதங்களை நீதிமன்றம் இடதுகையால் புறந்தள்ளி விட்டது. ஒரே ஒரு பானுமதி இருந்தால் போதுமா?
      3. மூன்றாவதாகச் சொன்னாலும் முதன்மையானதாக டாக்டர் சுப்ரமணியன் சுவாமி! உள்துறை அமைச்சராக அமித் ஷா என்னென்ன சாதிக்கமுடியும் என்பதை சிதம்பரம் விஷயத்திலும் நிரூபித்திருக்கிறார். தன் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தியனாக, அருண் ஜெயிட்லி ஏற்படுத்தி வைத்திருந்த பாதுகாப்பையெல்லாம் உடைத்து சிதம்பரத்தின் மீது குறிபார்த்து சுவாமி அடித்திருக்கிறார். இப்போது நட்புரீதியில் உதவிக்கொண்டிருந்த அருண் ஜெயிட்லி உயிரோடு இல்லை.

      Delete
    4. ஏற்றுக் கொள்கிறேன். போர் இப்போது தொடங்கியுள்ளது. இது உச்சகட்டத்தின் தொடக்கம். காங்கு மக்களை சாதாரணமாக நினைக்காதீர்கள். தங்களை காப்பாற்றிக் கொள்ள அப்படியே சாஷ்டாங்கமாக அப்படியே தொபக்கடீர் என்று அரசின் காலில் பிடித்து கதறக்கூட தயாராக இருப்பார்கள். அரசியலில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் அமித்ஷா மேல் நம்பிக்கை உள்ளது. நீங்க சொன்ன சுசா எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும். (நீங்கள் வருத்தப்பட்டாலும் இது தான் உண்மை).

      Delete
    5. ஜோதிஜி! காங்கிகள் எப்படியெல்லாம் சாயம் மாற்றிக்கொள்ளத் தெரிந்தவர்கள் என்பதை நானறிவேன்! ஒரு உறுதியான தலைமை என்றிருந்தால் அவர்கள் ஆட்டமே வேறுமாதிரியாகத்தான் இருந்திருக்கும் என்பது கூடத் தெரிந்ததுதான்! ஆனால் காற்று அவர்களுக்கு சாதகமாக வீசவில்லை. சென்ற ஐந்ந்தாண்டுகளில் பிஜேபி ஆட்சியின் சாதனையாக எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதது போலவே எந்தவொரு ஊழல் புகாரிலும் மோடி அரசு சிக்கிக் கொள்ளவில்லை.

      செகண்ட் இன்னிங்சில் அடித்துவிளையாடுவார்கள் என்று எதிர்பார்த்ததுதான்! ராஜ்யசபாவில் பிஜேபிக்கு போதிய எண்ணிக்கை இல்லாத நிலையிலும் கூட அமித் ஷா தன்னுடைய சாமர்த்தியத்தால் முக்கியமான சில மசோதாக்களை நினைவேற்றியபோது கூட சிதம்பரம் இப்படிச் சிக்குவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை

      அடுத்த குறி யார் யாராக இருக்குமென்பது தெரியாத நிலையில் தமிழக அரசியல்புலிகள் சிலருக்கு உதறல் எடுத்திருப்பது கொஞ்சம் வெளிப்படையாகவே தெரிகிறது!

      Delete
    6. மற்றொரு விசயத்தையும் நீங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். கடந்த ஐந்து வருடங்களில், இந்த ஆட்சி காலத்திலும் மோடி செய்த சுற்றுப்பயணங்கள் காஷ்மீர் போன்ற அதி முக்கிய விவகாரங்களில் எந்த நாடும் மூச்சு கூட விட முடியாத அளவுக்கு ராஜதந்திரத்தில் சிறப்பாக இந்தியா முன்னேறி உள்ளது. ஆனால் இது மட்டுமல்ல ஆட்சி. மன்மோகன் இரண்டாவது முறை ஆட்சியில் அமர்ந்த போது தான் தொட்டால் உட்கார்ந்தால் நடந்தால் நின்றால் ஊழல் என்று நாறி கேவலமாக பதவியை விட்டு விலகினார். மோடி க்கு இனி வெளிநாட்டு உதவி எப்போது வேண்டுமானாலும் எங்கே இருந்து வேண்டுமானாலும் கிடைக்கும். வெளியுறவுத்துறையை அழகாக உருவாக்கி உள்ளார். இது இனி முக்கியமல்ல. அவர் செய்ய வேண்டியது ஒவ்வொரு மாநிலமாக உள்ளே சுற்றி வர வேண்டும். தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அல்லது அதற்கான முன்னெடுப்புகளை உட்கார்ந்த இடத்தில் இருந்து செய்ய வேண்டும். இனி செயல் தான் வேண்டும்.

      Delete
    7. ஜோதிஜி! வெளியுறவு விவகாரங்களில் ஒரு ஆழ்ந்த வாசிப்பு எனக்கிருக்கிறது.வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதிலும் புதியவாய்ப்புக்களைக் கண்டறிவதும் pro active ஆக இருக்கிற வெளியுறவுக் கொள்கையின் ஒரு நல்ல அடையாளம். கடந்த காலங்களில் நமது வெளியுறவுக் கொள்கை வெறுமனே பாகிஸ்தானை மட்டுமே மையமாக வைத்து செயல்பட்டது மோடி நிர்வாகத்தில் தூக்கி எறியப்பட்டது. Act Eas, Neighbourhood First என்று ஆக்கபூர்வமான மாறுதல்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன.

      எல்லாம் சரிதான்! அதனால் ஆம் ஆத்மிக்கு என்ன பிரயோசனம் என்று சர்வசாதாரணமாக விமரிசித்துவிட்டுப் போய்விடுகிற மிடில் க்ளாஸ் மாதவன்களிடம் பேசுவதற்கு நான் வெளியுறவு விவகாரங்களைத் தொட்டுப் பேசுவதில்லை! மற்றபடி, நல்லதோ அல்லதோ செய்திகளை கவனித்துத்தான் எழுதுகிறேன்.

      சீனாதானாவைப் பற்றி பேசுகிற பதிவில் இதைப்பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்கள்!

      Delete
    8. சீனாவின் இன்றைய பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு பத்து காரணங்களை பட்டியலிட்டால் முதல் ஐந்து காரணங்கள் சுய சார்பு பொருளாதாரத்தை ஊக்குவித்ததே முக்கியம் என்பது நாம் உணர வேண்டும்.

      Delete
    9. பத்துக்காரணங்கள் எல்லாம் தேவையே இல்லை ஜோதிஜி! டெங் சியாவோ பிங்! இந்த ஒரு மனிதர், மாவோ காலத்து வறட்டுக் கம்யூனிசத்தைத் தூர எறிந்துவிட்டு, அந்நிய மூலதனத்துக்கு ஒரு கட்டுப்பாட்டுடன் கூடிய கதவுகளைத் திறந்துவிட்டார்! தன்னுடைய சந்தை என்று எதுவுமே இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருந்த அமெரிக்கா நிக்சன் காலத்தில் சீனாவில் காய்ந்த மாடுபோலப் பாய்ந்தது. முப்பதே ஆண்டுகளில் சீனப் பொருளாதாரத்தை 2009 வாக்கிலேயே ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இன்றளவும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக ஆக்கிக் காட்டியது டெங் சியாவோ பிங்! இன்றைக்குத் தேக்கநிலைக்கு வந்து நிற்கிறது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!