இந்தப் பக்கங்களுக்கு வரும் சிலநண்பர்களுக்கு ஆரம்ப நாட்களிலிருந்தே ஒரு மனக்குறை உண்டு. பதிவு மிக நீளமாக இருக்கிறது என்பதுதான் அது. எங்கள்Blog ஸ்ரீராமுக்கோ வேறு விதமான பிரச்சினை! பதிவின் நீளம் தவிர சமீப காலமாகப் பதிவுகளில் மூன்று அல்லது நான்கு வீடியோக்கள்! படங்கள் என்று போய்க் கொண்டிருப்பதில் வீடியோ கொஞ்சம் நேரம் கூடப் பிடிக்குமென்றால் எத்தனைபேர் பொறுமையாகப் பார்ப்பார்கள்? பொதுவாக 600 வார்த்தைகளுக்கு மேல் எவரும் வலைப்பதிவுகளில் பொறுமையாகப் படிப்பதில்லை என்றொரு ஆய்வு முடிவு பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் சொன்னதுண்டு! தமிழ் இணையச் சூழ்நிலை இன்னும் மோசம்! நூறு வார்த்தைகளுக்கு மேல் எந்தவொரு தமிழ் வலைப்பதிவையும் படிப்பார்களா என்பதே சந்தேகம்! அதிலும் வேண்டப்பட்டவர் பதிவு, அல்லது வசைபாடுவதற்காகவே பரிவாரங்களோடு தேடிப்போய்ப் படிக்கிற பதிவுகள் என்று இருவிதமாய் இருந்தாலும் கூட முழுசாய்ப் படிப்பார்களா, புரிந்துதான் பின்னூட்டங்கள் எழுதுகிறார்களா என்பதெல்லாம் இன்றும்கூடத் தெளிவாகப் புரியாத சமாசாரம்!
இந்த வீடியோ 100 நிமிடங்கள்! இரு அணிகளிலும் மூன்று மூன்று பேராக ஆர்டிகிள் 370 ஜக் குறித்து விவாதம் செய்வது 55 நிமிடங்களிலேயே முடிந்துவிடுகிறது. அடுத்து கேள்வி நேரம்! அரங்கத்தில் இருப்பவர்கள் விவாதம் செய்தவர்களிடம் கேள்வி எழுப்புகிறார்கள்! இதெல்லாம் நடந்தது 2015 டிசம்பரில். பழசு என்றாலும் இந்த விவாதத்தில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கணித்த விதத்திலேயே ஆர்டிகிள் 370 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் abrogate செய்யப்பட்டு இருப்பதைப் பார்த்த போது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது.
என்னுடைய அபிப்பிராயத்தில் காஷ்மீர் விவகாரம், ஆர்டிகிள் 370. ஆர்டிகிள் 35A இவைகளைக் குறித்து ஒரு சமநிலையில் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்த வீடியோவுக்காக ஒன்றே முக்கால் மணிநேரத்தை ஒதுக்கத் தயாராகத்தான் இருக்க வேண்டும், விஷயங்களை இரு பக்கத்திலிருந்தும் பார்ப்பதென்றால் பதிவு நீளமாக இருப்பதைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்ற கருத்து இருப்பதால் பதிவு நீளமாக இருப்பதைப்பற்றியோ, வீடியோ நேரம் அதிகமாக இருப்பது பற்றியோ நான் அதிகமாகக் கவலைப் படுவதில்லை பதிவு, படிக்கிறவர்களுக்கு உபயோகமாக இருக்கிறதா என்பது மட்டுமே முக்கியமாக இருக்கிறது.
ஆகஸ்ட் 5, 6 தேதிகள் இந்தியவரலாற்றில் மிக முக்கியமான தடம் பதித்த நாட்கள். ஒரு செயற்கையான தேக்க நிலைமையை உடைத்து மாற்றத்துக்கு வழிவகுத்த நாட்கள்!
Constitution Club of India இந்திய அரசியல் சாசன நிர்ணய சபை உறுப்பினர்களுக்காக 1947 பிப்ரவரியில் ஆரம்பமான ஒரு அமைப்பு இன்றளவும் நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் நிர்வாகிகளோடு நிர்வகிக்கப் படுகிறது. இதன் முகநூல் பக்கம் இது.
அரசியலில் ஆர்வம் இருக்கிறவர்கள் வீடியோவை முழுமையாகப் பாருங்கள்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!