தேவியர் இல்லம் பதிவர் நண்பர் திருப்பூர் ஜோதிஜி எழுதுவதில் நிறைய ஆர்வம் உள்ளவர். எழுதுகிற எவருக்குமே விரிவாக வாசிக்கிற வழக்கம் இருந்தாக வேண்டுமில்லையா! அவருக்கும் அப்படி ஒரு வாசிப்பு இருக்கிறது. இந்திய அரசியல் விவகாரங்களில் என்னைப்போலவே அவருக்கும் ஒரு ஆழ்ந்த வாசிப்பு இருக்கிறது. என்னைப்போலவே அவரும் நரேந்திர மோடியின் பல அரசியல் நடவடிக்கைகளில் ஆதரவு நிலை எடுத்து, பதிவுகள் எழுதி வாசிக்க வருகிற பலரிடம் வாங்கியும் கட்டிக் கொள்கிறார்! இங்கே பின்னூட்டங்களில் அர்த்தமுள்ள உரையாடலை நடத்த முன்வருகிற ஒருசிலரில் அவரும் ஒருவர் என்பதால்,இன்றைய பதிவில் அவருக்கும் சுவாரசியமான தகவல்களைச் சொல்கிற சாக்கில் ஒரு சில காணொளிகள், செய்திகள், அவற்றின் மேல் வழக்கம்போல என்னுடைய சிறு விமரிசனக் குறிப்புகளோடு வாசிக்கவரும் எல்லோருக்குமாக!
இந்த 12 நிமிட வீடியோவில் காங்கிரஸ் ஆதரவாளரான சேகர் குப்தா, ராகுல் காண்டிக்கு நரேந்திர மோடியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்களாக, முக்கியமாக, எந்த சந்தர்ப்பத்தில் என்ன பேசவேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும் என்று சொல்கிறார்! நேருவாவது அடுத்தவர் சொல்வதைக் காதுக்கொடுத்துக் கேட்பதாக பாவனை செய்தார்! இந்திரா முதற்கொண்டு வாரிசுகளில் எவரும் அந்த பாவனையைக் கூடப் பின்பற்றியதில்லை! நான் என்ன உளறினாலும் அது கட்டளை அதுவே என் சாசனம் என்பது தான் அவர்கள் சொல்லிக் கொள்கிற நேரு பாரம்பரியம்.அந்த மாதிரி ஆசாமிகளுக்கு இவர் உபதேசம் செய்தால் எடுபடுமா?
அரேபியக்கடல் பிராந்தியம் நமது கரையில் இருந்து 200 கிமீ நமது கட்டுப் பாட்டுக்குள் வருவதைப் பயன்படுத்தி கராச்சி துறைமுகத்துக்கு போய்வருகிற வழியை அடைத்து விடலாமே என்ற யோசனையை முன்வைத்திருக்கிறார் சுவாமி! ஏற்கெனெவே குற்றுயிரும் குலையுயிருமாகத் தவித்துக் கொண்டிருக்கிற பாகிஸ்தான் பொருளாதாரத்தை சுத்தமாக முடக்கி வைத்து விடுகிற யோசனை இது!
சீதாராம் யெச்சூரி இன்னமும் பழைய நினைப்பிலேயே இருக்கிறார் போல! உடல்நலம்பாதிக்கப்பட்ட கட்சிக்காரர் ஒருவரை சந்திக்க ஜம்மு காஷ்மீர் போக அனுமதி வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுச்செய்தார்! உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு, அனுமதி எதற்காக வழங்கப் பட்டதோ அதற்குமட்டுமே பயன்படுத்த வேண்டும். போய்வந்த விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் அரசியல் செய்யக்கூடாதென்றும் சேர்த்துச் சொல்லி இருக்கிறது. உச்சநீதிமன்றத்துக்கெதிராக வலது கம்யூனிஸ்ட் கட்சி D ராஜா கொந்தளித்திருக்கிறார். இங்கே விவாதத்திலும் கொந்தளிக்கிறார்கள்! ராகுல் காண்டி மூக்குடைபட்டு நிற்பதைப் பார்த்தபிறகும் கூட இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பதை ஏன் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்? உங்களுக்காவது புரிகிறதா?
Post Script ஆக First Things First ::
தினசரி அரசியலைத் தொட்டுப் பதிவுகள் எழுதிக் கொண்டு இருப்பதில் வாசிப்பவருக்கு அலுப்பு வந்துவிடுகிறதே! எழுதுகிற உங்களுக்கு அலுப்பு வராதா? இப்படி என்னை யாரும் கேள்விகேட்கவில்லைதான்! ஆனால் காங்கிரசையே தொடர்ந்து தாளித்துக் கொண்டிருக்கக் கூடாதென்று கமென்ட் கட்டளைகள் வந்ததுண்டு.அந்தமாதிரி பதிவுகளில் அலுப்பு அடைகிறவர்கள் இந்தப்பக்கம் வருவதை நிறுத்திக் கொள்கிறார்கள் அப்படி ஒரு சாய்ஸ் அவர்களுக்கு இருப்பதால் இந்தக் கேள்விக்கு, குறிப்பிட்டு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா?
மீண்டும் சந்திப்போம்.
.
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மீது எந்த நேரத்தில் எப்படி மாறுவாரோ என்று நண்பர் ஜோதிஜிக்கு சந்தேகம்! ஆனால் சுவாமி மாதிரி சிலருடைய தேவை இந்திய அரசியலில் எப்போதுமே இருந்துவருகிறது என்பது என்னுடைய வாதம். இந்த செய்தியையே எடுத்துக் கொள்ளுங்கள்! பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நிரந்தரத்தடையாக மாற்றலாமா என்று பாகிஸ்தான் யோசிப்பதாக. ஏர் இந்தியாவுக்கு இதனால் 575 கோடி ரூபாய், எரிபொருள் செலவு கூடுதலாக சுமை! அதேபோல வான்வழியைப் பயன்படுத்த தடை விதித்ததனால் பாகிஸ்தானுக்கும் 360 கோடிரூபாய் வருவாய் இழப்பு! வறட்டு இழுப்பு ஆசாமிகளுக்கு எப்படிப் புரிய வைப்பீர்கள்? மேலே வீடியோ 7 நிமிடம்! பாருங்கள்!
கராச்சி குஜராத்தின் கட்ச் பகுதிக்கு மிக நெருக்கம். இங்கே படத்தில் கராச்சி துறைமுகம் இந்தியாவின் முந்த்ரா துறைமுகத்துக்கு (ஒரு தனியார் துறைமுகம்) மிகப்பக்கத்தில் என்பதை ஒரு குத்துமதிப்பாகப் புரிந்து கொள்ள உதவியாக
Post Script ஆக First Things First ::
தினசரி அரசியலைத் தொட்டுப் பதிவுகள் எழுதிக் கொண்டு இருப்பதில் வாசிப்பவருக்கு அலுப்பு வந்துவிடுகிறதே! எழுதுகிற உங்களுக்கு அலுப்பு வராதா? இப்படி என்னை யாரும் கேள்விகேட்கவில்லைதான்! ஆனால் காங்கிரசையே தொடர்ந்து தாளித்துக் கொண்டிருக்கக் கூடாதென்று கமென்ட் கட்டளைகள் வந்ததுண்டு.அந்தமாதிரி பதிவுகளில் அலுப்பு அடைகிறவர்கள் இந்தப்பக்கம் வருவதை நிறுத்திக் கொள்கிறார்கள் அப்படி ஒரு சாய்ஸ் அவர்களுக்கு இருப்பதால் இந்தக் கேள்விக்கு, குறிப்பிட்டு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா?
மீண்டும் சந்திப்போம்.
பதிவில் பின்னூட்டம் இடாவிட்டாலும் பெரும்பாலான காணொளிகளை கொஞ்சம் வேகப்படுத்தியாவது (ஏனென்றால் பேசுபவர்கள் சில சமயங்களின் என்னைப் படுத்துவார்கள்) பார்த்துவிடுகிறேன். பெரும்பாலும் நல்ல கலெக்ஷன்.
ReplyDeleteதொடர்ந்து மூன்று தளத்திலும் இடுகை எழுதுங்கள்.
வாருங்கள் நெ.த.!
Deleteநான் உங்கள் மனம் வருத்தப்படும்படி ஏதாவது சொல்லிவிட்டேனா? என்வரையில் பின்னூட்டங்கள் பக்கப்பார்வைகள் இவைகளை அதிகம் எதிர்பார்ப்பதுமில்லை ஏமாந்ததுமில்லை. ஒரு வீடியோ, பத்துப் பதினைந்து பக்கம் படம் வரைந்து பாகங்களைக் குறித்து எழுதுவதை விட, சுருக்கமாக இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?
இந்த மாதத்தில் இருமுறை ஒரேநாளில் மூன்று பக்கங்களிலும் எழுதியிருக்கிறேன்.
இல்லை கிருஷ்ணமூர்த்தி சார்... இந்த அரசியல்வாதிகள் பேச்சு, செய்கைலாம் ரொம்ப டென்ஷன் உண்டாக்கும். படிக்கறவங்க பின்னூட்டம் எழுதலையேன்னு சோர்ந்துவிடாதீர்கள் என்பதைத்தான் சொன்னேன்.
Deleteநான் பார்க்காத செய்திகளோட உள்ள காணொளிகளை நீங்க வெளியிடறீங்க. ரொம்ப உபயோகம்.
சோர்ந்து போகிறவனாக இருந்தால் தினசரி வேறெதையும் பற்றிக்கவலைப்படாமல் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பேனா? :-))))
Delete