தினமலர் நாளிதழுக்கும் மு.க.அழகிரிக்கும் அந்த நாட்களில் இருந்தே அப்படி ஒரு ஏழாம் பொருத்தம்! அஞ்சா நெஞ்சனாக அழகிரி அந்தநாட்களில் மிரட்டி வந்த காலத்தில்,மதுரையில் தினமலரும் ஒரு பாடம் படிக்க வேண்டி வந்தது நிறையப்பேருக்கு மறந்து போனாலும் தினமலர் மறந்த மாதிரித் தெரியவில்லை.
இந்த 3 நிமிட வீடியோவில் தினமலர் சற்றே எகத்தாளமாக நாங்க அப்போவே சொன்னோமில்ல ராகம்போட்டு மு.க.அழகிரி சைலண்டாகி விட்டதை கொஞ்சம் கண் மூக்கு காது வைத்துச் சொல்கிற வேடிக்கையில் என்ன தெரிகிறது? தினமலர் இன்றைக்கு சொன்ன விஷயத்தை போன சனிக்கிழமைப் பதிவில் நண்பர் பந்துவுக்கு எழுதிய பின்னூட்டத்தில் அழகிரி அமைதியாக இருப்பதன் காரணம் என்ன என்பதையும் சேர்த்தே தெளிவாகச் சொல்லியிருந்தேன். ஒவ்வொரு அரசியலுக்கும் பின்னால் உள்முரண்பாடுகள் இருப்பது புதிதல்ல! இங்கே நான் கேள்வி எழுப்புவது தினமலர் செய்தியின் கொக்கரிப்புக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைத்தான்!
ஊடகங்கள் காசுக்குக் கூவுகிற கூட்டம் தான்! அதனால் அப்படியே 100% அந்தக்கொள்கைப் பிடிப்பிலேயே இருப்பார்கள் என்று சொல்லிவிடமுடியாது அவர்களுக்கு சௌகரியப்படுகிற வரையில் இந்தப்பக்கமாகக் கூவல்! சௌகரியங்கள் கொஞ்சம் மாறும்போது அந்தப் பக்கமாகவும் கூவுவார்கள்! மாறுவதற்கும் கூட அதிகக் காசு, சொந்த விரோதங்கள் காரணமாக இருக்கலாம், விவி மினெரல்ஸ் வைகுண்டராஜன் மீது சிபிஐ தொடுத்த வழக்கில் அவருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை எனத்தீர்ப்பு வந்திருக்கிற இந்தநேரத்தில் அவர் நடத்தும் நியூஸ் 7 சேனலில் அதைச் சொல்வார்களா? வேறு எவராவது இப்படி சிபிஐ விசாரணைக்குள்ளாகிற செய்தியை என்ன மாதிரித்திரித்து presenணை செய்வார்கள்? FB யில் ஸ்டேன்லி ராஜன் எழுதிய விரிவான பகிர்வு இங்கே
இன்னொரு உதாரணமும் சொல்கிறேன். கபில் சிபல் புகழ்பெற்ற வழக்கறிஞர். காங்கிரசுக்கு வாதாடுவதில் நிறையக்காசும் பார்த்தவர் என்பது தனியாகச் சொல்ல அவசியமே இல்லாத செய்தி. HTN திரங்கா டிவி என்று ஒரு செய்திச் சேனலை நடத்தி மோடி எதிர்ப்பை வைத்துக் காலம் தள்ளிவந்தார். பர்கா தத், கரண் தாப்பர் போன்ற உலகப்புகழ் பெற்ற மோடி எதிர்ப்பாளர்களை வைத்து நடந்த அந்த சேனல் சரியாக போணியாகாததால் இழுத்து மூடப்பட்டது. லட்சியப்பிடிப்பும் விசுவாசமும் மிகுந்த காங்கிரஸ்காரராக கபில் சிபல் இருந்திருந்தால் லாபநட்டக்கணக்கைப் பார்த்து ,சேனலை மூடியிருக்க மாட்டார்! சேனல் ஆரம்பித்ததும், மோடியை எதிர்த்ததும் காசுக்காக என்பதால் போணியாகாத மோடி எதிர்ப்பு, சேனலை மூடுவதில் முடிந்தது. அதுதான் பெரும்பாலான ஊடகங்களின் பக்கச்சாய்வுக்கு முதற்காரணமாக இருப்பது புரிகிறதா?
.
கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கையில் நிறையப் பட்டும் கையைச் சுட்டுக்கொண்டும் கற்றுக்கொண்ட அந்த அனுபவமே இந்தப்பாடலில் வெளிப்பட்டிருக்கிதென்று சொல்வார்கள்.
இந்திய வாக்காளர்களாகிய நாமும் கூடத் தேர்தலுக்குத் தேர்தல் நிறையப்பட்டும் கெட்டும் கையைச் சுட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். எதையாவது கற்றுக் கொண்டிருக்கிறோமா? இனியாவது கற்றுக்கொள்ள முயற்சி செய்யப்போகிறோமா?
வருகிற சட்டசபைத் தேர்தல்களில் எங்களை விட்டால் தமிழ்நாட்டுக்கு வேறு கதியே இல்லை என்கிற மிதப்பில் இருக்கிற இரண்டு கழகங்களுக்கும் மப்பைக் குறைத்தாக வேண்டும் கூட்டணி என்!ற பெயரில் சேர்ந்து கூத்தடிக்கும் உதிரிக்கட்சிகளை அறவே நிராகரிப்பது முதற்படி! மைனாரிட்டிகளைக் குளிர்விக்கிற சாக்கில் பெரும்பான்மையை அவமதிக்கும் எவருக்கும் வாக்கு இல்லை என்ற உறுதியோடு இருப்பது இரண்டாவது படி
தொகுதியின் வேட்பாளருடைய தகுதி, கடந்தகாலப் பின்னணி, இதுவரை உருப்படியாக என்ன செய்திருக்கிறார், இனி என்ன செய்யப்போகிறார் என்பதையெல்லாம் கேள்விகேளுங்கள்
நீங்கள் மட்டும் இப்படி ஒரு மாற்றத்துக்குத் தயாரானால் போதுமா? நண்பர்களிடமும் எடுத்துச் சொல்லித் தயார் செய்யுங்கள்! அவர்களையும் அதேமாதிரி நண்பர்கள் வட்டத்தை விரிவு படுத்த உற்சாகப்படுத்துங்கள்.
மாற்றத்துக்குத் தயாராவது, மாற்றத்துக்கான கருவியாக இருப்பது இவை இரண்டும் இந்த நேரத்தின் அவசரமும் அவசியமும்!
பழ.கருப்பையா பழைய காங்கிரஸ்காரர். அங்கிருந்து அதிமுகவுக்குப் போனார், அங்கிருந்தும் வெளியேறி திமுகவை ஆதரிக்க ஆரம்பித்தார். அப்புறம் அதையும் மாற்றிக் கொண்டார். பல இடங்களுக்கு மாறினாலும், காமராஜர் இருந்த ஸ்தாபன காங்கிரஸ் ஞாபகம் அவ்வப்போது வந்து விடுவதைத் தவிர்க்க முடியாமல் கொஞ்சம் நியாயமாகவும் பேசி விடுகிறார் என்பது செட்டியாருடைய தனிப்பட்ட சோகம்.
இந்த 19 நிமிட வீடியோவை இன்றுதான் பார்த்தேன். ஏதோ ஒரு புதுக்கட்சியின் கூட்டத்தில் பேசுகிறார், ஆனால் எங்கே, எப்போது, பேசிய மொத்தமும் இவ்வளவு தானா என்ற விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. காமராஜர் அந்தநாட்களில் சொன்னதுதான்! திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்! அதையே இன்றைய அரசியல் சூழலோடு பொருத்தி, திமுக, அதிமுகவை நிராகரிப்போம் என்று சொல்வதும், அதிமுக, திமுகவை நிராகரிப்போம் என்று சொல்வதும் எத்தனை போலித்தனமானது என்று பழ.கருப்பையா எழுப்புகிற கேள்வி நம்மை யோசிக்க வைக்கிறதா? இந்தக்கேள்விக்கு நண்பர்கள்தான் கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்ல வேண்டும்.
தராசு ஷ்யாம்! இன்றைய தலைமுறைக்கு, அவ்வப்போது தமிழ் ஊடகங்களில் அரசியல் கருத்துக்களை சொல்கிற நபராக மட்டும் தான் தெரிந்திருக்கும்! Investigative Journalism என்பதைத் தமிழில் மிகவும் கெட்ட வார்த்தையாக்கியவர். தராசு என்ற வார இதழின் ஆசிரியராக இருந்து, செய்திகளை வைத்தே காசு பறிக்கும் வித்தையின் முன்னோடி. நக்கீரன் கோபால் இவருடைய தராசில் இருந்து உருவானவர்தான் என்பது நிறையப்பேருக்குத் தெரியுமோ தெரியாதோ? இந்த 6 நிமிட வீடியோவில் கேள்வியே சசிகலா வருவதால் அதிமுகவில் பிளவு, பின்னடைவு வருமா என்பதுதான். புலனாய்வுப் பத்திரிகையாளர் தெளிவாக எதையாவது சொன்னாரா என்பதைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்! தேர்தல்களம் சூடாகும்போது இவர்போல இன்னும் நூறுபேர் கிளம்பி ஊடகங்களில் நம்மைக் குழப்புவதற்காகவே வருவார்கள் என்று எச்சரிக்கை செய்வதற்காகத்தான் ஒரு சின்ன சாம்பிள்.
பொதுத் துறை நிறுவனங்கள் ஒன்றிரண்டை தவிர மற்றவை...மக்கள் வரிப்பணத்தை ஏராளமாக விழுங்கிக் கொண்டும், ஏராளமான அசையா சொத்துகளைக் கொண்டிருந்தும்...நஷ்டத்தில் இயங்குகின்றன என்பது தான் கள எதார்த்தம்.
இவை ஏன் தொடர்ந்து நஷ்டத்திலேயே இயங்குகின்றன?
''நஷ்டத்தில் இயங்கும்'' பொதுத்துறை நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவையில் துரிதமாக/ வேகமாக இயங்குகின்றனவா என்றால் இல்லை.
பொதுமக்களுக்கான சேவையில் இழுத்தடிப்புகள்,தாமதங்கள் இன்றி..குறிப்பிட்ட காலவரையறைக்குள் சேவையை அளிக்கின்றனவா என்றால் இல்லை.
பணியாளர்களையும் ஓரளவிற்கு மேல் கேள்வி கேட்கவோ...பணியில் சிறப்பாக முனைப்புடன் பணியாற்றுமாறு வலியுறுத்தவோ முடியாது. யூனியன்,போராட்டம் என்று பிரச்சினைகள் திசை மாற்றப்பட்டுவிடும்.
உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளோ...இன்ன பிற நியமனங்களோ .. அரசியல் அழுத்தமின்றி நடப்பதில்லை. அரசியலுக்கான தளமாக இருக்கிறது என்பதைத்தவிர மக்கள் பெறும் பயன் என்ன ?
அனைத்திற்கும் மேலாக....பொதுத்துறை நிறுவனங்களில்.. ஊழலின் சதவிகிதம் என்ன ??????????????
மக்களுக்கும் சிறப்பாக பணியாற்றாமல், அரசுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டு, மக்கள் வரிப்பணத்தையும் ஏராளமாய் விழுங்கிக் கொண்டு இருக்கும் ..''நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில் என்ன தவறு ? என்பதே பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.
தனியார் ஏற்படுத்தும் போட்டியில்...மக்களுக்கு.. 'குறைந்த விலையில் சேவைகளை பெறுவது' என்கிற பயன் கிடைக்கிறது...என்பது களம் உணர்த்தும் எதார்த்தம். மக்கள் உணரும் எதார்த்தம்.
இன்னொரு கோணத்தில்..
பணிப்பாதுகாப்பு, நஷ்டத்தில் இயங்கினாலும் இயற்கை & செயற்கை பேரிடர் காலங்களில் ..துரிதமான , இலவசமான சேவைக்கு அரசுக்கு பயன்படுவது பொதுத்துறை என்பதும் கள எதார்த்தம்.
இருப்பினும்...மக்களிடம் ஆதரவில்லை. ஏன் ?
அடிப்படையில்...அரசியல் நுழைந்து... யூனியன், போராட்டம், அரசுக்கு நெருக்கடி தருவது, ஊழல்... போன்ற சுயநல அரசியல் செயல்பாடுகளால் வீணாகிப் போய் ....பொதுமக்கள் ஆதரவை இழந்து நிற்கின்றன பொதுத்துறை நிறுவனங்கள் என்பதே உண்மை. ஜனநாயக நாட்டு மக்களின் அடிப்படையான இக் கேள்விகளுக்கு பதிலளிக்காமல்...வெறுமனே தனியார் மயம் கூடாது என்கிற அரசியல் கோஷங்கள் ...வேடிக்கையானவை. தனியார் மயத்தை எதிர்த்து கோஷமிடுவது... ஆகப்பெரும் முதலாளிகளாக / தொழிலதிபர்களாக இருக்கும் 'அரசியல்வாதிகள்' என்பது இன்னுமொரு வேடிக்கை.
பொதுத்துறை இங்கே யாருக்காக? பொதுத்துறை பற்றி இந்தப்பக்கங்களில் நிறையப்பேசி இருக்கிறோம். அதை மீண்டும் நினைவுபடுத்தி ......
இன்றைக்குத் தற்செயலாக ட்வீட்டரில் தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது நியூஸ் 18 சேனலில் இருந்து விரட்டப்பட்டு சன் செய்திகளுக்கு ஓடிப்போன மு.குணசேகரனுடைய மறுகீச்சொன்றைப் பார்த்தேன். குணசேகரனுடைய சாய்ஸ் என்றாலே திரிக்கப்பட்ட அல்லது வடிகட்டின பொய்யாகத்தானிருக்கும் என்பது தமிழக ஊடகங்கள் எப்படியிருக்கின்றன என்பதற்கான ஒரு சோற்றுப்பதம்! அவர் அரண்செய் என்கிற யூட்யூப் தளம் ட்வீட் செய்ததை ரீட்வீட் செய்திருக்கிறார். புரிந்து கொண்டு தான் செய்தாரா என்பது ஒன்பது ரூபாய் நோட்டு மாதிரித்தான்!
சமீபத்தில் ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கி மீது 30 நாட்கள் மாரடோரியம் அறிவித்த கையோடு DBS Bank Indiaவுடன் இணைக்கப்படும் என்று அறிவித்ததை, வங்கிகளைப்பற்றி கொஞ்சமும் அறியாத ஒருவர், அவருக்கு சற்றும் குறையாத முன்னாள் வங்கி மேனேஜர் ஒருவருடன் உரையாடுவதை மேலே 20 நிமிட வீடியோவில் பார்க்கலாம் ஏதேனும் புரிகிறதா? இந்த முன்னாள் வங்கி மேனேஜர் நிறைய விஷயங்களைத் தப்பும் தவறுமாகவே, குணசேகரன்கள் சந்தோஷப் படுகிற அளவுக்கு, அள்ளித் தெளிக்கிறார். உதாரணமாக LVB கரூரில் ஆரம்பிக்கப்பட்டது 1926 இல், ஆனால் sophomore சோமசுந்தரம் 1958 இல் தொடங்கப்பட்டது என்கிறார். உண்மை என்னவென்றால் ஒரு ஷெட்யூல்டு வங்கியாக ரிசர்வ் வங்கியின் 2வது ஷெட்யூலில் LVB இடம்பெற்றது 1958 இல். இப்படி எல்லாவிஷயங்களையும் மிக மேம்போக்காகப் பார்த்துவிட்டு உளறிக் கொண்டிருக்கும் இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தை, இதையும் ஒரு செய்தியாக ரீட்வீட் செய்கிற குணசேகரன்களையும் என்னவென்று சொல்வது?
இதையே வங்கித்துறையைப் பற்றித் தெரிந்தவர்கள் கூடி விவாதித்தால் எப்படியிருக்கும் என்பதைக் கேட்க வேண்டுமா? மேலே ஒரு 40 நிமிட வீடியோ. தொடர்ந்து மூன்று வருடங்களாக தலா 800 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்து வருகிற ஒரு நிறுவனம், அடுத்து 2020 செப்டெம்பர் அரையாண்டில் 397 கோடி தொடர் நஷ்டம் அடைந்திருக்கிறது.அதே போல 4000 கோடி ரூபாய் அளவுக்கு மீட்க முடியாத வராக்கடன், மூலதனத் தேவையை எதிர் கொள்ளமுடியாத நிலையும் இருந்தால் அந்த நிறுவனம் திவாலாகிவிட்டது என்றுதான் அர்த்தம். திவாலாகிப்போன நிலையில் பங்குகளின் மதிப்பு ஜீரோவாகிவிடும் என்பது கம்பனிச் சட்டம் சொல்கிற மிக அடிப்படையான விஷயம். LVBயின் பங்குகள் எவர் எவரிடம் இருக்கின்றன?
As of September-end, 93.2% of Lakshmi Vilas Bank’s shares were held by public shareholders. The promoters own only 6.8% stake. Among public shareholders, foreign portfolio investors own 8.65%, insurance companies own 6.40% (LIC: 1.62%), retail shareholders own 23.98% and HNI shareholding is at 22.75%. Other entities hold 30.82%, including Indiabulls Housing Finance Ltd (4.99%), Srei Infrastructure Finance Ltd. (3.34%) and Prolific Finvest Pvt. Ltd. (3.36%) இப்படியிருக்க, எந்தத் தரவுகளின் மீது சோமசுந்தரம் பொதுஜனங்களுடைய பணமெல்லாம் போச்சு என்கிறார்? சம்பந்தமே இல்லாமல் 1.7 லட்சம் கோடி என்று திரும்பத் திரும்ப சொல்கிறாரே, அது என்ன? அதை ஆ.ராசாவிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? கொஞ்சம் உறைக்கிற மாதிரி, விஷயத்தைப் புரிந்து கொள்ள இங்கே
What had gone wrong?
This is perhaps a story that will be written after its demise. For example, there were loans given to the ex-promoters of Ranbaxy, which they thought were secured by deposits but those deposits were not legally collateralized. And employees were arrested for this issue. There were many other allegations, soaring NPAs and the bank lost nearly all its core capital. Luckily, no depositor has lost money in it. இது அதிலிருந்து ஒரு சிறு பகுதி.
லட்சுமி விலாஸ் வங்கியின் டெபாசிட்டர்கள் முழுதாய்க் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். டெபாசிட் பணம் 20300 கோடி ரூபாய்களில் ஒரு சல்லிக்காசு சேதாரமில்லாமல் ரிசர்வ் வங்கி காப்பாற்றித் தந்திருக்கிறது. அதை மறந்து விட்டுப் பேசுவது குணசேகரன்கள் மாதிரித் தமிழக ஊடகங்களின், திராவிடங்களின் அபத்தம் மட்டுமல்ல, வடிகட்டின அயோக்கியத்தனமும் கூட.
வங்கிச் சீர்திருத்தங்கள் இப்போது இந்தத் திசையில் போய்க் கொண்டிருக்கின்றன? இங்கே செய்தியாக
என்றைக்குமே குழந்தைச்சாமியாகவே இருக்கிற பிள்ளையார் அப்பனுடைய அவதார நாளாக அன்பர்களால் கொண்டாடப் படும் இன்று விநாயக சதுர்த்தி நாளில் நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
தடைகள், சங்கடங்களை நீக்கி வழிபடுகிறவர்களுக்கு நல்வழி அருளுகிற பிள்ளையாரப்பன் இந்த நன்னாளில் எல்லோருக்கும் நல்லதையே அருளட்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்!
*******
தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப் பட்டதில் நியூஸ் 18 சேனலுக்கு ரொம்பவுமே வருத்தம் போல! பொதுவாகவே இங்கே தமிழகத்தில் ஊடகங்களும் சேனல்களும் பிஜேபியின் அரசியல் எதிரிகளைக் காட்டிலும் அதிகமாகக் கூவுவதில் அரசியல் கட்சிகள் அபத்தமா? சேனல்கள் அதிக அபத்தமா? என்ற தலைப்பில் ஆலமன் சாப்பையா தலைமையில் ஒரு விடுமுறைதினச் சிறப்பு பட்டிமன்றமே நடத்திவிடலாம் போலத்தோன்றுகிறதா?
பட்டிமன்றங்கள் நடத்தாவிட்டால்தான் என்ன? சேனல்களில் தினசரி இதுமாதிரி வெட்டிமன்றங்கள் நடந்துகொண்டு தானே இருக்கின்றன!காங்கிரசின் திருச்சி வேலுச்சாமி பேசும் ஆரம்ப அபத்தங்களை செம காமெடியாக எடுத்துக் கொள்ள முடியும் என்றால் இந்த 44 நிமிட வெட்டிமன்றக் கேள்வியையும் ரசிக்க முடியும்! ரசிக்க முடியாதவர்கள் குறைந்த பட்சமாக எதனால் வந்தது இந்த இழிநிலை என்று யோசிக்கலாம் இல்லையா? செய்து பாருங்களேன்!
கட்சிக்கு உழைத்து ஆனால் பல காரணங்களால் வெற்றி பெற முடியாமலோ அல்லது பதவியிலே இல்லாமல் இருந்தவர்களுக்கு பதவி கொடுத்து கவுரப்படுத்துவது காலம் காலமாக இருக்கும் சங்க பரிவார வழக்கம்.
அதே போல பதவியிலே பலகாலம் இருந்தவர்கள் தானாகவே ஒதுங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு வழிவிடுவதும் சங்கத்திலே மட்டுமே இருக்கும் வழக்கம்.
என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் உழைத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
2006 மேயர் தேர்தலிலே தமிழிசை சவுந்திரராஜன் என எழுதப்பட்ட டயோட்ட குவாலிஸ் காரிலே வேளச்சேரியிலே சுற்றி சுற்றீ பரப்புரை செய்தார். கூட்டம் வராவிட்டாலும் பேசிக்கொண்டிருப்பார். அப்போது பலர் சிரித்துவிட்டு கடந்து போனார்கள். அதையெல்லாம் தாண்டியே உழைத்தார்.
அவரின் உருவத்தை வைத்து அசிங்கமாக இன்றைக்கு வரைக்கும் படம் போடுகிறார்கள், யூடியூப்பிலே காணொளிகள் கொட்டிக்கிடக்கின்றன. அதைக்கண்டெல்லாம் மனம் தளராமல் பேசியே வந்தார்.
தமிழிசை பேசியதிலே இப்போதும் எனக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது ஆனால் அவ்வளவு கிண்டல் கேலிகளுக்கு இடையேயும் கோபப்படமல் பொதுவெளியிலே முகம் சுளிக்காமல் தம்மை கோபப்படுத்ததான் இப்படி செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அமைதியாகவே எதிர்வினை ஆற்றிக்கொண்டிருந்தார்.
ரொம்பவும் நாகரீகம் கடைபிடிக்கிறேன் என டீம்கா கூட்டத்துக்கு எல்லாம் போனார். அதுவேறு விஷயம்.
மற்றவர்கள் எல்லாம் அது இது என பட்டப்பெயர் போட்டுக்கொண்டு விளம்பரப்படுத்திக்கொண்டு இருந்த போதிலும் அப்படியெல்லாம் வரம்பு மீறவில்லை.
எல்லோருடனும் ஒருங்கிணைந்து வேலை செய்யவில்லை என்பது இவரின் மீது மட்டுமல்ல திராவிட பாஜக தலைவர்கள் எல்லாரின் மீதும் வைத்தே வந்துள்ளேன். தேசப்பணியை விட பலருக்கு அவர்களின் சொந்த புகழ் முக்கியமாக போனது தமிழக தேசபற்றாளர்கள் அனுபவிக்கும் கொடுமை.
நிலைமை எப்படியிருந்தாலும் உழைத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதை சங்கபரிவாரம் எப்போதும் கடைபிடித்து வருகிறது.
அப்போது தான் வெற்றியால் மனம் திரும்பாமலும் தோல்வியால் துவண்டு போகாமலும் தேசப்பணி என்பதை செய்ய முடியும் என்பதால்.
வெற்றி கிடைத்தால் தான் மரியாதை என்றால் அதை நோக்கியே ஓடவேண்டியிருக்கும். பலசமயங்களிலே வெற்றி கிடைக்காமல் போகும் போது மனம் துவளும். அந்த நிலைமை வரக்கூடாது எனும் மேலாண்மை பாடத்தை பின்பற்றுவது எப்போதும் நல்லதே.
தெலுங்கானா ஆளுநராக பதவியேற்கும் தமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த இனிய விநாயகர் சதுர்த்தி நன்னாளிலே திராவிட பாஜக ஆக இருப்பது தமிழக பாஜக ஆக அந்த வினை தீர்க்கும் விநாயகன் அருள்வானாக.
தமிழகத்திலே மக்கள் சந்திக்கும் கொடுமைகளை நீக்கிட அருள்புரிவானாக.
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
நண்பர் ராஜ சங்கர் கொஞ்சம் விஷயம் தெரிந்து விமரிசனம் செய்கிறவர் என்பதால் அடிக்கடி அவருடைய முகநூல் பகிர்வுகள் இங்கே இடம்பெறுவது நண்பர்களுக்குப் புரியும் என்றே நினைக்கிறேன்.
மற்ற ஊர்களிலும் இப்படி இருக்கலாம்.எனக்கு மதுரையில்தான் இப்படி நடக்கும்.பேருந்தில் முன்பின் தெரியாத நபர்கள் திடீரென்று நம்முடன் பேச ஆரம்பிப்பார்கள்.முன்பு கடவுள் நமக்கு ஏதோ செய்தி சொல்கிறார் என்று அதை டீகோட் செய்து மண்டையை உடைத்துக் கொண்டிருப்பேன்.இப்போது மதுரைக்காரர்கள் அப்படித்தான் என்று விட்டுவிடுவது..
இன்றும் திருமங்கலத்தில் பஸ் ஏறியதும் பக்கத்து இருக்கை நபர் "வாங்க.கடைசில அதர்மம் ஜெயிச்சிடுச்சில்லே?" என்றார்.
நான் 'ஒரு நபர் மதுரைக்கு வருவது அதர்மமா?"என்பது போல் திடுக்கிட்டுஅவரை வழிமுழுவதும் ஓரக்கண்ணால் கவனித்தபடியே வந்தேன்.நல்ல வேளையாக அவர் வழியில் பேசவில்லை.
இறங்கும்போது மட்டும் "போயிட்டு வாங்க.ஆனா கவலைப்படாதீங்க.தர்மம் திரும்பி வரும்.Dharma will be back!" என்றார்.
நான் "தேங்க்ஸ்ங்க" என்று சொல்லிவிட்டு இறங்கிவிட்டேன்.
கூட வந்த நண்பர் "அப்படியே மதுரைக்காரனாவே மாறிட்டியே!" என்றார்.
நம்மூரில் ஊடகங்கள் பொய் சொல்வதையே முழுநேரப் பிழைப்பாக வைத்திருப்பது அடிக்கடி அம்பலப்பட்டுக் கொண்டே வந்தாலும் அதற்குமேல் ஒன்றுமே நடப்பது இல்லையே! ஏன்? என்று எப்போதாவது யோசித்துப் பார்த்து இருக்கிறீர்களா? நேற்று முன்தினம் எழுதிய இந்தப்பதிவில் முதல் வீடியோ உங்களுக்கு யோசிக்கக் கொஞ்சம் உதவியாக இருக்கும்! கட்டுப்பாடற்ற, எல்லையற்ற சுதந்திரம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று இந்தப்பக்கங்களிலேயே பலமுறை AG Gardiner எழுதிய The Rule of the Road கட்டுரையை மேற்கோள் காட்டி மாதொரு பாகன் புத்தக சர்ச்சையின் போதும், அதற்கு முன்னாலும் எழுதியிருக்கிறேன்.
1 நிமிட வீடியோ
மும்பை உயர்நீதி நீதிமன்றம் சமீபத்தில் கோரேகான் என்ற இடத்தில் வெடித்த கலவரம் குறித்தவழக்கில் குறிப்பிட்டுச் சொன்னது தோல்ஸ்தோய் எழுதிய போரும் அமைதியும் நாவல் பற்றி அல்ல! உள்ளூர் ஆசாமி ஒருத்தர் எழுதிய War and Peace in Junglemahal என்ற தடைசெய்யப்பட்ட புத்தகத்தைப் பற்றித்தான் என்று தெளிவாகச் சொன்ன பிறகும் கூட எந்த ஊடகமாவதுபொய்ச் செய்தி பரப்பியதற்கு தவறுக்குவருந்துகிறோம் என்று திருத்தம் வெளியிட்டார்களா? பார்த்த நினைவாவது இருக்கிறதா?
இந்த 32 நிமிட வீடியோ விவாதம் காஷ்மீரில் இருந்து கோரேகான் வரை பொய்ச்செய்திகளில் இந்தியா கேவலப் படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை முன்வைத்து! ஊடகம் தனக்கேற்ற சாயத்தைத் தானே தேர்ந்தெடுக்கும் என்பதை நினைவு வைத்துக் கொண்டு விவாதத்தைப் பாருங்கள்!
மீண்டும் ரங்கராஜ் பாண்டே! வீடியோவில் தன்னுடைய சிங்கப்பூர் அனுபவத்தைச் சொல்கிற பகுதியை மீண்டும் ஒரு முறை கேட்டுவிட்டு, உங்களுடைய கருத்தை மனம் திறந்து பகிர முடியுமா?சுதந்திரம் உட்பட எதுவுமே இலவசமோ கட்டுப்பாடுகள் அற்றதோ இல்லை!
திருமாவளவனும் கூட, நான் உண்மையைச் சொன்னாலும் ஊடகங்கள் வெளியிடுவதில்லையேஎன்று குறைப் பட்டுக் கொளகிறார்! இங்கே கிடைத்தது கிடைத்தபடி வெளியிட்டாயிற்று. திருமாவளவன் உண்மைதான் சொன்னாரா, கொஞ்சம் கூட்டிக்குறைத்துச் சொன்னாரா என்று நீங்கள்தான் இந்தச் செய்தியின், சொல்பவரின், நம்பகத் தன்மை பற்றி முடிவு செய்துகொள்ளவேண்டும்! செய்தியின் வேரைப்பிடித்து, உண்மையைப் புரிந்து கொள்ள வேறெப்படி முயற்சி செய்வதாம்? வீடியோ 13 நிமிடம்.
முன்பெல்லாம் காங்கிரசுக்குள் நடக்கிற வேட்டி கிழிப்பு முதலான விஷயங்களை ஊடகங்கள் பெருந்தன்மையாக வெளியிடாமல் இருந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறதோ? முன்னமிருந்த மறைமுகமான Carrot & Stick இப்போது இல்லை என்பதாலா? அல்லது நிஜமாகவே திருந்தி வருகிறார்களா? உங்களுடைய ஊகம், பார்வை என்ன?
இந்தச் செய்தி குறித்து நான் ஒன்றும் சொல்வதாயில்லை! நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல! XXXX படிதாண்டாப் பத்தினியுமல்ல என்று கம்பரசம் எழுதிய சி என் அண்ணாதுரை என்பவரை, அவரை அடியொற்றி அரசியல் செய்பவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்! இவர் நேருவை இந்தவிஷயத்தில் மட்டும் பின்பற்றியிருக்கிறார் என்ற மாதிரி சொல்கிறார்கள். திருப்பூர் ஜோதிஜி இதற்கென்ன சொல்வாரோ? இதற்குமேல் எழுதினால் எங்கள் Blog ஸ்ரீராம் வந்து ஒட்டுமொத்தப் பதிவையுமே மஞ்சப்பத்திரிகை ரகத்தில் சேர்த்துவிடுவார்!😀😂🙏🙏
தேவியர் இல்லம் பதிவர் நண்பர் திருப்பூர் ஜோதிஜி எழுதுவதில் நிறைய ஆர்வம் உள்ளவர். எழுதுகிற எவருக்குமே விரிவாக வாசிக்கிற வழக்கம் இருந்தாக வேண்டுமில்லையா! அவருக்கும் அப்படி ஒரு வாசிப்பு இருக்கிறது. இந்திய அரசியல் விவகாரங்களில் என்னைப்போலவே அவருக்கும் ஒரு ஆழ்ந்த வாசிப்பு இருக்கிறது. என்னைப்போலவே அவரும் நரேந்திர மோடியின் பல அரசியல் நடவடிக்கைகளில் ஆதரவு நிலை எடுத்து, பதிவுகள் எழுதி வாசிக்க வருகிற பலரிடம் வாங்கியும் கட்டிக் கொள்கிறார்! இங்கே பின்னூட்டங்களில் அர்த்தமுள்ள உரையாடலை நடத்த முன்வருகிற ஒருசிலரில் அவரும் ஒருவர் என்பதால்,இன்றைய பதிவில் அவருக்கும் சுவாரசியமான தகவல்களைச் சொல்கிற சாக்கில் ஒரு சில காணொளிகள், செய்திகள், அவற்றின் மேல் வழக்கம்போல என்னுடைய சிறு விமரிசனக் குறிப்புகளோடு வாசிக்கவரும் எல்லோருக்குமாக!
இந்த 12 நிமிட வீடியோவில் காங்கிரஸ் ஆதரவாளரான சேகர் குப்தா, ராகுல் காண்டிக்கு நரேந்திர மோடியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்களாக, முக்கியமாக, எந்த சந்தர்ப்பத்தில் என்ன பேசவேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும் என்று சொல்கிறார்! நேருவாவது அடுத்தவர் சொல்வதைக் காதுக்கொடுத்துக் கேட்பதாக பாவனை செய்தார்! இந்திரா முதற்கொண்டு வாரிசுகளில் எவரும் அந்த பாவனையைக் கூடப் பின்பற்றியதில்லை! நான் என்ன உளறினாலும் அது கட்டளை அதுவே என் சாசனம்என்பது தான் அவர்கள் சொல்லிக் கொள்கிற நேரு பாரம்பரியம்.அந்த மாதிரி ஆசாமிகளுக்கு இவர் உபதேசம் செய்தால் எடுபடுமா?
.
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மீது எந்த நேரத்தில் எப்படி மாறுவாரோ என்று நண்பர் ஜோதிஜிக்கு சந்தேகம்! ஆனால் சுவாமி மாதிரி சிலருடைய தேவை இந்திய அரசியலில் எப்போதுமே இருந்துவருகிறது என்பது என்னுடைய வாதம். இந்த செய்தியையே எடுத்துக் கொள்ளுங்கள்! பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நிரந்தரத்தடையாக மாற்றலாமா என்று பாகிஸ்தான் யோசிப்பதாக. ஏர் இந்தியாவுக்கு இதனால் 575 கோடி ரூபாய், எரிபொருள் செலவு கூடுதலாக சுமை! அதேபோல வான்வழியைப் பயன்படுத்த தடை விதித்ததனால் பாகிஸ்தானுக்கும் 360 கோடிரூபாய் வருவாய் இழப்பு! வறட்டு இழுப்பு ஆசாமிகளுக்கு எப்படிப் புரிய வைப்பீர்கள்? மேலே வீடியோ 7 நிமிடம்! பாருங்கள்!
கராச்சி குஜராத்தின் கட்ச் பகுதிக்கு மிக நெருக்கம். இங்கே படத்தில் கராச்சி துறைமுகம் இந்தியாவின் முந்த்ரா துறைமுகத்துக்கு (ஒரு தனியார் துறைமுகம்) மிகப்பக்கத்தில் என்பதை ஒரு குத்துமதிப்பாகப் புரிந்து கொள்ள உதவியாக
அரேபியக்கடல் பிராந்தியம் நமது கரையில் இருந்து 200 கிமீ நமது கட்டுப் பாட்டுக்குள் வருவதைப் பயன்படுத்தி கராச்சி துறைமுகத்துக்கு போய்வருகிற வழியை அடைத்து விடலாமே என்ற யோசனையை முன்வைத்திருக்கிறார் சுவாமி! ஏற்கெனெவே குற்றுயிரும் குலையுயிருமாகத் தவித்துக் கொண்டிருக்கிற பாகிஸ்தான் பொருளாதாரத்தை சுத்தமாக முடக்கி வைத்து விடுகிற யோசனை இது!
சீதாராம் யெச்சூரி இன்னமும் பழைய நினைப்பிலேயே இருக்கிறார் போல! உடல்நலம்பாதிக்கப்பட்ட கட்சிக்காரர் ஒருவரை சந்திக்க ஜம்மு காஷ்மீர் போக அனுமதி வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுச்செய்தார்! உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு, அனுமதி எதற்காக வழங்கப் பட்டதோ அதற்குமட்டுமே பயன்படுத்த வேண்டும். போய்வந்த விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் அரசியல் செய்யக்கூடாதென்றும் சேர்த்துச் சொல்லி இருக்கிறது. உச்சநீதிமன்றத்துக்கெதிராக வலது கம்யூனிஸ்ட் கட்சி D ராஜா கொந்தளித்திருக்கிறார். இங்கே விவாதத்திலும் கொந்தளிக்கிறார்கள்! ராகுல் காண்டி மூக்குடைபட்டு நிற்பதைப் பார்த்தபிறகும் கூட இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பதை ஏன் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்? உங்களுக்காவது புரிகிறதா?
Post Script ஆக First Things First :: தினசரி அரசியலைத் தொட்டுப் பதிவுகள் எழுதிக் கொண்டு இருப்பதில் வாசிப்பவருக்கு அலுப்பு வந்துவிடுகிறதே! எழுதுகிற உங்களுக்கு அலுப்பு வராதா? இப்படி என்னை யாரும் கேள்விகேட்கவில்லைதான்! ஆனால் காங்கிரசையே தொடர்ந்து தாளித்துக் கொண்டிருக்கக் கூடாதென்று கமென்ட் கட்டளைகள் வந்ததுண்டு.அந்தமாதிரி பதிவுகளில் அலுப்பு அடைகிறவர்கள் இந்தப்பக்கம் வருவதை நிறுத்திக் கொள்கிறார்கள் அப்படி ஒரு சாய்ஸ் அவர்களுக்கு இருப்பதால் இந்தக் கேள்விக்கு, குறிப்பிட்டு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா? மீண்டும் சந்திப்போம்.
இதென்ன தலைப்பு? கட்சி அரசியலும் சேனல் அரசியலும் வெவ்வேறா என்ன? மேம்போக்காக செய்திகளைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றும். காற்று பலமாக வீசினால் கட்சி அரசியல் ஒருமாதிரிக் குழப்பத்திலும் சேனல் அரசியல் வேறொருமாதிரிக் குழப்புவதிலும் இருப்பதான துல்லியமான வேறுபாடு எழுவதையும் புரிந்துகொள்ள முடியும்!
சிதம்பரத்தின் ஆதரவாளராக அறியப்படும் கே எஸ் அழகிரி, ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி, சசி தரூர் இவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் கட்சிக்கு விரோதமாகப் பேசுகிறவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறட்டும் என்று காட்டமாகச் சொன்னதை வைத்து ஒரு விவாதம் வைகுண்டராஜன் நடத்துகிற நியூஸ் 7 சேனலுக்கும் அப்படி ஒரு குழப்பம் வந்து, பார்வையாளர்களையும் குழப்புகிற ஒரு கேள்விநேரம் நிகழ்ச்சி இது! வீடியோ 54 நிமிடம். முதல் 15 நிமிடம் non stop ஆக பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸைப் பேச விட்டதில் சேனலும் நெறியாளரும் எத்தனை குழப்பத்தில் இருந்தார்கள் என்பது நன்றாக வெளிப் பட்டது ஒரு அதிசயம்! விசிகவின் ஆளூர் நவாஸ் விசித்திரமான எதிர்வாதத்தை வைக்கிறார். பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமலேயே, கேள்விக்கு மோடி எதிர்ப்பு ஒன்று மட்டுமே போதும் என்கிற ரீதியில்! ஆளூர் நவாசை விடுங்கள்! அவருக்கு மோடி எதிர்ப்பு அஜெண்டா மிகமுக்கியமாக இருக்கிற ஒரு கட்சிக்காரர்! வெளியில் இருந்து விவாதம், விமரிசனம் செய்கிறவர்களுக்கே இத்தனை குழப்பம் என்றால், நெறியாளர் தான் பாவம் என்ன செய்வார்? போதாக்குறைக்கு விஜயதாரணி வேறு, கருத்தைச் சொன்ன விதம், ஆளூர் நவாசுக்கு எதிராக இருந்தது. balanced ஆகப் பேசியது நெறியாளருக்கே பொறுக்காமல் கேட்டும் விடுகிற பரிதாபம் செமகாமெடி! சீனியர் தலைவர்கள் பேச்சை எடுத்துக் கொள்வதா மாநிலத்தலைவர் பேச்சை எடுத்துக் கொள்வதா என்ற குழப்பத்தில் இருப்பதாக விஜய தாரணி சொன்னபிறகும் விடுவதாயில்லை. கணபதி என்கிற பத்திரிகையாளர், சசி தரூர் ஆதரிப்பதற்கு பயம்தான் காரணம் என்ற கண்டுபிடிப்பைச் சொல்கிறார்.ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி இவர்களுக்கு என்ன பயம் என்று சொல்லாமல் சாய்ஸில் விட்டுவிடுகிறார். ரவீந்திரன் துரைசாமியும் இருக்கிறார். வழக்கமான புருடாவாக நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் சேனல் நடத்திய ட்வீட்டர் கருத்துக்கணிப்பு, அதை ஆளூர் நவாஸ் வழி மொழிவதாக ஒரு நல்ல காமெடி! மிஸ் பண்ணாமல் பார்த்துவிடுங்கள்!
இவ்வளவு பெருமைமிகு காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை தமிழகத்தில்ஏன் 1967-ல் வீழ்த்தினோம் என்று திமுகவினர் வருந்தி வருந்தி பதிவுகளை மேற்கொள்வதைப் பார்த்தால் கண்களில் நீர் கோர்க்கிறது.
ஆட்சியை இழந்த மஜத - காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் ஒருவரையொருவர் தாக்கிப் பேசி வருகின்றனர்.
இந்த வார்த்தைப் போரின் ஒரு பகுதியாக ஞாயிறன்று பேசிய சித்தராமையா, "குமாரசாமி என்னை எப்போதுமே நண்பராகவோ அல்லது நம்பிக்கைக்குரியவராகவோ பார்த்ததில்லை. அதற்குப் பதிலாக என்னை எதிரியாகவே பாவித்தார். அதனால்தான் மாநிலத்தில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது" எனக் கூறினார்.
முன்னதாக, தேவ கவுடா தனது மகன் குமாராசமிக்குப் பதிலாக பாஜகவின் எடியூரப்பா ஆட்சி செலுத்தட்டும் என்ற மனநிலையில் சித்தராமையா இருந்ததாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.அதற்கு பதிலடியாகவே சித்தராமையாவின் இந்தக் கருத்து வந்திருக்கிறது என்று இந்து தமிழ்திசை காங்கிரஸ் காமெடியை விவரித்திருக்கிறது.
கப்பலுக்குக் கால் உண்டா என்ன? !! அப்புறம் அந்த ஒன்னரை? அரை ராவுல் பாபா! சரி அந்த ஒண்ணு யாரு?
காங்கிரஸ்காரனாக இருப்பது முட்டாள்தனம் என்றால் அதை ஆதரித்துப்பேசுவது அதைவிட வடிகட்டிய முட்டாள்தனமாக இருக்கும் என்பது இங்குள்ள சேனல்களுக்கு ஏனோ புரிவதே இல்லை!
இங்கே பானாசீனாக்களும் இசுடாலின்களும் பேசி முடித்த அதே உளறல்களை மீண்டும் நியாயப்படுத்த தந்திடிவிக்கு ஒரு விதமான உள் அரசியல் இருக்கிறது போல! கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியை ரங்கராஜ் பாண்டே நடத்திய விதம் வேறு! முதலாளிகளுக்கு அன்றைய நாட்களில் அதில் உடன்பாடும் இருந்தது. எப்போதிலிருந்து ஆதித்தன் குடும்பம் பழையபடி திமுக சார்பு நிலை எடுக்க ஆரம்பித்தது என்பதுகூட, இங்கே பெரும்பாலானோருக்குத் தெரிந்த விஷயம் தான்!
ஹரிஹரன் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியை நேற்று ஆரம்பித்த விதமே தமிழ்நாட்டையும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கிற திட்டம் இருக்கிறதா என்ற குத்தலான கேள்வியோடுதான்! இதே மாதிரி அப்பச்சி சொன்ன ஒரு அதிமேதாவித்தனமான ஸ்டேட்மென்ட் : கச்சத் தீவு இந்தியாவுடையது அல்ல, அதனால் இலங்கைக்குத் தாரை வார்த்ததில் தவறே இல்லை என்பதையும் இங்கே உள்ள ஊடகங்கள் பானாசீனாவிடம் துணிந்து கேட்பார்களா? H ராஜா என்றால் வருகிற இளப்பம், மற்றவர்களிடமும் வருமா?ஊடக அறம் என்பதே காசுக்குக் கூவுவது மட்டும்தான் என்று சோனியாG UPA chairperson என்ற ஹோதாவில் நிழல் பிரதமராக ஆட்டிப்படைக்க ஆரம்பித்த நாட்களில் தான் என்பது இங்கே நண்பர்களுக்கு நினைவுபடுத்த வேண்டுமா? இங்கேபெரும்பாலான ஊடகங்கள் திமுகவோடு அமைத்துக் கொண்ட கூட்டணி இன்னும் தொடர்கிறதே, எதனால் என்ற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்!
அரசியலைப் பேசும்போது, தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒருவராக தொல்.திருமாவளவன் ஆகிவருகிறார் என்பதே இங்கு திராவிடங்களின் வீழ்ச்சிக்கான பல அடையாளங்களில் ஒன்று மட்டும்தான்! களத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் படுகிற பாடு இருக்கிறதே! அது தான் என்னை ஆச்சரியப்படுத்துகிற ஒரே விஷயம்! காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமியர்களுடைய ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அம்பேத்கரைக் கூடத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதான விசித்திரம் இந்த 44 நிமிட நேர்காணலில் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. இசுடாலின் போல காஷ்மீர் விவகாரம் என்னவென்று தெரிந்து கொள்ளாமலேயே பேசுவது ஒருவிதம்! திருமாவளவன் பேசுவது வெறுரகம்! ராஜா ஹரிசிங்குக்கு வெகு காலத்துக்கு முன்னாலேயே காஷ்மீர் இந்த தேசத்தின் ஒருபகுதியாக, கல்விகேள்விகளுக்குப் புகழ்பெற்ற இடமாக இருந்தது என்பது அவருக்கு ஒரு பொருட்டே அல்ல! முஸ்லிம் மெஜாரிட்டி எப்படி வந்தது என்பதைப்பற்றியும் அவருக்கு கவலை இல்லை. தான் பேசுவது தேசத்துக்கு எதிரான கருத்து இல்லை என்பதற்கு அவர் சொல்லுகிறவிளக்கம் இருக்கிறதே, அபாரம்!
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது; சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது; சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ! வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு.
பாரதி கவிதைகளில் புதிய கோணங்கி என்ற பாடலில் இந்த நாட்டோருக்காகச் சொன்ன செய்தி இது. இங்கே ஊடகங்களுக்கும், தெரிந்தே தவறுகள் செய்கிற அரசியல்வியாதிகளுக்கும் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய செய்தி இதுதான் என்று இந்த ஞாயிற்றுக்கிழமை எனக்குப் படுகிறது
பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெட்கமே இல்லாமல் இந்திய ஊடகங்களில் பலர் எப்படி இன்னமும் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்? எப்படி மணிசங்கர் ஐயர், ராகுல் காண்டி உட்படக் காங்கிரஸ்காரர்கள் பலரும் இங்கே பாகிஸ்தானுக்கு அனுசரணையாகவே இன்னமும் பேசுகிறார்கள்?
சத்ய விஜய் தளத்தில் முன்னாள் பாகிஸ்தானிய தூதர் அப்துல் பாசித் எப்படி ஒரு இந்தியப்பத்திரிகையாளரை வளைத்துப் போட்டார் என்ற செய்தி இன்றைக்கு வெளியாகி இருக்கிறது. In a shocking revelation, former Pakistani High Commissioner to India, Abdul Basit has said that during his time in the country he was successful in influencing an Indian journalist to write an article which suited the agenda of the Pakistan. The journalist who under his influence agreed to do the dirty job, was, according to Basit, none other than Shobhaa De. என்கிறது அந்தச் செய்தி! இதே போல பர்கா தத் முதலான ஊடகக் காரர்கள் வளைக்கப்பட்டது எப்படி என்ற கதையெல்லாம் வெளியே வந்தால் ரொம்பவுமே நாறிப்போய்விடுமோ? குர்பானிக்கான பலி ஆடாக்கப் பட்டுள்ளார் ஷோபா டே! A desperate move by a beleaguered mafia: Pakistan offers Shobhaa De as Qurbani on Eid In the aftermath of the abrogation of Article 370, it has become evident that the narrative peddled by a certain section of liberals is extremely conducive to Pakistani interests. Furthermore, it was revealed earlier today by none other than Abdul Basit, former Pakistani High Commissioner to India, that he had managed to influence Shobhaa De into furthering the Pakistani agenda in an article and advocating for plebiscite in Kashmir.என்று சொல்கிறது OpIndia தளம். இந்து என் ராம் வளைக்கப்பட்டாரா? அவரே வளைந்து கொடுத்தாரா? இது நம்மூர்ச் செய்திதான்! வாருங்கள் பார்க்கலாம்! வருடாவருடம் ஒரு ஐந்து பேருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ரொக்கப் பரிசுடன் கூடிய விருதுகள் வழங்கி வருவது இதுவரை அத்தனை கவனிக்கப்படாத நிகழ்வாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த வருடம் ஆகஸ்ட் 8 அன்று சென்னையில் நடந்த விருதுவழங்கும் விழா கொஞ்சம் கவனிக்கப் படாமல் விடுபட்டு விட்டதோ? யோசித்துப் பார்க்கையில் எம்பியான பிறகு திருமாவளவனைப் பற்றிப் பேசவே இந்தப்பக்கங்களில் வாய்க்கவில்லை என்பதே நினைவுக்கு வருகிறது.
இந்து பத்திரிக்கை குழுமத்தின் தலைவரும் பத்திரிக்கையாளருமான என். ராம் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் விருதும், விஐடி பல்கலைகழக வேந்தர் விஸ்வநாதன் அவர்களுக்கு பெரியார் ஒலி விருதும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு, காமராஜர் கதிர் விருதும், தொழிலதிபர் நல்லிகுப்புசாமி அவர்களுக்கு செம்மொழி ஞாயிறு விருதும், தமிழ் இலக்கியவாதிகளில் ஒருவரான நாகப்பனுக்கு அயோத்தி தாசர் ஆதவன் விருதும், இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர் எஸ்.திவான் அவர்களுக்கு காயிதே மில்லத் பிறை விருதும் வழங்கப்பட்டதாக செய்திகள் சொல்வதில் விருதுக்கும் வாங்கியவர்களுக்கும் கொடுத்தவர்களுக்கும் என்ன பொருத்தம் இருந்தது என்பது யாருக்காவது புரிகிறதா? ஒரு ஆரம்பமாக இந்து என் ராமுக்கும் அம்பேத்கருக்கும் விருதுக்கும் என்ன சம்பந்தம்? இதே மாதிரி பீட்டர் அல்போன்சுக்கும் காமராஜர் விருதுக்கும் என்ன சம்பந்தம்?
படத்துக்கு நன்றி: திரு K T ராகவன்
இந்தப்பக்கத்தில் கோடிட்டுக் காட்டியிருக்கிற பகுதியில் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் ஷேக் அப்துல்லாவுக்கு என்ன பதில் சொன்னார் என்பது அம்பேத்கர் பெயரால் விருது கொடுத்தவருக்கும், வெட்கம் இல்லாமல் வாங்கிக் கொண்ட இந்து என் ராமுக்கும் தெரியுமா? தெரியாதா? போகட்டும்! அவர்களுடைய உள்நோக்கங்களே வேறு! நாமாவது தெரிந்து கொள்ள வேண்டாமா?
நேற்றைக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது அகில இந்திய அளவில் தலைப்புச் செய்தியாக இருந்ததென்றால் தமிழகத்தில் மட்டும் எப்போதும்போலத் தலைகீழாக வைகோவுக்கு திமுக ஆட்சிக்காலத்தில் தொடரப் பட்ட தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என்று தீர்மானிக்கப் பட்டதும், ஓராண்டு சிறைத்தண்டனையும் 10000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட விஷயமும்தான் ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக முக்கிய செய்தியாக ஓடிக் கொண்டிருந்தது. வைகோவைப் போல இங்கே ஊடகங்களும் தொடர்ந்து தவறுக்குமேல் தவறாகச் செய்து கொண்டிருப்பதில் நாம்தான் இவர்களைக் குறித்து என்ன செய்யவேண்டும் என்பதைத்தீர்மானிக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து பரப்பிவரும் பொய்களால் ஊடகங்கள் இங்கே நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று வெட்கமே இல்லாமல் நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இங்கே ஜன நாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படுகிற செய்தி ஊடகம், அந்த விஷயத்தில் வெறுமனே காசுக்கு கூவுகிற ஊடகங்கள் மட்டுமே என்றாகிப்போனதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இல்லையா?
இங்கே கரண் தாப்பர் முன்னாள் பொருளாதார ஆலோசகர் தீபக் நய்யாருடன் பட்ஜெட்டில் என்னென்ன செய்திருக்க வேண்டும் என்பதை விவாதிக்கிறார். இது கபில் சிபல் நடத்தும் சேனல், அரசுக்கு எதிராகப் பேசுவதை சில நேரங்களில் நேரடியாகவும், பல நேரங்களில் நாசூக்காகவும் செய்கிற கலை தெரிந்த கரண் தாப்பர் தனக்குத்தோதான ஆட்களுடன் நடத்துகிற விவாதம் என்பதையும் மனதில்வைத்துக் கொண்டு, அரசியல், பொருளாதாரம் இவைகளில் ஆர்வம், நாட்டம் இருந்தால் பார்க்கப் பரிந்துரை செய்கிறேன். 45 நிமிடம். இதில் நரசிம்மராவ் பிரதமராக இருந்த நாட்களில் மன்மோகன் சிங் 1991 இல் தாக்கல் செய்த பட்ஜெட்டைப் பற்றி கரண் தாப்பர் சாமர்த்தியமாக இந்த பட்ஜெட்டோடு முடிச்சுப் போட்டுக் கேள்வி கேட்கிறார். ஆனால் அதே மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பத்தாண்டுகளில், முன்னால் மேற்கொண்ட சீர்திருத்தம், முயற்சிகள் எல்லாவற்றையும் பாழாக அடித்ததையோ, லட்சக்கணக்கான கோடிகளில் கண்முன்னால் ஊழல் நடந்ததைக் குறித்து ஒன்றுமே செய்ய முடியாத டம்மிப்பீசாக இருந்ததையோ பேசமாட்டார் என்பது கொஞ்சம் கவனித்துப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டிய தமாஷா!
ராகுல் காண்டி ராஜினாமா நாடகம் குறித்து இங்கே ஏகப்பட்ட விஷயங்களைச் சொல்லியாகிவிட்டது. எழுத்தாளர் ஜீவி ஒருவர் மட்டும்தான் இங்கே ராகுல் காண்டி மீது இன்னமும் நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இங்கே இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியராக இருந்த ,இப்போது Tne Print என்று தனிக்கடை நடத்திவரும் சேகர் குப்தா ராகுல் காண்டியின் ராஜினாமா கடிதத்தைப் பற்றிப் பேசுகிறார். சேகர் குப்தாவும் காசுக்கு கூவுகிற ஊடகக்காரர் தான்! ஆனாலும் மிகவும் நடுநிலையாக செய்தியை அணுகுகிற மாதிரி ட்ராமா போடுவதில் ஸ்பெஷலிஸ்ட்! என்ன தான் இவர்கள் கழுதையின் வெள்ளி மூக்குக்குச் சாயம் பூசி, இது குதிரைதான் என்று நம்பவைக்க முயற்சி செய்தாலும் இந்திரா வாரிசுகள் அரசியலில் சாயம் வெளுத்து வெறும் காமெடிப்பீசுகளாகக் குறுகிப் போய்விட்டதை மறைக்க முடியாதே! வேண்டுமானால் ராமசந்திர குகா மாதிரி, வாரிசுகள் எப்படித் தலைமுறைக்குத்தலைமுறை வீரியம் இழந்து கொண்டே வருகிறார்கள் என்பதை இபின் கால்தூன் 600 வருடங்களுக்கு முன்னாலேயே சொல்லியிருக்கிறார் ரீதியில் சரித்திரம் அகழ்வாராய்ச்சி வேண்டுமானால் செய்து பார்க்கட்டுமே! மீண்டும் சந்திப்போம்.
சுமந்த் சி ராமன்! தூர்தர்ஷனில் Sports Quiz நடத்திக் கொண்டிருந்து ஏதோ ஒரு நாளில் அரசியல் விமரிசகரும் ஆகி தொலைகாட்சி விவாதங்களில் தன் பாண்டித்தியத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். அதற்கும் ஆர்னாப் கோஸ்வாமி ஆப்பு வைத்துவிட்டார் போல இருக்கிறது!
இந்த அர்னாபு ரிபப்ளிக் டிவி வாடா விவாதத்துக்குன்னு கூப்ட்டான். நம்பி போனேண்டா...அங்க ஒரு 12 பேர்... மூத்திர சந்துக்குள்ள விட்டு கதறக் கதற அடிச்சானுக...நானும் அடிச்சுட்டு போங்கடான்னு விட்டுட்டேன்...அர்னாபு ஒருத்தனுக்கு போன் போட்டு கூப்பிட்டான். வாடா ஒரு நல்ல பீஸ் கெடச்சுருக்குன்னு. அவன் சொன்னான். இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாம்மா... நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது ? அவ்வ்வ்வ்
இன்று காலையில் வாய்விட்டுச் சிரிக்க வைத்த முகநூல் பகிர்வு இது. சுமந்த் ராமன் என்றில்லை, இங்கே சேனல்களில் தங்களைப் பெரிய அரசியல் பண்டிதர்களாக நினைத்துக் கொண்டு கூத்தாடும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், விவாதக் களத்தில் கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று விஷத்தைக் கக்கும் பங்கேற்பாளர்களுக்கும் இதே மாதிரிப் பாடம் கற்பித்துத் தெறிக்க விடும் நன்னாள் என்று வருமோ என எண்ண வைத்த பகிர்வும் கூட.
மந்திரிசபையில் யாரைச் சேர்ப்பது என்பது பிரதமருடைய தனிப்பட்ட உரிமை என்று அரசியல் சாசனம் தெளிவாகவே வரையறுத்திருக்கிறது. ஆளும் தரப்பில் உள்ள பலம் வாய்ந்த நபர்கள், கோஷ்டிகளுக்கு இடம் கொடுக்கப்படுவது பிரதமரின் சாதுர்யம் அல்லது பலவீனமாகவே பார்க்கப்படும் என்பது கூட இங்கே நடைமுறையில் பார்த்ததுதான். அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்று அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட விஷயம் கூட இங்கே பெரும்பாலான தருணங்களில் காற்றில் பறக்கவிடப்பட்டது என்பதை நினைவில் வைத்திருக்கிறீர்களா? இந்த விவாதமுமே கூட, சிறப்பாக இருந்தது என்பதற்காக அல்ல, தமிழகத்தில் நம்முடைய அரசியல் அறிவு எப்படி இவர்களால் தொடர்ந்து மழுங்க அடிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள காங்கிரஸ் எம்பிக்களின் கூட்டத்தில் சேர்பெர்சனாக சோனியா G முன் மொழியப்பட்டு, தலையாட்டும் கூட்டத்தால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல் படுவதற்கு நேற்று (மே 31) காங்கிரஸ் எதிர்க்கட்சிகளை ஆலோசனைக்கு அழைத்திருந்தது. Licking the wound என்பார்களே அதைப்போல, ஏன் தோற்றோம் என்பதிலேயே கவனமாக இருக்கும் இதர கட்சிகள் காங்கிரஸ் அழைப்பைக் கண்டுகொள்ளாததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக இந்து தமிழ்திசை செய்தி சொல்கிறது. இட்லி வடை பொங்கல் என்று தலைப்பு வைத்துவிட்டு அதென்ன பொங்கல் என்று கேட்கிறீர்களா? பதிவின் தொடக்கத்தில் கொஞ்சம் கிண்டலோடு ஆரம்பித்ததில் சுமந்த் ராமன் இனிமேல் ரிபப்லிக் டிவி பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டேன் என்று சொன்னார் அல்லவா? அப்படியென்ன நடந்துவிட்டதென்று தெரிந்துகொள்ள வேண்டாமா?
முழுவிவாதத்தையும் பார்க்கமுடிந்தால் சிறப்பு! மிளகுப் பொங்கலாக இந்தவிவாதத்தில் மிளகு மட்டுமே வேண்டும் என்று கேட்டீர்களானால் 29வது நிமிடத்திலிருந்து கிடைக்கும்! கேள்விகளின் உக்கிரம் தாங்க முடியாமல் விவாதத்தில் இருந்து walk out செய்து ஓடிவிட்ட காட்சி அடுத்த நான்கு நிமிடங்களில்! மிளகுக்காரம் குறைய நிறையவே சிரிப்பு