Showing posts with label தந்தி டிவி. Show all posts
Showing posts with label தந்தி டிவி. Show all posts

சண்டேன்னா மூணு! தந்தி டிவி! அரசியல்! ஊடகங்களின் அரசியல்!

இங்கே பானாசீனாக்களும் இசுடாலின்களும் பேசி முடித்த அதே உளறல்களை மீண்டும் நியாயப்படுத்த தந்திடிவிக்கு ஒரு விதமான உள் அரசியல் இருக்கிறது போல! கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியை ரங்கராஜ் பாண்டே நடத்திய விதம் வேறு! முதலாளிகளுக்கு  அன்றைய நாட்களில் அதில் உடன்பாடும் இருந்தது. எப்போதிலிருந்து ஆதித்தன் குடும்பம் பழையபடி திமுக சார்பு நிலை எடுக்க ஆரம்பித்தது என்பதுகூட, இங்கே பெரும்பாலானோருக்குத் தெரிந்த விஷயம் தான்!


ஹரிஹரன் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியை நேற்று ஆரம்பித்த விதமே தமிழ்நாட்டையும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கிற திட்டம் இருக்கிறதா என்ற குத்தலான கேள்வியோடுதான்! இதே மாதிரி அப்பச்சி சொன்ன ஒரு அதிமேதாவித்தனமான ஸ்டேட்மென்ட் : கச்சத் தீவு இந்தியாவுடையது அல்ல, அதனால் இலங்கைக்குத் தாரை வார்த்ததில் தவறே இல்லை என்பதையும் இங்கே உள்ள ஊடகங்கள் பானாசீனாவிடம் துணிந்து கேட்பார்களா? H ராஜா என்றால் வருகிற இளப்பம், மற்றவர்களிடமும்  வருமா?ஊடக அறம் என்பதே காசுக்குக் கூவுவது மட்டும்தான் என்று சோனியாG UPA chairperson என்ற ஹோதாவில் நிழல் பிரதமராக ஆட்டிப்படைக்க ஆரம்பித்த நாட்களில் தான் என்பது இங்கே நண்பர்களுக்கு நினைவுபடுத்த வேண்டுமா? இங்கே பெரும்பாலான ஊடகங்கள்  திமுகவோடு அமைத்துக் கொண்ட கூட்டணி இன்னும் தொடர்கிறதே, எதனால் என்ற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்! 


அரசியலைப் பேசும்போது, தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒருவராக தொல்.திருமாவளவன் ஆகிவருகிறார் என்பதே இங்கு திராவிடங்களின் வீழ்ச்சிக்கான பல அடையாளங்களில் ஒன்று மட்டும்தான்! களத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் படுகிற பாடு இருக்கிறதே! அது தான் என்னை ஆச்சரியப்படுத்துகிற ஒரே விஷயம்! காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமியர்களுடைய ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அம்பேத்கரைக் கூடத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதான விசித்திரம் இந்த 44 நிமிட நேர்காணலில் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. இசுடாலின் போல காஷ்மீர் விவகாரம் என்னவென்று தெரிந்து கொள்ளாமலேயே பேசுவது ஒருவிதம்! திருமாவளவன் பேசுவது வெறுரகம்! ராஜா ஹரிசிங்குக்கு வெகு காலத்துக்கு முன்னாலேயே காஷ்மீர் இந்த தேசத்தின் ஒருபகுதியாக, கல்விகேள்விகளுக்குப் புகழ்பெற்ற இடமாக இருந்தது என்பது அவருக்கு ஒரு பொருட்டே அல்ல! முஸ்லிம்  மெஜாரிட்டி எப்படி வந்தது என்பதைப்பற்றியும் அவருக்கு கவலை இல்லை. தான் பேசுவது தேசத்துக்கு எதிரான கருத்து இல்லை என்பதற்கு அவர் சொல்லுகிறவிளக்கம் இருக்கிறதே, அபாரம்!   

   குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு.

தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்,போவான்,ஐயோவென்று போவான்

பாரதி கவிதைகளில் புதிய கோணங்கி என்ற பாடலில் இந்த நாட்டோருக்காகச் சொன்ன செய்தி இது. இங்கே ஊடகங்களுக்கும், தெரிந்தே தவறுகள் செய்கிற அரசியல்வியாதிகளுக்கும் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய செய்தி இதுதான் என்று இந்த ஞாயிற்றுக்கிழமை எனக்குப் படுகிறது 

மீண்டும் சந்திப்போம்.
 

கொஞ்சம் காணொளி! நிறையக் காமெடி!

தந்திடிவி என்ன உள்நோக்கத்தோடு இந்த நேர்காணலை நடத்தியிருக்கும் என்று ஊகிப்பது ஒன்றும் கடினமில்லை! ஆனால் நடப்பது என்ன என்பதைக் கொஞ்சம் பாருங்கள்!


எதற்கெடுத்தாலும் அரசையே நம்பியிருப்பது அல்லது எதற்கு எடுத்தாலும் அரசையே குறைசொல்வது என்பது தமிழகத்தின் சாபக்கேடு! கழகங்கள் வளர்த்துவிட்டது சிறுதீயாக என்றால் அதைக்  காட்டுத்தீயாக ஊதிவளர்த்தது காசுக்குக் கூவுகிற ஊடகங்கள்தான்! 10 நிமிட வீடியோதான்! கொஞ்சம் காமெடி! கொஞ்சம் யோசிக்க வேண்டியதாக!


இதுவும் தந்திடிவி காமெடிதான்! வீடியோ 4 நிமிடம்தான்!  பரபரப்பான சதக்!சதக்! செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை என்றால் அவர்களும்  வேறு என்னதான் செய்வார்களாம்? 

   
இந்தக்கருமத்தைப்  போய்ப் பேசுவானேன் என்றிருந்தேன்!பிக் பாஸ் சீசன் 3 ப்ரொமோ வெறும் 35 செகண்ட் தான்! ஆனால் இன்று யூட்யூபில் ஜாங்கிரி மதுமிதா வெளியேற்றம் அது இது என்று சீரியஸாக அரசியல் செய்திகளைத் தேடிக் கொண்டு இருந்தவனுக்கு இதைப்பற்றி ஏராளமான தம்பட்ட வீடியோக்கள் என்றே வந்துகொண்டிருந்தால் என்ன செய்வது? பிக் பாஸ் கமல் காசருக்கு வரும்படி! பார்க்கிறவன் பாடுதான் பரிதாபம்! இது #கொடுங்காமெடி!  வேறென்ன செய்ய?

மீண்டும் சந்திப்போம் 
         

சண்டேன்னா மூணு! தந்திடிவி அரசியல்! யார் கோமாளி?

அதிமுக அமைச்சர்கள் என்றாலேயே இங்கே பல சேனல்கள்  ஊடகங்களுக்கு செம குஷி வந்துவிடும்! அதிமுக என்றாலே கேணையர்கள் கட்சி, அதிமுக அமைச்சர்கள் என்றால் கோமாளிகள் என்றமாதிரி சித்தரிப்பதில் அவர்களுக்கொரு மாதிரி, அலாதிப் பிரியம்! ஆனால் இந்த நேர்காணலைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்களேன்! யார் கோமாளியாகி நிற்கிறார்கள் என்பது புரிகிறதா?


ஹரிஹரன் கேட்கிற குத்தலான கேள்விகளுக்கெல்லாம் பளீர் பளீரென்று சிக்சரும் பவுண்டரியுமாக அடித்துத் தள்ளி தந்திடிவியை கோமாளி டிவியாக்கின அதிசயம் இங்கே நடந்திருக்கிறது!  இதே ஹரிஹரனோ தந்திடிவியோ கனிமொழி எதற்காக வேலூர் தொகுதிப் பிரச்சாரத்துக்கு அழைக்கப் படவில்லை என்பது முதலான கேள்விகளை திமுக ஆசாமி எவரிடமாவது தைரியமாகக் கேட்டு விடுவார்களா? தந்தி ஆதித்தன்களுடைய ஊடக அறம்,ஆதாய அரசியல்  இன்னதென்பது இன்னுமொரு முறை மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது! அவ்வளவுதான்! அமைச்சர் KT ராஜேந்திர பாலாஜிக்கு ஒரு சபாஷ்!  


காம்ரேடுகள் டாக்கீசுகளும் (talkies) நடத்துகிறார்கள் என்பது எனக்கு சமீபத்தில் தான் தெரியவந்த விஷயம். அந்த ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் இந்த நேர்காணலை இங்கே பகிர்ந்து இருக்கிறேன் என்பதை நம்புவீர்களா? நிச்சயமாக ஜென்ராம் என்ன சப்பைக்கட்டுக் கட்டுகிறார் என்பதில் நிஜமாகவே எனக்கு அக்கறை இல்லை. சிந்தன்! மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் விவாதங்களில் தடுமாறாமல் பேசுகிற இளந்தோழர் என்கிற அபிமானத்தில் காவேரி நியூஸ் சேனலில் இருந்து ஜென்ராம் வெளியேறிய கதையை அவர் ஒரு நேர்காணலாக நடத்தியதைப் பார்த்தேன்! பகிர்ந்து கொள்கிறேன்! அம்புடுதேன்!

          
இந்த ஆறுநிமிட வீடியோவில் 500,600 IT ஊழியர்கள் சென்னை பெங்களூருவிலிருந்தெல்லாம், தாமாகவே முன்வந்து சீமான் கட்சி     வேட்பாளர் தீபலட்சுமிக்காக வேலூர் தொகுதியில் தங்கி பிரசாரம் செய்வதைப் பற்றி மிகவும் அதிசயித்துச் சொல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள்  நாம்தமிழர் கட்சி உறுப்பினர்களாகக் கூட இல்லை என்று வேறு சொல்கிறார்கள்!

இந்தச் செய்தியில் அதிசயிக்கிறமாதிரி, அல்லது தேர்தலில் சீமான் கட்சி வேட்பாளருக்கு உண்மையிலேயே பயன்படுகிற மாதிரியான அம்சம் ஏதாவது இருக்கிறதா? கொஞ்சம் யோசித்து ஒரு பதிலைச் சொல்லுங்களேன்!  அரசியல் புரிதல் எனக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அளவிட உதவும் பதில்கள் அவை!

மீண்டும் சந்திப்போம்.