நித்யானந்தா! இன்றைய தலைப்புச் செய்தி!


நித்யானந்தா! இன்றைய தலைப்புச் செய்தி!


புவனேஸ்வரி விவகாரத்திற்குப் பிறகு காய்ந்து கிடந்த ஊடகங்களும், பதிவர்களும் சன் டிவி புண்ணியத்தில் மறுபடி சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கி விட்டார்கள்! 

நித்யானந்தா சாமி எவளோ ரா'வில் ஆரம்பிக்கும் தமிழச்சி நடிகையோடு நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து, நேற்று ஓட்டு ஓட்டு என்று ஓட்டிவிட்டார்கள். நக்கீரன் கோபால் விடுவாரா?  நக்கீரனிலும் காமெராக் கண்ணைத் திறந்து வைத்தபடி, செய்தித் தொடரை ஆரம்பித்தாயிற்று! இன்னும் கொஞ்ச நாள் சாமியாரின் காம வெறி, களியாட்டம், காவிக்கு பொண்ணு கேக்குதோ என்று விதவிதமாகத் தலைப்பு வைத்து ஒட்டி விடலாம்! வேலூருக்குப் பக்கத்தில் இருக்கும் தங்கக் கோவில் பற்றியும் விரைவில் செய்தி எதிர்பார்க்கலாமா?

கதவைத் திற காற்று வரும் என்று நித்தியானந்தா புத்தகம் எழுதினாராம்!

கதவைத் திற காமெரா வரும்! சன் டீவீ தயாரிப்பாகசெய்தியும் வரும்! நித்தியானந்தா ஓவர்நைட் ஓஷோவாகிவிட்டார்! ஓஷோ என்றால் செக்ஸ் சாமியார் என்று சொல்லப் பட்டது  பழைய தலைமுறைக்கு மட்டும்தானே தெரியும்? புதிய தலைமுறைக்கு, புதிதாக ஒருவரை அறிமுகம் செய்து வைக்க வேண்டாமா? அதைத் தான் சன் குழுமம் செய்திருக்கிறது!

வழக்கு வந்தாலும் பரவாயில்லை, விற்கும் என்று தெரிந்தால், சூட்டோடு சூடாக, கிழக்குமேற்கு வடக்குதெற்கு பதிப்பகமெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு புத்தகம் கூட வெளியிடலாம்! அத்தனை சூடு! எவன் படுக்கையில் எவள் இருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ள, ஜனங்களுக்கு அவ்வளவு ஆவல்!

இதை தெரிந்து வைத்துக் கொண்டால்  வாழ்க்கைப் பிரச்சினை, பட்ஜெட் துண்டு, வெட்டி, புடவையாய் விழுவது, வேலையில்லாத் திண்டாட்டம் , செம்மொழி மாநாடு. வாராவாரம் நடக்கும் பாராட்டு விழாக்கள்   எல்லாமே மறந்துபோய்விடும் இல்லையா?

வீடியோவைப் பார்த்தால், சம்பந்தப்பட்ட நடிகையே எல்லாவிதமான முன்னேற்பாடுகளுடன் தான் இருந்திருப்பார்  என்று தெரிகிறது. நித்தியானந்தாவுடன் யார் யாருக்கு என்ன பேரம், எது படியவில்லை என்பதால் இது அம்பலத்துக்கு வந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில், வாரிசுகளைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்ளாமல் தொழில் நடத்த முடியாதென்பது எல்லோருக்குமே தெரியும்!

சாமியார்த் தொழிலையும் விட்டு வைக்க மாட்டார்கள் என்பது இப்போது தான் புரிகிறது!

லேட்டஸ்ட் தினகரன் செய்தி

இதோ வீடியோ--செந்தழல்ரவியிடமிருந்து..


நக்கீரன் நெற்றிக் கண்ணைத் திறந்து சுட்டது.... நவீன நக்கீரனுக்கு சர்குலேஷன் கூடினால் போதும்! 

விளம்பரம் கிடைத்தால் போதும்!


சாருவிற்கு வாசகர் ஆறுதல் கடிதம் இங்கே! ஜெயமோகன் ஜாக்கிரதையாக இருக்க உபதேசம் செய்யும் பகுதி இங்கே! (கொஞ்சம் ஒத்துக் கொள்ளக் கூடியதாகத் தான் இருக்கிறது!)

திரைப்படங்களுக்குத் தணிக்கை முறை இருப்பதுபோல, தொலைக் காட்சிகளுக்கும் தணிக்கை முறை எவ்வளவு அவசியம் என்பது இப்போது தான் புரிகிறது. வீட்டில் வயதுவந்த பிள்ளைகள் இருக்கையில். ஆட்சேபகரமான செய்தி வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற எச்சரிக்கை கூட இல்லாமல் இந்த நாட்டில் மட்டும் தான் தொலைக் காட்சியில் ஒளிபரப்பலாம், கேள்வியே கிடையாது என்பது அவர்களுக்கு வேண்டுமானால் வெட்கமில்லாமல் இருக்கலாம்!


நமக்கும் இல்லாமல் போய் விட வேண்டுமா என்ன! தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளுக்கும் கடுமையான தணிக்கைமுறை வேண்டும் என்ற அவசியத்தைச் சொல்கிற நிகழ்வாகவே இது இருக்கிறது!

காசுக்காக எதைவேண்டுமானாலும் செய்கிற குடும்பமாக, கூட்டமாக, கழகமாக அவர்கள் வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும்!

புழுக்களும், கொசுக்களும், கிருமிகளும்  அசுத்தமாக இருக்கும் சாக்கடையில் இருந்தே உருவாகின்றன. நீங்களும் நானும் மாறாத வரை, இந்த மாதிரிக் கசடுகளுக்கு இடம் கொடுக்கிற, பிறப்பிடமான  சாக்கடையாய் இருப்பதில் இருந்து மாறாத வரை, பிரேமானந்தா, ஜெயந்திரர், நித்தியானந்தாக்கள் உருவாவதையும் தடுக்க முடியாது. நீங்களும் நானும் அப்படியே இருக்க வேண்டுமா என்ன?

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 

வெறும் கேள்வி மட்டுமில்லை இது! நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை அடையாளம் சொல்லும் கேள்வியும் இது தான்! கணித பாடம் மாதிரி அல்லாமல், வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினை, கேள்வி எல்லாவற்றிற்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் இருக்கின்றன. ஒவ்வொரு பாதையாகப் பிரிந்தும் செல்கின்றன.

அவற்றில் என்ன மாதிரியான விடையைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதில் தான், நாம் என்னவாகப் போகிறோம் என்பதும் இருக்கிறது.





33 comments:

  1. Are you feeling hurt?

    Why r u trying to put fault on media?

    The guy who has done it is not ready

    to tell people that " I am as I am"?

    why do u bother?

    ReplyDelete
  2. நாளும் நலமே விளையட்டும்!கேட்கவே நன்றாக இருக்கிறது!

    வெறும் வார்த்தையில் நல்லதே விளையட்டும் என்று சும்மா இருந்து விட முடியுமா?

    தொடரும் சம்பவம் என்று உங்களுடைய முப்பத்து மூன்று பதிவுகளையும் படித்த பிறகும் கூட,
    உங்களுடைய கேள்வியின் திசை எனக்குப் புரியவில்லை!

    நித்யானந்தா என்ற ராஜெந்திரனையோ, அல்லது இந்த மாதிரி இருக்கும் எவரையுமே நான் நியாயப் படுத்தவில்லை! கடைசியில் இருந்து பதினோராவது வரியை மறுபடி படித்து விட்டுச் சொல்லுங்கள்!
    எந்த வகையில் இந்தச் செய்தி என்னைப் புண்படச் செய்திருக்கிறது?

    ஊடகங்களுக்கு பொறுப்பு லகான் வேண்டாம் என்கிறீர்களா? இந்தச் செய்தியை என்னவோ நெருப்புப் பற்றிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே வந்துவிட்ட மாதிரி திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கிற விதம் சரிதானா?

    ReplyDelete
  3. Sex Sells! This is the only reason behind this. Under the disguise of exposing people, the media gets a blanket license to publish any level of sex.
    Even in US, which is supposedly much more open society, this does not happen. not because the media is responsible (which is not) but because of the dange of severe punishments.

    We need that.

    ReplyDelete
  4. இதுவரை வந்த எல்லா பதிவுகளும் சேர்ந்த கூட்டு கலவையாக இருக்கிறது!

    ReplyDelete
  5. வாருங்கள் ரவி!

    Sex sells! உண்மைதான்! ஜனங்களுக்கு அடுத்தவன் படுக்கையறையை எட்டிப் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் தன் படுக்கையில் கூட இல்லை என்பது தெரிந்தது தானே!

    இங்கே பதிவின் உள்ளடக்கம், நித்தியானந்தா செய்தது சரி தவறு என்ற விஷயமே அல்ல!

    ஒரு தொலைக் காட்சி, எந்தவித வரைமுறையுமில்லாமல், இரண்டு நாட்களாக, இதே வீடியோப் படங்களை செய்தியாகத் திரும்பத் திரும்ப ஓட்டிக கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் அங்கங்கே வன்முறை கொழுந்து விட்டு எரிவதையும் சேர்த்தே இந்த செய்தி உசுப்பிவிட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய உள்நோக்கம் என்னவென்பது வெளிப்படையாகத் தெரியவில்லை, ஆனாலும் என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.

    பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு படத்தை விதிமுறைகள் அவசியம் வேண்டும், சுய கட்டுப்பாடும் இருக்கவேண்டும் என்பது தான் இந்தப் பதிவின் மையக் கருத்து.

    நெறிமுறைகளை மதித்து நடக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கும் இருக்கிறதே!

    அப்புறம் வால்ஸ்!

    நீங்கள் எந்தப் பதிவையும் முழுசாகப் படிப்பதில்லை என்பது எனக்குத் தெரியுமே! இதையும் நீங்கள் முழுசாகப் படிக்கவில்லை! நான்கு ஐந்து பதிவுகளுக்கு இங்கிருந்து சுட்டி இருக்கிறது. ஆனால் அவர்கள் எழுதியிருப்பதற்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை.

    வித்தியாசமே தெரியவில்லையா?

    ReplyDelete
  6. மேலும் என் பதிவை தவிர மற்ற பதிவுகளுக்கு சுட்டி இருப்பதையும் அறிவேன்! முதல் பதிவு போட்டது நான் தான் எனக்கு ஏன் சுட்டி தரலைன்னு கேட்டா நல்லாயிருக்காதேன்னு கேக்கல!

    :)

    ReplyDelete
  7. ஹய்யோ ஹய்யோ1 இதுக்குபேர் தான் துறவரமா? இது தெரியாம நான் ஆபீஸ்ல கஷ்டப்பட்டு வேலை பாக்குறேனே!

    anbudan
    ram

    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  8. //நீங்கள் எந்தப் பதிவையும் முழுசாகப் படிப்பதில்லை என்பது எனக்குத் தெரியுமே! இதையும் நீங்கள் முழுசாகப் படிக்கவில்லை! நான்கு ஐந்து பதிவுகளுக்கு இங்கிருந்து சுட்டி இருக்கிறது. ஆனால் அவர்கள் எழுதியிருப்பதற்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை.//

    சம்பந்தமில்லைனா, நீங்க எதையும் படிக்கலைன்னு அர்த்தம்!
    நான் சொன்னது நான் படித்த பதிவுகளின் கலவை போல் இருக்கிறது என்று!

    ReplyDelete
  9. வால்ஸ்!

    போனபதிவில் சுட்டி ஹீரோ நீங்கள் தான்! அடுத்தவர்களுக்கும் கொஞ்சம் இடம் கொடுக்க வேண்டாமா?

    சுட்டி கொடுத்தது, அந்தக் கன்றாவியை நான் திரும்ப வியாக்கியானம் செய்ய வேண்டாமே என்று தான்! மற்றபடி, ரவிக்கு எழுதிய பதிலிலேயே இந்தப் பதிவின் மையக் கருத்து, கோனார் நோட்சாகச் சொல்லப்பட்டு விட்டது.

    நித்தியானந்தா ஒரு நடிகையோடு உல்லாசமாக மட்டும் தான் இருந்தார். அதனால் பூமி தனது அச்சில் இருந்து விலகிப் போய் நின்றுவிடவில்லை!

    ஆனால், ஊடகங்கள் செய்த வேலை, இங்கே தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் பற்றி எரிகிறதே, அதற்கு என்ன பதில்? யார் பொறுப்பு?

    ஹேராம்!

    துறவறம் என்பது ஆசைகளைத் துறப்பது, தனக்கென்று எதுவும் இல்லாத நிலைக்குப் போவது!

    துறவறத்தையே துறந்த தனிப்பெருமை காணச் சங்கர மட ஜெயேந்திரருக்கு மட்டும் தான் உண்டு!

    இதெல்லாம் சேட்டை!

    ReplyDelete
  10. சாமியார்கள் பற்றி எனக்கு என்றும் நல்ல மரியாதை இல்லாததால் நான் அந்த விசயத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை!

    அந்த ஆள் மாத்திர சாப்பிடவும் எனக்கு சாரு மேல செம கோவம் வந்தது! தொட்டு கேன்சரை குணமாக்கும் கேனப்பய எதுக்கு மாத்திரை சாப்பிடுறான்னு!

    சண்டீவீயின் உரிமை மீறல்களை அப்போது எனக்கு யோசிக்க கூட நேரமில்லை!, மேலும் தற்பொழுது மக்கள் விழிப்புணர்வு அடையவே நாங்கள் வெளியிட்டோம்னு இப்போ சன் ஜகா வாங்கியிருச்சு!

    இருந்தாலும் மாத்தி மாத்தி அதை வெளியிட்டது அப்படமான விளம்பரத்திற்காக தான்!

    மற்ற பதிவுகளை படித்த பிறகு தான் மாற்று கோணத்தில் யோசிக்க முடிந்தது! உங்கள் பதிவையும் சேர்த்து!

    ReplyDelete
  11. certainly SUN tv has violated some regulation/rule set by I&B ministry... (2nd day video was porn stuff)

    there is no censorship, but i think channels can be banned or pulled off the air for telecasting such stuff's.

    note.
    comments are only assumptions, i may be wrong also...and excuse me sir for using englipish.

    ReplyDelete
  12. வால்ஸ்!

    அதுக்குத் தான் பதிவை முழுசாப் படிக்க வேணுங்கிறது!

    கொஞ்சம் பின்னணி என்னவாக இருக்கும் என்பதையும் சேர்த்து யோசிப்பது எல்லாவிதத்திலும் நல்லது!

    இப்போது கூட, உங்களுடைய மாற்றுப்பார்வையில் கொஞ்சம் கோளாறு இருக்கிறது!

    என்ன என்பதை இன்றைக்கு கலைஞர் டிவி, சண் செய்திகள் இரண்டையும் மாற்றி மாற்றிப் பார்த்திருந்தால் கொஞ்சம் புரிந்திருக்கும்!

    நித்யானந்தாவோடு என்ன விவகாரம், பேரம் என்பது சீக்கிரம் வெளியே வந்து விடும்! ஆனால், அதை ஊதி ஊதிப் பெரிதாக்கி, வேறோர் விஷயத்தில் இருந்து ஜனங்களைத் திசைதிருப்புவதில் ஒரு தரப்பு கிட்டத் தட்ட ஜெயித்து விட்ட மாதிரித் தான்!

    இதற்கு அடுத்த தரப்பு என்ன செய்யப் போகிறது என்பதும் ..கத்தரி முத்தினால் சந்தைக்கு வந்து தானே தீர வேண்டும்!

    சாம்!

    இங்கே நடந்திருப்பது அப்பட்டமான மீறல். சாமியாரைக் கைது செய் என்று கூக்குரல் இருக்கிறார்களே, அது எந்த அடிப்படையில் எடுபடும் என்பது எனக்குத் தெரியவில்லை.

    இருவருமே மனம் ஒப்பித் தான் அதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிறபோது, சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? ஒரு ஆண், பெண் இருவரும் உடலுறவு கொள்வது சட்டப்படி குற்றமல்ல.

    ஆனால், ஆள் வைத்து விபச்சாரம் செய்வது குற்றம். புவனேஸ்வரியை அப்படித் தான் சிக்க வைத்தார்கள்.

    திட்டமிட்டு ஒருவர் பெயரைக் கெடுப்பது, செய்தி என்ற பெயரில் ஆட்சேபத்துக்குரிய விஷயங்களை நீலப்படமாகவே ஒட்டியது, மக்கள் கண்டனம் என்ற பெயரில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்களைத் தூண்டிவிடுகிற மாதிரி செய்திகளைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டே இருந்தது என்று நிறைய அடுக்கிக் கொண்டே போக முடியும்!

    இந்த உத்தமர்கள் சென்னையில் சில காலத்துக்கு முன்னாள் ஒரு வெளிநாட்டுப் பிரஜை டூரிஸ்ட் விசாவில் தங்கி, இங்கே ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவு அளிப்பது என்ற பெயரில் நீலப் படங்களை சின்னஞ்சிறார்களை வைத்து நடத்தினானே, அப்போது இதே சமூக அக்கறை இருந்ததா?

    நிறையப் பாதிரிமார்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது நடந்து கொண்டே தான் இருக்கிறது, அப்போது இதே சமூக அக்கறை இருந்ததா?

    செலெக்டிவ் அம்னீஷியா எப்போது இவர்களுக்கு வேலை செய்யும் அல்லது செய்யாது என்பது ஒன்பது ரூபாய் நோட்டு மாதிரிக் கேள்விதான்!

    பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

    அவ்வளவுதான்!

    எரிகிற சிறு தீயை ஊதிப் பெரிதாக்குகிற ஊடகங்கள் தீயை விடக் கொடுமையானவை.

    ReplyDelete
  13. So Mr.Krishnamoorthy dont waste your time analysing why sun tv or kalaigar tv published this video.Your are trying to divert the issue somewhere else.First say what action can be taken against this ppl?If the matter is true then this man is not a samyaru.He should be jailed.So Dont try to divert the problem somewhere else. okaaa.

    ReplyDelete
  14. நீங்கள் அவருக்கு வக்காளத்து வாங்குரிங்கனு நா சொல்லல.
    நீங்க எழுதி இருக்குறதப் பார்த்தா எதோ சன் டிவி குடும்பம் அவருக்கு எதிரா சூழ்ச்சி செய்து
    மாட்டி விட்டு பணம் சம்பாதிப்பது என சொல்ற மாதிரி இருக்கு!

    மீடியா உரிமை அவங்கப் பாத்துப்பாங்க!
    கடிவாளம் போடப்பட்ட சினிமா என்ன சரியாத் தான் போகுதா?

    வந்த பதிவு எல்லாமே அவரைத் திட்டரமாதிரி இருக்கு. ஆனா உங்கப் பதிவு?
    மீடியாவைத் தாக்கி! இதனாலத் தான் நான் அதைக் கேட்க வேண்டி வந்தது.

    ReplyDelete
  15. திரு சிவா!

    நான் திசைதிருப்புவதாகச் சொல்லியிருக்கிறீர்கள்! ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதில் சட்டப் பூர்வமாகத் தடையேதும் இல்லாதபோது, நான் எதற்காக அது சரியா தவறா என்று சொல்ல வேண்டும்?

    அவர்களுடைய செயலால் பூமி சுழல்வது நின்று போய் விட்டதா என்ன?

    நீங்கள் சொல்லும் மீடியா செய்தி, தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் ஏகப்பட்ட கலவரத்தை, சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறதே, அதற்கு என்ன சப்பைக் கட்டுக் கட்டப் போகிறீர்கள்?

    எதை அனலைஸ் செய்ய வேண்டும் அல்லது கூடாது என்று உங்களிடம் உத்தரவு கேட்கிற நிலைக்கு நான் எப்போது வந்தேன்?

    @நாளும் நலமே விளையட்டும்!

    உங்களுக்கும் மேலே சொன்ன மாதிரித் தான்! மந்தைகள் மாதிரி, மீடியா சொல்வதை அப்படியே சத்தியவாக்காக எடுத்துக் கொண்டு போக வேண்டிய அவசியம் எனக்கு எதற்கு?

    இத்தியானந்தா லோகல் என்றால், இவர்கள் அகில இந்திய அளவில்!

    இதில் ஈயம் பித்தளையைப் பார்த்து நீ யோக்கியமா என்ற இளிப்பு எதற்காக? யாரை ஏமாற்ற?

    ReplyDelete
  16. //கலைஞர் டிவி, சண் செய்திகள் இரண்டையும் மாற்றி மாற்றிப் பார்த்திருந்தால் கொஞ்சம் புரிந்திருக்கும்! //

    //நித்யானந்தாவோடு என்ன விவகாரம், பேரம் என்பது சீக்கிரம் வெளியே வந்து விடும்!//

    //இங்கே நடந்திருப்பது அப்பட்டமான மீறல்.//

    //இருவருமே மனம் ஒப்பித் தான் அதில் ஈடுபட்டிருக்கிறார்கள் //

    //ஒரு ஆண், பெண் இருவரும் உடலுறவு கொள்வது சட்டப்படி குற்றமல்ல.//

    இவை அனைத்தையும் தனிதனியாக வேறு பதிவுகளில் படித்து விட்டேன் என்றே குறிப்பிட்டிருந்தேன்!

    பாதிரியார் பற்றி சரியான தகவல்கள் இல்லாததால் அவர்கள் அண்டர்வேரை கிழிக்கமுடியவில்லை! சுட்டி கொடுங்களேன், கிழிச்சிடலாம்!
    (முடிந்தால் தமிழில்)

    ReplyDelete
  17. இன்னும் எத்தனை பேர் நித்தியாந்தரின் வலையில் விழுந்துள்ளார்களோ, இனிமேலும் யாரும் அம்மாதிரி விழக்கூடாது என்ற சமூக அக்கறையிலேயே அந்த வீடியோ வெளியிடப்பட்டது என்பது சன் தொலைகாட்சியின் ஸ்டேட்மெண்ட்!

    இது ஒரு ஆரம்பமாக கூட இருக்கலாம், நாளை பக்கிகுரு, அரவிந்தர் ஆஸ்ரமம் என வரிசையாக நடக்கும் தில்லுமுல்லுகள் வெளிவராலாம், யார் கண்டா!?

    சன் ஒரு மீடியா, அதன் வேலை சீரியல் போடுவது மட்டுமல்ல, மேலும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை செய்திகள் சொல்லும் சேனலில் தான் அவர்கள் ஒளிபரப்பினார்கள்! கூடவே சிதம்பரம் மாணவர்கள் சாவு, பட்ஜெட் பிரச்சனை எல்லாத்தையும் தான் சொன்னார்கள்! என்ன ஸ்கோலில் அடுத்து நித்தி டவுசர் எப்போ கிழிக்கப்படும் ஓட்டிகிட்டே இருந்தாங்க!
    அது ஒன்னும் தப்பில்லையே, பாக்காதவங்க இன்னும் நிறைய பேர் இருக்காங்க, அவுங்களுக்கும் தெரியட்டுமேன்னு சொல்லியிருக்கலாம்!

    சரி ஒரு தடவை தான் நீங்க பாத்துட்டிங்கள்ள, சேனலை மாத்தி வேற பாக்க வேண்டியது தானே, ஏன் திரும்ப திரும்ப அதையே பார்த்திங்க, அப்படி பார்த்த நால தான அவன் திரும்ப திரும்ப போட்டான்னு உங்களூக்கு தெரியுது!

    எங்க பாட்டி சொன்னது தான் சரி, நம்ம முதுகு நமக்கு தெரியாது!

    ReplyDelete
  18. சன் குழுமத்துக்கு இத்தனை ரசிகர்களா?

    எனக்கு மதுரையில் கொலை செய்யப் பட்ட வைகை டிவி காந்தியும் வேறு ஒரு கேபிள் ஆபரேடர் நினைவும் ஏனோ

    ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

    ReplyDelete
  19. அப்புறம் வால்ஸ்!

    நாளை என்ன நாளை?

    நேற்றைய முன் தினங்களிலேயே அரவிந்தருடைய ஆசிரமத்தைப் பற்றி ஏகப் பட்ட அவதூறுகள் வந்தாயிற்று! நிறையப் பார்த்தாயிற்று!

    பார்வதி ஷா கொலை வழக்கு என்று ஒன்று! ஆரோவில் நகரில் கற்பழித்துக் கொலை செய்யப் பட்ட கதைகள் இரண்டுக்கும் மேல்!

    நான் சொல்லப் பட்ட விஷயங்களின் மீது என்னுடைய நம்பிக்கைகளை, என்னுடைய அனுபவங்களில் சரிபார்த்தே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதனால், அரவிந்தாசிரமத்தை இழுத்து என்னைச் சீண்டுகிற வேலை, இதை கோவி கண்ணனும் ஒரு பதிலில் கையாண்டிருக்கிறார், அவ்வளவு எபெக்டிவாக இருக்காது!

    புனித பிம்பங்களை நான் உருவாக்கிக் கொள்வதுமில்லை, அதனால் ஏதோ ஒன்று உடைகிறபோது அதிர்ச்சி அடைய வேண்டிய அவசியமே இல்லை!

    ReplyDelete
  20. //சன் குழுமத்துக்கு இத்தனை ரசிகர்களா?//

    நான் டிஸ்கவரி ரசிகன்!
    நண்பர் ராஜன் போன் செய்ய அவசர வசரமாக டியூன் செய்ய வேண்டியதாயிற்று! தற்பொழுது மீண்டும் டிஸ்கவரி, எங்கள் அலுவலகத்தில் மட்டும் டீவி பார்க்க அனுமதி உண்டு!
    (சில சமயம், டி.வி.டி.யில் சினிமாவே பார்ப்போம்)

    //அரவிந்தாசிரமத்தை இழுத்து என்னைச் சீண்டுகிற வேலை,//

    கழுதை விட்டையில் முன்விட்டை என்ன பின் விட்டை என்ன!?
    நான் ஏன் உங்களை சீண்டனும்!

    கோவியாருக்கு தான் அவரது நட்பு சுவாமிகளையும் மறுபரிசீனை செய்யுங்கள் என்றால் கோவம் வருகிறது!

    ReplyDelete
  21. அரவிந்தா ஆசிரமத்தில் எனக்கு இருக்கும் ஈடுபாட்டைப் பற்றித் தொட்டதால், அவர் எழுதியதையும் சேர்த்துச் சொன்னேன் வால்ஸ்!

    அவர் யாருடன் எப்படி நட்புக் கொள்ள வேண்டும் என்று சொல்வதற்கு நானோ நீங்களோ அவ்வளவு உரிமை உடையவர்கள் அல்லவே!

    நித்தியானந்தா பற்றி வந்திருக்கும் பதிவுகளில் உண்மைத்தமிழன் ஒருவர்தான் கொஞ்சம் நிதானமாக எழுதியிருக்கிறார்!

    ReplyDelete
  22. சன் டிவி குடும்பம் செய்த குற்றம் மட்டும் உங்களுக்கு எப்போதும் ஞாபகம் வந்துகொண்டே இருக்கும்.
    ஆச்சாரியார் யார் கூடப் படுத்தாலும் இவங்க கேட்கக்கூடாதா?

    அதற்கு காரணம் எதுவோ இருக்கட்டும்.
    இப்படியாவது அந்த மனிதனைப் பற்றி உண்மை தெரிந்ததே!

    புத்தக கண்காட்சியில அவர் பற்றிய புத்தகம் தான் அதிகம்.
    இப்போது?
    பொது வாழ்கைன்னு வந்தா ஒரு நேர்மை வேண்டும். இது இங்கு மட்டும் அல்ல. அமெரிக்காவிலும் உண்டு.

    ReplyDelete
  23. நாளும் நலமே விளையட்டும்!

    உங்கள் தலைப்பையே ஒரு நூறு தரம் சொல்லிப் பாருங்கள், அப்படியாவது புரிகிறதா என்று பார்க்கலாம்!

    நித்தியானந்தாவிடம், விளம்பரம், உத்திகள், உரை, புத்தகம் மட்டும் தான் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு கொஞ்சம் காசு இன்னும் கொஞ்சம் பெண்கள் என்று வேண்டுமானால் பார்க்கலாமே தவிர, ஒரு சமுதாயத்தையே ஒட்டு மொத்தமாகச் சீரழித்து விட முடியாது.

    சன் குழுமம், அதன் அரசியல், அதன் மெகா சீரியல் வீச்சு ஏற்கெனெவே ஒரு தலைமுறையையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கியாயிற்று! இன்னும் கெடுக்க வேண்டாமே என்று தான் சொல்கிறேன்.

    என்னுடைய கருத்தில் மாற்றம் எதுவுமில்லை!

    ReplyDelete
  24. /இப்படியாவது அந்த மனிதனைப் பற்றி உண்மை தெரிந்ததே!/

    மின்னுவதெல்லாம் பொன் அல்ல! குரு வேடம் போட்டவன் எல்லாம் குருவாகி விட முடியாது.

    உண்மையைச் சொல்லுங்கள்!

    இப்போது அந்த மனிதனைப் பற்றி என்ன உண்மை உங்களுக்குத் தெரிந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

    அதில் ஒரு சிறு பகுதியையாவது, வெளிச்சம் போட்டவர்களை பற்றித் தெரிந்து கொள்ளுங்களேன்!

    இந்த வெட்டி விவாதத்திற்கே இடமிருக்காது.

    ReplyDelete
  25. அன்புடையீர்,
    நீங்கள் அனைவரும் ஸ்வாமி நித்யானந்தாவை கிழி கிழி என்று இன்று கிழிக்கிறீர்கள் ஆனால் நான் 15/09/2007 அன்றே சாமியாரையும் குமுதம்,ஆவி,ஜூவி இதழ்களையும் சந்தேகித்து பதிவு போட்டிருக்கிறேன். அதற்கான லிங்க் இதோ

    http://kavithai07.blogspot.com/2007/09/blog-post_4622.html

    ReplyDelete
  26. சித்தூர் முருகேசன்!

    பதிவில் சொல்லப் பட்டிருப்பது என்ன என்பதைப் படிக்காமலேயே பின்னூட்டம் எழுதுபவர்களைக் கண்டால் எனக்குக் கொஞ்சம் அலெர்ஜி!

    நித்யானந்தா கிழிபடுவது ஒருபக்கம் இருக்கட்டும்! உங்கள் பதிவுக்கு வந்து படிப்பவர்கள் கிழிபடும் கதையும் தெரிந்தது தானே!

    ReplyDelete
  27. //மின்னுவதெல்லாம் பொன் அல்ல! குரு வேடம் போட்டவன் எல்லாம் குருவாகி விட முடியாது.//

    சினிமாவில் நாயகன் வேடம் கட்டுபவர்கள் நிஜத்திலும் நாயகன் போல் கல்லா கட்டுகிறார்களே!

    ReplyDelete
  28. Opinion differs.What you said about media is correct,but lets wait 4 some more days so that we can get a clear picture why this issue got more importance by that particulat TV channel. Also if u find time hav a look at my blog post reg. comraden say ur comments.Thanks a lot sir.

    ReplyDelete
  29. கிருஷ்ண மூர்த்தி சார்,
    நீங்க என்ன முண்டகோபனிசத்துக்கு பாஷ்யமா எழுதியிருக்கிங்க ஒவ்வொரு எழுத்தா படிக்க. இன்டர் நெட்னாலே மேயறதுதான். எல்லாரும் கிழிச்சிருக்கவே நீங்களூம் கிழிச்சுத்தான் இருப்பிங்கனு நம்பிக்கையா மறுமொழி போட்டேன். பிடிக்கலன்னா நீக்கிட்டு போகவேண்டியதுதானே. ( நான் விமர்சிச்சு ம.மொ. போட்டிருந்து நீக்கியிருந்தா டவுசரை கிழிச்சிருப்பேன்.. இது ஒன்னும் அந்த ஜாதி இல்லையே)

    //உங்கள் பதிவுக்கு வந்து படிப்பவர்கள் கிழிபடும் கதையும் தெரிந்தது தானே!//

    எனக்கு தெரியலிங்கண்ணா..

    உங்கள் பதிவுக்கு வந்து நான் கிழிபட்டது மட்டும் நிஜம்

    ReplyDelete
  30. அட நித்யானந்தா தானே மாடிக்கிட்டார் நம்ம அன்னை ஆஸ்ரமத்தில இல்லையேன்னு நீங்க சந்தோஷப் படுறீங்களா ?

    அவசரப் பட்டுட்டீங்க சார் ....

    இதே கதி அன்னை ஆஸ்ரமத்துக்க்கு வர இருந்துது ... நாளைக்கும் ..என்றைக்கும் ஊடகங்கள் (மீடியா) அன்னை ஆஸ்ரமத்துக்கு எதிராய் திரும்பலாம்

    இந்த கும்பலுக்கு வக்காளத்து வாங்காதீர்

    உண்மை கண்டறிவதே அன்னையின் வழி

    மற்றவரை நோக அடிப்பதல்ல


    அன்புடன்

    ReplyDelete
  31. திரு சுப்பு,

    பதிவைப் படிக்கக் கண் தான் திறக்கவில்லை, மனக்கண்ணுமா திறக்கவில்லை?

    பதிவில் என்ன சொல்லியிருக்கிறது, பின்னூட்டங்களில் என்ன சொல்லப் பட்டது என்பதைப் படிக்காமலேயே எப்படித் தான் ஒரு முடிவுக்கு வருகிறீர்களோ, எனக்குப் புரியவில்லை!

    எந்தக் கும்பலுக்கு இங்கே, என் பதிவில் வக்காலத்து வாங்கப் பட்டிருக்கிறது என்று நீங்களாக அர்த்தப் படுத்திக் கொண்டு பின்னூட்டம் எழுதினீர்கள்?

    ஸ்ரீ அரவிந்தாசிரமத்தைப் பற்றி எந்த அளவுக்குக் கொச்சைப் படுத்த முடியுமோ அந்த அளவுக்குக் கொச்சைப் படுத்தி ஏற்கெனெவே நிறைய எழுதப் பட்டிருப்பதை நானறிவேன்.

    என்னுடைய நம்பிக்கைகள், என்னுடைய அனுபவத்தைப் பொறுத்தது, அடுத்தவர் சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளை மாதிரி சொல்வதோ, விபூதி, குங்குமம் வருவது, லிங்கம் எடுப்பது போன்ற சில்லறை வேலைகளைப் பொறுத்தது அல்ல.

    தவிர, இங்கே ஸ்ரீ அரவிந்தாசிரமத்தைப் பற்றிய பிரசாரமோ, கிருத்துவர்கள் செய்வது போல கன்வெர்ஷனோ, குறைந்த பட்சம் என்னுடைய நம்பிக்கைகளைப் படிக்க வருபவர்கள் மீது திணிக்கிற முயற்சியோ, இதுவரை செய்ததில்லை, இனியும் செய்யப் போவதில்லை!

    உங்களுடைய அறிவுரைகள், பரிந்துரைகளை சுயமாக சிந்திக்கத் தெரியாத, அல்லது வேறு வேலைவெட்டி இல்லாதவர்களிடம் வைத்துக் கொள்ளுங்களேன்!

    ReplyDelete
  32. உங்க பின்னூட்டு >>>>>>>பதிவில் என்ன சொல்லியிருக்கிறது, பின்னூட்டங்களில் என்ன சொல்லப் பட்டது என்பதைப் படிக்காமலேயே எப்படித் தான் ஒரு முடிவுக்கு வருகிறீர்களோ, எனக்குப் புரியவில்லை! <<<<

    உங்க பதிவில் சொல்லியிருப்பது இதோ //// நித்தியானந்தா ஓவர்நைட் ஓஷோவாகிவிட்டார்! ஓஷோ என்றால் செக்ஸ் சாமியார் என்று சொல்லப் பட்டது பழைய தலைமுறைக்கு மட்டும்தானே தெரியும்? புதிய தலைமுறைக்கு, புதிதாக ஒருவரை அறிமுகம் செய்து வைக்க வேண்டாமா? அதைத் தான் சன் குழுமம் செய்திருக்கிறது!/////

    உங்க பதிவை படிச்சிட்டுத்தான், அடேடே தாக்காதீங்கன்னு நான் சொன்னது

    உங்க பதிவில >>>புதிய தலைமுறைக்கு, புதிதாக ஒருவரை அறிமுகம் செய்து வைக்க வேண்டாமா? <<< என்று எழுதிவிட்டு , இப்ப பின்னூட்டத்தில >>>>>.உங்களுடைய அறிவுரைகள், பரிந்துரைகளை சுயமாக சிந்திக்கத் தெரியாத, அல்லது வேறு வேலைவெட்டி இல்லாதவர்களிடம் வைத்துக் கொள்ளுங்களேன்!<<<<<

    என்று போட்டது நல்ல தமாஷ் தான்

    சுப்பு

    ReplyDelete
  33. திரு சுப்பு,

    உங்கள் ஆசைப்படி, தமாஷாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!