இப்படித் தான்! இப்படித்தான்! ரூமி!


ரூமி  காதலையும் தொட்டு கவிதைகள் எழுதியிருக்கிறார்! ஆன்மநேயம் வெளிப்படும் சூ ஃபி கவிதைவரிகள் அவை! வெறும் உடல்களின் மீதான இச்சை என்பதையும் தாண்டி, கொஞ்சம் பரவசமான நிலையில்! இங்கே இந்தியத் தத்துவ மரபில், பக்தி கனிந்து நாயக- நாயகி பாவம் என்பதாகவே அருளாளர்கள் தங்கள் ஆன்மீக அனுபவங்களை வெளிப்படுத்திய பாடல்கள் நிறைய உண்டு. அன்பே எல்லாமாகி நிற்கிற ஒரு அற்புதமான அனுபவம் தற்செயலாக, யூட்யூபில் ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்த போது கிடைத்தது


 

Ancient poet Rumi's love poem, "Like This", set to Anoushka Shankar's "Prayer In Passing", and accompanied by various paintings by Pre-Rapahaelite artists.


காதல், காமத்தின்  தேவைகள் பூர்த்தியான  பின்
எப்படியிருக்கும் என்று எவரேனும் கேட்டால்
முகத்தை நிமிர்த்திச் சொல்லுங்கள்!

இப்படித்தான்  என்பதை......!

இரவுநேரத்து வானத்தின் அற்புதம் எப்படியென்று
எவரேனும் கேட்டால் கூரைமீதேறி ஆனந்தமாக
ஆடிக் கொண்டே சொல்லுங்கள்!

இப்படித்தான்  என்பதை......!

ஆன்மாவைப் பற்றி எவரேனும் அறியவிரும்பினால்
அல்லது கடவுளின் அருள் மணத்தை அறிய விரும்பினால்
அவன் அல்லது அவள்பக்கம் தலையைத் திருப்புங்கள்!
உங்கள்  முகத்தை நெருக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்!

இப்படித்தான்  என்பதை......!

இயேசு எப்படி இறந்தவரை உயிர்ப்பித்தாரென்று
எவரேனும் ஆச்சரியப்பட்டுக் கேட்கும்போது
அற்புதம் எதுவென்று விவரிக்க வேண்டாமே!
என் உதடுகள் மீது அழுத்தமான முத்தம்!

இப்படித் தான்! இப்படித்தான்!

காதலுக்காக உயிரையும் தியாகம் செய்வதன்
பொருள் என்னவென எவரேனும் கேட்டால்

இங்கே சுட்டிக் காட்டுங்கள்!

நான் எவ்வளவு உயரமென எவரேனும் கேட்டால்
உங்கள் உச்சந்தலைவரை விரலால் அளந்து

இத்தனை  உயரம் என்று சொல்லுங்கள்!உடலை விட்டு உயிர்  பலமுறை  வெளியே போகும், திரும்பும்!
எவரேனும் நம்பமுடியவில்லை என்று சொன்னால்
என் இல்லத்திற்குத் திரும்ப வாருங்கள்!

இப்படித்தான்  என்பதை......!

காதல்வயப்பட்டவர்கள் பேசும்போது
நம் கதையைத் தான் சொல்கிறார்கள்!

இப்படித்தான்  என்பதை......!

ஆன்மாக்கள் வாழும் ஆகாய வெளியாக இருப்பது  நான்!
அடர்ந்த நீல நிறத்தை  உற்றுப்பாருங்கள்!
தென்றலாய் வருடிவந்தொரு  ரகசியம் சொல்வதைக் கேளுங்கள்!


என்ன செய்ய வேண்டியிருக்கிறதென்பதை எவரேனும் கேட்டால்
கைகளில் தீபத்தை ஏற்றிக் கொடுத்து விடு.

இப்படித்தான்  என்பதை......!

யூசூப்பின் மனம் யாகொபுவிடம் எப்படி வந்தது?

ஹூ ஊஉஇஊஊ ....

யாகொபுவின் பார்வை எப்படித் திரும்பியது?

ஹூ ஊஉஇஊஊ ....
.

சின்னக் காற்றசைவே கண்களைத் தூய்மைப் படுத்திவிடுகிறது!

இப்படித்தான்  என்பதை......!ஷாம்ஸ் தாப்ரிசில் இருந்து திரும்பிவரும்போது
கதவோரத்தில்  தலையை  ஓரமாக மறைத்துக் கொண்டு
நம்மை  ஆச்சரியப்  படுத்த வருவதும்


இப்படித்தான்  என்பதை......!

ஜலாலுதீன் ரூமியின் இந்தக் கவிதைக்கு, சிதார்க் கலைஞர் ரவிசங்கரின் மகள் அனுஷ்கா இசைவடிவம் கொடுத்ததை, அரிய படங்களுடன் இங்கே வீடியோவில் பாருங்கள். கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு இங்கே. மேலே தமிழில் மொழிபெயர்க்க எடுத்த முயற்சியில் ஏதேனும் குறை இருந்தால் அது என்னுடையதே!  

 If anyone asks you
how the perfect satisfaction
of all our sexual wanting
will look, lift your face
and say,

Like this.

When someone mentions the gracefulness
of the nightsky, climb up on the roof
and dance and say,

Like this.

If anyone wants to know what "spirit" is,
or what "God’s fragrance" means,
lean your head toward him or her.
Keep your face there close.

Like this.

When someone quotes the old poetic image
about clouds gradually uncovering the moon,
slowly loosen knot by knot the strings
of your robe.

Like this.

If anyone wonders how Jesus raised the dead,
don’t try to explain the miracle.
Kiss me on the lips.

Like this. Like this.

When someone asks what it means
to "die for love," point
here.

If someone asks how tall I am, frown
and measure with your fingers the space
between the creases on your forehead.

This tall.

The soul sometimes leaves the body, the returns.
When someone doesn’t believe that,
walk back into my house.

Like this.

When lovers moan,
they’re telling our story.

Like this.

I am a sky where spirits live.
Stare into this deepening blue,
while the breeze says a secret.

Like this.

When someone asks what there is to do,
light the candle in his hand.

Like this.

How did Joseph’s scent come to Jacob?

Huuuuu.

How did Jacob’s sight return?

Huuuu.

A little wind cleans the eyes.

Like this.

When Shams comes back from Tabriz,
he’ll put just his head around the edge
of the door to surprise us

Like this.
 

2 comments:

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!