வாலு போயிக் கத்தி வந்தது! டும்..டும்...டும்! பரிணாமப் புராணம்!


ஒரு தயாரிப்பு! அதை வெறித்தனமாக விரும்புகிறவர்களையும், வெறித்தனமாக வெறுப்பவர்களையும் என்ன பாடுபடுத்தும் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், ஆப்பிள் கம்பனி தயாரிப்பைக் கொஞ்சம் பார்த்தீர்களானால் போதும்! ஐபோன் வந்தபோது, அல்லது புதிதாக ஒன்றைத் தயாரித்து சந்தைக்கு விடும்போதெல்லாம்  கடும் குளிரிலும்  க்யூவரிசையில் காத்துக் கிடந்து வாங்கத் தவம் இருந்த அபிமானிகள் கூட்டம் ஒருபுறம் என்றால், அதைப் பார்த்து வெந்து, எரிச்சலோடு அது சொத்தை இது சொத்தை என்று குறை சொல்வதே வேலை என்றிருந்தவர்கள் இன்னொரு புறமாக ஆப்பிள் புராணம் சமீபகாலமாகப் பிரபலமானது! வேண்டுமானால், தமிழைத் தவிர வேறு எந்த மொழியில் வேண்டுமானாலும் தேடிப் பாருங்கள்! ஆப்பிள் புராணம் எவ்வளவு பிரசித்தம் என்பது புரியும்.

இங்கே ஒருத்தர் வேலை மெனக்கெட்டு, ஆப்பிள் தயாரிப்புக்களின் பரிணாம வளர்ச்சியைக் கணித்திருக்கிறார்!  முதலில் ipod! அப்புறம்  iphone!
இப்போது ipad! 

அடுத்தது என்னவாக இருக்கும்? படம் பார்த்துப் புராணத்தைத் தெரிந்து கொள்ளலாம்! பின்னே? நம்ம ஊர்  மார்க்கெட்டுக்கு வருகிற வரையில் அதை மட்டும் தானே செய்ய முடியும்?  


இதைப் பார்த்து ஒரு வாசகர் பதில் கமெண்டின படம் இது! 

 
அங்கெல்லாம் இதை கொஞ்சம் ஸ்போர்டிவாக எடுத்துக் கொள்கிறார்கள்!  அவதூறு வழக்கு எல்லாம் போடுவதில்லை! வெட்டி வேலை என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது!


அதெல்லாம் ஒரு பக்கம்! தமிழ்ப் பதிவுகளில், வழக்கம்போல ஒன்று!

வால் பையன் அருண் வழக்கம் போல சீரியஸ்தனம் இல்லாத சீரியஸ் பதிவு, இந்தத் தரம் சிக்கிக் கொண்டது பரிணாமக் கொள்கை,  எழுத ஆரம்பித்திருக்கிறார்! முன்னுரையை முழுசாக எழுதுவதற்கு முன்னாலேயே எதிர்வினைக்குப் போயாகி விட்டது!

சின்ன வயதில் குழந்தைகளுக்கான் பாட்டு, அந்த நாளில் பிரபலம் இது! ஒரு குரங்கு, தன்னுடைய வாலுக்குப் பதிலாகக் கத்தி, அப்புறம் கத்திக்குப் பதிலாக இன்னொன்று, அந்த இன்னொன்றுக்குப்  பதிலாக வேறொன்று, இப்படி போய்க் கொண்டே இருப்பதை நகைச்சுவையாகச் சொல்லும் பாட்டு!

வாலு போயிக் கத்தி வந்தது.......டும்....டும்....டும்!  என்று ஆரம்பிக்கும்!

எழுதியது யாரென்பது, அடுத்த வரிகள் எல்லாம் இப்போது நினைவில் இல்லை! ஆனால், தமிழில் பரிணாமத்தை, பகுத்தறிவோடு  விளக்கப் போனால் இப்படித்தான்  இருக்கும் என்பதை கவிஞர் அப்போதே நன்றாகத் தெரிந்து வைத்து எழுதிய பாட்டு மாதிரித் தான், இப்போது தோன்றுகிறது!

இங்கே இந்த வீடியோவை பாருங்கள்! பரிணாமத்தில்  நான்கு கால்கள் கொண்டதாக இருந்த நிலையில் இருந்து இரண்டு கால்களாக, முதுகெலும்புடன் நிமிர்ந்து நிற்க மனித இனத்துக்கு எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆயிற்றாம்! அந்த அளவீட்டின் படி, இப்போது பின்னோக்கி சாய்ந்து கொள்ள எத்தனை ஆண்டுகளாகும்? 

நான் முன்னுரை, எதிர்வினைஎல்லாம் எழுதப் போவதில்லை! இந்த வீடியோ ஒன்றே போதும்!


தமிழ்ப்பதிவுகளில் வழக்கம்போல தொடரும் பதிவுகளில் டீன் ஏஜ் பற்றிய சங்கிலிப் பதிவுகள் சிக்கன் குனியா பரவுவது போல........இரண்டு!



என்னத்தைச் சொல்ல!


15 comments:

  1. சீரியஸ்தனம் இல்லாத என்று பாராட்டியதற்கு நன்றி!
    ஆனால் சீரியஸ் ஆவதென்னவோ நண்பர்கள் தான்!

    வயசான காலத்துல டென்சன் ஆகக்கூடாது!(என்னை சொன்னேன்)
    பதிவுகள் பொழுதுபோக்கத்தான்!
    உலகத்தை புரட்டிபோட அல்ல!

    ReplyDelete
  2. வால்ஸ்! அதைத் தான் நானுமே சொல்கிறேன்!

    உங்கள் பெயரில் வாலை வைத்துக் கொண்டு, மற்றவர்கள் வாலை முறுக்கிவிட்டு நன்றாக வேடிக்கை பார்க்கும் விதத்தையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன்!

    இது எத்தனாவது ரவுண்டு என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை!

    எனக்கொன்றும் டென்ஷன் இல்லையே!

    ரசித்து அப்புறமல்லவா இதை எழுதினேன்!?

    ReplyDelete
  3. //இது எத்தனாவது ரவுண்டு என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை!//

    கம்பெனி சீக்ரெட் வெளியே தெரியாத வரைக்கும் நமக்கு லாபம் தானே!

    ReplyDelete
  4. ஆகா இது என்னமோ இரகசிய டிஸ்கசன் போலத் தெரியுது. நல்ல பதிவு. அய்யா.

    ReplyDelete
  5. ஆமாங்க!

    உலகமகா டாக்டர்களைத் தமிழகம் உருவாக்குவதற்குப் போட்டியாக, இங்கே என்னுடைய பதிவில் உலக மகா ரகசியங்களை அம்பலப் படுத்திக் கொண்டிருக்கிறேனே இத்தனை நாளாக!

    தெரியாதா!

    ReplyDelete
  6. \\பதிவுகள் பொழுதுபோக்கத்தான்!
    உலகத்தை புரட்டிபோட அல்ல!\\

    குறைந்தபட்சம் என்னை நானே புரட்டிக்கொள்ள உதவும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்..:)))))))))

    இயல்பான வாலுவின் பதிலுக்கு ஒரு ஜே.....

    வாழ்த்துகள்

    ReplyDelete
  7. பதிவுகளும் கூட கிருஷ்ணா பரமாத்மாவைப் போலத் தான் சிவா!

    யார் யார் என்ன விதத்தில் விரும்புகிறார்களோ அந்த விதத்தில் பதிவுகளும் இருக்கும்!

    ஏதோ ஒரு விஷயத்தில் ரொம்பவே தீவீரமாக வால்ஸ் புகுந்து விளையாடுகிறார்போல ஒரு பாவலா காட்டிவிட்டு அமைதியாக உட்கார்ந்து கொள்கிறார்! மற்றவர்கள் சேர்ந்து ரவுசு கட்ட ஆரம்பிக்கிறார்கள்!

    தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் எங்கள் வால்சுக்கு உங்களோடு நானும் ஜே சொல்லிவிட்டு வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  8. Satire திலகங்கள் தான் நீங்க ரெண்டு பேரும்!

    ReplyDelete
  9. //தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் எங்கள் வால்சுக்கு உங்களோடு நானும் ஜே சொல்லிவிட்டு வாழ்த்துகிறேன்! //


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  10. வால்ஸ்!

    நம்ம ரெண்டு பேரையும் காமெடி பீசுன்னு இப்பத் தான் கக்கு மாணிக்கம் சொல்லிட்டுப் போறார்!

    அதுக்கு சேத்துத் தானே இந்த

    அவ்.வ்..வ்..வ்வ்வ்வவ்வ்வ்..!

    ReplyDelete
  11. //நம்ம ரெண்டு பேரையும் காமெடி பீசுன்னு இப்பத் தான் கக்கு மாணிக்கம் சொல்லிட்டுப் போறார்!//

    உண்மைய சொல்றதுகெல்லாம் யாராவது அழுவாங்களா சார்!

    அது தீராத விளையாட்டுபிள்ளைக்கு!

    ReplyDelete
  12. கமெண்டைப் பாத்து, என்னையும் சேர்த்துச் சொல்லிட்டாரேன்னு நான் அழுதேன்னு நினைச்சீங்களா? அதுக்காகத் தனியா ஒரு

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  13. //கமெண்டைப் பாத்து, என்னையும் சேர்த்துச் சொல்லிட்டாரேன்னு நான் அழுதேன்னு நினைச்சீங்களா? அதுக்காகத் தனியா ஒரு

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//


    நம்மை பற்றி நாம் என்ன மதிப்பீடுகள் வச்சிருக்கோம்ங்கிறது தானே நமக்கு முக்கியம்!

    நாம் எல்லொருக்கும் காமெடி பீஸாக இருப்பது ரொம்ப கடினம்! எதுக்கும் முயற்சி செய்வோம்!

    ReplyDelete
  14. ஆஆ...மா... பொல்லாத பதிவு, அதுக்கு ஒரு எதிர்வினை என்று தீராத வினையாட்டு பிள்ளை... :))
    எப்படியும் மாதம் ஒரு பதிவு இம்மாதிரியே வந்து விடுகிறது. :))

    என்னவோ போடா மாதவா.:))

    ReplyDelete
  15. அதென்ன விதூஷ் இப்படிச் சொல்லிட்டீங்க?

    பரிணாமம் முன்னுரையை படித்தபோது நானே அரண்டு போனேன்! ஹோம் வொர்க் பண்ணி, எழுதப்போராறேன்னு வாழ்த்தெல்லாம் சொன்னேன்!

    சொன்ன முகூர்த்தமோ என்னவோ, வாலைச் சுழட்டுச் சுழட்டி எதிர்வினைன்னு போயிட்டார்!

    இப்படித் தீராமல் இருப்பதால் தான் தீராத விளையாட்டுப் பிள்ளை!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!