இது கர்நாடக அரசியல் பற்றிய பதிவில்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுவது நல்லது! காரணம்,1001 இரவுகள் அரேபியக் கதையில் வருகிற மாதிரி கர்நாடக அரசியல் குழப்பங்களை நாற்காலிமீது ஆசை அதிகம் கொண்ட காங்கிரசும் அதன் கூட்டாளி தேவே கவுடாவின் ஜனதாதளமும் கதைக்குமேல் கதையாகப் பேசியே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவிடாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வருவதில் இங்கே நண்பர்கள் பலருக்கும் ஆர்வம் அதிகமில்லை போலத் தெரிகிறது என்பதால் அல்ல. எனக்கே அதில் கொஞ்சம் அலுப்பும் தலைசுற்றலும் வந்துவிட்டது வந்துவிட்டது என்பது உண்மை.
ஆனால், பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்! போகட்டும் விட்டுவிடு! என்று போகாமல் டொனால்ட் ட்ரம்ப் பேசியதற்கெல்லாம் மோடி வந்து தான் நேரில் விளக்கம் சொல்ல வேண்டும் என்று லோக்சபாவில் கூச்சல் வெளிநடப்பு ராஜ்யசபாவில் ரகளை என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எல்லாம் கச்சைகட்டிக் கொண்டு சபை நடவடிக்கைகளை கேவலப்படுத்த முயற்சிப்பது என்னவகையான ஜனநாயகம்,அரசியல்? சொல்லுங்களேன்!
ஆனால், பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்! போகட்டும் விட்டுவிடு! என்று போகாமல் டொனால்ட் ட்ரம்ப் பேசியதற்கெல்லாம் மோடி வந்து தான் நேரில் விளக்கம் சொல்ல வேண்டும் என்று லோக்சபாவில் கூச்சல் வெளிநடப்பு ராஜ்யசபாவில் ரகளை என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எல்லாம் கச்சைகட்டிக் கொண்டு சபை நடவடிக்கைகளை கேவலப்படுத்த முயற்சிப்பது என்னவகையான ஜனநாயகம்,அரசியல்? சொல்லுங்களேன்!
மேலே வீடியோவைக் கொஞ்சம் பார்த்தாலேயே, இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவை இழுத்துவிட வேண்டுமென்கிற முனைப்பில் பேசுவதைக் கவனிக்க முடியும். இங்கே ட்ரம்ப் உளறியதற்கு அமெரிக்க தரப்பிலேயே ஆதரவில்லை என்பதோடு, கடுமையான விமரிசனங்களும் வந்திருக்கின்றன. இங்கே நம்மூர் அரசியல்வாதிகளும் கூட தினத்தந்தி பாணியில் அந்தந்த நேரத்துப் பரபரப்பு, சதக் சதக் ரகத்திலேயே அரசியல் செய்வது வேடிக்கையாக இருக்கிறது.
இவர் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர். நம்மூர் லோக்சபா மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்! இந்த twit செய்திக்குப் பின் தொடரும் கீச்சுக்கள் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக டொனால்ட் ட்ரம்ப்பின் அரசியல் அறிவை விமரிசனம் செய்கின்றன. நம்மூர் காங்கிரஸ் கழகக் குஞ்சுகள், அதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள். மோடி பெயரை சொல்லிவிட்டார்களா? எத்தையாவது சொல்லி டேமேஜ் செய்ய முடியுமா என்று அவதூறான செய்திகளை சதக் சதக்கென்று சொருகு! இந்த விஷயத்தை பெங்களூரு தெற்குத் தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா அம்பலப் படுத்தினால் என்ன? மொதல்ல சொன்னது கொஞ்சமாச்சும் நிக்கும் இல்ல!
Unfortunate that a sitting Minister of a state government does not even give benefit of doubt to his own country's Prime Minister.
Gone are the days of spineless leadership of the Congress era, Sir.
If you haven't realized yet, it's PM Sri
who is leading us today
ஒரு பழைய வேடிக்கைப் பாட்டு ஒன்றுண்டு! வாலுபோயிக் கத்தி வந்தது டும் டும் டும்! கத்தி போயி என்று ஒவ்வொன்றாகப் போய்க்கொண்டே இருக்கும். முந்தைய நாட்களில் நண்பர் வால்பையன் (எ) அருணுக்காக இதே தலைப்பில் பதிவொன்றை எழுதியது நினைவிருக்கிறது. இப்போது அதே தலைப்பை எடுத்துக் கொண்டது வேறொரு கேள்விக்காக.
காங்கிரஸ் கட்சி இன்னபிற உதிரிகளை முற்றொட்டாக கழித்துக் கட்டாமல் விட்டோமேயானால் இந்த தேசமே அப்படி ஒரு வேடிக்கைப் பாட்டாகிவிடும் என்பது ஏன் இன்னமும் நமக்கு உறைக்கவே மாட்டேன் என்கிறது? என்னுடைய கேள்வி, ஆச்சரியம் எல்லாம் இது ஒன்றுதான்!
மீண்டும் சந்திப்போம்.


