Showing posts with label மானாட யானையும் ஆட. Show all posts
Showing posts with label மானாட யானையும் ஆட. Show all posts

வெள்ளிக் கிழமைக் கேள்விகள்! இந்த முறை, பதிலுடன் !

இந்த முறை, பதிலுடன் சேர்த்தே!

வெளி நாடுகளில் நடக்கும் கூத்துக்களை அப்படியே இங்கே ஈயடிச்சான் காப்பியாகக் கொண்டாடுவது இப்போது ஒரு ஃபாஷனாகவே ஆகிவிட்டது!


நாளை இரவு ஒரு மணிநேரம், இரவு எட்டரை மணியில் இருந்து ஒன்பதரை மணிவரை மின்விளக்குகளைப் பயன்படுத்தாமல், புவிவெப்பம் அதிகரிப்பதைக் குறைக்கும் ஆர்வலர்கள் கடந்த 2007 இலிருந்து பூமி நேரம் என்று மார்ச் 27 ஆம் தேதி கொண்டாடி வருகிறார்கள். இந்த ஒரு மணி நேர இருட்டடிப்பால், பிரமாதமான மின்சேமிப்போ, வெப்பமடைவது குறைவதோ நடந்துவிடப் போவதில்லை என்பது இதை ஏற்பாடு செய்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்! ஆனாலும், இதை ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கமாக மட்டுமே மேலை நாடுகளில் நடத்தி வருகிறார்கள்.

பதிவெழுதுவது தவிர என்ன செய்யலாம்?  

தொடர்புடைய முந்தைய பதிவு இங்கே!

புவிவெப்பமடைவதில், நாம் சாதாரணமாக உபயோகிக்கும் குண்டு பல்ப் முக்கியமான பங்கு வகிக்கிறது! குண்டு பல்புகளை உபயோகிப்பதை சுத்தமாகவே நிறுத்தி விடுவது ஒரு நல்ல ஆரம்பம்!

பழைய நீளமான குழல் விளக்குகளுக்குப் பதிலாக, சிறிய கைக்கடக்கமான சி எப் எல் விளக்குகளைப் பயன்படுத்துவது இன்னமும் கொஞ்சம் மின்சாரத்தை சேமிக்க உதவும். இதிலும் கூட வெண்மை ஒளிர்விடுவதற்காகப் பாதரசம் பயன்படுத்தப் படுகிறது, ஆக இதுவுமே ஒருவிதத்தில் கெடுதல் தான். எல் ஈ டி விளக்குகள் பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்திருக்கின்றன, ஆனால் விலை மிக மிக அதிகம்!

சுற்றுச் சூழலில் கார்பன் அதிகரிப்பது குறைய வேண்டும் என்றால் அசைவ உணவைத் தவிர்த்தாலேயே கணிசமாகக் குறைக்க முடியும். சூரிய ஒளியை பயன்படுத்துவது பரவலாக வேண்டும். வீட்டுக்கருகே மரங்களை வளர்ப்பது நல்ல பயனைத் தரும். இதெல்லாம் தனிமனிதர்களாக, நாமே வருடம் முழுக்கச் செய்ய முடிந்தவை! நாம் வாழும் பூமியை நம்முடைய சந்ததிகளுக்கு நல்ல முறையில் விட்டுச் செல்வது ஒவ்வொரு தனிமனிதனுடைய கடமையும் கூட!

அரசு செய்யக் கூடியதென்ன?

முதலில்,இருப்பதை இன்னமும் கெடுக்காமல் இருந்தாலே அதுவே, இன்றைய நிலைமையில் இங்குள்ள அரசுகள் செய்யக் கூடிய பெரும் சாதனை!

சாலை விளக்குகளை, சூரிய சக்தியால் ஒளிர்விடச் செய்வது, கணிசமான மின்சார சேமிப்பாக இருக்கும். மாற்று எரிபொருள், சூரிய சக்தியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இப்போது, அப்படி ஒன்று நடந்து கொண்டிருப்பதே தெரியாமல், மிக குறைந்த அளவில், இத்தகைய முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

முக்கியமாக, பதினைந்து-இருபது வருடங்களுக்கு மேலான லாரிகள், ஆட்டோக்களைத் தடை செய்ய வேண்டும். புகை வெளிவிடும் சோதனை தற்சமயம் வெறும் கண்துடைப்பாக மட்டுமே நடந்து வருவதை, கடுமையாக நடைமுறைக்குக் கொண்டு வந்தாக வேண்டும். எரிபொருள் சிக்கனம் என்பது, தரமான சாலைவசதி இருந்தால் தான் சாத்தியம் என்பது அரசுக்கும் சரி, ரோடு போடும் போதே பின்னாலேயே பள்ளம் தோண்டிக் கொண்டே வரும் அரசுத்துறைகளுக்கும் மண்டையில் ஏற வேண்டும்!

******
மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில், முனைவர் நா.கண்ணன் துவக்கி வைத்திருக்கும் சுவாரசியமான ஒரு இழை இது! நல்லவேளை, கேள்வியும் நானே பதிலும் நானே என்று முக பாணியில் இல்லாமல் சாய்ஸ் கொடுத்திருக்கிறார்!

கேள்வியும் பதிலும்:

1. ஒரு இந்தியனை (இந்திய வம்சாவளியினர் என்று வாசிக்கவும்) தாங்கள் பார்த்தவுடன் இவன் ஆரியனா? இல்லை திராவிடனா? என்று உங்கள் உள்ளம் இனம் பிரிக்கிறதா?

விடை: 1. ஆம், 2. இல்லை.

2. ஒரு தமிழனைத் தாங்கள் கண்ணுறும் போது இவன் பிராமணனா? இல்லையா? என்று உங்கள் மனது எடை போடுகிறதா?

விடை: 1. ஆம், 2. இல்லை

3. பொது மன்றத்தில் என் குரல் எப்போதும் உரக்கக் கேட்க வேண்டுமென்று எப்போதும் தோன்றுகிறதா?

விடை: (ஆம்/இல்லை)

4. பொது மன்றத்தில் உங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் எப்படிச் சொல்லலாம்?

1. முன்கோபி, 2. பொறுமைசாலி, 3. எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும் மெய்பொருள் மட்டுமே காண்பவன்,

4. நான் சொல்வதே எப்போதும் சரி, 5. மற்றவரெல்லாம் மாங்காய் மடையர்களே.
இப்படி.... .............

மதுரபாரதி என்பவரிடமிருந்து உடனே வந்த பதில்!

"ஐயா,கேள்விகளிலிருந்தே என்ன பதில் எதிர்பார்க்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதும், பொலிடிகலி கரெக்ட் விடையைக் கொடுத்து உள்நுழைவதும் அவ்வளவொன்றும் கடினமல்ல என்பதும் என்போன்ற தேக்குமர மண்டைக்கே தெரிகிறதே. :-)

அன்புடன்
மதுரபாரதி

******
மானாட, மயிலாடான்னு கண்ட கண்ட கழுதையை எல்லாம் ஆட விட்டுப் பாத்தாச்சு!

யானை ஆடினா எப்படி இருக்கும்?

அதையும் தான் பார்த்துவிடுவோமே! எத்தனையோ பார்த்து விட்டோம், இதையும் பார்த்துவிட மாட்டோமா?




tohfa.gif/attach/416b3814321925a1/tohfa.gif?gda=mLvYjkUAAABRQWGg2OklM_pktvslg5vM9D1DvrqZu5frvTW7dvGrfbMoIC_QoJz3PQU1VVL6gB6O3f1cykW9hbJ1ju6H3kglGu1iLHeqhw4ZZRj3RjJ_-A&view=1&part=4&hl=en-GB
  ஆனையார் சாதாரணமாக ஆடமாட்டாராம்! மேலே உள்ள தொடுப்பைச் சொடுக்கினால் அப்போது தனி விண்டோவில் வந்து ஆடுவாராம்! GIF படங்களில் உள்ள பெரிய லொள்ளு இது தான்.

இந்த படம் பண்புடன் கூகிள் வலைக் குழுமத்தில் பார்த்தது! நன்றி!