வெள்ளிக் கிழமைக் கேள்விகள்! இந்த முறை, பதிலுடன் !

இந்த முறை, பதிலுடன் சேர்த்தே!

வெளி நாடுகளில் நடக்கும் கூத்துக்களை அப்படியே இங்கே ஈயடிச்சான் காப்பியாகக் கொண்டாடுவது இப்போது ஒரு ஃபாஷனாகவே ஆகிவிட்டது!


நாளை இரவு ஒரு மணிநேரம், இரவு எட்டரை மணியில் இருந்து ஒன்பதரை மணிவரை மின்விளக்குகளைப் பயன்படுத்தாமல், புவிவெப்பம் அதிகரிப்பதைக் குறைக்கும் ஆர்வலர்கள் கடந்த 2007 இலிருந்து பூமி நேரம் என்று மார்ச் 27 ஆம் தேதி கொண்டாடி வருகிறார்கள். இந்த ஒரு மணி நேர இருட்டடிப்பால், பிரமாதமான மின்சேமிப்போ, வெப்பமடைவது குறைவதோ நடந்துவிடப் போவதில்லை என்பது இதை ஏற்பாடு செய்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்! ஆனாலும், இதை ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கமாக மட்டுமே மேலை நாடுகளில் நடத்தி வருகிறார்கள்.

பதிவெழுதுவது தவிர என்ன செய்யலாம்?  

தொடர்புடைய முந்தைய பதிவு இங்கே!

புவிவெப்பமடைவதில், நாம் சாதாரணமாக உபயோகிக்கும் குண்டு பல்ப் முக்கியமான பங்கு வகிக்கிறது! குண்டு பல்புகளை உபயோகிப்பதை சுத்தமாகவே நிறுத்தி விடுவது ஒரு நல்ல ஆரம்பம்!

பழைய நீளமான குழல் விளக்குகளுக்குப் பதிலாக, சிறிய கைக்கடக்கமான சி எப் எல் விளக்குகளைப் பயன்படுத்துவது இன்னமும் கொஞ்சம் மின்சாரத்தை சேமிக்க உதவும். இதிலும் கூட வெண்மை ஒளிர்விடுவதற்காகப் பாதரசம் பயன்படுத்தப் படுகிறது, ஆக இதுவுமே ஒருவிதத்தில் கெடுதல் தான். எல் ஈ டி விளக்குகள் பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்திருக்கின்றன, ஆனால் விலை மிக மிக அதிகம்!

சுற்றுச் சூழலில் கார்பன் அதிகரிப்பது குறைய வேண்டும் என்றால் அசைவ உணவைத் தவிர்த்தாலேயே கணிசமாகக் குறைக்க முடியும். சூரிய ஒளியை பயன்படுத்துவது பரவலாக வேண்டும். வீட்டுக்கருகே மரங்களை வளர்ப்பது நல்ல பயனைத் தரும். இதெல்லாம் தனிமனிதர்களாக, நாமே வருடம் முழுக்கச் செய்ய முடிந்தவை! நாம் வாழும் பூமியை நம்முடைய சந்ததிகளுக்கு நல்ல முறையில் விட்டுச் செல்வது ஒவ்வொரு தனிமனிதனுடைய கடமையும் கூட!

அரசு செய்யக் கூடியதென்ன?

முதலில்,இருப்பதை இன்னமும் கெடுக்காமல் இருந்தாலே அதுவே, இன்றைய நிலைமையில் இங்குள்ள அரசுகள் செய்யக் கூடிய பெரும் சாதனை!

சாலை விளக்குகளை, சூரிய சக்தியால் ஒளிர்விடச் செய்வது, கணிசமான மின்சார சேமிப்பாக இருக்கும். மாற்று எரிபொருள், சூரிய சக்தியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இப்போது, அப்படி ஒன்று நடந்து கொண்டிருப்பதே தெரியாமல், மிக குறைந்த அளவில், இத்தகைய முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

முக்கியமாக, பதினைந்து-இருபது வருடங்களுக்கு மேலான லாரிகள், ஆட்டோக்களைத் தடை செய்ய வேண்டும். புகை வெளிவிடும் சோதனை தற்சமயம் வெறும் கண்துடைப்பாக மட்டுமே நடந்து வருவதை, கடுமையாக நடைமுறைக்குக் கொண்டு வந்தாக வேண்டும். எரிபொருள் சிக்கனம் என்பது, தரமான சாலைவசதி இருந்தால் தான் சாத்தியம் என்பது அரசுக்கும் சரி, ரோடு போடும் போதே பின்னாலேயே பள்ளம் தோண்டிக் கொண்டே வரும் அரசுத்துறைகளுக்கும் மண்டையில் ஏற வேண்டும்!

******
மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில், முனைவர் நா.கண்ணன் துவக்கி வைத்திருக்கும் சுவாரசியமான ஒரு இழை இது! நல்லவேளை, கேள்வியும் நானே பதிலும் நானே என்று முக பாணியில் இல்லாமல் சாய்ஸ் கொடுத்திருக்கிறார்!

கேள்வியும் பதிலும்:

1. ஒரு இந்தியனை (இந்திய வம்சாவளியினர் என்று வாசிக்கவும்) தாங்கள் பார்த்தவுடன் இவன் ஆரியனா? இல்லை திராவிடனா? என்று உங்கள் உள்ளம் இனம் பிரிக்கிறதா?

விடை: 1. ஆம், 2. இல்லை.

2. ஒரு தமிழனைத் தாங்கள் கண்ணுறும் போது இவன் பிராமணனா? இல்லையா? என்று உங்கள் மனது எடை போடுகிறதா?

விடை: 1. ஆம், 2. இல்லை

3. பொது மன்றத்தில் என் குரல் எப்போதும் உரக்கக் கேட்க வேண்டுமென்று எப்போதும் தோன்றுகிறதா?

விடை: (ஆம்/இல்லை)

4. பொது மன்றத்தில் உங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் எப்படிச் சொல்லலாம்?

1. முன்கோபி, 2. பொறுமைசாலி, 3. எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும் மெய்பொருள் மட்டுமே காண்பவன்,

4. நான் சொல்வதே எப்போதும் சரி, 5. மற்றவரெல்லாம் மாங்காய் மடையர்களே.
இப்படி.... .............

மதுரபாரதி என்பவரிடமிருந்து உடனே வந்த பதில்!

"ஐயா,கேள்விகளிலிருந்தே என்ன பதில் எதிர்பார்க்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதும், பொலிடிகலி கரெக்ட் விடையைக் கொடுத்து உள்நுழைவதும் அவ்வளவொன்றும் கடினமல்ல என்பதும் என்போன்ற தேக்குமர மண்டைக்கே தெரிகிறதே. :-)

அன்புடன்
மதுரபாரதி

******
மானாட, மயிலாடான்னு கண்ட கண்ட கழுதையை எல்லாம் ஆட விட்டுப் பாத்தாச்சு!

யானை ஆடினா எப்படி இருக்கும்?

அதையும் தான் பார்த்துவிடுவோமே! எத்தனையோ பார்த்து விட்டோம், இதையும் பார்த்துவிட மாட்டோமா?




tohfa.gif/attach/416b3814321925a1/tohfa.gif?gda=mLvYjkUAAABRQWGg2OklM_pktvslg5vM9D1DvrqZu5frvTW7dvGrfbMoIC_QoJz3PQU1VVL6gB6O3f1cykW9hbJ1ju6H3kglGu1iLHeqhw4ZZRj3RjJ_-A&view=1&part=4&hl=en-GB
  ஆனையார் சாதாரணமாக ஆடமாட்டாராம்! மேலே உள்ள தொடுப்பைச் சொடுக்கினால் அப்போது தனி விண்டோவில் வந்து ஆடுவாராம்! GIF படங்களில் உள்ள பெரிய லொள்ளு இது தான்.

இந்த படம் பண்புடன் கூகிள் வலைக் குழுமத்தில் பார்த்தது! நன்றி!








10 comments:

  1. நாங்க மனுசனா தான் பாக்குறோம், சிலர் தான் நான் அய்யர் என்று தங்கள் பார்பன திமிரை காட்டுகிறார்கள், அவுங்க டவுசரை கிழிக்காம வேற என்ன செய்யுறது!

    ReplyDelete
  2. வால்ஸ்!
    நீங்க எப்படிப் பாக்கறீங்கன்னு நான் கேட்கவே இல்லையே! எனக்கு அந்தக் கேள்வி இருந்ததுமில்லை, அதை ஒரு பொருட்டாக மதித்ததும் இல்லை!

    வலுவில் வந்து அப்படி நான் அய்யர்னு, பார்ப்பனத் திமிரைக் காட்டுகிறவர்கள் யார் என்று அடையாளம் காட்ட முடியுமா?

    கேள்வியும் பதிலும் என்ற வார்த்தையே ஒரு ஹைபர் லிங்க் தான்! மின்தமிழில் நடக்கும் ஒரு விவாத இழைக்குக் கொண்டு போகும்!

    இங்கே பதிவுகளில், நான் பார்த்தது, படித்தது என்ற வகையில் அந்த இழை மிகவும் சுவாரசியமாக இருக்கிறது!

    ReplyDelete
  3. //வலுவில் வந்து அப்படி நான் அய்யர்னு, பார்ப்பனத் திமிரைக் காட்டுகிறவர்கள் யார் என்று அடையாளம் காட்ட முடியுமா? //

    எங்கள் பதிவின் பின்னூட்டங்கள் படிப்பதில்லையா நீங்கள்! அங்கே வந்து புலம்பி தள்ளீவிட்டு போவார்கள்! அவர்களது இந்துமதத்தை கேள்வி கேட்டுடோம்னு!

    பெரும்பாலும் நீங்கள் ஆங்கில லிங்கையே கொடுப்பதால் நான் அங்கே போவதில்லை! மேலும் ஒரு பதிவில் மட்டும் பத்து பிங்க் பக்கம் கொடுக்குறிங்க! உங்க பதிவை புரியிற மாதிரி படிக்கவே அரைமணி நேரம் ஆகும், அதுல அங்க வேற போன ஆபிஸ்ல மெமோ தான் கொடுப்பாங்க!

    ReplyDelete
  4. பதிவையும், பின்னூட்டங்களையும் கவனமாகப் பார்த்துக் கொண்டுதான், இங்கே பதிவுலகம் எந்த திசையில் போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய எனது மதிப்பேடு இருக்கிறது, அருண்!

    தவிர, வந்தவர்கள் மதக் காவலர்களாக, ஐயோ நம்முடைய நம்பிக்கையை இப்படிச் சொல்லி விட்டார்களே என்று வருகிறவர்களாகத் தான் இருக்கிறார்களே தவிர, தமிழோவியா ஐயா வகையாறாக்கள் குதிக்கிற மாதிரிப் பார்ப்பதெல்லாம் பார்ப்பனத் திமிரும் சதியுமாக, நீங்களும் சமீப காலமாகக் குதிப்பதையுமே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

    ஒரு விஷயத்தைச் சொல்லும்போது, அதன் மூலம் எங்கிருந்து என்பதற்காகத் தான் சுட்டி கொடுப்பதே! அதில் தமிழ், ஆங்கிலம் என்று என்ன இருக்கிறது?

    ReplyDelete
  5. //ஒரு விஷயத்தைச் சொல்லும்போது, அதன் மூலம் எங்கிருந்து என்பதற்காகத் தான் சுட்டி கொடுப்பதே! அதில் தமிழ், ஆங்கிலம் என்று என்ன இருக்கிறது?//


    எனக்கு படிக்க தெரியனுமுல்ல!


    தமிழ் ஓவியா மாதிரி, மழை வராததுக்கும் பார்பனர்கள் தான் காரணம்னு நான் சொல்லல! ”ஹி”ந்து மதம் என்ற ஒன்று கொண்டுவந்தது பார்பனர்கள் தான் என்பது என் வாதம்!, சமீபத்திய டோண்டு பதிவில் கூட சோதிடம் பார்பனர்கள் கொண்டு வந்தது என சோ ஒப்பு கொள்கிறாரா என கேட்டிருக்கிறேன்!

    மூடநம்பிக்கைகளின் ஆரம்பம் பார்பனர்களாக இருக்கும் பட்சத்தில் அதன் முகதிரையை கிழ்ப்பதில் உங்களுக்கு ஆட்சேபனை இருக்காது என நம்புகிறேன்! மேலும் நாங்கள் எல்லா மதம்/கடவுளுக்கு எதிராக தான் எழுதுகிறோமே தவிர சுகுணாதிவாகர் மாதிரி இந்து மதத்தை விட்டு எங்கே போனாலும் சந்தோசம் என எழுதுவதில்லை! அதாவது பார்பன துவேசம் எங்களது பணி அல்ல!

    ReplyDelete
  6. நீங்கள் இப்படி அடித்துக்கொள்வதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. எதிர் பதிவு எப்படி இருக்க வேண்டுமென்று அக்கா விக்னேஸ்வரி ஒரு பதிவில் சுட்டிக் காட்டி இருந்தார். அந்த சுட்டி இங்கே உங்களுக்காக:

    http://nesamithran.blogspot.com/2010/03/blog-post_22.html

    இதில் ஜெகநாதன் என்பவரது பின்னூட்டத்தினை படிக்கவும்... இப்படி பின்னூட்டம் போட்டு எதிர் பதிவு கொடுத்தால், நிச்சயமாக உங்கள் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள மற்றவர்கள் விளையலாம்.

    ReplyDelete
  7. வித்தியாசமான கடவுளே!

    நீங்கள் கொடுத்த சுட்டி,உங்களுடைய பதிவு இரண்டையுமே பார்த்தேன்!

    நேசமித்திரனின் அந்தப் பதிவில் வால் பையன் ஆஜராகியிருக்கிறாரே, தெரியுமோ?

    வால்பையனும் நானும் சண்டைபோட்டுக் கொள்வதாக யார் சொன்னது?

    அவர் நானே மொக்கையும், சாமியும், மொக்கைப் பதிவருமாகவும் இருக்கிறேன் என்றல்லவா சொல்லிக் கொண்டிருக்கிறார்!

    இன்னொரு மொக்கைச் சாமியா? தாங்குமா பூமி?!

    :-))

    ReplyDelete
  8. முதல் 3 கேள்விக்கும் உங்க பதில் “ ஆம்” தானே? :)

    ஹிண்டு, தினமணி(யாட்டி), தினமலம் வகையறாக்கள் எல்லாம் அவ்வாறுதானே.. சாதி வெறியர்கள்.. உங்காத்துல எல்லாரும் ஷேமமா சார்? :)

    ReplyDelete
  9. எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி என்று கூஜா தூக்குவதற்கு, நான் காங்கிரஸ் கட்சி உறுப்பினரோ, குறைந்தபட்சம் அபிமானியோ கூட இல்லை சஞ்சய்!

    இந்தக் கேள்வி, இதற்கு அடுத்த பதிவோடு சம்பந்தப்பட்டது என்பதால், பதிலை அங்கேயே தருகிறேன்!

    ReplyDelete
  10. அப்டியா சார்? செரி சார்.. உங்களுக்கும் கூஜா தூக்கறதுக்கும் சம்பந்தம் இல்லையனு தான் நேக்கு தெரியுமே சார்வாள்.. நீங்க தான் சிந்தனாவாதியாச்சே.. அதையும் நீங்களே இல்லை சொல்லிக்கிறிங்க.. உங்களப் போய் கூஜா தூக்கரிங்கன்னு எல்லாம் சொல்வேணா சார்.. நீங்க காங்கிரஸ் அபிமானியா இருந்தா அந்தக் கட்சியையே கலைச்சுடக்லாம் சார்.. எவ்ளோ பெரிய அவமானம் அது.. :(

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!