பாதுஷா கனவுகள், சந்தேகத்தில் நேற்றைய பொழுது போனபடியால், வெள்ளிக்கிழமைக் கேள்விகள் இன்று சனிக்கிழமைக்கு மாறி விட்டன! ஸ்ரீராம் வந்து மாற்றம் தொடருமா என்று கேட்பதற்கு முன்னாலேயே, அப்படி எந்த உத்தரவாதமும் இல்லை என்று சொல்லிவிடுகிறேன்.
பதிவுகள், கேள்விகள், அல்லது பதில்கள் என்பவை அந்தந்த நேரத்தில் கிடைக்கும் செய்திகளால் ஏற்படும் தாக்கத்தைப் பொறுத்தவை!செய்திகளும் அதன் தாக்கங்களும் மாறிக் கொண்டே இருக்கும்! சூரியக் குடும்ப டிவி மாதிரி அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டு நித்தியானந்தாவைத் துவைத்துக் கொண்டே பிழைப்பை ஓட்ட முடியாது இல்லையா!
முதல் கேள்வி, கேள்விப்பட்டதே இல்லையே!?
ஒரு கட்சித் தலைவர், தன்னுடைய மாநிலக் கட்சி அலுவலகத்திற்கு வருவது அதிசயமா என்ன? காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அப்படித்தான்!
பதிவுகள், கேள்விகள், அல்லது பதில்கள் என்பவை அந்தந்த நேரத்தில் கிடைக்கும் செய்திகளால் ஏற்படும் தாக்கத்தைப் பொறுத்தவை!செய்திகளும் அதன் தாக்கங்களும் மாறிக் கொண்டே இருக்கும்! சூரியக் குடும்ப டிவி மாதிரி அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டு நித்தியானந்தாவைத் துவைத்துக் கொண்டே பிழைப்பை ஓட்ட முடியாது இல்லையா!
முதல் கேள்வி, கேள்விப்பட்டதே இல்லையே!?
ஒரு கட்சித் தலைவர், தன்னுடைய மாநிலக் கட்சி அலுவலகத்திற்கு வருவது அதிசயமா என்ன? காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அப்படித்தான்!
உலகமகா அதிசயங்களில், அல்லது ஆச்சரியங்களில் இதையும் சேர்த்துவிடலாம் போல இருக்கிறது! புதிய தலைமைச் செயலக திறப்பு விழாவில் கலந்துகொண்டுவிட்டு, அப்படியே காங்கிரஸ் சரித்திரத்தில் ஐம்பத்து நான்கு ஆண்டுகளாக இல்லாத பழக்கமாக, சோனியா காண்டி, சத்தியமூர்த்தி பவனுக்கும் வருகிறாராம்! 1956 ஆம் ஆண்டுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் எவருமே எவருமே சத்தியமூர்த்தி பவனுக்குள் எட்டிப் பார்த்ததே இல்லையாம்!முதன் முதலாக எட்டிப் பார்த்த வாரிசு, ராகுல் காண்டி, இப்போது சோனியா! சத்தியம் என்றால் அவ்வளவு பிரியம் போல இருக்கிறது!
கேள்வி இரண்டு! வருமா, வராதா?
இடுக்கண் வருங்கால் நகுக என்பதை யாரோ சோனியாவுக்கு விளக்கிச் சொல்லி இருக்கிறார்கள் போல! அம்மையார், திமுக உதவி இல்லை என்றால், மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா சாத்தியமே ஆகியிருக்காது என்று போகிற போக்கில் சிரிக்காமல் சொல்லியிருக்கிறார்!
கூத்தாடிகள் சங்கம், கூட்டணிக் கொசுறுகள் மாதிரி, தனியாகப் பாராட்டு விழா நடத்தி, மானாடவும் மயிலாடவும் விட்டு அப்புறம் இதைச் சொல்லாமல் போனதற்காகவே முரசொலியில் ஒரு கண்டனக் கவிதையை விரைவில் எதிர்பார்க்கலாமா?
இன்றைய நகைச் சுவை!
" பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 2010 ஆம் ஆண்டுக்கான "உலகின் சிறந்த ராஜ தந்திரி' என்ற விருதை அமெரிக்காவைச் சேர்ந்த கன்சைன்ஸ் அறக்கட்டளை வழங்குகிறது."
அவர்களால் பாராட்டப் படும் உலகின் தலைசிறந்த ........... யைப் பார்த்து இந்திய மக்கள் பெருமிதப் பட்டுக் கொள்ள முடியாது! நாளை மறுநாள், 15 ஆம் தேதி, அணுமின் நிலைய விபத்துக்கள், நஷ்ட ஈடு வரையறுக்கப் படும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப் படுகிறது. இன்றைய ஹிந்து நாளிதழில் சர்ச்சைக்குரிய இந்த மசோதா முன்வரைவைப் பற்றிக் கொஞ்சம் விரிவான கண்ணோட்டத்தை பிரம்ம செலானி எழுதியிருக்கிறார். அதில் இருந்து........
"Under the Bill, the foreign reactor builder — however culpable it is for a nuclear accident — will be completely immune from any victim-initiated civil suit or criminal proceedings in an Indian court or in a court in its home country. The Bill actually turns the legal liability of a foreign reactor supplier for an accident into mere financial compensation — that too, pegged at a pittance and routed through the Indian state operator of the plant. Foreign suppliers will have no direct accident-related liability."
மூன்றாவது கேள்வி!
இப்படி ஒரு முட்டாள்தனமான சலுகை அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்காவிலேயே கிடைக்காது! இங்கே மட்டும் ஏன்? எதற்காக?
கட்டுரை, அணுக் கதிரியக்கத்தின் அபாயத்தைச் சொல்லவில்லை! அதைவிட மோசமான, சட்ட வடிவத்தை, இங்கே ஆட்சி செய்பவர்கள் இந்த நாட்டு மக்கள் மீது எப்படிப்பட்ட சுமையை, ஆபத்தை வலிந்து திணிக்கிறார்கள் என்பதை சொல்கிறது.அதைப் படித்துவிட்டு வாசகர் கருத்தாக ஒன்று இது-"நேற்று, யூனியன் கார்பைடு ஆண்டர்சன் சட்ட விரோதமாகத் தப்பித்ததை, இன்றைக்கு சட்டபூர்வமாகவே தப்பிக்க உதவுகிற சட்டம்" என்று இப்படிச் சொல்வதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
'What Anderson got away with illegally, we have successfully managed to legalize, it seems. In a country where the potential of wind energy generation is around 50,000 MW and that of solar photo-voltaics is around 20,000 MW, and we are not yet considering solar thermal energy which in India has a potential unlike anywhere in the world.'
from: shirish joshi
இங்கே இந்தப் பக்கங்களில், உலகில் எங்குமில்லாத அதிசயமாக, அமெரிக்க பகாசுர நிறுவனங்களைக் காப்பாற்றும் அப்பட்டமான சட்டவரைவு இது என்பதைக் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். இங்கே அணுமின் நிலையங்களைக் குறித்த விவாதமோ, அதன் பாதுகாப்பு அம்சத்தை இந்திய விஞ்ஞானிகள் அறியாதவர்கள் என்றோ சொல்லவில்லை. Accountability! பொறுப்பு! பொறுப்பிலிருந்து விடுவிக்கும் சட்டத்தை அவசர அவசரமாக முன்வைக்க வேண்டிய அவசியம் என்ன? கேள்விகள் கேள்விகளாகவே இருக்கின்றன!
சில மர்ம முடிச்சுக்களை எப்போதும்போலக் காலமும் கடவுளும் தான் விடுவிக்கவேண்டும்! அப்போதும் கூடக் காங்கிரஸ் கட்சிக்கு முதுகெலும்பு, நேர்மை, சுதந்திரமான சிந்தனை இருக்காது என்பது மட்டும் நிச்சயம்!
அப்புறம், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கவில்லை, அதில் உள் ஒதுக்கீடு செய்யப் படாமல் இருப்பதால் தான் எதிர்க்கிறோம் என்று லொள்ளு மற்றும் தில்லு முல்லு யாதவ்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்வது, முஸ்லிம் பெண்களுக்குத் தனியாக உள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமாம்! சிறுபான்மை இனத்தவரின் தனிப்பெரும் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் நாடகம் இது என்பது இங்கே அரசியலில் அ'னா, ஆவன்னா தெரிந்த சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும்!
ஒரு செய்தியைச் சொன்னால் ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை, தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பது, கேள்வியை மறுபடி கேட்டால் மூன்று கூட இல்லை இரண்டே முக்கால் தான் என்று சொல்வது பாலைவனங்களில் வேண்டுமானால், சரியாக இருப்பது போல பர்தா போட்டு மூடி வைத்துவிடலாம்..
இந்தியா மாதிரிப் பன்முகம், பலமொழி, பல இனத்தவர் கூடி வாழும் நாட்டில் எடுபடாது. என்பது அ. மு. செய்து$ மாதிரிப் பதிவர்களுக்கெல்லாம் தெரியுமா தெரியாதா என்று தான் தெரியவில்லை! சில இஸ்லாமிய மத குருமாக்கள் பெண்கள் இட ஒதுக்கீடு அனாவசியம் என்று சொல்வதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.பெண்களைக் குறித்து அவர்களால் இப்படிக் குறுகிய பார்வையில் தான் பார்க்க முடியும் என்பதை அப்பட்டமாகச் சொல்லும் செய்தி இது.
சில மர்ம முடிச்சுக்களை எப்போதும்போலக் காலமும் கடவுளும் தான் விடுவிக்கவேண்டும்! அப்போதும் கூடக் காங்கிரஸ் கட்சிக்கு முதுகெலும்பு, நேர்மை, சுதந்திரமான சிந்தனை இருக்காது என்பது மட்டும் நிச்சயம்!
அப்புறம், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கவில்லை, அதில் உள் ஒதுக்கீடு செய்யப் படாமல் இருப்பதால் தான் எதிர்க்கிறோம் என்று லொள்ளு மற்றும் தில்லு முல்லு யாதவ்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்வது, முஸ்லிம் பெண்களுக்குத் தனியாக உள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமாம்! சிறுபான்மை இனத்தவரின் தனிப்பெரும் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் நாடகம் இது என்பது இங்கே அரசியலில் அ'னா, ஆவன்னா தெரிந்த சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும்!
ஒரு செய்தியைச் சொன்னால் ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை, தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பது, கேள்வியை மறுபடி கேட்டால் மூன்று கூட இல்லை இரண்டே முக்கால் தான் என்று சொல்வது பாலைவனங்களில் வேண்டுமானால், சரியாக இருப்பது போல பர்தா போட்டு மூடி வைத்துவிடலாம்..
இந்தியா மாதிரிப் பன்முகம், பலமொழி, பல இனத்தவர் கூடி வாழும் நாட்டில் எடுபடாது. என்பது அ. மு. செய்து$ மாதிரிப் பதிவர்களுக்கெல்லாம் தெரியுமா தெரியாதா என்று தான் தெரியவில்லை! சில இஸ்லாமிய மத குருமாக்கள் பெண்கள் இட ஒதுக்கீடு அனாவசியம் என்று சொல்வதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.பெண்களைக் குறித்து அவர்களால் இப்படிக் குறுகிய பார்வையில் தான் பார்க்க முடியும் என்பதை அப்பட்டமாகச் சொல்லும் செய்தி இது.
.
இந்த மாதிரி ஒரு மந்திரியை என்ன பாவம் செய்து பெற்றோம் என்று வாக்களித்தவர்கள் கேட்க வேண்டிய நேரம் இது!
"ஜிகாதியை விட மோசம் நக்சல்': ""மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்கத் தேவையான அளவுக்கு படைகளை பயன்படுத்த, மத்திய அரசுக்கு தார்மீக உரிமையுண்டு. மாவோயிஸ்ட்கள் வன்முறையை கைவிட்டால் மட்டுமே அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்,'' என அமைச்சர் சிதம்பரம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: ஜிகாதி பயங்கரவாதத்தை விட மோசமானது நக்சல் பயங்கரவாதம். இந்த அரசின் பதவிக்காலம் முடிவதற்குள் மாவோயிஸ்ட்கள் ஒடுக்கப்படுவர். மாவோயிஸ்ட்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். இந்தியாவுக்கு எதிராக போரை அறிவித்துள்ளனர். ஏழைகள் அடிமைத் தளையில் இருந்து விடுபடுவதை, அவர்கள் பொருளாதார சுதந்திரம் பெறுவதை மாவோயிஸ்ட்கள் விரும்புவதில்லை. அதே நேரத்தில், எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கும் வகையில், நமது பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்."
சால்வை அழகர் பானா சீனாவுக்கு இந்த தேசத்தின் ஏழை மக்கள் மீது தான் எவ்வளவு அக்கறை! எவ்வளவு அக்கறை!! அவர்கள் விடுதலையில் தான் எத்தனை பொறுப்பு! இதைக் கேள்வியாக எடுத்துக் கொண்டாலும் சரி, பாராட்டி சால்வை அணிவிப்பது மாதிரி எடுத்துக் கொண்டாலும் சரி, உங்கள் இஷ்டம்!
பதிவிலும் கூட மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன?
Guest post எழுதித்தர முன்வருகிற மகளிர் வாசகர்யாராவது தயாராக இருந்தால், பின்னூட்டத்தில் தன்னுடைய மின்னஞ்சலுடன் தகவல் சொல்லலாம்! இப்போதைக்கு மம்தா பானர்ஜி குறித்த ஒரு செய்தி மட்டும்!
"தனியாரை துணைக்குச் சேர்ப்பதால், ரயில்வே துறைக்கு லாபம் குறையுமே தவிர, அதிகரிக்காது. கட்டணம் அதிகம் என்பதால் பணக்காரர்கள் மட்டுமே இந்த சிறந்த சேவைகளைப் பெறுவார்கள். ஏழைகளுக்கு தற்போது இருக்கும் சேவைகளும் இல்லாமல் போய்விடும்.அரசு தனியார் பங்கேற்பு என்பது, கிராமத்து பாணியில் சொல்வதென்றால், அரிசியை நீ கொண்டு வா, உமியை நான் கொண்டு வருகிறேன். இருவரும் ஊதித் தின்னலாம் என்கிற கதைதான்! " இங்கே பொதுத்துறை, கூட்டு முயற்சி எந்த லட்சணத்தில் என்பதை முத்தாய்ப்பாக முடிப்பது தினமணியின் தனி முத்திரை!
தினமணியின் தலையங்கம்! எப்போதும் போல சிந்திக்க வைக்கிற மாதிரி, நேர்மையோடு எழுதப்பட்ட தலையங்கம். சிந்திக்க முடிந்தவர்கள், என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பின்னூட்டத்தில் நாலுவார்த்தை சொல்லுங்கள்!
Guest post எழுதித்தர முன்வருகிற மகளிர் வாசகர்யாராவது தயாராக இருந்தால், பின்னூட்டத்தில் தன்னுடைய மின்னஞ்சலுடன் தகவல் சொல்லலாம்! இப்போதைக்கு மம்தா பானர்ஜி குறித்த ஒரு செய்தி மட்டும்!
"தனியாரை துணைக்குச் சேர்ப்பதால், ரயில்வே துறைக்கு லாபம் குறையுமே தவிர, அதிகரிக்காது. கட்டணம் அதிகம் என்பதால் பணக்காரர்கள் மட்டுமே இந்த சிறந்த சேவைகளைப் பெறுவார்கள். ஏழைகளுக்கு தற்போது இருக்கும் சேவைகளும் இல்லாமல் போய்விடும்.அரசு தனியார் பங்கேற்பு என்பது, கிராமத்து பாணியில் சொல்வதென்றால், அரிசியை நீ கொண்டு வா, உமியை நான் கொண்டு வருகிறேன். இருவரும் ஊதித் தின்னலாம் என்கிற கதைதான்! " இங்கே பொதுத்துறை, கூட்டு முயற்சி எந்த லட்சணத்தில் என்பதை முத்தாய்ப்பாக முடிப்பது தினமணியின் தனி முத்திரை!
தினமணியின் தலையங்கம்! எப்போதும் போல சிந்திக்க வைக்கிற மாதிரி, நேர்மையோடு எழுதப்பட்ட தலையங்கம். சிந்திக்க முடிந்தவர்கள், என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பின்னூட்டத்தில் நாலுவார்த்தை சொல்லுங்கள்!
உண்மையாகவே வயிறு எரிகிறது. ஒரு பக்கம் ஒரு நாள் கூத்துக்கு 2 கோடி மக்கள் பணத்தை செலவு செய்ய தயாராக இருக்கும் பொறுப்பில்லாத முதல்வர். மறு பக்கம் untested genetically modified food introduction மற்றும் automic energy - protection from any liability to the companies என்று எல்லா விதத்திலும் மக்கள் நலனை தவிர மற்றவற்றை பார்க்கும் பிரதமர். இதை எல்லாம் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாதா ?
ReplyDeletethis is too much.. and that too just to complete the inauguration on the planned date, govt spent 2 cr!
ReplyDeleteSamora
இரண்டு கோடி விளம்பரச் செலவுக்கே இவ்வளவு அதிர்ச்சி அடைந்தால் எப்படி!?
ReplyDeleteகழக அரசியலில் திட்ட அறிவிப்பு விளம்பரங்களுக்கு செலவு இருபது சதவிகிதம்! பங்கிட்டுக் கொள்வது இன்னொரு முப்பது முப்பத்தைந்து சதம்! வேலை செய்து கொடுக்க உண்மையான செலவு இருபது சதம், அதிகாரிகளுக்கு அன்பளிப்பு வகையில் பத்து-பதினைந்து சதவீதம்! மிச்சம் மீதி இருந்தால், முன்சொன்ன இனங்களில் அட்ஜஸ்ட் ஆகிக் கொள்ளூம்.
சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்று சொல்வார்கள்! அதைக் கழகங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கொஞ்சம் சீர்திருத்தம் செய்து சுண்டைக்காய் ஒரு அணா! ஊழல், மற்றும் டாம்பீக விளம்பரங்கள், திறமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்ட மிச்சம் பதினைந்து அணா என்ற மாதிரித் தான், வரிப் பணம் செலவாகிக் கொண்டிருக்கிறது.
கண்டுகொள்வோம் கழகங்களை என்று ஒரு புத்தகம் எழுதினர் நெல்லை ஜெபமணி! அதையெல்லாம் யார் கண்டு கொள்கிறார்கள்?
ஏதோ சொந்த வீடு கட்டுவதைப் போல தினம் நான்கைந்து முறை பார்வையிட்டு கட்டிய கட்டிடம் அது. குழந்தைக்கு பெயர் சூட்டு விழா மட்டும் தான் நடந்திருக்கின்றது. அதன் மேலிருக்கும் செட்டிங்கை எடுத்துவிட்டு 20லிருந்து 25 கோடி கோடி செலவு செய்து கோவில் கோபுரம் போல அமைக்க வேண்டும் என்பதே கலைஞரின் ஆசை.
ReplyDeleteமக்கள் வரிப் பணத்தில் தனக்கு முன்னால் செல்லும் வாகணங்களை கூட வேண்டாம் என்ற காமராஜர் அமர்ந்திருந்த நாட்காலியில் இவரும் எப்படிதான் அமர்ந்திருக்கிறாரோ தெரியவில்லை.
அடேயப்பா.. நம்ம கிமூ சார் டவுசரை டார் டாரா கிழிச்சி தொங்க விடறாருய்யா.. சாரே, வாஜ்பாயி வலதுபக்கமும் அத்வாணி எடது பக்கமும் குந்திகினு தான் தெனக்கிம் கமலாலயம் வாசல் கேட்ல வேலை பார்க்கும் போது சோனியா மட்டும் இன்னா தெகிரியம் இருந்தா சத்தியமூர்த்தி பவன் பக்கமே வராம இருப்பாங்க.. நீங்க போட்டுத்தாக்குங்க சார்.. உங்க சமூக அக்கறை பார்த்தாவது அவங்களுக்கு புத்தி வரட்டும்..
ReplyDeleteபிரகாஷ் கராட்டு கூட வாரம் 8 நாள் எல்லா மாநில கட்சி ஆபிசாண்டையும் வந்து டீ போண்டா துண்ணுட்டுத்தான் போறாராம்ல..
//சூரியக் குடும்ப டிவி மாதிரி அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டு நித்தியானந்தாவைத் துவைத்துக் கொண்டே பிழைப்பை ஓட்ட முடியாது இல்லையா! //
ReplyDeleteஹிஹி.. சார் நெஞ்சத் தொட்டு சொல்லுங்க.. சிரிக்காமத்தான் இதை எழுதினிங்களா? அப்டின்னா, ஒங்க நடிப்புக்கு ஓஸ்கோர் அவார்டு தரலாமுங்க..
//படம் பாருங்கள்! ரிப்பன் கத்தரிப்பது கூட ரிப்பனுக்கு வலிக்குமே என்று கவலைப் படுகிற மாதிரி இல்லை...? //
ReplyDeleteவாரே..வா.. எப்டி சார் எப்டி... சார்ர்ர்ர்ர்.. எங்கயோ போய்ட்டிங்க சார்..
//அவர்களால் பாராட்டப் படும் உலகின் தலைசிறந்த ........... யைப் பார்த்து இந்திய மக்கள் பெருமிதப் பட்டுக் கொள்ள முடியாது! //
ReplyDeleteஆமாமா.. இந்திய மக்களின் ஒரே அத்தாரிட்டியான கிமூ சாரே சொல்லிட்டார்.. ஆமென்..
தினமலர், தினமனி, ஹிந்து, துக்ளக்.... சார்வாள் சமூக அக்கறையின் ரகசியம் இங்க தான் ஒளிஞ்சிண்டிருக்கா? :)))))))))
ReplyDeleteஹ்ம்ம்... எதோ ஒண்ணு.. கும்மி அடிக்க நல்ல மொக்கைப் பதிவு எழுதினதுக்கு நன்றி சார்.. தொடர்ந்து இப்டியே எழுதுங்க.. அடிக்கடி வரேன்.. மனசு லேசாகுது உங்க ப்ளாக் படிச்சா.. :))
சஞ்சய் காந்தி சொன்னது:
ReplyDelete/பிரகாஷ் கராட்டு கூட வாரம் 8 நாள் எல்லா மாநில கட்சி ஆபிசாண்டையும் வந்து டீ போண்டா துண்ணுட்டுத்தான் போறாராம்ல../
காங்கிரஸ்காரனுடன் கூட்டுச் சேர்ந்தால் பன்றியோடு கூட்டு சேர்ந்த கன்றுக் குட்டி நிலை தான் வரும்! வேறு நல்லது என்ன வரும்? கம்யூனிஸ்டுகளுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!
/ சார் நெஞ்சத் தொட்டு சொல்லுங்க.. சிரிக்காமத்தான் இதை எழுதினிங்களா?/
சிரித்துக் கொண்டே தான் எழுதினேன்! நான் என்ன நரசிம்ம ராவா, மன்மோகன் சிங்கா, சிரிப்பதற்குக் கூட மேலிடத்தில் பெர்மிஷன் கேட்பதற்கு?
/சார்வாள் சமூக அக்கறையின் ரகசியம்....?/
காங்கிரஸ்காரர்களுக்கு சொன்னாலும் புரியுமோ? கோவி கண்ணன் சொல்கிற மாதிரி, போய்க் கிராமத்து நினைவுகள், புகைப் படங்களில் கவனத்தை செலுத்துங்கள்! ஏற்கெனெவே ஒரு பதிவில் காண்டி குடும்பப் புராணம் வாசிக்கலாமா என்று உங்களிடம் கேட்டது இன்னமும் நிலுவையில் இருக்கிறது!
ஜெகதீஸ்வரன்!
காமராஜர் வகித்தது பொறுப்பு! சில விமரிசனங்கள் குறைகள் இருந்த போதிலும்,காமராஜரை இந்த மாதிரி அற்பர்களுடன் சேர்த்துப் பேசுவதே அவருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது.
பொறுப்பை மறந்து விட்டு, மானாட, மயிலாட, மங்கையர்கள் மார்பாடப் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் அமர்ந்திருப்பது அரியாசனம்!
கிருஷ்ணமூர்த்தி சார், அந்த பின்னூட்டம் நானும் பார்த்தேன்.. உங்களைப் போன்ற அநாகரிகப் பேவழிகளிடம் விவாதம் செய்வது எனக்குப் புதிதில்லை என்றாலும் உங்கள் வயதுக்கு மரியாதை தர வேண்டியதாக இருப்பதால் விவாதம் செய்ய விரும்பாமல் தான் அதற்கு பதில் சொல்லவில்லை..
ReplyDeleteகாங்கிரசையும் உங்களைப் போலவே நினைத்துவிட்டீர்கள் போல.. :))
//கோவி கண்ணன் சொல்கிற மாதிரி, போய்க் கிராமத்து நினைவுகள், புகைப் படங்களில் கவனத்தை செலுத்துங்கள்! //
ReplyDeleteஉங்கள் அறைகுறை அரசியல் அறிவை கொண்டு பார்ப்பனப் பத்திரிக்கைகளின் பித்தலாட்டங்களை வெட்டி ஒட்டிக்கொண்டிருப்பதற்கு பதில் நீங்களும் பூஜை புணஷ்காரம் என பொழுதைக் கழிக்கலாம்.. போகிற வழியில் புண்ணியம் கிடைக்கும் என்பார்கள்..
//இன்றைய தினம், இந்த தருணம் இவனுக்கும், இந்தப் புண்ணிய பூமிக்கும் இருளில் இருந்து, சிறுமைகளில் இருந்து விடுபடுகிற உன்னதமான தருணமாகவும் வரம் அருள்வாய், தாயே!//
ஆமாம் தாயே.. இவர் சிறுமையில் இருந்து விடபட வரம் தாருங்கள்.. தாங்க முடியலை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்
சால்வை அழகர்...., காண்டி...இந்த பதங்களை ரசித்தேன். ஆனாலும் சார், ரொம்ப நீளமாக எழுதினால் ....
ReplyDeleteதிரு சஞ்சய்!
ReplyDeleteஅரசியல், நாகரீகம் இவைகளைப் பேசுவதற்கு எந்தக் காங்கிரஸ்காரனுக்காவது யோக்கியதை இருக்கிறதா என்ன?
அரசியல் கொஞ்சமாவது தெரிந்தால், ஒரே ஒரு கேள்விக்கு, பதில் சொல்லுங்கள்!
வருகிற திங்கட்கிழமை,அணு உலைகளில் விபத்து, நஷ்ட ஈடு வரையறை செய்கிற மசோதா அறிமுகமாகிறது. உலகத்தில் எந்த நாடுமே செய்யத் துணியாத அளவுக்கு, அமெரிக்க நிறுவனங்கள் காலடியில் விழுகிற அளவுக்கு, அதை சட்டபூர்வமாகவே செய்யவதற்கு என்ன அவசியம், நிர்பந்தம் வந்தது?
அடுத்து, பானா சீனா உளறல்!
ஜிஹாதி தீவீரவாதத்தை விட, மாவோயிஸ்டுகள் ஆபத்தானவர்கள்!
எல்லைப் புற மாநிலங்களில், என்ன நடக்கிறது என்பதாவது தெரியுமா? தெலங்கானா, மாவோயிஸ்டுகள் பிரச்சினை என்பதை விட புறக்கணிக்கப் பட்ட மக்களின் ஆவேசம் என்பதாவது தெரியுமா?
உங்களுடைய வயதளவுக்கு, எனக்கு அரசியலில் நேரடி அனுபவம் இருக்கிறது.
//திரு சஞ்சய்!//
ReplyDeleteஎதுக்கு சார் போலி நடிப்பு.. சஞ்சய் காண்டின்னு சொல்லி இருக்கலாமே.. அதான் பன்றின்னே சொல்லிட்டிங்களே.. :))
//அரசியல், நாகரீகம் இவைகளைப் பேசுவதற்கு எந்தக் காங்கிரஸ்காரனுக்காவது யோக்கியதை இருக்கிறதா என்ன?//
ஏன் இல்லை என்பதை சொல்ல முடியுங்களா சார்? :)
//அரசியல் கொஞ்சமாவது தெரிந்தால், ஒரே ஒரு கேள்விக்கு, பதில் சொல்லுங்கள்!//
பாருங்க 2 கேள்வி கேட்டுட்டிங்க.. :)
//வருகிற திங்கட்கிழமை,அணு உலைகளில் விபத்து, நஷ்ட ஈடு வரையறை செய்கிற மசோதா அறிமுகமாகிறது. உலகத்தில் எந்த நாடுமே செய்யத் துணியாத அளவுக்கு, அமெரிக்க நிறுவனங்கள் காலடியில் விழுகிற அளவுக்கு, அதை சட்டபூர்வமாகவே செய்யவதற்கு என்ன அவசியம், நிர்பந்தம் வந்தது?//
இதை பற்றி முழுதாக படித்துவிட்டு பதில் சொல்றேன்.. உங்கள மாதிரி குருட்டாம்போக்குல பேச விரும்பல.. எனக்குப் பிடிகலைனா தைரியமா அதை சொல்வேன்.. உங்கள மாதிரி எதிர்ப்பு/ஆதரவு வெறி எல்லாம் எனக்கு இல்லை..
//அடுத்து, பானா சீனா உளறல்!//
வயசுக்கேத்த மாதிரி பேசுங்க..
//ஜிஹாதி தீவீரவாதத்தை விட, மாவோயிஸ்டுகள் ஆபத்தானவர்கள்!
எல்லைப் புற மாநிலங்களில், என்ன நடக்கிறது என்பதாவது தெரியுமா? தெலங்கானா, மாவோயிஸ்டுகள் பிரச்சினை என்பதை விட புறக்கணிக்கப் பட்ட மக்களின் ஆவேசம் என்பதாவது தெரியுமா?//
உங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச மாதிரி பேசாதிங்க.. மாவோயிஸ்டுகள் பொது மக்களை கொல்றாங்க.. ஆசிரியர்கள் அரசு அதிகாரிகளை கடத்தறாங்க.. நேர்மையான போலிஸ்காரங்களை கடத்தி கொல்றாங்க.. சிதம்பரம் சொன்னது 1000000% உண்மை.. இவர்கள வேரறுக்க வேண்டியவர்கள் தான்.. தெலுங்காணாவில் எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவெடுக்க முடியாது.. சந்திரசேகர ராவின் முதல்வர் பதிவி கனவாகவே இருந்துவிடுமோ என்ற பயத்தில் அவர் ஊதிவிடுகிறார்.. தெரியாமத்தான் கேட்கிறேன்.. தெலுங்கானாவின் ஹைதராபாத் அளவு ராயலசீமாவில் வளர்ச்சி அடைந்த பகுதி எதாவது சொல்ல முடியுமா?. என்ன உங்களுக்கு பெரிசா தெரிஞ்சி போச்சி தெலுங்கானா பத்தி.. அது அரசியல் விளையாட்டு.. மக்களை வைத்து அரசியல்வாதிகள் ஆடும் ஆட்டம் அது.. கொஞ்சம் விரிவாவும் விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க சார்.. படுத்தாதிங்க..
//உங்களுடைய வயதளவுக்கு, எனக்கு அரசியலில் நேரடி அனுபவம் இருக்கிறது. //
வழக்கம் போல் சிரித்துக் கொண்டேன்.. வாழ்க ஜனநாயகம்..
திரு சஞ்சய்! சஞ்சய் காந்தி என்பது நீங்களோ, பெற்றவர்களோ வைத்துக் கொண்ட பெயர்!
ReplyDeleteஒரிஜினல் ராஜீவ்,சஞ்சய் காந்திகள் இல்லை!காந்தி பெயரை இவர்களோடு சேர்த்துக் குழப்பிக் கொள்வதே, இந்திய அரசியலில் நீண்ட நாட்களாக நடந்து வரும் மோசடி! உங்கள் பெயருக்குப் பின்னால் TM என்று இரண்டு எழுத்து இருக்கிறதே, அது போல இது இங்கே Fraud Mark!
Feroze Gandhe, காண்டி என்று தான் உச்சரிப்பு வரும். எம் ஒ மத்தாய் என்று நேருவிடம் ஒரு அந்தரங்கச் செயலாளர்/ஸ்டெனோ இருந்தார். நேரு குடும்பத்தின் கதையை ஒரு புத்தகமாகவே எழுதியிருக்கிறார். அது தவிர நேரு குடும்ப விவகாரங்கள், இணையத்தில் நிறையவே கிடைக்கின்றன.
உங்களுடைய கேள்விகளுக்கு பதில் ஒவ்வொன்றாக....
இந்த தேசத்தில் அரசியல் நாகரீகம், ஜனநாயக நடைமுறைகள், எல்லாவற்றையும் குழிதோண்டிப் புதைத்த வரலாறு காங்கிரஸ் கட்சியுடையது. நேரு காலத்திலேயே, 1952 முதல் பொதுத் தேர்தலிலேயே,தமிழ்நாட்டில் எல்லாவற்றையும் பறக்கவிட்டுப் பதவிக்காக, கட்சிதாவுதலை, ஊக்குவித்த கட்சி காங்கிரஸ். ஜாதீய உணர்வுகளைத் தூண்டி விட்டு, 1957 இல் கேரளாவில் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசை 356 ஆவது பிரிவின் கீழ் கலைத்து, ஜனநாயகப் படுகொலையை ஆரம்பித்து வைத்ததும் காங்கிரஸ்.
இன்றைக்கு கோத்ரா ரயில் எரிப்பு பற்றி வாய் கிழியப் பேசுகிறீர்களே,எமெர்ஜென்சி தருணத்தில் தில்லியில், துர்க்மான் கேட் பகுதியில் முஸ்லிம்கள் மீது கொடூரமான தாக்குதலை ஏவி விட்ட கொடூரன் சஞ்சய் காண்டி!
இந்திரா படுகொலை செய்யப் பட்டவுடன் தில்லியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்களைப் படுகொலை செய்தது காங்கிரஸ்!
லைசன்ஸ், பெர்மிட் கோட்டா ராஜ் என்ற ஊழலின் ஊற்றுக்கண்ணில் வளர்ந்தது காங்கிரஸ்.
அறுபத்துநான்கு வருடக் கதையை, கண்ணிருந்தால், நீங்களே தேடித் பிடித்துப் படித்துத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
தேச விடுதலைக்காகப் பாடுபட்ட அன்றைய காங்கிரசை பதவிக்காக ஒட்டிக் கொண்ட பச்சோந்திகளால் ஆன இன்றைய காங்கிரசோடு ஒப்பிட்டுப் பேச வேண்டாம்.
அடுத்தது, அணுமின் உலைகளில் விபத்து-நஷ்டஈடு வரையறை செய்யும் மசோதா! இதைப் பற்றித் தான் இந்த ஒரு பதிவு மட்டுமல்ல, கடந்த மூன்று பதிவுகளாக, தேவையான செய்தி ஆதாரங்களின் சுட்டியைக் கொடுத்து, அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்காவிலேயே கிடைக்காத சலுகையை இங்கே மட்டும் எதற்காகக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப் பட்டிருக்கிறது.
ஒரு கட்சிக் காரனாக, ஐயோ என் கட்சியைக் குறை சொல்கிறார்களே என்று கும்மியடிக்கத் தெரிந்த அளவுக்கு, அங்கே சுட்டி கொடுக்கப் பட்ட செய்திகள் சொல்வதென்ன என்பதைப் படிக்க நேரமில்லை! படிக்காமலேயே, விஷயம் இன்னதென்று தெரியாமலேயே இவ்வளவு ரவுசு!என்ன என்று தெரியாமலேயே பின்னூட்டம் எழுதுவீர்கள்!
ஆவேசப்படத் தெரிந்த அளவுக்கு யோசிக்கவும் தெரிய வேண்டும்!
அடுத்தது பானா சீனா! தெலங்கானா!
திரு சஞ்சய்!
தெலங்கானா போராட்டம் ஏதோ இப்போது புதிதாகக் கிளம்பிய மாதிரி, நிறைய சொல்லியிருக்கிறீர்கள்! இந்த சந்திரசேகர ராவ்கள் கிடக்கட்டும். 1946-1951 முதலே தெலங்கானா பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அரசியலோடு, கொஞ்சம் சமீப கால வரலாறும் தெரிந்திருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உங்களிடம் அந்த சகிப்புத் தன்மையும் இல்லை!
அரசியல் பேசும்போது, பார்ப்பனப் பத்திரிக்கை அது இது என்று வார்த்தைகளை தெளித்திருக்கிறீர்கள்! ஹிந்து என் ராம் பார்ப்பனனாக என்றைக்கு இருந்தார்?
ஹிந்துவோ, தினமலரோ, பார்ப்பன முத்திரை நீங்கள் தான் குத்துகிறீர்கள், அவர்கள் வியாபாரிகளாகத் தான் எப்போதுமே இருக்கிறார்கள்!
//ஹிந்து என் ராம் பார்ப்பனனாக என்றைக்கு இருந்தார்?
ReplyDeleteஹிந்துவோ, தினமலரோ, பார்ப்பன முத்திரை நீங்கள் தான் குத்துகிறீர்கள், அவர்கள் வியாபாரிகளாகத் தான் எப்போதுமே இருக்கிறார்கள்!
//
மேல படிச்சதுக்கெல்லாம் பதில் சொல்லலாம்னு தான் இருந்தேன். கடைசி வரிகளை படிச்சதும் . அட கெரகமே.. இவர் கிட்ட பேசினா நமக்கும் இவருக்கும் வித்தியாசம் இல்லாம போய்டுமேன்னு தோனிடிச்சி.. ஏன் உங்களை எல்லாரும் தொரத்தி அடிக்கிறாங்கன்னு இப்போ தான் புரியுது..:)) நேத்து வெட்டியா இருந்தேன்.. உங்க மொக்கைக்கு எல்லாம் கும்மி அடிச்சேன். இன்னும் 6 நாட்களுக்கு கும்மி அடிக்க வாய்ப்பில்லை.. நீங்க போட்டுத்தாக்குங்க...
பெர்ரோஸ் காண்டியின் மகன்கள் காண்டியாகத்தான் இருக்க வேண்டும் என சட்டம் இருக்கா? இந்திரா தன் பிள்ளைகளுக்கு காந்தி என்று தான் பெயர் வைத்தார். உங்களைப் போன்ற அரைகுகுறைகள் இணையத்திலும் அச்சு ஊடகங்களிலும் ஏராளமாக கிறுக்கி வைத்திருக்கிறார்கள். அதை எல்லாம் நம்ப நான் என்ன லூசா? :))
மொத்தமே 3 பேர் தான் பின்னூட்டம் போட்டிருக்கோம்.. இவ்ளோ தான் உங்க பதிவின் தரம் போல.. நான் தான் தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்..
வயசான காலத்துல தனியா பொலம்பி பிபி ஏத்திக்காதிங்க சார்.. ஒடம்பைப் பார்த்துக்கோங்க.. கமெடியா பதிவெழுத எங்களுக்கும் ஆள் தேவைப்படுதில்ல.. :))
காங்கிரஸ்காரர்களுக்கு ஒன்று இரண்டு எண்ணக் கூடத் தெரியாது என்பதை சஞ்சய் மறுபடி வந்து நிரூபித்திருக்கிறார்.
ReplyDeleteஅடுத்து வெட்டியாக இருக்கும்போது என்ன செய்வார்என்பதையும் ஒரு ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார்.
பதிவின் தரத்தைப் பின்னூட்டக் கும்மிகளை வைத்து அளக்கும் மூளை (?) காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் தான் இருக்கும் போல!
காங்கிரசே ஒரு காமெடிப் பீஸ் தான்!காமெடிப் பீஸ்களை தேர்தல் முறையில் இருக்கும் கோளாறு ஆட்சிக் கட்டிலில் ஏற்றிவைத்தால், நாட்டு மக்கள் புலம்பாமல் வேறு என்ன செய்ய முடியும்?
கடைசிவரை கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை! யார் உண்மையான காமெடிப் பீஸ் என்பதை, படிக்கும் வாசகர்களிடமே விட்டு விடுகிறேன்!
சஞ்சய் அங்கிள்!
ReplyDeleteமக்களின் உரிமை பிரச்சனையான அணுவுலை காப்பீடு பற்றியும் எழுதியிருக்கிறார்!, அதை பற்றி எதுவும் பேசாமல் வக்காலட்து வாங்குவதிலேயே குறியாய் இருக்கிறீர்களே!
நித்திக்கு சாரு மாதிரி காங்கிரஸுக்கு நீங்களா!?
//நாளை மறுநாள், 15 ஆம் தேதி, அணுமின் நிலைய விபத்துக்கள், நஷ்ட ஈடு வரையறுக்கப் படும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப் படுகிறது.//
ReplyDeleteபிரச்சனை எழுப்ப வேண்டிய எதிர்கட்சிகலூம் அமைதியாக இருப்பது ஒட்டு மொத்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்க வைக்கிறது!
சாக்ரடிஸின் சீடர் ப்ளேட்டோ சொன்னது போல் ஜனநாயக நாடும் திறமையற்ற ஆட்சியாளர்களால் ஒருநாள் மண்னை கவ்வும் என்ற வார்ட்தை ஏதேன்ஸுக்கு பிறகு இந்தியாவில் உண்மையாகி கொண்டிருக்கிறது!
நாட்டின் குடிமகன் என்ற முறையில் மன்மோகன் சிங், சோனியா அவர்களது கட்சி அலுவலகத்திற்கு வருவது போவது பற்றி எந்த கவலையும் எனக்கில்லை! ஆனால் அணுவுலை காப்பீட்டு என்பது அனைத்து மக்களுக்கும் தெரிய வேண்டிய ஒன்று! உண்மையை மறைக்கும் ஆளும்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் எனது கண்டங்களை பதிவு செய்கிறேன்!
வாலு, கிருஷ்ணமூர்த்தி சார் ப்ளாக்ல கமெண்ட் போடறதால நீங்களும் அவர் மாதிரியே பேசனும்னு எதும் அவசியம் இல்லை.. வழக்கம் போல நார்மலாவே பேசுங்க..
ReplyDeleteஒழுங்கா பின்னூட்டம் எல்லாம் படிங்க..
பின்னூட்டத்தைப் படிக்க வால்சுக்கு உபதேசம் செய்வதெல்லாம் இருக்கட்டும்! ஒன்னு ரெண்டு ஒழுங்கா எண்ணக் கத்துக்கிட்டு, பதிவில் என்ன சில்லியிருக்குன்னு முழுசாப் படிச்சுட்டு வாங்க, நிறையப் பேசலாம்!
ReplyDeleteவாலு, சாருவோட கம்பேர் பண்ற அளவுக்கு நான் தரம் கெட்டவன் இல்லை.. நான் காங்கிரசை இன்றும் ஆதரிக்கிறேன்.. நாளையும் ஆதரிப்பேன்.. சாரு நித்திக்கு வக்காலத்து வாங்கியதால் அடிவருடி சொம்புதூக்கி என்றெல்லாம் சொல்லிவிட்டு இப்போது என்னை அவருடன் ஒப்பிட்டுப் பேசுவது, உங்களைப் போலவே நானும் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்குவது போல் தோன்றுகிறது.. கிருஷ்ணமூர்த்தி சாருக்கு தான் வயசு வித்தியாசமெல்லாம்.. உங்களுக்கு இல்லை..
ReplyDeleteஉங்களிடம் அரசியல் பேசினால் மட்டும் உங்களுக்குப் புரிந்துவிடுமா என்ன? உங்கள் ஊரின் முக்கிய அரசியல் தலைவர்களான முத்துசாமியும் செங்கோட்டையனும் எந்தக் கட்சி என்று கூட தெரியாத அளவில் தான் உங்கள் அரசியல் புலமை.. :)) எதுக்கு ரிஸ்க் எடுக்கறிங்க பாஸ்? :)
கிருஷ்ணமூர்த்தி சார்.. லன்ச் டைம்ல எவ்ளோ பேச முடியுமோ அவ்ளோ தான் முடியும்.. மேலும் உங்க கூட பேசனும்னா.. ஹிஹி.. ஹிஹி.. ஹிஹி..
ReplyDeleteமுத்துசாமி, செங்கோட்டையனுக்கு முன்னாடி சுலோச்சனா சம்பத், ஈவிகே எஸ் இளங்கோவனைப் பத்தியும் பேசலாம்! அவங்க தாத்தா காலத்து வரலாறுடன் நான் ரெடி!
ReplyDeleteநிம்மதியாச் சாப்பிடுங்க!
இன்னைக்கு மசோதா தாக்கல் ஆகலை! கச்சேரியைத் தொடர்ந்து வச்சுக்கலாம்!
//உங்கள் ஊரின் முக்கிய அரசியல் தலைவர்களான முத்துசாமியும் செங்கோட்டையனும் எந்தக் கட்சி என்று கூட தெரியாத அளவில் தான் உங்கள் அரசியல் புலமை.. :))//
ReplyDeleteஅவுங்க ரெண்டு பேரும் எந்த கட்சியா இருந்தா எனக்கென்ன!
ப்ளேட்டோவோட ஜனநாயக மறுப்பு தத்துவமே அது தான்!
கட்சியை பார்த்து ஓட்டு போடுவ ஆனா ஆள் ஏமாத்துவான்! ஆளை பார்த்து ஓட்டு போடுவ ஆனா கட்சி ஏமாத்தும்!
வக்காலத்து வாங்குவது வேறு, சொம்பு தூக்குவது வேறு!
சாருவையும் உங்களையும் ஒப்பிட்டுதற்கு கோபபட்ட நீங்கள் நித்தியையும், காங்கிரஸையும் ஒப்பிட்டதற்கு கோபப்படவில்லை என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது! என்ன தான் காங்கிரஸிற்கு ஆதரவாக பேசினாலும் மனதுக்குள் கோபம் உண்டு என்று உங்களை அறியாமலேயே வந்துவிட்டது!
(எப்பூடி)
வால்.. கொய்யால.. அடங்கமாட்டிங்களா? நித்தியனுக்கு சாரு செஞ்சதை வைத்து தான் அவரை அப்டி நொங்கெடுத்திங்க.. அதே மாதிரி என்னையும் நினைச்சிடக் கூடாதுன்னு சொன்னேன் ராசா.. நான் எப்போவும் காங்கிரசை ஆதரிப்பேன்.. சாரு மாதிரி பல்டி எல்லாம் அடிக்க மாட்டேன் என்றேன்.. ஸ்ஸ்ஸப்பாஆஆஆ.. கிருஷ்ணமூர்த்தி சார் வாங்கின அதிக பட்ச பின்னூட்ட பதிவு இதானா? :))
ReplyDelete