மேற்கே ஒரு பொற்கைப் பாண்டியன்!இணையத்தில் எத்தனையோ பதிவுகளை, செய்திகளைப் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம்! பொற்கைப் பாண்டியன் என்று  ஒரு பாண்டிய மன்னனைப் பற்றி ஒரு கதையும் உண்டு, நாலாம் வகுப்புப் படிக்கும் போது, ஐயா பொற்கைப் பாண்டியனாக, பள்ளி நாடகத்தில் நடித்ததும் உண்டு..

 
ஆனால், இப்படித் தங்கக் கை படைத்த மனிதனைப் பற்றிய செய்தியை படித்தபோது, தங்கக் கை, தங்கக் கை என்று சொல்கிறார்களே அப்படியென்றால் என்ன என்பதன் உண்மையான அர்த்தம் புரிந்த போது, மிகவும் நெகிழ்ந்தேன்!  
திக்கை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டேன்!இப்படியும் மனிதர்கள் இருப்பதனால் தான், எத்தனையோ அரக்க முகம், குணம் கொண்ட மனிதர்கள் நடுவே வாழும்போது கூட, எப்படி இந்த பூமி இன்னமும் ஈரமாக இருக்கிறது என்பது புரிந்தது.


இந்தத் தங்கக் கை மனிதரின் பெயர் ஜேம்ஸ் ஹாரிசன். வயது 74. ஐம்பது வருடங்களாக ரத்த தானம் செய்து வருகிறார். இது வரை 984 முறை ரத்த தானம் செய்திருக்கிறார் என்ற செய்தியே மிகப் பெரிய சாதனை! அதை விட முக்கியமான விஷயம், இவருடைய ரத்த தானத்தினால் இது வரை சுமார் இருபத்திரண்டு  லட்சம் குழந்தைகள் காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பது தான்!

இவருடைய ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில்  மிக அபூர்வமான ஒரு விஷயம், நோய் எதிர்ப்புத் திறன் anti-body, என்று சொல்லப்படுவது இருக்கிறது. கடும் ரத்தச் சோகையால் பாதிக்கப் படும் குழந்தைகளுக்கு வரும் ரீசஸ் என்ற நோயைத்  தடுப்பதாக  இந்த ஆன்டி-பாடி இருக்கிறது, மரணத்தில் இருந்து காப்பாற்றுகிறது என்பது தெரிய வந்தவுடன்,  லட்சக்கணக்கான கருவுற்ற  பெண்களுக்கு இவர் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா கொடுக்கப் பட்டதில் இது வரை இருபத்திரண்டு லட்சம் குழந்தைகள் ரத்தச் சோகை நோயில் இருந்து, மரணத்தின் பிடியில் இருந்து காப்பற்றப் பட்டதாக ஒரு மதிப்பீடு சொல்கிறது.


தன்னுடைய பதினெட்டாம் வயதில் இருந்து ரத்த தானம் செய்து வரும் திரு ஹாரிசன், இது வரை 984 தரம்  ரத்தம் கொடுத்திருக்கிறார். தன்னுடைய பதினான்காம் வயதில் மார்பில் ஒரு ரண சிகிச்சைக்காக 1.3 லிட்டர் ரத்தத்தைத் தானமாகப் பெற்றபோது எடுத்துக் கொண்ட உறுதி, தானும் ரத்த தானம் செய்வது. ரத்த தானம் செய்வதை நிறுத்துவது என்பதை நினைத்தே பார்த்ததில்லை என்று சொல்கிறார் திரு ஜேம்ஸ் ஹாரிசன்.

தன் பிள்ளை வாழ ஊர்ப் பிள்ளைகளைப் பலி கொடுக்கும் நவீன மனு நீதிச் சோழர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் துர்பாக்கியமான நேரத்தில், இப்படி ஒரு தங்கக் கை மனிதரைப் பற்றிப் படிக்க முடிந்ததே, முகத்தைப் பார்க்க முடிந்ததே பெரும் புண்ணியம் தான்!


அங்கே வந்த ஒரு அனானி கமெண்டில், இது எப்படி சாத்தியம் என்பதை ஒருவர்  சொல்லியிருப்பதையும் பாருங்கள்! இங்கே தமிழ்ப் பதிவுலகில்  அனானிகள் என்றாலே  அபத்தம் என்ற அளவுக்கு இருப்பதைப் போல அல்லாமல், எப்படி இன்னும் கொஞ்சம் விவரம் கிடைக்கிறது என்பதையும் பாருங்கள்!

எடுப்பும், தொடுப்பும்! 

எடுப்பு !

முந்தைய பதிவில் பேசினோமே, கூகிள் விவகாரம்!

சீன மக்களுக்கு ஜனநாயக உரிமைக்காகப் போராடி, அதில் கரை சேர முடியாமல் கூகிளார் வெளியேறினாரா?
அல்லது, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று எம்பி எம்பிப் பார்த்துத் தோற்ற நரி, ஒதுங்கிப் போனதே அந்தக் கதையில் வருவதைப் போலவா? நான் சொல்லவில்லை, அமெரிக்கப் பத்திரிக்கை, Forbes  சொன்னது! போன ஜனவரி மாதம் விவகாரம், முத்திக் கடைத் தெருவுக்கு வந்த போதே! தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பவர்கள் படியுங்கள்!

தொடுப்பு!

முந்தைய பதிவு ஒன்றில் திரு வால் பையன் அருண், ரீடரில் இன்னமும் 180 பதிவுகளைப் படிக்க வேண்டியிருப்பதாக, தான் என்ன  செய்வது என்ற ரீதியில் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். மீண்டும் பொது புத்தியில் சேராமல், பதிவின் உள்ளடக்கத்தை விட்டு விலகாமல், ஜேம்ஸ் ஹாரிசனைப் பற்றிய பதிவில் உருப்படியான பின்னூட்டத்தை எழுதியிருக்கும் அந்த ஆங்கில அனானியின் பதில் வால் பையன் அருணுக்கு சமர்ப்பணம்! 
Anonymous said... 
 
I've worked in a transfusion service for over 30 years. Without having the entire picture, my guess is that this man is Rh negative and has anti-D (Rheusus factor) in his blood as a result of being transfused with Rh positive blood during his surgery. If he needed 13 units, it's possible there wasn't enough Rh negative blood in stock and he was given Rh positive blood. In response, his body started to produce anti-D. Anti-D isn't rare. What is rare is finding a selfless person willing to donate blood repeatedly. His blood isn't being used for transfusions. I believe they are using his antibody to produce Rh Immune Globulin. This prevents pregnant women from producing antibody against their unborn babies. Vickie is correct. Fifteen percent of the population is Rh negative. Even Rh positive people may be heterozygous for the gene, meaning their children may be Rh negative. Their are 57 comments posted already. Statistically speaking, about 8 or 9 of you geniuses have Rh negative mothers and might not be alive if your mothers didn't receive RhIG.

7 comments:

 1. இந்த ரத்ததானம் பற்றி படிக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு சோகம் ஒட்டிக்கொள்ளும். எனக்கு டைஃபாய்டு வந்த காரணத்தினால் என்னால் ரத்ததானம் செய்ய இயலாது என இங்கிலாந்து மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். மிகவும் அருமையான பகிர்வு ஐயா.

  ReplyDelete
 2. ரத்ததானம் செய்வரின் அருமைகளை எழுதிவிட்டு பின்னாடியே சீனாவை கொஞ்சம் சொறிஞ்சிகிட்டா நான் எதை பத்தி பின்னூட்டம் போடுறது!

  உங்களுக்கு எங்க சுத்தினாலும் சீனா காங்கிரஸ்!

  எனக்கு எங்க சுத்தினாலும் கடவுள், மதம்!

  ReplyDelete
 3. வால்ஸ்!
  ரத்த தானம் செய்து உயிர்களைக் காப்பாற்றுபவரை சொன்னது, தெரிந்து கொள்வதற்காக, வணங்குவதற்காக!

  சீனாவைப் பற்றிச் சொன்னதும், காங்கிரசைக் கிண்டுவதும், சீனர்களுக்கு இருக்கிற சாமர்த்தியம் நமக்கு இல்லையே, காங்கிரசுக்கு முதுகெலும்பு இல்லையே என்பதைச் சொல்வதற்காக!

  இதை படிக்கிற நாலு பேராவது காங்கிரசைக் கட்டியழுவதை விடமாட்டார்களா கழகங்களிடம் ஏமாறுவதில் இருந்துவிடுபட மாட்டார்களா என்று தான்!

  அவ்விடத்தில் கடவுள், மதம், பொது புத்தி இதை மட்டுமே கட்டியழுவது எதற்காகவோ?

  :-))

  ReplyDelete
 4. வாருங்கள் ராதா கிருஷ்ணன்!

  ரத்த தானம் செய்வது ஒரு உயர்ந்த கொடை! முடியாவிட்டால், உதவுவதற்கு வேறு வழிகளைத் தேடித் பயன்படுத்த வேண்டியது தான்!

  ReplyDelete
 5. //அவ்விடத்தில் கடவுள், மதம், பொது புத்தி இதை மட்டுமே கட்டியழுவது எதற்காகவோ?//


  மொக்கையா எழுதுறதுக்கு தான் நானும் முயற்சி பண்றேன், ஆனா முடிய மாட்டிங்குது!

  ReplyDelete
 6. {{{இப்படியும் மனிதர்கள் இருப்பதனால் தான், எத்தனையோ அரக்க முகம், குணம் கொண்ட மனிதர்கள் நடுவே வாழும்போது கூட, எப்படி இந்த பூமி இன்னமும் ஈரமாக இருக்கிறது என்பது புரிந்தது.}}}

  உண்மைதான்!அருமையான பதிவு நண்பரே,பதிவுக்கு நன்றி !

  ReplyDelete
 7. ரத்ததானம்...பாராட்டப்படவேண்டிய விஷயம்.
  நான் ரத்ததானம் செய்யப் போன இடத்தில்தான் எனக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்த விஷயமே தெரிய வந்தது...!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!