#தமிழகஅரசியல் தேர்தல்களம் எப்படி இருக்கிறதாம்?

இந்திரா சௌந்தரராஜன்! திகம் விரும்பி வாசிக்கப்படும் தமிழ் எழுத்தாளர். அதில் சந்தேகமே இல்லை! ஒரு தேர்ந்த அரசியல் விமரிசகராகவும், வருகிற தேர்தல்களத்தைப் பற்றிய கணிப்பைச் செய்கிறவராகவும் இந்த 21 நிமிட வீடியோவில் காட்சி அளிக்கிறார்.


பெரிய தலைகள் எதுவும் இல்லை. ஆதரவு அலை என்று இல்லாத தேர்தல் இது. அதனால் வெற்றி இன்னாருக்கு என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை என்று சொன்னதாலோ என்னவோ, நான் பார்க்கிற தருணம் வரை வெறும் 430 பார்வைகள் மட்டுமே காண்பித்தது.

ரங்கராஜ் பாண்டே ஒருவழியாகத் தனது தளத்தில் ஒரு கருத்துக் கணிப்பை இன்று நடத்தி முடித்துவிட்டார்! அதிமுக கூட்டணிக்கு 97 இடங்கள் திமுக கூட்டணிக்கு 111 இடங்கள் மீதம் 26 தொகுதிகளில் இழுபறி என்பதாக முடித்திருக்கிறார். ரங்கராஜ் பாண்டே மாதிரி அனுபவம் மிகுந்த ஊடகக்காரர்கள் சொல்வதைக் கவனிப்பதோடு சரி! அதற்குமேல் முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு ஒத்துவராத, உடன்பாடில்லாத விஷயம். 

புதிதாக யாராவது சொல்லும்போது அது இயல்பாகவே கவனத்தை ஈர்க்கிறது என்பதாலேயே இந்திரா சௌந்தர ராஜன் சொன்னதையும் காதில் வாங்கி கொண்டேன்! அவ்வளவுதான்!

கருத்துக் கணிப்பும் கருத்துத் திணிப்பும் என்ற தலைப்பில் இன்றைய தினமணி நாளிதழில் வ மு முரளி என்பவர் ஒரு விரிவான, விவரமான செய்திக் கட்டுரையை எழுதி இருக்கிறார். நண்பர்களுக்கு அதைப் பரிந்துரை செய்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.        

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் தெரியாத ராகுல் காண்டி! கள நிலவரம்!

போகிற இடங்களிலெல்லாம் RSS, பிஜேபி மீது சேற்றை வாரியிறைப்பதை ஒரு வாடிக்கையாகவே ராகுல் காண்டி வைத்திருக்கிறார். 50 வயதுக்கு மேலாகிவிட்டது. 17 வருடம் எம்பியாகவும் காலம்தள்ளி விட்டார். ஆனாலும் ராகுலுக்கு வரலாறும் தெரியவில்லை, அரசியல் செய்யவும் தெரியவில்லை என்பது அவரைப்  பெற்றெடுத்த சோனியா வாங்கிவந்த சாபம்! 


"இந்தியாவில் இரண்டு சித்தாந்தங்கள் உள்ளன. ஒரு சித்தாந்தம், எல்லோரும் எனக்குக் கீழே என்கிறது. அதுதான் ஆர்.எஸ்.எஸ், மோடி, அமித் ஷாவின் சித்தாந்தம். இன்னொரு சித்தாந்தம் சகோதரத்துவம், பாசம், மரியாதை என்கிறது. அதைத்தான் நாங்கள் நம்புகிறோம்.என்னுடைய பிரச்சினை என்னவென்றால் இவ்வளவு தொன்மையான பண்பாட்டு, பாரம்பரியம் கொண்ட மக்களின் பிரதிநிதியான தலைவர்கள், அமித் ஷா, மோடி உள்ளிட்டோரின் காலில் விழுந்து கிடக்கிறார்களே என்கிற கோபம் எனக்கு வருகிறது". என்று நேற்றைக்கு சேலத்தில் நடந்த  திமுக கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காண்டி பேசியிருப்பதாக இந்து தமிழ்திசை செய்தி.


Congress leader Rahul Gandhi attacked Rashtriya Swayamsevak Sangh (RSS) in a tweet on 25 March claiming that it does not have the values of a family. In his column, Arun Anand talks about the cordial relationship between the Congress party and the RSS from the early 1960s and how the party's veteran leader Dau Dayal Khanna triggered the Ram Janmabhoomi movement in the early 1980s.இந்த 6 நிமிட வீடியோவில் அருண் ஆனந்த் என்கிற ஆராய்ச்சியாளர் காங்கிரசுக்கும் RSS அமைப்புக்கும் இடையில் சுமுகமான உறவே இருந்தது என்று விளக்குகிறார்.

Stanley Rajan 8ம . · தமிழர்கள் யார் முன்னும் தலை குனிந்தது இல்லை ஆனால் அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அடிமையாகிவிட்டார்கள் ; ராகுல்காந்தி ஒரு தேசிய தலைவனாக இல்லாமல் மதிகெட்ட நாம் தமிழர் தும்பி போல் கத்தி கொண்டிருக்கும் ராகுலை கண்டால் இப்பொழுதெல்லாம் பரிதாபம் வரவில்லை, எரிச்சலே மிஞ்சுகின்றது காங்கிரஸ் என் இப்படி நாசமானது என்பது இப்பொழுதுதான் புரிகின்றது திமுக, அதிமுகவின் கடந்தகால வரலாறு கூட இந்த தத்தி தலைவனுக்கு தெரியவில்லை, சரி அரசியல்தான் தெரியாது, பாட்டி தந்தை கடந்துவந்த பாதையுமா ஒருவனுக்கு தெரியாது? கருணாநிதி இந்திரவின் காலில் விழுந்து அடங்கிய வரலாறு என்ன? 1977க்கு பின் ஒரு வார்த்தை கருணாநிதி இந்திராவினை எதிர்த்திருப்பார்? மிசாவில் திமுகவினரை நொறுக்கி தள்ளி , சர்க்காரியா கமிஷனை ஏவிவிட்டு கருணாநிதியினை தன் கண் அசைவில் உருட்டி வைத்திருந்தார் இந்திரா., மறுக்க முடியுமா? அப்பக்கம் ராமசந்திரனை மிரட்டி தனிகட்சி தொடங்க வைத்தது முதல், ராமசந்திரனின் ரகசியம் அறிந்த டிஜிபி மோகன் தாஸை கொண்டும் இன்னும் ரே கமிஷன் எல்லாம் வைத்தும் அவரை கட்டுக்குள் வைத்திருந்தார் இந்திரா.ஆம், திமுக அதிமுக இரண்டுமே இந்திராவின் காலடியில் பணிந்து சுருண்டிருந்த காலங்கள் இருந்தன ‌ ராஜிவ் ராமசந்திரனை அழகாக கையாண்டார், பிரபாகரனுக்கு எதிராக அமைதிபடையினை அனுப்பிவிட்டு ராமசந்திரனோடு சென்னையில் மேடையேறும் வித்தை ராஜிவுக்கு தெரிந்திருந்தது இங்கு யார் இந்திராவினை, ராஜிவினை பகிரங்கமாக எதிர்த்தார்கள்? எல்லாம் வாய்சவுடால் விட்டுவிட்டு அவர்கள் காலடியில் கவிழ்ந்து கிடந்தார்கள் இதெல்லாம் தெரியாமல் தமிழ்நாட்டுக்கு வந்து ஜோதிமணி எழுதி கொடுப்பதை உளறும் ஒரு முட்டாள் தலைவனை தேசியவாதிகள் வன்மையாக கண்டிக்கின்றோம்.ராகுல் தமிழக அரசியல்வாதி அல்ல, அவர் அகில இந்திய அளவில் எதிர்கட்சி தலைவராக அறியபடும் பொழுது இப்படி திராவிட, தமிழ்தேசிய கும்பலை போல் பேசிதிரிவது கண்டிக்கப் பட வேண்டிய செயல். ஒன்று அவர் காங்கிரஸ் தலைவராக தேசியம் பேசட்டும், இல்லை இப்படி பேசுவதாக இருந்தால் நாம் தமிழர் கட்சியில் காங்கிரஸை இணைத்துவிட்டு பேசட்டும் எத்தனையோ முட்டாள்களை தேசிய அரசியலில் காங்கிரஸ் கண்டிருந்தாலும் ராகுல் போல மகா மோசமான ஒரு அப்பாவி முட்டாளை எங்கும் கண்டதில்லை காணவும் முடியாது இங்கு பாஜகவுக்கு சமநிலை கொடுக்க காங்கிரஸ் அவசியம், காங்கிரஸ் மீண்டெழ ராகுல் அரசியலை விட்டே அகற்றபடுதல் மகா அவசியம்

வானதி சீனிவாசனை துக்கடா அரசியல்வாதி என்று துச்சமாகப்பேசியதோடு கமல் காசரின் ம.நீ. ம நிறுத்திக் கொள்ளவில்லை. மய்யத்தின் கொக்கரிப்பு கொஞ்சமும் குறையவில்லை. 





பிஜேபி மய்யத்தின் குமரவேலுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. என்றாலும் மய்யம் அடங்குவதாக இல்லை.ஆக, கமல் காசருடைய சாயம் மெல்ல மெல்ல வெளுத்து வருகிறதே, கவனிக்கிறீர்களா?


பொன்மாலை பொழுது பதிவர் மாணிக்கம் இதுதான் களநிலவரம் என்று இந்தப்படத்தை முகநூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சரியாகத் தான் சொல்கிறாரா?
உங்கள் கருத்து என்னவென்பதை சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.  

சண்டேன்னா மூணு! #அரசியல் #ஆராசா #ஆபாசராசா

2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதி மாறனையும் தூக்கி சாப்பிட்டு உலகமகாஊழல் சாதனை படைத்த ஆ.ராசா. ஆபாச ராசாவாகவும் இந்தத்தேர்தல் பரப்புரையில் சாதனை படைத்திருக்கிறார் என்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை! ஏனென்றால் திமுகவினரின் வரலாறு அப்படி!


  Stanley Rajan 16நி  

பெண்மையினை தாய்மையினை கொச்சை படுத்துவது ஒன்றும் திமுகவுக்கு புதிதல்ல, இதை முதலில் தொடங்கி வைத்தவன் அவர்களின் பிதாமகன் ஈரோட்டு ராம்சாமி
அவனே புனிதமான சீதை, பாஞ்சாலி, கண்ணகி என விமர்சித்து தொடங்கி வைக்க அவனின் அடிப் பொடியான பெரும் மூடன் அண்ணாதுரையும் அவனின் சீட கோடியான கருணாநிதியும் காமாட்சி, மீனாட்சி என தெய்வங்களை விமர்சிக்க தொடங்கினார்கள்
அது அவர்களின் அரசியலும் தொடர்ந்தது
இலங்கை பிரதமர் ஸ்ரிமாவோ பண்டார நாயகாவில் தொடங்கி, காமராஜரின் தாய், இந்திரா, ஜெயலலிதா என யாரும் இவர்களின் மகா மட்டமான கீழான பேச்சுக்கு தப்பவில்லை
நாம் ஆட்சிக்கு வரமாட்டொம் என எதையோ பேசிய அண்ணாதுரை ஆட்சிக்கு வந்ததும் தன் இயல்பான தந்திரத்தால் பதுங்கினான்
ஆனால் கருணாநிதி பதுங்கவில்லை, சட்டசபையில் "நாடாவினை அவிழ்த்து" என மிக மட்டமாக பேசிவிட்டு எப்படி என் இலக்கிய பேச்சு என அசிங்கமாக சிரித்தவர் அவரே
காமராஜரின் தாயினை நோக்கி "அவள் கருவாடு விற்றவள்" என கடுமையாக கருணாநிதி சாட, என் தலைவனின் தாய் கருவாடு மட்டும், ஆம் கருவாடு "மட்டும்" விற்றாள் என கண்ணதாசன் அழுத்தி சொல்ல அப்படியே அமைதியானார் கருணாநிதி
ஆம் அஞ்சுகம்மாள் என்ன விற்றார் என்பது கண்ணதாசனுக்குத்தான் தெரிந்திருந்தது
அதன் பின்னும் கருணாநிதி திருந்தவில்லை, விதவைக்கு மறுவாழ்வு என்றும் , திமுகவினரால் தாக்கபட்ட இந்திராவின் தலையில் வடிந்த ரத்ததை மிக மிக கொச்சைபடுத்தி பெண்குலத்தையே கடுமையாக அவமானபடுத்தியதெல்லாம் வரலாறு
அதே தாக்குதல் ஜெயா மேலும் தொடர்ந்தது, பின்பு அது எடுபடாததால் கைவிடபட்டது
அப்படிபட்ட திமுகவினரிடம் அதுவும் வெற்றிகொண்டான் போன்ற இசட் கிரேடு ஆபாச பேச்சாளர்களையும் அவர்களை விட இசட்‍‍‍ பேச்சினை பேசிய கருணாநிதியினை தலைவனாக கொண்ட கட்சியில் ஆ.ராசா பேசுவதெல்லாம் ஆச்சரியமில்லை
ஆ.ராசா எப்பொழுதுமே சர்ச்சைகுரிய நபர், இவரை முதலில் கடுமையாக எச்சரித்தது பாமகவின் காடுவெட்டி குரு குருவின் மிரட்டலை தொடர்ந்து நீலகிரி மலையில் தஞ்சமடைந்த ராசா இன்னும் மலையில் இருந்து இறங்கவில்லை
சுருக்கமாக சொன்னால் திருமாவின் இரட்டை பிறப்பு இந்த ராசா, இவரை வளர்த்துவிட்ட பெருமகன் திருவாளர் கருணாநிதி
அப்படிபட்ட ராசா பழனிச்சாமி தாயாரை கடுமையாக விமர்சிப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்றாலும் இதெல்லாம் மிக மிக மோசமாக கண்டிக்கபட வேண்டிய விஷயங்கள்
தண்டிக்கபட வேண்டிய விஷயங்கள்
ஒரு பாராளுமன்ற எம்பி, ஒரு முன்னாள் அமைச்சரின் தரம் இவ்வளவுதான் என்பதுதான் அருவெருப்பின் உச்சம், திமுகவின் மிச்சம்
சிம்புவுக்கும் இன்னும் பலருக்கும் கொடி பிடித்த மாதர் சங்க அமைப்புகளை பழனிச்சாமியின் மறைந்த தாய்க்கு அவமானம் நிகழும் பொழுது காணவில்லை
இன்னும் பல பெண் உரிமை போராளிகள் சத்தமே இல்லை
கருணாநிதியின் ஆபாச பேச்சுக்கள் உலகறிந்தவை, உதயநிதியின் சசிகலா மேலான விமர்சனம் எல்லோரும் அறிந்தது
இதில் ராசாவும் தன்னை யார் என்றும் எதற்கும் காடுவெட்டி குரு தன்னை விரட்டியடித்தார் என்பதையும் நிரூபித்து கொண்டிருக்கின்றார்
நமது சந்தேகமெல்லாம் பழனிச்சாமி தாயாரே இப்படி அவமானபடும் பொழுது திமுக பிரிய காரணமான மணியம்மை எப்படி எல்லாம் திமுகவினரால் விமர்சிக்கபட்டிருப்பார் என்பதுதான்

இதை பற்றி வீரமணி பின்பு விளக்குவார் என தமிழகம் எதிர்பார்க்கின்றது 


இசுடாலின் கூட பட்டும்படாமல் இந்தவிவகாரத்தில் ஏதோ கருத்து சொல்லியிருக்கிறாராம்! 

ஸ்டேன்லி ராஜனுக்கு ஆபாசராசா பேச்சின் மீதான கோபம் இன்னும் குறையவில்லை போல!

மக்களால் தேர்ந்தெடுக்கபடாதவர்களெல்லாம் முதல்வராவது "தவறானது" என்றால் வரலாற்றில் அப்படிபட்ட முதல் பிறப்பு கருணாநிதியே
அண்ணாதுரை இறந்ததும் தேர்தலை சந்திக்காமல் குறுக்குவழியில் முதல்வராகி வழிகாட்டிய உத்தமர் அவர்தான்.அதாவது முதல் "கள்ள குழந்தை" அல்லது "குறை பிரசவ குழந்தை" அவர்தான்
அதுதான் இந்திராவுக்கு பின் ராஜிவ் அப்படியே அமர்வது வரை வழிகாட்டியது. திமுக கூட்டணியினர் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிவது நல்லதல்ல, இப்படித்தான் மொகரையெல்லாம் கிழியும் 

ஆராசா, உதயநிதி போன்றவர்களின் பொறுப்பற்ற ஆபாசமான பேச்சுக்கள் திமுகவின் தேர்தல் வாய்ப்பை எந்தவிதத்தில் பாதிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஏற்கெனெவே கொங்குமண்டலத்தில் 34 கொங்கு வெள்ளாளர் அமைப்புக்கள் சேர்ந்து திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருப்பது தெரியும்தானே!

மீண்டும் சந்திப்போம்.

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் மஹாராஷ்ட்ரா! சரத் பவாருக்கும் அடி சறுக்கும்!

இந்தமாதத்துவக்கத்தில் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடி மருந்துகளுடன் ஒரு கார் பிடிப்பட்டதைத் தொடர்ந்து வரிசையாக பூதங்கள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன. மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங்கை ஒரு டம்மி இடத்துக்குப் பணிமாற்றம் செய்து பிரச்சினையை முடிக்க உத்தவ் தாக்ரே முயன்றது இன்னும் விபரீதமாகப் பயணிக்கத் தொடங்கி இருப்பது இப்போதைய அரசியல் பரிதாபம். இடமாற்றம் செய்யப்பட்ட போலீஸ் கமிஷனர் முதல்வர் உத்தவ் தாக்ரேவுக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதில், இப்போது NIA விசாரணை வளையத்துக்குள் இருக்கும் சப் இன்ஸ்பெக்டர்/ என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சச்சின் வாசே மாதாமாதம் 100 கோடி ரூபாய் வசூலித்துத் தரவேண்டுமென உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நிர்பந்தம் செய்ததாக சொல்லியிருக்கிறார். போதாக்  குறைக்கு இந்தவிவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பரம் பீர் சிங் மனு தாக்கல் செய்திருக்கிறார். சரத் பவார் தனது கட்சி ஆசாமி அனில் தேஷ்முக்குக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  


முகநூலில் பிரகாஷ் ராமசுவாமி இந்தவிவகாரத்தின் பின்னணியை கடந்த மூன்று நாட்களாகப் பதிவிட்டு வருகிறார். வெறும் காசுபறிக்கும் வேலை, மஹா ஊழல் என்பதையும் தாண்டி இதன்பின்னால் ஒரு சதிவேலை இருப்பதாக ஒரு சந்தேகம் வலுவாக எழுந்திருக்கிறது.  

பாகம்-1

முதலில் சச்சின் வாஸே என்கிற சப்-இன்ஸ்பெக்டர் யார் என்று பார்ப்போம். சச்சின் வாஸே 70இல் கோலாபூரில் பிறந்தவர். மஹாராஷ்ட்ரா போலீஸில் அஸிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர். ஆனால் மற்ற போலீஸ் மாதிரி தொப்பை, லத்தி மாதிரி இல்லாமல்.. ஒரு கை தேர்ந்த என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். 63 பேரை இதுவரை போட்டுத்தள்ளியவர்.

இந்த ஆள்.. ஒரு என்கவுன்டர் கேஸில் வசமாய் சிக்கிக் கொள்ள.. கோர்ட் இந்த ஆளை போலீஸ் ட்யூட்டியை விட்டே தூக்கியது. அது என்ன..? இது ஒரு 17 வருட முந்தைய கேஸ்.

நான் மும்பையில் வசித்து, பையை தூக்கிக்கொண்டு, தினமும் 7.52, 8.04, 8.32 என்று விநோதமான நேர ரயில் பிடித்து ஓடிய காலமது. அதாவது டிசம்பர் 2002 இரண்டாம் தேதி காட்கோபர் ஸ்டேஷனில் ஒரு பாம் வெடித்தது. வழக்கம்போல் இதற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று மய்யனார்கள், அமைதி காக்க சொன்னார்கள். ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்பார்கள். இந்த தர்க்கம்லாம் அப்போது புரியவே புரியாது. இப்போது.. ஹீரோ சச்சின் வேஸேவிடம் இந்த பாம் ப்ளாஸ்ட் கேஸ் வருகிறது. நான்கு பேரை போலீஸ் போடாவில் (POTA) வில் கைது செய்ய..அதில் ஒருவர்தான் 27 வயதான யூனுஸ். இவர் துபாய் சாப்ட்வேர் என்ஜினீயர். தங்களின் வாப்பா அம்மியை பார்க்க மும்பை வந்தவரை, 25 Dec 2002 இல்..போலீஸ் கைது செய்தது. இப்போது இந்த வழக்கு கோர்ட்டுக்கு வருகிறது. கடைசியாக யூனுஸை ஜனவரி 6 2003 இல் பார்த்ததாக சாட்சிகள் கிடைத்தது.

வாஸேவின் டீம் அடித்த அடியில் ரத்தம் கக்கி யூனுஸ் லாக்அப்பிலேயே இறந்து விட்டதாக தெரிகிறது.ஆனால், போலீஸ் தரப்பு, யூனுஸ் தப்பி விட்டார். அவரை துரத்தி சென்ற போலீஸ் வேன், ஏரி ஒன்றில் விழுந்து விட்டது என்று வாஸே, கோர்ட்டில் சத்தியம் அடித்து.. நஹி மாலும் பாய் சாப் என்று சொல்ல, கோர்ட் இதை நம்ப முடியாத சமயத்தில்.. யூனுஸின் தந்தை, ஹேபியஸ் கார்பஸ் ஒன்றை கோர்ட்டில் போட்டு யூனுஸை தேட...

கோர்ட் உத்தரவு பிறப்பித்து.. யூனுஸை தேட சொன்னதுல்.. மும்பை சிஐடி ப்ராஞ்ச்.. மொத்த கேஸ் கட்டையும் பிரித்து மேய்ந்ததில்.. அண்ணல் ச்ச்சின் வாஸேயின் கதை, கற்பனை, டைரக்‌ஷன் எல்லாம் வெளியில் வந்தது. வாஸேவை உடனடியாக வேலையிலிருந்து தூக்க கோர்ட் உத்தரவிட, என்கவுன்டர் போலீஸ்கார்.. உடனடியாக சாதாரண மனுஷன் ஆனார். அதோடு உடனடியாக, அவரை போலீஸ் கைது செய்தது.

மனுஷன் 2004 இல்.. பெயிலில் வந்தவர் பெயிலிலேயே இருந்தார். இப்போது சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பீடு கோர்ட்டில் 17 வருஷமாய் படு ஸ்பீடாய் இந்த கேஸ் நகர்ந்து கொண்டிருக்கிறது.இந்த கேப்பில், சச்சின் வாஸே சிவசேனா பார்ட்டியில் சேர்ந்து விட்டார்.. பார்ட்டிக்கு பணம் வசூல் பண்ணுவது, மிரட்டல் போன்ற குண்டாகர்தியில் மும்முரமாய் இருந்த போது.. சிவசேனா, ஒரு ஜனநாயக விபத்தொன்றில் ஆட்சியை பிடித்தது.#vase gate பாகம்1/5.   தொடரும்.

பாகம்-2

மார்ச் 2004 இல் சச்சின் வஸே கைதாகி, சஸ்பென்ட் ஆனவுடன், இவரை ஏறக்குறைய போலீஸ்துறை மறந்தேவிட்டது. 63 பேரை என்கவுன்டர் செய்த போலீஸ்.. கைதிலிருந்து தப்பிக்க, ஷிவசேனாவில் சேர்ந்து.. எங்கெல்லாம் அயோக்கியர்கள் இருக்கின்றார்களோ.. அவர்களிடம் பணம் பறித்து.. மும்பை அரசியல் வாதிகளான ஷிவசேனாவிற்கு.. வசூல் மன்னனாக இருந்தார். நடுவில் ஃபத்னாவிஸ் ஆட்சியை பிடிக்க.. உத்தவ் தாக்கரே.. ஃபத்னாவிஸிடம் சச்சின் வஸேவை போலீஸ் ஃபோர்ஸில் எடுத்துக்கொள்ள நிர்பந்திக்கப் பட்டது. 

நன்றாக கவனித்தீர்களேயானால்.. பத்னாவிஸ், ஒரு முடிவு எடுக்கு முன், அதன் back up papers மற்றும்.. அது அரசியல்ரீதியாக சரியானதா..? என்று ஆராய்ந்துதான் எடுப்பார். இல்லையென்றால்.. இந்த ஷிவசேனை சிறுத்தைகள், என்றோ ஃபத்னாவிஸின் ரத்தத்தை, குடித்திருக்கும். சமீபத்திய உதாரணம்.. மெட்ரோ ரயில், மற்றும் புல்லட் ரயில் பணத்தை பத்திரப்படுத்தியது. பத்னாவிஸிடம், கேட்டவுடன், மனுஷன், இப்போது அட்வேட் ஜெனரலிடம் பேசியதில், வழக்கு கோர்ட்டில் இருக்கும் போது, இது தேவையில்லாத தலைவலி, இந்த ஆள் ஒண்ணும் யோக்கிய சிகாமணி இல்லை என்கிற போலீஸ் சர்டிபிகேட்டுடன் உத்தவ் தாக்கரேயின் விருப்பத்தை அரபிக்கடலில் தூக்கி எறிந்து விட்டார் பத்னாவிஸ். இப்படி 2018 இல் ரிஜக்ட் ஆன வஸேவின் அப்பாயின்மென்ட் ஆர்டர்.. உத்தவின் அகாடி அவதாரத்தில் உயிர் பெற்றது.

பரம்பீர் சிங்தான் மும்பை போலீஸ் கமிஷனர். உதவாக்கரை சீஃப் மினிஸ்டர் பரம்பீரிடம்.. வழக்கமாய் சஸ்பென்ட் ஆன அதிகாரிகளை, ரிவ்யூ பண்ணுவீர்கள் தானே..? அப்படி, செய்யும்போது.. சச்சின் வஸே, மஹாராஷ்ட்ரா போலீஸுக்குள் சேர்ந்து இருக்க வேண்டும், என்கிற வாய்மொழி உத்தரவின் பேரில், ஜூன்5 2020 அன்று இரவு 10 மணிக்கு, ஒரு மீட்டிங் கூட்டப்பட்டது.

இரவு 11 மணிக்கு, ஒரு கமிட்டியை கூப்பிட்டு, வஸேவை போலீஸ் துறைக்குள் உள்ளே எடுக்க என்ன வழி..? என்று கேட்ட பத்தாவது நிமிடத்தில்.. எந்தெந்த போலீஸ் காரர்கள் வேண்டும் என்கிற லிஸ்ட் ரெடியாகி, கோவிட்-19 காரணம், போலீஸ் ஆசாமிகள் கிடைக்காத காரணத்தால் இவர்களை மீண்டும் வேலைக்கு எடுக்கிறோம் என்கிற மஹாராஷ்ட்ர அரசு கஜெட் அறிவிப்பு இரவு 2 மணி, அதாவது ஜூன் 6 அதிகாலை கையெழுத்தாகி, 3 மணிக்கு ப்ரின்ட் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஜூன் 6 அதிகாலை 4 மணிக்கு சச்சின் வஸே போலீஸில் மீண்டும் ஆர்ம்ஸ் டிவிஷனுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டார். பத்து மணிக்கு மும்பை போலீஸ் கமிஷனர் ஆபீஸில் ஆர்டர் வாங்கிகொள்ள அழைத்து.. க்ரைம்ப்ராஞ்சில், மீண்டும் பழைய பதவியில் வைத்து அதாவது க்ரைம் ப்ராஞ்சில் வைத்து அழகு பார்த்தனர் தாக்கரேக்கள்.

அவரிடம், உடனே, ஹ்ரிதிக்-கங்கணா ஃபேக் இமெயில் கேஸ், அர்னபின் டிஆர்பி கேஸ், அப்புறம் அன்வே நாயக் என்கிற கான்ட்ராக்டரின் தற்கொலை கேஸ் எல்லாவற்றையும் தரப்பட்டது.

அன்வே நாயக்கின் மனைவியை ஷரத் பவார் கொஞ்ச நாள் முன்னர் சந்தித்த பின்புலம் அதிகார மட்டத்தில் பேசப்பட்டது. அந்த நேரத்தில்தான், அர்னப் கோஸ்வாமி, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கேஸை, தோண்டி துருவி ஆராய்ந்து.. அது மும்பையின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதியின் வீட்டிற்கு வழிகாட்டியது என்றவுடன், வெகுண்டெழுந்த சஞ்சய் ராவத்தும், தாக்கரேக்களும்.. தனிப்பட்ட வன்மத்தை காட்ட முடிவெடுத்தனர். ஏற்கெனவே, ஷரத் பவாருக்கு, அர்னாப் மீது மரண காண்டு. அப்போதுதான், ஒரு ஸ்வாமிஜியை, ஒரு கும்பல் அடித்தே கொன்றது. அதற்கு பின்னணியில் அன்னை மைனோ இருப்பதாய் அறிவித்த அர்னாபின் கார் மீது தாக்குதல் நடந்தது.

அகாடிகள் சேர்ந்தனர்.. அர்னப்பை நவம்பர் 4 2020 கைது பண்ண, பரம்பீர் சிங்கிற்கு உ தாக்கரே அரசு அனுமதி அளித்தது.. நான் சச்சின் வஸே.. மும்பை க்ரைம் ப்ராஞ்ச் சப்இன்ஸ்பெக்டர். உன்னை.. அர்னப் கோஸ்வாமியை கைது பண்ண வந்திருக்கிறேன்.. You have a right to remain silent...and that too to Arnab..

இங்கிருந்து சச்சின் வஸேவின் லீலைகள் படு வேகமடைந்தது..அடுத்த பாகங்களில்.. இன்னும் சில சஸ்பென்ஸுடன் பார்ப்போம். முடிந்தால் ஷேர் பண்ணுங்கள்.#vazegate பார்ட் 2/5.    தொடரும்

பாகம்-3

நீண்ட பதிவு.. முடிஞ்சளவு இன்டரெஸ்டிங்காக தந்திருக்கிறேன்.. முடிந்தால் ஷேர் பண்ணுங்க..

முகேஷ் அம்பானியின் வீடு, மும்பையின் மையப் பகுதியான கார்மைக்கேல் ரோடில் இருக்கிறது. அந்த வீட்டின் பெயர் ஆன்டில்லா.. அதைப்பற்றிய விவரம் தேவையில்லை. 24/7 செக்யூரிடி கார்டுகள் சுற்றி வரும் இந்த வீட்டு காம்பௌன்டின் அருகில், ஒரு சுபயோக சுபதினத்தில் அதாவது February 25 அன்று..தவறான திசையில், ஒரு ஸ்கார்ப்பியோ வெகுநேரமாய் நின்று கொண்டிருந்ததை கவனித்த செக்யூரிடி மேனேஜர்கள்.. போலீஸூக்கு ஃபோன் பண்ண.. போலீஸ் அந்த காரை துழாவியதில்..  20 ஜெலடின் குச்சிகள், மும்பை இந்தியன் கொடி, ஒரு கடிதம்.. இதில்.. இது ட்ரையிலர்தான்...முழுபடம் விரைவில் என்று.. ஜயிஷ் உல் ஹிந்த் என்கிற தீவிரவாத இயக்கம் பெயர் இருந்தது.. அதில் மொத்த அம்பானி குடும்பத்தை அழித்து விடுவோம் என்று எழுதப்பட்டு இருந்தது. முகேஷ் மற்றும் நீடா அம்பானிக்கு இந்த கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இதையெல்லாம் காமெராவில் பார்த்போது.. ஸ்கார்ப்பியோவின் பின்னால் ஒரு வெள்ளை இன்னோவாவும் ஒட்டிக்கொண்டே வந்தது. PPE சூட் போட்ட ஆசாமி ஸ்கார்ப்பியோவில் இருந்து போனதும் தெரிய வந்தது...

போலீஸ்.. இதையெல்லாம் கைப்பற்றி, இது யாராக இருக்கும் என்று விசாரிக்க ஆரம்பித்த போது, ஜெயிஷ் உல் ஹிந்த்.. ஆனால்.. அதே சாயந்திரம்.. அய்யா சாமி.. எங்களுக்கும் இந்த குண்டு வைத்த விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமில்லை என்று இந்த ஜெயிஷ் உல் ஹிந்த் அலறியபோது.. மத்திய அரசின் NIA களத்தில் இறங்க ஆரம்பித்தது..

இந்த ஸ்கார்ப்பியோ முதலில் யாருடையது என்று விசாரிக்க ஆரம்பித்தபோது.. இதன் சேஸிஸ் அழிக்கப்பட்டு இருந்தாலும் இதை ஃபாரென்ஸிக்கில் எளிதாய் கண்டுபிடித்துவிடலாம்.. இந்த ஸ்கார்பியோ தானேவில் வசிக்கும் சாம் என்கிற ஒரு இன்டீரியர் டிஸைனருடையது என்று கண்டுபிடித்தார்கள். தானே நவ்பாடாவில் வசிக்கும் இவரது வீட்டை போலீஸ் தட்டியபோது.. கதவைத்திறந்த சாம்..இந்த காரை இன்டீரியர் பண்ண மான்ஸுக் ஹிரேனிடம் தந்தேன்.. பில் 2.6 லட்சம். என்னிடம் பணம் இல்லாத காரணத்தால்.. கொஞ்ச நாள் நீ இந்த வண்டியை ஓட்டு, பின்னர் காசு தந்து திருப்பி வாங்கிக்கொள்கிறேன் என்றார். அதாவது மாப்பிள்ளை நானில்லை, ஆனால் அவர் சட்டை என்னோடது என்றார். இந்த ஸ்கார்ப்பியோவை இப்போ அவர் தான் வைத்திருக்கிறார் என்றார்.. இனி தேதி வாரியாக இந்த விஷயத்தை அலசுவோம்..

February 26 : இந்த ஸ்கார்ப்பியோ மன்ஸூக் ஹிரனுக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டு, மன்சூக்கை மும்பை ATS விசாரிக்க அழைத்துச்சென்றது.

இந்த மன்ஸூக்கிடம் விசாரித்ததில்.. ஆமாம் இந்த கார் சாம்மின் கார்தான்.. இந்த கார் காணாமல்போனது.. காணாமல் போன அன்று நான் ஒரு வேலையாக மும்பை க்ராஃபோர்ட் மார்கெட்டுக்கு போனேன்.. இது விக்டோரியா டெர்மினஸ் அருகில் இருக்கறது. கார் மக்கர் பண்ணியதால்..ரோடின் நடுவில் அதாவது Mulund-Airoli லிங்க் ரோடில் நிறுத்திவிட்டு ஓலாவில் போய் விட்டேன். பிஸினஸ் முடித்துவிட்டு வந்து பார்த்தால் இரவில் கார் காணவில்லை.. அதான் கார் காணவில்லை என்று ஒரு எப்ஐஆர் கூட பதிவு பண்ணினேன் என்றார். என்ஐஏ எப்ஐ ஆர் பற்றி விசாரிக்க ஆரம்பித்தது .. 🙂 இந்த எப்ஐஆரை பதிவு பண்ண வஸே தானே போலீஸை ப்ரஷர் பண்ணி உடனடியாய் வாங்கியதும் தெரிய வந்தது.

February 27:டெலிக்ராம் அக்கவுன்ட் ஒன்று.. ஜெயிஷ் உல் ஹிந்த்..என்று கூறிக்கொண்டு, மிகப்பெரிய தொகையை, மொனிரோ என்கிற க்ரிப்டோ கரன்ஸி மூலம் பணத்தை மாற்றச்சொல்லி.. மிரட்டல் விட்டது... அதே தினத்தில் மன்சுக், சச்சின் வஸேயுடன் டொயேடோ ப்ராடோ காரில் மும்பை ATS ஆபீஸில் நுழைவதை க்ரைம் ப்ராஞ்ச்சின் சிசிடிவி பதிவு செய்திருந்தது..

மார்ச்2: மன்ஸூக் ஹிரேன்...மஹா முதல்வர் உத்தவ்வுக்கும், அனில் தேஷ்முக்- மஹா உள்துறை மினிஸ்டருக்கு, மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்குக்கும், தானே போலீஸ் சீப் விவேக் பான்ஸல்கருக்கும் கடிதம் எழுதினார்.. NIA என்னை டார்ச்சர் பண்ணுகிறது.. நான் ப்ராது கொடுத்தவன்.. என்னை குற்றவாளியாக NIA பார்க்கிறது என்றார்.மார்ச்4: டாவ்டே என்கிற காந்திவிலி க்ரைம் போலீஸ் ஒருவரிடம் இருந்து போன் வந்தது மன்சூக்குக்கு.. தானே கோட்பந்தர் ரோட்டில் வந்து மீட் பண்ணு என்று.. அதன் பின்னர் ஐந்து மணி நேரத்தில் மன்ஸூக் மாயமானார்.

மன்ஸூக்கின் உடல் கல்வா creek எனப்படும் அரபிக்கடல் பேக்வாட்டர் பகுதியில் கிடைத்தது. மனஸூக் தற்கொலை செய்துகொள்ள கல்வா க்ரீக்கில் குதித்திருக்கலாம் என்று மும்பை போலீஸ் உடனடி ஜோஸியம் சொல்லியது. ஆனால் தற்கொலை செய்து கொள்பவர், வாய் நிறைய துணி அடைக்கப்பட்டு, கோவிடுக்காக மாஸ்க் அணிந்தும், மண்டையில் அடிபட்டும் ஏன் தற்கொலை செய்து கொள்ளவேண்டும்..? என்ற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. NIA எழுப்பியது..

மார்ச்5: மஹாவின் முந்தைய முதல் மந்திரி பத்னாவிஸ் சட்டசபையிலேயே..வஸேயும் மன்ஸூக்கும் இந்த குண்டு வைத்ததில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றார்.இருவரும் தொடர்பில் இருந்தார்கள் என்றார். 

மார்ச்6: மன்ஸூக்கின் குடும்பம், இந்த சாவை ஏற்க மறுத்து.. உடலை வாங்க மறுத்தது. மன்ஸூக் சொன்னது போல்.. அவரை டார்ச்சர் பண்ணி இருக்கிறார்கள் போலீஸ் என்றார்கள்.. அவர் தற்கொலை பண்ண சான்ஸே இல்லை என்றார்கள். மன்ஸூக்கின் போனின் கடைசி லொகேஷன், தனஞ்செய் காவ்டே என்கிற ஷிவசேனை நேதாவின் வீட்டருகில் இருந்ததாய் காட்டியது. தனஞ்செய்யும் மன்சூக்கும் 2017 கேஸ் ஒன்றில்.. மிரட்டி பணம் பறித்த  கூட்டாளிகள். NIA வஸேவை ரிமான்டிலெடுக்க கோரியது.

மஹா அரசு, ஆன்டிலா கேஸ், மன்சூக்கேஸ், திருடப்பட்ட ஸ்கார்ப்பியோ கேஸை மும்பை ATSக்கு மாற்றியது. இதெல்லாம் NIA க்கு வரும்.. வடிவேல் பீச் குதிரை மாதிரி..மார்ச்8: ஆன்டிலா கேஸை NIA கையிலெடுத்தது. இதைவிட சூப்பர் விஷயம் இதோ..

மார்ச்11: தில்லி போலீஸ், இந்தியன் முஜாஹிதீன் ஆசாமியின் திஹார் செல்லில் இருந்து, அம்பானி குடும்பத்துக்கு விட்ட மிரட்டல் மொபைலை பறிமுதல் செய்தது. இந்த செல்லில் இருந்துதான் ஜெய்ஷ் உல் ஹிந்த் டெலிக்ராம் அக்கவுன்டே உருவாக்கப்பட்டது. இந்த செல்லின் ஐபியை மாஸ்க் பண்ண தோர் எனும் ப்ரௌசரை உபயோகித்தனர் குற்றவாளிகள்.. TOR ப்ரௌசர் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஹாக்கர்ஸ், தீவிரவாதிகள் உபயோகிக்கும் ப்ரோசர்.. உங்கள் ஐபி.. காரியர் எல்லாம் மாஸ்க் பண்ணலாம்..

செமல்ல..?  இன்னும் பல திருப்பங்களுடன் அடுத்த பாகம் விரைவில்.#vazegate பார்ட்-3/5.  தொடரும்....                  

பாகம்-4

மார்ச்14:  இந்த ஸ்கார்பியோ பின்னால்  ஒட்டிக்கொண்டே வந்த இன்னோவாவை, NIA பிடித்தனர். அது கிடைத்தது, மஹா க்ரைம் பிராஞ்ச்சில். அது போலீஸ் காராம்.. நம்ம வஸே உபயோகித்ததாம். சுத்தம். பாம் வைக்க போலீஸ் கார். என்ன நாடு இது..? என்று தோன்றுகிறது அல்லவா..? இப்போது சஞ்சய் ராவத் சொல்கிறார்.. வஸே ரொம்பவைம் திறமையான ஹானஸ்ட் ஆபீஸர்ன்னு. ஒத்தை செருப்பை கழட்டி கையில் எடுத்த பொதுஜனம்.. இப்படியான போலீஸை அடிப்பதா.? இல்லை இப்படியான அரசியல்வாதியை அடிப்பதா..? என்று கன்ஃபியூஷனில் அலைவதாக கேள்வி.

சிசிடிவி கேமரா படம் பிடித்ததில்.. மன்ஸூக்கை, வஸே பார்த்து பேசியதும்.. பிபிஈ கிட் போட்ட வஸே ஆன்டில்லியாவில் பாம் வைத்ததுமே தெள்ள தெளிவாக பதிவாகி இருக்கிறது. அடுத்த நாள் NIA வஸே பிபிஈ கிட்டின் உள்ளே அணிந்த ஷர்ட்டையும் கண்டுபிடித்து கைப்பற்றியது.ஐபிஎல் சூதாட்டத்திலும் வஸேக்கு பங்கு உண்டு என்கிறார் பிஜேபியின் ரானே. இதைத்தவிர வஸே வசிக்கும் சொஸைடியின் சிசிடிவி ரிகார்டிங்குகளும் காணாமல் போயிருக்கிறது. மார்ச்15: வஸேவின் க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸிலிருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவில்.. இருந்த சிசிடீவிகளின் புட்டேஜையும் NIA கைப்பற்றியிருக்கிறது.

மார்ச்16: வஸேவின் இடதுகையான போலீஸ்கார் ரியாஸ் காஸியை வைத்து.. சொசைட்டியின் விடியோ ரிகார்டரையே்தூக்கி.. பிப் 17 முதல் பிப் 24 வரையிலான அத்தனை ஃபுட்டேஜையும் ஒரு கடையில் கொடுத்து அழித்தனர். இதைவிட சூப்பர்.. அந்த இன்னோவா, அப்புறம் அந்த ஸ்கார்ப்பியோ கார்களுக்கான போலிநம்பர் ப்ளேட்டை தயாரித்து கொடுத்தது ஒரு கடை. அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதையும் டெலீட் பண்ணிவிட்டுத்தான் அந்த இடத்தையும் விட்டு இவர்கள் நகர்ந்தனர். 

NIA வின் புலனாய்வில்.. முக்கியமாய் ஒரு விஷயம் சிக்கியது. இந்த ஸ்கார்ப்பியோ காணாமல் போகவே இல்லை. இதை வஸே உபயோகித்துக்கொண்டேதான் இருந்திருக்கிறார். ஆனால் கார் ஒணர்.. தொலைந்து போனதாய் எப்ஐஆர் ரெஜிஸ்தர் பண்ண அழுத்தம் தரப்பட்டார் என்கிறது NIA டீம். அந்த அழுத்தமுமே வஸேவின் அழுத்தமே.மார்ச்17: மிகவும் எக்ஸ்பென்ஸிவான மெர்ஸிடஸ் பென்ஸ் கார் ஒன்றை வஸே என்ற சாதாரண அஸிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உபயோகித்ததை போலீஸிலோ, அரசிலோ ஒற்றை கேள்வி கூட கேட்கவில்லை. அந்த காரை இந்த தினத்தில்.. க்ராஃபோர்ட் மார்கெட் ஏரியாவில் பிடித்தனர். அதில் ஸ்கார்ப்பியோ நம்பர் ப்ளேட், மற்ற நம்பர் ப்ளேட்டுகள், 5 லட்சம் கேஷ், மற்றும் ஒரு நோட் எண்ணும் மெஷினையும் NIA கைப்பற்றினர். 

March 18: NIA இதுவரை 5 லக்ஸூரி கார்களை பறிமுதல் செய்திருக்கிறது. ஒரு ப்ராடோ லான்ட் க்ரூஸர்..கண்பத் போஸ்லே என்கிற ஷிவசேனை எம்எல்ஏவின் கார். இதையும் பிடித்து விட.. மொத்தம் 5 கார்கள் மாட்டி இருக்கிறது. இன்னும் இரண்டு கார்களை NIA தேடுகிறது. ஒரு ப்ளூ மெர்ஸிடஸ் மற்றும் ஒரு ஸ்கோடாவும் தேடப்படுகிறது...March 19: மன்ஸூக்கின் பிரேத பரிசோதனையில், மன்ஸூக்கு பின் தலை மற்றும் கழுத்தில்.. ஊமை மொக்கை அடி விழுந்திருக்கிறது. வெளியில் தெரியாத அடியை பிரேத பரிசோதனை சொல்லிவிடும். அதனால், அந்த ப்ரேத பரிசோதனை நடக்கும் போது.. வஸே அந்த ஆஸ்பத்திரியில் வலம் வந்ததை.. சிசிடிவி படம் பிடித்துவிட்டது. அப்போது வஸே இந்த கேஸில் தலையிடாமல் ஒதுங்கி இருக்க அறிவுறுத்தப்படபோதே இத்தனை பிந்தாஸாக மனுஷன் ஆஸ்பத்திரியில் அலைந்ததை.. டீவிக்கள் வச்சு செய்தன..செய்கின்றன..

மார்ச் 20: மிக மிக முக்கியமான திருப்பமாக, மும்பை கமிஷனராக இருந்த பரம்பிர் சிங்கை, ஹோம்கார்டுக்கு மாற்றியது உதவ் தாக்கரே அரசு.. இது சாதாரண ட்ரான்ஸ்பர் இல்லை. இன்னும் உள்ளது உனக்கு என்று பரம்பிர்சிங்தான் இதெற்கெல்லாம் காரணம் என்று.. அவர் தலையை மிஷினில் கொடுக்கும்போது.. பரம்பிர் சிங் உத்தவ் தாக்கரேக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார்... அவர் சொன்னது.. மாசம் நூறு கோடி வசூல் பண்ண சொல்லி டார்ச்சர் தருவது. NCP யின் அனில் தேஷ்முக் என்கிற ஷரத் பவார் ஆசி பெற்ற உள்துறை அமைச்சர். இவர் தான் சச்சின் நேரடியாக எனக்கே ரிப்போர்ட் பண்ண வேண்டும்.. 100 கோடிகள் ஹோட்டல்கள், பார்கள், பப்புகளில் இருந்து மாசா மாசம் எனக்கு பைசா வரவேண்டும் என்று வஸேக்கு உத்தரவிட்டதாக பரம்பிர் சிங்  உத்தவ்க்கு நேற்று எழுதிய கடிதத்தில் சொல்லி இருப்பது மஹாவில் பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டது. 

வழக்கம்போல்.. இதற்கு ஆதாரம் என்ன..? பரம்பீர் மேல் வழக்கு பாயும், அரெஸ்ட் ஆகலாம், வேலை போகும், ஜெயில் என்றவுடன், பரம்பீர் இதை வேண்டுமென்றே ஹோம் மினிஸ்டர் மீது போடுகிறார் என்று NCP களமாடுகிறது. ஷரத் பவார் எத்தனை யோக்கியன் என்று பலருக்குமே தெரிந்ததால்.. இந்திய மக்கள் புன்னகைக்கிறார்கள்... இந்த மந்திரி மீது மட்டும் ஏன் பரம்பீர் சிங் குற்றம் சொல்ல வேண்டும்..? உத்தவ் மீதோ அல்லது வேறு யார் மீதோ ஏன் சொல்லவில்லை என்கிற கேள்விக்கு இவர்களிடம் விடை இல்லை.. அனில் தேஷ்முக் இந்த கேஸில் சிக்கி முக்குகிறார். தாராளமாய் ஷேர் பண்ணவும் 💕#vazegate பாகம்4/5.  தொடரும்.. 

பாகம்-5

இந்த வாஸே விவகாரத்தை முழுமூச்சாய், இணையத்தில் தேடி எழுத காரணம், நம்முடைய ஜனநாயக தூண்களுக்கு, பணத்தின் மீதான பற்றும், சமூக மதிப்புகள் மீதான நம்பிக்கை குறைந்து போனதிலும், இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பாக வணீகரீதியாகிப்போனதும், தேசப்பற்று என்கிற ஒன்று தடாலடியாக உலர்ந்து போனதாலுமே, இதை எழுத முனைந்தேன். இதற்கான காரணங்களை ஆராய்ந்தால், உள்நாட்டில் சதிசெய்ய காத்திருக்கும் சக்திகளும், அதற்கு ஆதரவான வெளிநாட்டு சக்திகளும், அரசுகளும், மதவெறியும், உலக வர்த்தகத்தை மையமாக வைத்து, இந்த தேசத்தை அழிக்க நினைக்கும் மற்ற தேசங்களும் சக்திகளுமே...என்னை எழுத வைத்தது ஒவ்வொன்றாய் பார்ப்போம்...

இந்தியா இந்த கோவிட்-19 ஐ தீவிரமாக போராடி, வர்த்தக போட்டி தேசங்கள், இந்தியா சேதமாகும் என்பதில் மண்ணைத்தூவியதிலும், வாக்ஸினை மற்ற தேசங்களுக்கு இலவசமாய் தந்து, உலகரங்கில் நன்மதிப்பை பெற்றதிலும், எல்லைகளில் உதை வாங்கியதிலும், அடைந்த எரிச்சலை, விஸ்ட்ரான் கம்பெனியை எரித்ததிலும், விசாகப்பட்டினத்தில் உள்ள LG கம்பெனியில் நடந்த சேதங்களாலும், பூனே சீரம் இன்ஸ்டிட்யூடில் தீ பரவியதிலும், மும்பை மற்றும் தேசத்தின் பல இடங்களில், மின்சாரத்தை துண்டித்தும், வெளிநாட்டு முதலீடுகளுக்கு செய்தியனுப்ப முனைந்தது. இதை தாண்டி, பல இணையங்களை தாக்கியழிக்கவும், விவசாய ப்ரோக்கர்களை, இல்லாத சிஏஏ பயங்களை.. உருவாக்கிவிட்டு, தேசத்தில் அமைதியின்மையையும், ட்ரம்ப் இந்தியாவில் இருந்த தினத்தில், வரலாறு காணாத தீவிரவாதத்தை கட்டவிழ்த்து தில்லியை எரிய வைத்த சக்திகள், உள்ளூர் கவுன்ஸிலர் வரை பரவி இருப்பது கவலைக்குரிய ஒரு விஷயம். இதற்கும் இந்த ஆன்டில்லா விஷயத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை கீழே விளக்குகிறேன்.

இந்தியா உலக ஃபார்மஸியானதில் பல தேசங்கள் கடுப்பானது.கார்மைக்கேல் ரோடு, மும்பை என்பது மும்பையின் இருதய பகுதி. அங்கு ஆன்டில்லா டவரில் அம்பானி இருப்பதால் அங்கு மிரட்டல் விட ஒரு போலீஸ் அதிகாரி குண்டு வைத்தது தெளிவாகிவிட்டது. அந்த அதிகாரி, PPE சூட் மாதிரி ஒன்றை போட்டிருப்பது வீடியோவில் தெரிந்தாலும்.. அது PPE சூட் இல்லை, வெடிகளை அல்லது மிக வலுவான இரசாயனங்களிடம் இருந்து பாதுகாப்பவை மாதிரியும் இருப்பதால்.. இதில் பல கேள்விகள் எழுகின்றது. என்ன..? அம்பானிகளிடம் கட்சி தலைமை பேசினாலே, 20-50 கோடிகளை நன்கொடையாக தரும் ஒரு பிஸினஸ்மேன். காரணம், அடிப்படையாகவே அம்பானிகள் பிஸினஸ்மேன்கள். இந்த மாதிரியான லைம்லைட்டில் இருக்காது நகர்ந்து போகவே விரும்புபவர்கள். சரி... அப்படியென்றால் இந்த குண்டுகள் யாரை குறிவைத்தன..? யார் கட்டளைகளால் ?  எந்த நாட்டிலிருந்து..? 

இப்படியான முடிச்சுகள், ஒவ்வொன்றாய் அவிழ்கிறது. ஆன்டில்லா மாளிகைக்கு அருகில், இந்தியாவின் டாப் அணு விஞ்ஞானிகள் கெனீல்வொர்த் எனும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருமே.. மிக மிக மிக முக்கியமானவர்கள். இவர்களை அரசு தன் நிழலில் எப்படி வைத்துக் கொண்டிருக்கிறதோ அப்படித்தான்.. எதிரி நாடுகளும் முழுநேரம் இவர்களை கண்காணிக்கிறார்கள். இவர்கள் கூட இலக்காய் இருக்கலாம் என்கிறது ஆய்வு.இதை பாகிஸ்தான் அல்லது சீனா தாராளமாய் செய்யும் தயங்கவே தயங்காது. எங்கேயோ வாங்கிய அடியை இங்கு திருப்பி தரவும் இருக்கலாம்..

Maroon barrette: இந்தியாவின் மீதான பல்முனை போரை பாகிஸ்தான் தொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. பாகிஸ்தானில் மரூன் பெரே எனும் யூனிட் இருக்கிறது. இந்த யூனிட்டில், ஒரு ப்யூன் கூட DGISI கையெழுத்து போட்டால்தான் பணிநியமனமே வழங்க முடியும். மிகவும், மோடிவேட் செய்யப்பட்ட ராணுவ நிழல் பிரிவு இது. இவர்கள் பேச்சு வார்த்தை என்கிற பெயரில் இந்தியாவோடு நடக்கும்போது.. குண்டு வைப்பதை வழக்கமாகவே வைத்திருந்தார்கள். 2006 RSS அலுவலகம் மீதான தாக்குதல், இந்தியா பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது. அதே இந்தியாவில் தில்லியில் பேச்சுவார்த்தை நடக்கும்போது.. லால் மஸஜித் தாக்குதல்கள் 2007இல்.. அதேபோல்.. 26/11 பேச்சுவார்த்தை சமயத்தில் மும்பை தாக்குதல்கள்.. ஏன் லாகூர் பஸ் விடும்போது கார்கில் தாக்குதல் என்று லிஸ்ட் நீண்டுகொண்டேதான் போகும்... சரி.. இவர்களின் கட்டளைகளுக்கு, இந்திய அரசியல் மற்றும் போலீஸ் துறைகள் அடிபணிந்து.. இந்த தேசத்தின் மீதே தாக்குதல் நடத்த முனைவது.. நம் அரசியல் மற்றும் போலீஸ் அமைப்புகளை இப்படியான கரையான்கள் எப்படி அரித்துவிட்டது என்பதை புலப்படுத்திவிட்டது.

 இதைத்தாண்டி வாஸேக்கு தாவூத்திடம் நெருக்கம் என்று வேறு செய்திகள். அவரின் பாதி என்கவுன்டர்கள், தாவூத் போடச்சொன்ன எதிரிகளோ.. அல்லது போடச் சொல்லாத எதிரிகளையோதான்.. இப்படியான ஆசாமியை சிபாரிசு செய்த ஷிவசேனாவின் பாகிஸ்தான் கூச்சல் வெறும் உதட்டளவுதான் என்பது சத்தமில்லாமல் நிருபணமாகிறது. இறுதி பாகம் சற்று நேரத்தில்...#vazegate பாகம்5/5.                       தொடரும்.....            

 இறுதி பாகம்...

கீழே சொல்லப்பட்டவை, கோவா க்ரானிகிள் என்கிற பத்திரிக்கை, தன்னுடைய தெற்காசிய தீவிரவாதம், மற்றும் தீவிரவாத தடுப்பு இன்டெல்லிஜன்ஸ் விங் மூலமாக, பாகிஸ்தானிலிருந்து, மும்பை போலீஸ் ஒருவருக்கு 2020 இல் போன் வந்தது என்று அலறியது. அதோடு மீடியாவில் பலருக்கும், இந்த நம்பரில் இருந்து கால் வந்ததாகவும் எழுதியது. அதற்கான காரணம் அர்னபை அமைதியாக்கவும், வேறு சில நிழல் நடவடிக்கைகளுக்காவும் என்று எழுதியது. இது எத்தனை தூரம் உண்மை என்பது தெரியவில்லையென்றாலும்.. அந்த ஃபோன் நம்பர் இதுதான் 0092306####310 என்றும் எழுதியது.

இதை மேலும் ஆராய ஆரம்பித்தது கோவா க்ரானிகிள். இந்த நம்பர், ஸ்பெஷல் ஸ்குவாட் மெரூன் பெரட்டின் இஷ்க் என்கிற அதிகாரியின் காதோடு போய் நின்றது. அங்கிருந்து இங்கு எந்த போலீஸ் அதிகாரிக்கு கால் வந்தது என்பதை கண்டறியமுடியவில்லை என்றது. இது வாஸேவா என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது, என்றும் சொன்னது. ஆனால், நடந்தவைகளை பார்க்கும்போது.. வாஸேவின் அர்னப் கைது, ஹ்ரிதிக்-கங்கணா.. போன்ற ஹை ப்ரொஃபைல் கேஸ்களால்.. இது வாஸேவாக இருக்கலாம் என்கிறது. இது போலீஸ் கமிஷனர் பரம்பீரின் மூக்குக்கு கீழே நடந்ததால்.. இவர்களைத்தவிர பல வேறு அதிகாரிகளுமே சம்பந்தப்பட்டிருக்கலாமோ.? என்றும் ஹேஷ்யம் சொல்கிறது. இந்த ஆன்டில்லா கூட, பணம் பிடுங்குவது, அழிப்பது.. அல்லது கெனில்வொர்த் அதிகாரிகளை அழிப்பது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் பதறுகிறது.

இது கான்ஸ்பிரஸி தியரி போல இருந்தாலும் NIA வாஸே, பரம்பீரின் தொடர்புகளை தூண்டி துருவி விசாரிக்கிறது. இதைத்தாண்டி அரசியல்வாதிகளை அதுவும் வாயும், புத்தியும் கோணலுமான சிலரை எப்படி தண்டிக்கிறது என்று பார்ப்போம்.#vazegate முடிந்தது.  ஜெய் ஹிந்த்            .

கொஞ்சம் நீளமான பதிவுதான்! ஆனால் விஷயத்தைப் புரிந்துகொள்ள, மொத்தமாக ஒரே இடத்தில் தொகுத்துப் படிக்க, ஒரு reference ஆக பிரகாஷ் ராமஸ்வாமிக்கு நன்றி தெரிவித்து முடிக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.             .... 

சண்டேன்னா மூணு! #அரசியல் #அராஜகஅரசியல் #காமெடிஅரசியல்

பொதுவாக ஊடக விவாதங்களில் அடிக்காத குறையாக, குரலை மட்டும் உயர்த்திப் பேசுகிற SP  லட்சுமணன் போன்ற ஆசாமிகளை நான் அதிகம் சட்டை செய்ததே இல்லை. தான் சொல்வதுதான் சரி என்கிற மாதிரி ஒரு அதிகாரத்தொனியுடன் பேசுகிறவர்களை வேறென்ன தான் செய்வதாம்? ஆனால் இந்த 27 நிமிட வீடியோவில் லட்சுமணன் தன்னுடைய அஜெண்டாவில் இருந்து தமிழக அரசியல் களத்தை எப்படி பார்க்கிறார் என்பதை நன்றாக வெளிப்படுத்திய விதம் இங்கேயும் பகிர வைத்தது. 


முதலாவது, இங்கே இரு கழகங்களும் வலிமையோடு இருக்க வேண்டும், அப்படி  இருந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று மாநிலக்கட்சிகளை உயர்த்துப் பிடிக்கிற உளுத்துப்போன ஒரு வாதம்! தேசியக்கட்சிகள் வேண்டாம் என்பது உட்கிடக்கை. அடுத்தது, பாமகவை தாஜா செய்ய வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு செய்ததில் அதிமுக இதர பெரிய சமூகங்களுடைய கடுமையான அதிருப்தி, எதிர்ப்பை சம்பாதித்து இருப்பதாக. தேமுதிக வெளியேறியது டிடிவி தினகரன் தனித்துப்போட்டி இவையெல்லாம் அதிமுக வாக்குகளை பிரிக்கும் என்ற கருத்து இப்படியான விஷயங்களில் கொஞ்சம் தெளிவுடன் பேசுகிற மாதிரி கதம்பமான ஒரு நேர்காணல். மாநிலக்கட்சிகள் உருவாக, வளர்ந்ததற்கான காரணங்கள் எல்லாமே அடிபட்டுப் போனபிறகு, மாநிலக்கட்சிகளுடைய உபயோகம் முடிந்து விட்டதாகவே நான் பார்க்கிறேன். உங்களுடைய கருத்து என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்!


கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு ஜோதிமணி அரசியல் செய்கிற விதமே தலைகீழாக மாறிப்போய் விட்டது.அம்மணியின் ஆட்டத்தால் சத்தியமூர்த்தி பவனே அதிர்ந்துபோய்க் கிடப்பதில் "கடந்த 2016 கரூர் சட்டமன்றத் தேர்தலில் 401 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பேங்க் சுப்பிரமணியத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சண்டித் தனம் செய்து பழிவாங்கிய ஜோதிமணி தொண்டர்களுக்காக ரத்தம் கொதிப்பதாக கூறுவுது ஒரு அரசியல் மோசடி. ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்துகிற ஜோதிமணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கொதித்திருக்கிறார் கோபண்ணா 

ஏற்கெனவே சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி திமுக MLA கு க செல்வம் பிஜேபியில் ஐக்கியமான நிலையில் இன்றைக்கு திருப்பரங்குன்றம் தொகுதி திமுக MLA டாக்டர் சரவணனும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டார் என்கிறது செய்தி. அரசியலில் இந்தமாதிரி காமெடிகள் சகஜம், செந்தில் மாதிரி காமெடியன்களும் அரசியலுக்கு வந்து சேருவது  காமெடிக்கொடுமை. என்னென்ன காமெடிகளை இனிமேலும் பார்க்கப்போகிறோமோ?    

படித்ததில் பிடித்தது: 

இந்தியா டுடேவின் "south conclave"ல் நேற்று (3/13/21) மூன்று நேர்காணல் தொடர்ச்சியாக நேரலையில் காண நேர்ந்தது. மூன்று தமிழர்கள். ஒருவர் திராவிடத்தின் போர்வாள். மற்ற இருவரும் பிஜேபியில் மத்திய அமைச்சர்கள். 

திராவிடத்தின் போர்வாள், உள்ளே வந்ததும் அவருக்கு ராஜ மரியாதை கொடுக்கப் பட்டது. கிட்டத்தட்ட தூக்கிக் கொண்டு போய் உட்கார வைத்து "அடுத்த முதல்வர் நீங்கள் தான்" என்ற ஏத்திவிட்டனர். அவரும் அது ஏதோ ஒரு தேர்தல் மேடைப் பிரச்சாரம் போல தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருந்தார். வழக்கமான "corruption commission collection" என்ற உலகப்புகழ் பெற்ற வாக்கியத்தையும், "நான் ஆதாரத்தோடுதான் பேசுவேன்" என்றும் பேசினார். அதற்கப்புறம் நடந்த கேள்வி பதில்  "காந்தகண்ணழகி, இந்தா இங்கே பூசு" வகை. மூன்றே மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன. மூன்றும் "அடுத்த முதல்வர் நீங்கதான். என்ன செய்வீங்க" என்று தும்பைப்பூவால் வருடி விடும் கேள்விகள். 

வலிமையற்ற தோளினாய் போ போ போ, மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ என்று பாடத் தோன்றியது.

அடுத்து வந்தவர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர். What a change! Night watchman அவுட் ஆகி விட்டு போனபின் சச்சின் டெண்டுல்கர் ஆட வந்தது போல இருந்தது இவர்கள் இருவரும் கேள்விகளை கையாண்டது. அவர்களின் திட்டத்தை எவ்வளவு அழகாக விவரிக்கின்றனர்! திட்டமிடல் at its best. அதை விவரிக்கும் திறன் அதனினும் அருமை.நிர்மலா சீதாராமன், தமிழ் நாட்டுக்கு கிடைத்திருக்கும், தொழிற்சாலைகளுக்கான முதலீடு பற்றியும் மற்ற சிக்கலான விஷயங்களையும் அனாயாசமாக பேசிக்கொண்டிருந்தார். இப்படி ஒரு திறமையைக் கண்டறிந்ததற்காக மோடிக்கு பெரிய நன்றி.

அடுத்து வந்தவர் வெளியுறவுத்துறை அமைச்சர் S.ஜெய்ஷங்கர். ப்ப்பா என்ன தெளிவு, என்ன துணிவு. சீனாவுடனான சண்டை பற்றி பேசுகையில் "அவர்கள் கை கொடுத்தா நானும் கை கொடுப்பேன், கை ஓங்கினா கையை எடுப்பேன்" என்பதை ஆங்கிலத்தில் "if you extend your hand I will shake hands . But if you point a gun at me, I will pull my gun. That is logical., isnt" அதிரடியாக சொன்னார். "இந்த நாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று எல்லைக்கு வெளியில் இருந்து, அவர்கள் வசதிக்காக, சொல்வதை ஒருநாளும் கேட்க மாட்டோம்" என்று சொல்லும்போது பாரதியின் "வெற்றி கொண்ட கையினாய் வா வா வா விநயம் நின்ற நாவினாய் வா வா வா" என்று பாடத்  தோன்றியது.மறுபடியும், இப்படி ஒரு திறமையைக் கண்டறிந்ததற்காக மோடிக்கு பெரிய நன்றி.What a contrast between the two sets of leaders! 

தந்தை, மகன் பேரன் என்று தலைவர்களை ஒரே முகவரியில் இருந்து கொடுக்கும் கட்சிக்கும், மூலை முடுக்கெல்லாம் நல்ல திறமையைத் தேடி, தகுதிக்கு மதிப்பு கொடுக்கும் கட்சிக்கும் எத்தனை வித்தியாசம். மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். தமிழரின் பெருமை நிர்மலா சீதாராமன் மற்றும் S .ஜெய்ஷங்கர் வகை மட்டுமே. அப்பன் பெயரை சொல்லி பதவிக்கு வருபவர்கள் அல்ல. 

ஒழியட்டும் மன்னராட்சி! நிமிரட்டும் தமிழகம்! என்று முகநூலில் புளகாங்கிதப்பட்டிருக்கிறார் எஸ் சண்முக நாதன்

மீண்டும் சந்திப்போம்.

இட்லி வடை பொங்கல்! #78 பல்லிளிக்கும் #பகுத்தறிவு #தேர்தல்அறிக்கை #தேமுதிக

 பதினைந்து வருடங்களுக்குள் தமிழ்ப் பதிவுலகம் மற்றும்   இணையச்சூழல் எவ்வளவு மாறிவிட்டது! தட்டிக்கேட்க ஆளில்லாமல் சண்டப்பிரசண்டர்களாக மாவீரர்களாக வலம்வந்த திராவிட கழகங்கள், திரும்பின பக்கமெல்லாம் முட்டுச்சந்தில் மூக்கில் குத்து வாங்கிக் கொண்டிருக்கிற காலமும் வந்தே விட்டது என்றால் என்ன சொல்வீர்கள்? 


இந்த 15 நிமிட நையாண்டி மிகவும் நன்றாக இருக்கிறது. "மாவீரன் என்ற இந்தக் குறும்படத்தைப் பார்த்தேன் (15 நிமிடம்). டாக்டர் சூரமணி, ஆரிய சதியால் தலைவர் தாக்குதல், சுப்ரமணி செட்டியார்.. என்று போலிப் பகுத்தறிவு கும்பலை செமத்தியாக கிண்டல் செய்துள்ளார்கள். அங்கங்கு ஃபார்முலாத்தனம் தெரிந்தாலும், இந்து எதிரிகளைக் காய்ச்சி எடுக்கும் இத்தகைய குறும்படங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். இதைவிட அதிகமாக இன்னும் நேர்த்தியாக மிகப்பல படங்கள் வரவேண்டும். இயக்குனர் நண்பர் Jithu Aravamudhan  ஜித்துவுக்குப் பாராட்டுக்கள்" என்று முகநூலில் வாழ்த்தியிருக்கிறார் பெங்களூரு ஜடாயு.


தேர்தல் வாக்குறுதிகளும் சரி, தேர்தல் அறிக்கைகளும் சரி வெறும் கண்துடைப்பு, பப்ளிசிட்டி ஸ்டன்ட்! இருந்தாலும் கழகங்கள் தொடர்ந்து அரங்கேற்றுகிற இந்த நாடகத்தைக் கண்டு மயங்குகிற, வாக்களிக்கிற இளிச்சவாயர்களும் அதிகம் என்பதற்குமேல் என்ன சொல்ல?


தேமுதிக பக்குவமில்லாத அரசியல் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறாராம்! தேமுதிக பாவம்! வைட்டமின் இல்லாமல் தனித்து நிற்கவும் திராணியற்று எங்கே போனாலும் முட்டுச்சந்தாகவே இருப்பது காலம் செய்த் கோலம். அதேநேரம் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியை அதிமுக கூட்டணியை விட்டு வெளியேற விட்டது அதிமுகவும் பக்குவமற்ற அரசியல் செய்வதாகவே எனக்குப் படுகிறது.

மீண்டும் சந்திப்போம்.

மம்தா பானெர்ஜி நாடகம்! தேமுதிகவின் தற்கொலை முயற்சி! நாம் தமிழர் கட்சி சீமான்!

தோற்று விடுவோமோ என்கிற பயம் வரும் போதெல்லாம் அரசியல்வாதிகள், தங்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடகம் நடத்துவது, நம்மூர் அரசியலின் வாடிக்கையாகிப்போன வேடிக்கை. லேட்டஸ்ட்டாக அந்த நாடகத்தை நடத்தி அனுதாபம் தேட முயற்சித்திருப்பவர் வங்கத்தின் பெண்புலி என்று சொல்லிக்கொள்கிற மம்தா பானெர்ஜி. நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் 18 கோவில்கள் மற்றும் ஒரு மசூதிக்கு விசிட் அடித்திருக்கிறார். முதல்முறையாக தன்னுடைய பிராமண அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டது பலவீனத்தின் முதல் அடையாளம். அதேமூச்சில், ஒரு தாக்குதல் நாடகமும் நடத்திக் கொண்டது மிக வினோதம்.


வீடியோ 21 நிமிடம். "தாக்குதல் நடந்ததாக கூறி மக்களிடம் அனுதாபம் தேட முதல்வர் மம்தா பானர்ஜி முயலுகிறார். தாக்குதல் முயற்சி, சதி திட்டம், கொலை முயற்சி இது எல்லாமே தோல்வியின் வெளிப்பாட்டை காட்டுகிறது. அந்நேரத்தில் போலீஸே இல்லை என மம்தா பானர்ஜி கூறுவதை கேட்டால் சிரிக்கதான் தோன்றுகிறது. தேர்தல் வெற்றி பெற முடியாத நிலையில் அதனை மறைக்கவே இதுபோன்ற நாடகத்தை அவர் அரங்கேற்றுகிறார்".என்று கிண்டலாகச் சொல்கிறார்  சோனியா காங்கிரசின் அதிர் ரஞ்சன் சவுத்ரி. 


"Not even one Police official was present. 4-5 people intentionally manhandled me in presence of public. No local police present during program not even SP. It was definitely a conspiracy. There were no police officials for 4-5 hrs in such huge public gathering" says WB CM இது ANI twit. மம்தா சொல்வது நம்புகிற மாதிரியா இருக்கிறது?

இதுவும்கூட பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த உத்திதானோ? இங்கே தமிழகத்திலும் இப்படி ஒரு மலினமான ஸ்டன்ட் அரங்கேறுமோ?  


கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவுக்கும் கூட களம் எப்படி யதார்த்தம் எப்படி என்பது புரிந்திருப்பது மிக மிக ஆச்சரியம்! 

ஆனால் ரங்கராஜ் பாண்டேவுக்குத் தன்னை அரசியலில்  முதிர்ச்சியான சாணக்யனாகக்  காட்டிக்கொள்வதில் அங்கங்கே கொஞ்சம் சறுக்கல் ஏற்படுகிறதோ? 

ரங்கராஜ் பாண்டே தேமுதிகவின் தற்கொலை முயற்சி பற்றி விளக்கும் 45 நிமிட வீடியோ. மனைவி, மச்சான், மக்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது எத்தனை சத்தியமான வாக்கு! ஆனால், பாண்டே கொஞ்சம் சொன்னதையே திருப்பிச் சொல்லி அறுக்கிறார் என்று முகநூலில் ஒரு கமென்ட் பார்த்தேன். அரசியல் என்றாலே ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்ப பேசுவது, செய்வது தானே!   


என்னய்யா இது.. பாவம் ஏதோ ஒளறிகிட்டு அலையுதுன்னு பார்த்தா.. Narayanan Swaminathan ஜி.. பொசுக்குன்னு முழுசா மரை கழண்ட கேஸு.. அடுத்த படிய ஹாஸ்பிடலில் அடமிட்தான் பண்ணனும்... இல்லைன்னா துணியை கிழிச்சுண்டு அலையும்னு சொல்லிட்டாரு..? என்று முகநூலில் அதிசயிக்கிறார் திருமதி எஸ்.பிரேமா.  .

_________________

ஒரு மருத்துவ நண்பர் சொன்னார் சீமானுக்கு இருப்பது mythomania என்ற வியாதி.. 

பொதுவாக எல்லா மனிதர்களும் எப்போதாவது தேவை ஏற்படும் போது ஒன்றிரண்டு பொய்கள் சொல்வது சாதாரணமானது தான். ஆனால் தேவையே இல்லாமல் தான் பேசும் எல்லா விஷயங்களிலும் பொய் கலந்து பேசுவது என்பது ஒரு மனோவியாதி. இவர்களை pathological liar என்பார்கள்.இவர்களால் பொய் கலக்காமல் பேசவே முடியாது. Klepto mania என்று திருடும் வியாதி உண்டு.. பணக்கரர்களாக இருப்பார்கள்.. ஆனால் சின்ன சாக்லேட்டை திருடுவார்கள்.. அதை காசு கொடுத்து வாங்க முடியும். ஆனால் அந்த திருட்டுத்தனம் தரும் த்ரில் அதனால் சுரக்கும் ஹார்மோன்களுக்கு அடிமையாக இருப்பார்கள். 

அதே போலத்தான் ரசிகர்கள் அடிக்கும் விசிலுக்கும் கைதட்டலுக்கும் அது கொடுக்கும் போதைக்கும் அடிமையாக ஆகிவிட்டார் சீமான்.. அதனால் ஓரிருவர் இருக்கும் பேட்டியில் கூட பொய் பேசாமல் அவரால் இருக்க முடிவதில்லை.. ஒரே பொய்யை சொன்னால் அதே ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை எனும் போது புதிது புதிதாக பொய்களை இட்டு கட்டுகிறார்.. இது முற்றிப்போனால் மனநல மருத்துவமனையில் சேர்ப்பது தான் ஒரே தீர்வு என்றும் அவர் கூறினார்.

Google செய்து  கிடைத்த தரவுகளை பார்த்தால் பத்து பொருத்தமும் அப்படி பொருந்துகிறது..!

மீண்டும் சந்திப்போம்.  

சண்டேன்னா மூணு! #அரசியல் #தேர்தல்காலஅரசியல் #முடிவேஇல்லாதகாமெடி

2021 தேர்தல் களத்தில் தமிழ்நாட்டின் தனித்துவம் இப்படி ஆக இருக்கிறது::: நாம் தமிழர் கட்சிக்குள் RSS புகுந்து விட்டதாக அமீர் கூறியதை தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியில் ஹிந்து முன்னனி புகுந்து விட்டதாக தினகரனும் மக்கள் நீதி மய்யத்தில் பஜ்ரங் தள் புகுந்து விட்டதாக திருமா வளவனும், வைகோவுக்குள் விஸ்வ ஹிந்து பரிஷத் புகுந்து விட்டதாக சீமானும் கூறினார்கள்.தொடர்ந்து அதிமுகவுக்குள் சங் பரிவார் அமைப்புகள் புகுந்து விட்டதாக ஸ்டாலினும், திமுகவுக்குள் பாஜக புகுந்து விட்டதாக சவுக்கு சங்கரும் கூறினார்கள்.ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் என்ன புகுந்தது என்று எனக்கே தெரியவில்லை என்று அறிவாலய வாசலில் கையில் பட்டியலுடன் நின்று கொண்டிருந்த KS அழகிரி கண்ணீர் மல்க கூறினார்! நிஜந்தானோ என மயங்க வைக்கிற ஒரு பகடியுடன் சண்டேன்னா மூணு பக்கங்களில் தொடரலாமா? நன்றி சிவா! via FB


சீமானின் நாம் தமிழர் கட்சி ஒன்றைத்தவிர, தனிக்கட்சி ஆரம்பித்து போணியாகாத சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, புதிய தலைமுறை சேனலின் ரவி பச்சமுத்து நடத்தும் IJK , அப்புறம் சட்டப்பஞ்சாயத்து இயக்கம், கலாம் பெயரை வைத்துக் கட்சி ஆரம்பித்து நடத்த முடியாத பொன்ராஜ் என்று ஒரு சிறுகும்பல் கமல் காசரோடு கைகோர்த்துக் கொண்டு, தொகுதிப் பங்கீட்டையும் முடிவு செய்துவிட்டார்கள் என்பது நிகழ் நேரக்காமெடி! இவர்களோடு இன்னும் சில உதிரிகள் வந்து சேரலாம் என்கிறார்கள்! இந்த லட்சணத்தில் "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல" என எழுதி வாசலில் மாட்டுங்கள், நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் என கமல் காசர் ட்விட்டரில் கொதித்து எழுந்தாராம்!  காலக்கொடுமை! வேறு சொல்வது?


பிரதமர் நரேந்திர மோடி கொல்கொத்தா பிரிகேட் மைதானத்தில் இன்றைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருக்கிறார். சினிமா நடிகரும் திரிணாமுல் காங்கிரசின் MPயாக இருந்தவருமான மிதுன் சக்ரவர்த்தி பிஜேபியில் சேர்ந்து விட்டார்.நரேந்திர மோடி இங்கே பேசிக் கொண்டிருக்குவிலை உயர்வுக்கு ம் அதேவேளையில் சிலிகுரியில் மம்தா பானெர்ஜி, சமையல் கேஸ் விலாய் உயர்வுக்கு எதிராக பாதயாத்திரை ஸ்டன்ட் நடத்திக் கொண்டிருக்கிறார். நரேந்திர மோடி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும், மம்தா பானெர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும்.இடையிலான தேர்தல் யுத்தம் களைகட்டுகிறது என்று யாரோ சொன்னார்கள்! இங்கே தமிழகம் மாதிரி அழுது வடியவில்லை!

'தங்கக் கடத்தலில் கேரள முதலமைச்சர், அவருடைய மூன்று கேபினட் சகாவுகள், சட்டசபை சபாநாயகர் அன்றைய தனிச் செயலாளர் ஆகியவர்கள் நேரடியாகத் தொடர்புள்ளவர்கள்."சொப்னா சுரேஷ் கொடுத்திருக்கும் வாக்குமூலம். கேரள அரசியலில் நிறைய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலே வீடியோ 21 நிமிடம்.
கேரளத்தில் கூட தேர்தல்களம் சூடேறிவிட்டது.

மீண்டும் சந்திப்போம்.

இட்லி வடை பொங்கல்! #77 தேர்தல் களமும் #கூட்டணி கோமாளித்தனங்களும்!

பிரசாந்த் கிஷோர் கொடுக்கிற தெம்பிலோ என்னவோ, திமுக,கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு விஷயத்தில் மிகவும் கறாராக இருப்பதில் சோனியா காங்கிரஸ் உள்ளிட்ட உதிரிக்கட்சிகள் அத்தனையுமே விரக்தியின் உச்சத்தில் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. Pseudo Seculars சாயத்தை வெளுக்க அசாதுதீன் ஒவைசியின் AIMIM கட்சிவேறு தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் போட்டி என அறிவித்து, சிறு பான்மைக் காவலர்கள் வயிற்றில் புளி கரைத்திருக்கிறது.    

பானாசீனா இந்தத் தேர்தல் முக்கியமானது, இதில் கோட்டைவிட்டால் பாஜக காங்கிரசின் இடத்தைப் பிடித்து விடும் என்று எச்சரித்திருப்பதாக செய்தி! இதற்கு பொழிப்புரை மிக எளிது:: பேசாமல் திமுக கொடுக்கிற தொகுதிகளை காங்கிரஸ் வாங்கி கொண்டுவிட வேண்டும் என்பதற்கு மேல் செட்டியார் எச்சரிக்கையில் சாரம் எதுவுமில்லை.


விசிக, CPI இரண்டுமே அதிருப்தியில் இருந்தாலும், 6 சீட் என்பதை ஒப்புக்கொண்டுவிட்டன. இப்போது வைகோவின் மதிமுகவுக்கும் 6, மார்க்சிஸ்டுகள் ஒத்து வந்தால் அதே 6 என்று முடிவாகலாம். சரியென்றால் வா இல்லையென்றால் போ என்று சொல்லாமல் சொல்லி காங்கிரசுக்கு, ஆறுதலாக அதிமுக கூட்டணியில் பிஜேபிக்கு 20 தொகுதிகள் என்று கொடுத்திருப்பதுபோல அதிகபட்சம் 20 கிடைக்கலாம். போனால் போகிறதென்று கன்யாகுமரி லோக்சபா தொகுதியும்! (இடைத்தேர்தல்)


சேகர் குப்தா இந்த 20 நிமிட வீடியோவில் நரேந்திர மோடி அரசை /அரசியலைத் தடுத்து நிறுத்த, வெட்டி ஜம்பங்கள் காட்டும் ராகுல் கரண்டியால் முடியவே முடியாது என்று விவரித்துச் சொல்கிறார். சோனியா காங்கிரசுக்கே அது தான் நிலைமை என்றால், சனாதனத்தை வேரறுக்கவே குறைவான தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம் என்று சொல்லும் திருமாவளவன், அதையே கொஞ்சம் பாலிஷ் போட்டு எச்சரிக்கும் பானாசீனா இவர்களெல்லாம் எந்த மூலைக்கு?!  


கமல் காசர் தலைமையில் மூன்றாவது அணி அமைத்தே தீருவோம் என்று சரத்குமார் அயராது உழைக்கிறாராம்! கமல் காசரோ காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கிறார்         , தம்பி  திருமா வந்துசேர வேண்டிய இடம் இது என்று தன்னைச் சொல்லிக் கொள்கிறார். செட்டியார் ஏன் காங்கிரஸ் அழிவுப்பாதையில் போய்க் கொண்டிருக்கிறது என்று எச்சரித்தார், நல்லவேளையாக திருமா கமலுக்கு நன்றி சொன்னதோடு ஒதுங்கி கொண்டார்  என்று சேர்த்தே புரிந்து கொள்ள முடிகிறதா? 

திமுக கூட்டணி நிலவரத்தைவிட அதிமுக கூட்டணி கள நிலவரம் சற்றே தேவலை! பாமக, பாஜக என இரண்டு விடாக்கண்டர்களைச் சமாளித்து உடன்பாடு கண்டாகி விட்டது. ரொம்பவுமே முறுக்கிக் கொள்கிற தேமுதிகவுக்கு இன்னமும் கதவைத் திறந்தே வைத்திருக்கிறது. இதைத்தவிர தமாக, உள்ளிட்ட 5 சிறு கட்சிகளுடன் உடன்பாடு செய்துகொள்வதில் பிரச்சினைகள் பெரிதாக இல்லை.

இந்தத் தேர்தலில், கூட்டணிக்கணக்குகளில் பரிதாபமாக தொங்கிப்போய் நிற்பது வைகோவும் இன்னமும் அவரை நம்பி இருக்கிற மதிமுக என்கிற கட்சியின் கொஞ்சநஞ்ச எச்சமும் தான்! 6 சீட் மட்டும் தான் என்பதைவிட, திமுக சின்னத்தில் தான் போட்டி என்றாகி  நிற்பது ஆகப்பெரும் பரிதாபம்!


மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். வைகோ மீது திமுக பழிசுமத்தியபோது அதை தாங்காமல் உணர்வுகொண்டு தீ குளித்தவர்களின் எண்ணிக்கையை விட இன்று வைகோ திமுகவிடம் பெற்ற சீட்டு குறைவு.. அந்த தீக்குளித்தவர்களின் ஆத்மா இன்று வைகோவை மனதார வாழ்த்தும்.. #சுயநலசகுனி
Image

தொடர்புடைய பழைய பதிவு::

வைகோ முடிவு--ஒரு அரசியல் தற்கொலை.....?

மீண்டும் சந்திப்போம்.