மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் தெரியாத ராகுல் காண்டி! கள நிலவரம்!

போகிற இடங்களிலெல்லாம் RSS, பிஜேபி மீது சேற்றை வாரியிறைப்பதை ஒரு வாடிக்கையாகவே ராகுல் காண்டி வைத்திருக்கிறார். 50 வயதுக்கு மேலாகிவிட்டது. 17 வருடம் எம்பியாகவும் காலம்தள்ளி விட்டார். ஆனாலும் ராகுலுக்கு வரலாறும் தெரியவில்லை, அரசியல் செய்யவும் தெரியவில்லை என்பது அவரைப்  பெற்றெடுத்த சோனியா வாங்கிவந்த சாபம்! 


"இந்தியாவில் இரண்டு சித்தாந்தங்கள் உள்ளன. ஒரு சித்தாந்தம், எல்லோரும் எனக்குக் கீழே என்கிறது. அதுதான் ஆர்.எஸ்.எஸ், மோடி, அமித் ஷாவின் சித்தாந்தம். இன்னொரு சித்தாந்தம் சகோதரத்துவம், பாசம், மரியாதை என்கிறது. அதைத்தான் நாங்கள் நம்புகிறோம்.என்னுடைய பிரச்சினை என்னவென்றால் இவ்வளவு தொன்மையான பண்பாட்டு, பாரம்பரியம் கொண்ட மக்களின் பிரதிநிதியான தலைவர்கள், அமித் ஷா, மோடி உள்ளிட்டோரின் காலில் விழுந்து கிடக்கிறார்களே என்கிற கோபம் எனக்கு வருகிறது". என்று நேற்றைக்கு சேலத்தில் நடந்த  திமுக கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காண்டி பேசியிருப்பதாக இந்து தமிழ்திசை செய்தி.


Congress leader Rahul Gandhi attacked Rashtriya Swayamsevak Sangh (RSS) in a tweet on 25 March claiming that it does not have the values of a family. In his column, Arun Anand talks about the cordial relationship between the Congress party and the RSS from the early 1960s and how the party's veteran leader Dau Dayal Khanna triggered the Ram Janmabhoomi movement in the early 1980s.இந்த 6 நிமிட வீடியோவில் அருண் ஆனந்த் என்கிற ஆராய்ச்சியாளர் காங்கிரசுக்கும் RSS அமைப்புக்கும் இடையில் சுமுகமான உறவே இருந்தது என்று விளக்குகிறார்.

Stanley Rajan 8ம . · தமிழர்கள் யார் முன்னும் தலை குனிந்தது இல்லை ஆனால் அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அடிமையாகிவிட்டார்கள் ; ராகுல்காந்தி ஒரு தேசிய தலைவனாக இல்லாமல் மதிகெட்ட நாம் தமிழர் தும்பி போல் கத்தி கொண்டிருக்கும் ராகுலை கண்டால் இப்பொழுதெல்லாம் பரிதாபம் வரவில்லை, எரிச்சலே மிஞ்சுகின்றது காங்கிரஸ் என் இப்படி நாசமானது என்பது இப்பொழுதுதான் புரிகின்றது திமுக, அதிமுகவின் கடந்தகால வரலாறு கூட இந்த தத்தி தலைவனுக்கு தெரியவில்லை, சரி அரசியல்தான் தெரியாது, பாட்டி தந்தை கடந்துவந்த பாதையுமா ஒருவனுக்கு தெரியாது? கருணாநிதி இந்திரவின் காலில் விழுந்து அடங்கிய வரலாறு என்ன? 1977க்கு பின் ஒரு வார்த்தை கருணாநிதி இந்திராவினை எதிர்த்திருப்பார்? மிசாவில் திமுகவினரை நொறுக்கி தள்ளி , சர்க்காரியா கமிஷனை ஏவிவிட்டு கருணாநிதியினை தன் கண் அசைவில் உருட்டி வைத்திருந்தார் இந்திரா., மறுக்க முடியுமா? அப்பக்கம் ராமசந்திரனை மிரட்டி தனிகட்சி தொடங்க வைத்தது முதல், ராமசந்திரனின் ரகசியம் அறிந்த டிஜிபி மோகன் தாஸை கொண்டும் இன்னும் ரே கமிஷன் எல்லாம் வைத்தும் அவரை கட்டுக்குள் வைத்திருந்தார் இந்திரா.ஆம், திமுக அதிமுக இரண்டுமே இந்திராவின் காலடியில் பணிந்து சுருண்டிருந்த காலங்கள் இருந்தன ‌ ராஜிவ் ராமசந்திரனை அழகாக கையாண்டார், பிரபாகரனுக்கு எதிராக அமைதிபடையினை அனுப்பிவிட்டு ராமசந்திரனோடு சென்னையில் மேடையேறும் வித்தை ராஜிவுக்கு தெரிந்திருந்தது இங்கு யார் இந்திராவினை, ராஜிவினை பகிரங்கமாக எதிர்த்தார்கள்? எல்லாம் வாய்சவுடால் விட்டுவிட்டு அவர்கள் காலடியில் கவிழ்ந்து கிடந்தார்கள் இதெல்லாம் தெரியாமல் தமிழ்நாட்டுக்கு வந்து ஜோதிமணி எழுதி கொடுப்பதை உளறும் ஒரு முட்டாள் தலைவனை தேசியவாதிகள் வன்மையாக கண்டிக்கின்றோம்.ராகுல் தமிழக அரசியல்வாதி அல்ல, அவர் அகில இந்திய அளவில் எதிர்கட்சி தலைவராக அறியபடும் பொழுது இப்படி திராவிட, தமிழ்தேசிய கும்பலை போல் பேசிதிரிவது கண்டிக்கப் பட வேண்டிய செயல். ஒன்று அவர் காங்கிரஸ் தலைவராக தேசியம் பேசட்டும், இல்லை இப்படி பேசுவதாக இருந்தால் நாம் தமிழர் கட்சியில் காங்கிரஸை இணைத்துவிட்டு பேசட்டும் எத்தனையோ முட்டாள்களை தேசிய அரசியலில் காங்கிரஸ் கண்டிருந்தாலும் ராகுல் போல மகா மோசமான ஒரு அப்பாவி முட்டாளை எங்கும் கண்டதில்லை காணவும் முடியாது இங்கு பாஜகவுக்கு சமநிலை கொடுக்க காங்கிரஸ் அவசியம், காங்கிரஸ் மீண்டெழ ராகுல் அரசியலை விட்டே அகற்றபடுதல் மகா அவசியம்

வானதி சீனிவாசனை துக்கடா அரசியல்வாதி என்று துச்சமாகப்பேசியதோடு கமல் காசரின் ம.நீ. ம நிறுத்திக் கொள்ளவில்லை. மய்யத்தின் கொக்கரிப்பு கொஞ்சமும் குறையவில்லை. 





பிஜேபி மய்யத்தின் குமரவேலுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. என்றாலும் மய்யம் அடங்குவதாக இல்லை.ஆக, கமல் காசருடைய சாயம் மெல்ல மெல்ல வெளுத்து வருகிறதே, கவனிக்கிறீர்களா?


பொன்மாலை பொழுது பதிவர் மாணிக்கம் இதுதான் களநிலவரம் என்று இந்தப்படத்தை முகநூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சரியாகத் தான் சொல்கிறாரா?
உங்கள் கருத்து என்னவென்பதை சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.  

4 comments:

  1. வாரிசு என்ற போர்வையில் பதவிக்கு வரும் எவருக்கும் (பெரும்பாலானவர்களுக்கு) ஒன்றுமே தெரிந்திருக்காது. ராகுல் காந்திக்கு ஒன்றுமே தெரியவில்லை. சமீபத்துல 'தமிழகம்தான் இந்தியா, தமிழக மக்கள்தான் இந்திய உணர்வு' தமிழர்கள் முகத்தில்தான் அவர் இந்தியாவைப் பார்க்கிறாராம். இதை வயநாட்டிலோ கேரளத்திலோ சொல்லுவாரா? பிகார்ல போயாச்சுன்னா தான் கவுனி பிராமணன் என்கிறார். அசாம் போனா தேயிலை பறிக்கிறார் (அவர் சகோதரி). தென் தமிழகத்துல சர்ச், கிறிஸ்துவ கல்லூரிகளுக்கு மட்டும் செல்கிறார். சில இடங்களில் இஸ்லாமியராக வேடம் போடுகிறார். இந்த மாதிரி நடிப்பு எத்தனை காலம் செல்லும்? தமிழகத்து ராகுல்காந்தியும் அதேபோலத்தான்.

    ReplyDelete
    Replies
    1. ராகுல் காண்டி தான் பிஜேபிக்கு கடிவாளம் போடவேண்டும், இங்கே கூட்டணி வைத்த மாதிரி பிஜேபிக்கு எதிரான அகில இந்தியக் கூட்டணியை உருவாக்கவேண்டமென்று நேற்றைக்கு இசுடாலின் சேலம் சீலைப்பாளையம் கூட்டத்தில் வேண்டுகோள் வைத்திருக்கிறார்!

      இரண்டில் எது பெரிய தத்தி? இந்த விடுகதைக்கு பதில் மாறிமாறி வருகிறதே!

      Delete
  2. கமலஹாசர் நிச்சயம் வானதியைவிடப் பெரியவர்தான். ஏன் ஒபாமாவுக்கு சரிசமமாகப் பேசக்கூடியவர்தான். வானதி அவர்கள் எந்தப் படத்திலாவது பிரதமராக, அமெரிக்க அதிபராக நடித்திருக்கிறாரா? கமலஹாசருக்கு செட்டுப் போட்டு நடித்ததனால் தானும் அவர்களுக்கு சரிசமம் என்ற எண்ணம் வந்துவிட்டது. இவருக்கு இன்னொரு தடவை தொலைக்காட்சி நேருக்கு நேரில், ஸ்ம்ருதியோடு வேர்த்து விறுவிறுத்தால்தான் தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. கமல் காசர் இந்தத்தேர்தல் களத்தின் மிகப்பெரிய கோமாளி! அவ்வளவுதான்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!