இட்லி வடை பொங்கல்! #78 பல்லிளிக்கும் #பகுத்தறிவு #தேர்தல்அறிக்கை #தேமுதிக

 பதினைந்து வருடங்களுக்குள் தமிழ்ப் பதிவுலகம் மற்றும்   இணையச்சூழல் எவ்வளவு மாறிவிட்டது! தட்டிக்கேட்க ஆளில்லாமல் சண்டப்பிரசண்டர்களாக மாவீரர்களாக வலம்வந்த திராவிட கழகங்கள், திரும்பின பக்கமெல்லாம் முட்டுச்சந்தில் மூக்கில் குத்து வாங்கிக் கொண்டிருக்கிற காலமும் வந்தே விட்டது என்றால் என்ன சொல்வீர்கள்? 


இந்த 15 நிமிட நையாண்டி மிகவும் நன்றாக இருக்கிறது. "மாவீரன் என்ற இந்தக் குறும்படத்தைப் பார்த்தேன் (15 நிமிடம்). டாக்டர் சூரமணி, ஆரிய சதியால் தலைவர் தாக்குதல், சுப்ரமணி செட்டியார்.. என்று போலிப் பகுத்தறிவு கும்பலை செமத்தியாக கிண்டல் செய்துள்ளார்கள். அங்கங்கு ஃபார்முலாத்தனம் தெரிந்தாலும், இந்து எதிரிகளைக் காய்ச்சி எடுக்கும் இத்தகைய குறும்படங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். இதைவிட அதிகமாக இன்னும் நேர்த்தியாக மிகப்பல படங்கள் வரவேண்டும். இயக்குனர் நண்பர் Jithu Aravamudhan  ஜித்துவுக்குப் பாராட்டுக்கள்" என்று முகநூலில் வாழ்த்தியிருக்கிறார் பெங்களூரு ஜடாயு.


தேர்தல் வாக்குறுதிகளும் சரி, தேர்தல் அறிக்கைகளும் சரி வெறும் கண்துடைப்பு, பப்ளிசிட்டி ஸ்டன்ட்! இருந்தாலும் கழகங்கள் தொடர்ந்து அரங்கேற்றுகிற இந்த நாடகத்தைக் கண்டு மயங்குகிற, வாக்களிக்கிற இளிச்சவாயர்களும் அதிகம் என்பதற்குமேல் என்ன சொல்ல?


தேமுதிக பக்குவமில்லாத அரசியல் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறாராம்! தேமுதிக பாவம்! வைட்டமின் இல்லாமல் தனித்து நிற்கவும் திராணியற்று எங்கே போனாலும் முட்டுச்சந்தாகவே இருப்பது காலம் செய்த் கோலம். அதேநேரம் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியை அதிமுக கூட்டணியை விட்டு வெளியேற விட்டது அதிமுகவும் பக்குவமற்ற அரசியல் செய்வதாகவே எனக்குப் படுகிறது.

மீண்டும் சந்திப்போம்.

4 comments:

  1. மாவீரன் அப்புறம் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய நேர நெருக்கடியைப் புரிந்துகொள்கிற அதேசமயம் அப்புறம் அப்புறம் என்று தள்ளிப்போடுவது எதுவும் நடப்பதே இல்லை என்பது எனக்கு அனுபவ பாடம் ஸ்ரீராம்!

      Delete
    2. பார்த்து விட்டேன் ஸார்...

      Delete
    3. எப்படி இருந்தது என்பதையும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே ஸ்ரீராம்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!