திமுக கூட்டணியுடன் இணைந்து மதச்சார்பற்ற போராட்டம் (??), தமிழக நலனுக்காக (??)போராடிய காங்கிரஸை தற்போது சில சீட்டுகளுக்காக நடத்தும் விதத்தை நான் இதுவரை சந்தித்ததே இல்லை என கே எஸ் அழகிரி கண்கலங்கியதாக இந்துதமிழ்திசை நாளேடும் சேர்ந்து கலங்குகிற காமெடியோடு இன்றைய பதிவை ஆரம்பித்து விடலாமா?
சிலநாட்களுக்கு முன் கமல் காசருக்குப் பகிரங்கமாக அழைப்பு விட்டுக்கொண்டிருந்த இதே கே எஸ் அழகிரி நேற்றைக்கு மூன்றாவது அணியின் மீதே நம்பிக்கையில்லை என்று சொல்லியிருந்தது ஞாபகம் இருக்கிறதா? இந்த லட்சணத்தில் கூட்டணியை மறு பரிசீலனை செய்கிறதா காங்கிரஸ் என்று இந்து நாளேடு செய்திக்குத் தலைப்பிட்டிருப்பது கூடுதல் வேடிக்கை!
ஆயிரம் ஆனாலும் பாவம்தான் காங்கிரஸ் கட்சி ! பழ கருப்பையா சமீபத்தில் மக்கள் நீதி மையம் நிகழ்ச்சியில் புதுச்சேரியில் காங்கிரஸ் எம் எல் ஏ களும் திமுக எம் எல் ஏ ஒருவரும் சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேஷ்டியை உருவி கோமணத்துடன் நிற்க வைத்து விட்டார்கள் என்றார் ! அங்குதான் அப்படி என்றால் இங்கு அந்த கட்சிக்கு ஆட்சியை பிடிக்கும் பேராசை எல்லாம் கிடையாது ! பாவம் எதோ 41 சீட் கேட்டு கடைசி கடைசியாக 27 சீட்டாவது கொடுங்கள் திமுகவுடன் கெஞ்சி பார்த்தார்கள் ! அவர்களோ அரக்க மனதுடன் 18 மேல் ஒன்றும் கிடையாது இல்லை நஹி லேது என்று எல்லா மொழிகளிலும் சொல்லி விட்டார்கள் ! புதுச்சேரியிலாவது கோமணத்தோடு விட்டார்கள் தமிழ்நாட்டில் அதையும் உருவி அம்மணமாக தெருவில் நிற்க வைத்து விட்டார்கள் ! மாநில தலைவர் கே எஸ் அழகிரி கண்ணீர் விட்டு மரியாதையை இல்லாமல் நடத்தினார்கள் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் வருந்தியதாக செய்திகள் வருகிறது ! காங்கிரஸ் இனியும் அங்கே கெஞ்சி நிற்பது சரியா ? நாட்டையே பல காலம் ஆண்ட கட்சி ! அதற்கே இப்படி ஒரு நிலையா ? இந்த நிலைக்கு இந்திரா காந்தி முதல் இப்போதுள்ள ராகுல் வரை எல்லோருமே காரணம்! என்று இதே செய்தியை முகநூலில் மிகவும் சோகமான தொனியில் நக்கல் செய்து எழுதியிருக்கிறார் விஜயன் கோதண்டராமன்! ஸ்டேன்லி ராஜன் வேறு அவர் பாணியில் செம பகடி செய்கிறார்
ராகுலைக் கூட்டிவந்து டான்சாட விட்டு, தண்டால், push ups எல்லாம் எடுக்கவிட்டு பாதிரிமார்கள் ராகுல் ராகுல் என்று அல்லேலூயா கூவுகிற மாதிரிக் கூவியதில் கிடைக்காத ஆதரவு, அனுதாபமெல்லாம் கே எஸ் அழகிரி கண்ணீர் சிந்திய செய்திக்கு மிகப்பரவலாக வருவதைப் பார்த்தால் எனக்கும் ......! 😅😂😂
மல்லுதேசத் தேர்தல் களத்தைப்பற்றியும் கூட விரிவாக இங்கே எழுத ஆசைதான்! உள்ளூரக்கதையில் ஆசை இருக்கிற அளவுக்கு அடுத்தவீட்டுக் கதையில் ஆர்வம் இருக்குமா என்கிற தயக்கமும் இருக்கிறது. என்ன செய்ய? கொஞ்சம் யோசனைகள் வரவேற்கப் படுகின்றன!
"நாங்கள்தான் மாநிலத்தில் முதன்முதலாக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளோம். இந்த முறை 291 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில் 50 பெண் வேட்பாளர்கள், பட்டியலினத்தவர்கள் 79 பேர், பழங்குடியினர் 17 பேர், 42 முஸ்லிம் வேட்பாளர்கள் என 291 பேர் போட்டி இடுகின்றனர்.எங்கள் கூட்டணிக் கட்சியான கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சிக்கு 3 இடங்களை ஒதுக்கியுள்ளோம். டார்ஜ்லிங், கிலம்பாங், குர்சியாங் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன" என்று அறிவித்த மம்தா பானெர்ஜி எத்தனை சிட்டிங் MLAக்கள் இந்தமுறை கழற்றிவிடப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரத்தை சொல்ல மறந்துவிட்டார். வேட்பாளர் பட்டியலை முதலில் அறிவித்துவிட்டால் மட்டும்? ஜெயித்துவிடமுடியுமா என்ன?
முன்பாக, பவானிபூர், நந்திகிராம் என இருதொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று சொன்ன மம்தா இப்போது செம தில்லுடன் நந்திகிராம் தொகுதியில் மட்டுமே போட்டியிடப் போகிறாராம்! மேற்குவங்கத்தில் தேர்தல்களம் சூடாகியிருக்கிற அளவுக்குத் தமிழ்நாடு இன்னமும் சூடேறவில்லை என்கதைக் கவனிக்கிறீர்கள்தானே? மீண்டும் சந்திப்போம்.
1. காங்கிரஸ் காரங்க, என்ன விதமான போராட்டங்களை தமிழகத்துல இதுவரை நிகழ்த்தியிருக்காங்க? கட்சியை எங்க வளர்த்திருக்காங்க? ஒண்ணுமே செய்யாமல், பெருங்காயம் முன்பு ஒரு காலத்தில் வைத்திருந்ததனால், இப்போதும் அதற்கு மௌவுஸு இருக்குன்னு நினைத்து சீட் கேட்பதில் என்ன நியாயம் இருக்கு? இந்த கே.எஸ்.அழகிரியே தன்னுடைய பிஸினெஸை காங்கிரஸால் வளர்த்த அளவு, கட்சிக்குப் பாடுபட்டாரா என்பதை அவரது மனசாட்சி பேசும். இப்போதுமே, ராகுல், 25 சீட் வாங்கிக்கிட்டு, அதில் எந்த நிர்வாகிகளுக்கோ அவர்களது சொந்தங்களுக்கோ சீட் இல்லை என்று சொன்னால்தான் இந்தப் பெருச்சாளிகளின் வேஷம் கலையும்.
ReplyDelete2. நிச்சயம் மம்தா 160க்கு மேல் இடங்கள் பெறுவார். பாஜக 90ஐ எட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும் என்றுதான் நான் நினைக்கிறேன், காங்கிரஸ்+முஸ்லீம்+கம்யூனிஸ்ட் கூட்டணி வாக்குகளைப் பிரிக்கும் என்பதே சந்தேகம்தான். ஆனால் நீங்க இதை ஒத்துக்கொள்ள மாட்டீர்கள்.
தியாகிகள் இருந்த காங்கிரஸ் கட்சி இதுவென்றா நினைத்தீர்கள் நெல்லைத்தமிழன் சார் ? :++ இது சோனியா காங்கிரசு!
Deleteமேற்குவங்காத தேர்தல்களம் கொஞ்சம் சுவாரசியமான ஆட்டமாக இருக்கப்போகிறது என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.