சண்டேன்னா மூணு! #அரசியல் #ஆராசா #ஆபாசராசா

2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதி மாறனையும் தூக்கி சாப்பிட்டு உலகமகாஊழல் சாதனை படைத்த ஆ.ராசா. ஆபாச ராசாவாகவும் இந்தத்தேர்தல் பரப்புரையில் சாதனை படைத்திருக்கிறார் என்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை! ஏனென்றால் திமுகவினரின் வரலாறு அப்படி!


  Stanley Rajan 16நி  

பெண்மையினை தாய்மையினை கொச்சை படுத்துவது ஒன்றும் திமுகவுக்கு புதிதல்ல, இதை முதலில் தொடங்கி வைத்தவன் அவர்களின் பிதாமகன் ஈரோட்டு ராம்சாமி
அவனே புனிதமான சீதை, பாஞ்சாலி, கண்ணகி என விமர்சித்து தொடங்கி வைக்க அவனின் அடிப் பொடியான பெரும் மூடன் அண்ணாதுரையும் அவனின் சீட கோடியான கருணாநிதியும் காமாட்சி, மீனாட்சி என தெய்வங்களை விமர்சிக்க தொடங்கினார்கள்
அது அவர்களின் அரசியலும் தொடர்ந்தது
இலங்கை பிரதமர் ஸ்ரிமாவோ பண்டார நாயகாவில் தொடங்கி, காமராஜரின் தாய், இந்திரா, ஜெயலலிதா என யாரும் இவர்களின் மகா மட்டமான கீழான பேச்சுக்கு தப்பவில்லை
நாம் ஆட்சிக்கு வரமாட்டொம் என எதையோ பேசிய அண்ணாதுரை ஆட்சிக்கு வந்ததும் தன் இயல்பான தந்திரத்தால் பதுங்கினான்
ஆனால் கருணாநிதி பதுங்கவில்லை, சட்டசபையில் "நாடாவினை அவிழ்த்து" என மிக மட்டமாக பேசிவிட்டு எப்படி என் இலக்கிய பேச்சு என அசிங்கமாக சிரித்தவர் அவரே
காமராஜரின் தாயினை நோக்கி "அவள் கருவாடு விற்றவள்" என கடுமையாக கருணாநிதி சாட, என் தலைவனின் தாய் கருவாடு மட்டும், ஆம் கருவாடு "மட்டும்" விற்றாள் என கண்ணதாசன் அழுத்தி சொல்ல அப்படியே அமைதியானார் கருணாநிதி
ஆம் அஞ்சுகம்மாள் என்ன விற்றார் என்பது கண்ணதாசனுக்குத்தான் தெரிந்திருந்தது
அதன் பின்னும் கருணாநிதி திருந்தவில்லை, விதவைக்கு மறுவாழ்வு என்றும் , திமுகவினரால் தாக்கபட்ட இந்திராவின் தலையில் வடிந்த ரத்ததை மிக மிக கொச்சைபடுத்தி பெண்குலத்தையே கடுமையாக அவமானபடுத்தியதெல்லாம் வரலாறு
அதே தாக்குதல் ஜெயா மேலும் தொடர்ந்தது, பின்பு அது எடுபடாததால் கைவிடபட்டது
அப்படிபட்ட திமுகவினரிடம் அதுவும் வெற்றிகொண்டான் போன்ற இசட் கிரேடு ஆபாச பேச்சாளர்களையும் அவர்களை விட இசட்‍‍‍ பேச்சினை பேசிய கருணாநிதியினை தலைவனாக கொண்ட கட்சியில் ஆ.ராசா பேசுவதெல்லாம் ஆச்சரியமில்லை
ஆ.ராசா எப்பொழுதுமே சர்ச்சைகுரிய நபர், இவரை முதலில் கடுமையாக எச்சரித்தது பாமகவின் காடுவெட்டி குரு குருவின் மிரட்டலை தொடர்ந்து நீலகிரி மலையில் தஞ்சமடைந்த ராசா இன்னும் மலையில் இருந்து இறங்கவில்லை
சுருக்கமாக சொன்னால் திருமாவின் இரட்டை பிறப்பு இந்த ராசா, இவரை வளர்த்துவிட்ட பெருமகன் திருவாளர் கருணாநிதி
அப்படிபட்ட ராசா பழனிச்சாமி தாயாரை கடுமையாக விமர்சிப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்றாலும் இதெல்லாம் மிக மிக மோசமாக கண்டிக்கபட வேண்டிய விஷயங்கள்
தண்டிக்கபட வேண்டிய விஷயங்கள்
ஒரு பாராளுமன்ற எம்பி, ஒரு முன்னாள் அமைச்சரின் தரம் இவ்வளவுதான் என்பதுதான் அருவெருப்பின் உச்சம், திமுகவின் மிச்சம்
சிம்புவுக்கும் இன்னும் பலருக்கும் கொடி பிடித்த மாதர் சங்க அமைப்புகளை பழனிச்சாமியின் மறைந்த தாய்க்கு அவமானம் நிகழும் பொழுது காணவில்லை
இன்னும் பல பெண் உரிமை போராளிகள் சத்தமே இல்லை
கருணாநிதியின் ஆபாச பேச்சுக்கள் உலகறிந்தவை, உதயநிதியின் சசிகலா மேலான விமர்சனம் எல்லோரும் அறிந்தது
இதில் ராசாவும் தன்னை யார் என்றும் எதற்கும் காடுவெட்டி குரு தன்னை விரட்டியடித்தார் என்பதையும் நிரூபித்து கொண்டிருக்கின்றார்
நமது சந்தேகமெல்லாம் பழனிச்சாமி தாயாரே இப்படி அவமானபடும் பொழுது திமுக பிரிய காரணமான மணியம்மை எப்படி எல்லாம் திமுகவினரால் விமர்சிக்கபட்டிருப்பார் என்பதுதான்

இதை பற்றி வீரமணி பின்பு விளக்குவார் என தமிழகம் எதிர்பார்க்கின்றது 


இசுடாலின் கூட பட்டும்படாமல் இந்தவிவகாரத்தில் ஏதோ கருத்து சொல்லியிருக்கிறாராம்! 

ஸ்டேன்லி ராஜனுக்கு ஆபாசராசா பேச்சின் மீதான கோபம் இன்னும் குறையவில்லை போல!

மக்களால் தேர்ந்தெடுக்கபடாதவர்களெல்லாம் முதல்வராவது "தவறானது" என்றால் வரலாற்றில் அப்படிபட்ட முதல் பிறப்பு கருணாநிதியே
அண்ணாதுரை இறந்ததும் தேர்தலை சந்திக்காமல் குறுக்குவழியில் முதல்வராகி வழிகாட்டிய உத்தமர் அவர்தான்.அதாவது முதல் "கள்ள குழந்தை" அல்லது "குறை பிரசவ குழந்தை" அவர்தான்
அதுதான் இந்திராவுக்கு பின் ராஜிவ் அப்படியே அமர்வது வரை வழிகாட்டியது. திமுக கூட்டணியினர் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிவது நல்லதல்ல, இப்படித்தான் மொகரையெல்லாம் கிழியும் 

ஆராசா, உதயநிதி போன்றவர்களின் பொறுப்பற்ற ஆபாசமான பேச்சுக்கள் திமுகவின் தேர்தல் வாய்ப்பை எந்தவிதத்தில் பாதிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஏற்கெனெவே கொங்குமண்டலத்தில் 34 கொங்கு வெள்ளாளர் அமைப்புக்கள் சேர்ந்து திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருப்பது தெரியும்தானே!

மீண்டும் சந்திப்போம்.

6 comments:

 1. நீங்க சாக்கடைல சந்தனம் (சந்தனக் கட்டை இல்லை, சந்தனப் பொடி) இருக்குமான்னு தேடறீங்க. திமுகல உருப்படியானவர்களைத் தேடுவது இதைவிடக் கஷ்டம். ஆபாச அராஜகக் கூட்டம் அவர்கள்

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத்தமிழன் சார்!

   முதல்முறையாக நீங்களும் நானும் ஒரே கருத்தில் இருப்பதாக எனக்குப்படுகிறது. திமுகவில் உருப்படியானவர்களைத் தேடுவது வீன் வேலை என்பதில் நானும் உடன்படுகிறேன்.

   நமக்குத் தெரிந்தது, நமக்குத் தெரிந்தவர்களுக்கும் தெரிய வேண்டாமா?

   Delete
 2. 67 ல் பெருந்தலைவரும் அவரது தாயாரும் திராவிடத்தின் கீழ்நிலை சீடப்பொடிகளின் இழிவுரைகளால் தாக்கப்பட்டார்கள்.. வீட்டுக்கு அருகாமையில் இருந்த திடலில் தான் மேடை... வசவுகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்கள் கண்ணீர் சிந்தினார்கள்..

  இப்போதைய நிகழ்வுகளைக் கேட்கும்போது அன்றைய நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன..

  ReplyDelete
  Replies
  1. இப்போது அதுமாதிரிக் கண்ணீர் சிந்துகிறவர்களைப் பார்க்க மூடிவதில்லையே துரை செல்வராஜூ சார்! :-(((((

   திராவிடங்கள் ஆபாசத்திலே பிறந்து ஆபாசத்திலேயே வளர்ந்தவர்கள் என்பதை உணராத இன்றைய இளைய தலைமுறையைப்பார்க்கும் போது அடிவயிற்றைப் பிசைகிறது. பதிவுகளும் அந்த வேதனையில் எழுபவைதான்.

   Delete
  2. எனது தந்தையின் தாய் வழிப் பூர்வீகம் விருதுநகர்.. டீம்க்கா அன்று நெஞ்சில் ஏற்படுத்திய ரணம் இன்னும் ஆறாமல் இருக்கின்றது...

   Delete
  3. உங்களுக்கு மட்டுமல்ல, நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து முதல் பெண் விவகாரங்கள் என்று திமுக நடத்திய ரவுடி ராஜ்யத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுடைய மனதிலும் ஆறாத ரணமாக திமுக இருக்கிறது துரை செல்வராஜூ சார்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!