2021 தேர்தல் களம் :::பிரசாந்த் கிஷோர் முண்டா தட்டுகிறார்!

தமிழக தேர்தல்களம் மிக நிதானமாகவே தயாராகி வருவதால், வெற்றுக்கூச்சல்களும் விவாதங்களும் தான் இதுவரை மிச்சம். அதனால் இன்னொரு முக்கியமான மாநிலமான மேற்கு வங்கத்தில் என்ன நடக்கிறது என்பதை கொஞ்சம் பார்த்துவிடலாம். தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர் இந்தியா டுடே தளத்தில் தந்த சவடால் வீடியோவுடன் ஆரம்பிக்கலாமா? வீடியோ 34 நிமிடம்.


பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜி, தமிழ்நாட்டில் இசுடாலின் இருவருக்குமே தேர்தல் உத்தி வகுத்துக் கொடுப்பவராக இருப்பதால், இந்த மனிதரைப் புரிந்துகொள்வது இருமாநில தேர்தல் களத்தைப் புரிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கலாம். 

தமிழகம் போல இல்லாமல் மேற்கு வங்கத் தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவுவது ஒரு முக்கியமான கள நிலவரம். இங்கே அதிமுக மாதிரி, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது முறையும் ஆட்சியைப்பிடித்து விடத் துடிக்கிறது. வெறும் 10 சீட்டுகள் கூட இல்லாத கட்சி என பிரசாந்த் கிஷோர் குறிப்பிடுகிற பிஜேபி தான் களத்தில் நேரடிப்போட்டியாக மம்தா பானெர்ஜிக்கு உருவெடுத்து நிற்கிறது. 2011 வரை 34 வருடங்களாக ஆட்சிய்து வந்த மார்க்சிஸ்டுகள் தலைமையிலான இடதுசாரிகள்  காங்கிரசோடு வெளிப்படையாகக் கூட்டணி அமைத்து மூன்றாவது அணியாக நிற்பது காலம் செய்திருக்கும் அலங்கோலம். இவர்களோடு Indian Secular Front என்ற பெயரில் புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கும் பிர்சாதா அபபாஸ் சித்திக்கியும் சேர்ந்து கொண்டிருக்கிறார். அவருடன் பிப்ரவரி 28 அன்று இந்த கதம்பக்கூட்டணி நடத்திய முதல் கூட்டத்திலேயே  காங்கிரசின் அதிர் ரஞ்சன் சவுத்ரியுடன் முட்டல் மோதல் ஆரம்பித்துவிட்டது. மார்க்சிஸ்ட்  கட்சியின் பீமன் போஸ் சமாதானப்படுத்தி இருக்கிறார். Tensions between the Congress and Siddiqui, an influential cleric of Furfura Sharif in Hooghly, erupted after he addressed a rally at the Brigade Parade Ground on February 28 and accused the Congress of dragging its feet on the seat-sharing agreement என்கிறது இந்தியா டுடே. மும்முனைப்போட்டி போக அசாதுதீன் ஒவைசியின் AIMIM வேறு களத்தில் இறங்க இருக்கிறார்களாம்! 


இந்தக்கட்சிக்கு இடதுசாரிகள் தங்கள் கோட்டாவில் இருந்து 30 சீட்டுகளும் காங்கிரஸ் 8 சீட்டுகளும் விட்டுக் கொடுக்க ஒப்புக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகிற நிலையில்  மதச்சார்பில்லாத என்று பொருள்படும் Secular என்பதை மிகவும் கேலிக்குரிய ஒன்றாக மாற்றிய காங்கிரசுக்கு உள்ளேயே ISF சித்திக்கி மாதிரி ஆசாமிகளுடன் கூட்டு வைப்பது கேள்விக்குள்ளாகி இருக்கிறது. 

இஸ்லாமிய வாக்குகள் முன்னைப்போல மொத்தமாகக் கிடைக்காது என்பது மம்தா பானெர்ஜிக்கே நன்றாகப் புரிந்திருப்பதால், பிஜேபியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த இதர மாநிலக்கட்சித் தலைவர்களைத் தன்பக்கம் இழுத்திருக்கிறார். RJD யின் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் என்று பலரும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை  உதறிவிட்டு மம்தா பக்கம் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  

வங்காளத்தில் மம்தா பானெர்ஜி, மல்லுதேசத்தில் பினராயி விஜயன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார்கள் தமிழ்நாட்டில் திமுக அரியணை ஏறுகிறது என்றரீதியில் வெளியாகும் கருத்துக்கணிப்புகளை சம்பந்தப் பட்டவர்களே சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்கிறபோது நான் மட்டும் தனியாகவந்து என்னத்தை சொல்வதாம்?

மீண்டும் சந்திப்போம். 

2 comments:

  1. வங்கத்தில் காங்கிரஸ் எடுத்திருக்கும் நிலைப்பாடு, பாஜகவுக்கு சாதகமாகத்தான் இருக்கும் (இந்துத்வா).

    இந்தத் தடவை பிரஷாந்த் கிஷோருக்கு லக். இரு மாநிலங்களில் அவருடைய ஆட்கள்தான் வெற்றி பெறுவார்கள்.

    ReplyDelete
  2. வங்காளிகள் மொழிவெறி பிடித்தவர்கள், அவர்களுடைய லாஜிக்கே இங்கே திராவிடங்களைப் போல செம்மறியாட்டுக்கூட்டம் என்பதை என்னுடைய தொழிற்சங்க நாட்களிலிருந்தே பார்த்து வருவதால் இந்தத்தேர்தலில எது எடுபடும் என்பதை இப்போதே தீர்மானிக்க முடியாது என்று தான் எனக்குத் தோன்றுகிறது நெல்லைத்தமிழன் சார்!

    பிரசாந்த் கிஷோர் இரண்டுமூன்று முறை கெலித்திருக்கிறார் எண்பதுபோலவே மண்ணைக் கவ்வியதும் கொஞ்சம் கூடுதலாகவே நடந்திருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவால், அம்ரிந்தர் சிங், YS ஜெகன் மோகன் ரெட்டியை ஜெயித்ததுவேறுகதை அது போல வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் பிரசாந்த் கிஷோருடைய சாமர்த்தியம் எடுபடுமா என்பது கேள்விக்குறியே!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!