தேர்தல் கால விநோதங்களில் காயலாங்கடையிலிருக்கும் வாகனங்களுக்கும் கூடக் கொள்ளைப் பணம் கொடுத்து book செய்துகொள்கிற வழக்கமும் ஒன்று. அதுபோல பேச்சாளர்கள் என்று பலருக்கும் கிராக்கி, வாழ்வு கொடுக்கும் காலமும் இதுவே. சோனியா காங்கிரசின் பலம் பலவீனம் இரண்டுமே சோனியா, மகன், மகள், மாப்பிள்ளை என்கிற நாலேபேர்தான். அவர்களைத்தாண்டி முன்னணித் தலைவர்கள், முன்னணிப் பேச்சாளர்கள் என்று வேறு எவருமே இல்லாத மிக வினோதமான ஒரு செட்டப், இங்கே தன்னை ஒரு அரசியல் கட்சியாகப் பாவித்துக் கொண்டு தேர்தல் பரப்புரை செய்யவருவது எவருக்குமே புரியாத இன்னொரு தமாஷா!
கிறிஸ்தவ கல்வி நிறுவணங்கள் தேசிய விரோதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதுவும் பாளையங்கோட்டை நிறுவணங்கள் உருவாக்கிய கல்வியாளர் தலைவர்களில் ஒரு தேசியவாதியினை கூட யாரும் காணமுடியாது , அங்கு உருவான அவ்வளவு பேரும் பிரிவினை கோஷ்டிகள்
அங்கு ஒரு தேசிய தலைவராக இல்லாமல் மாநில திராவிட தலைவர் போல் சென்று வழக்கம் போல் மோடி எதிர்ப்பினை கேட்டு ரசித்திருக்கின்றார் ராகுல். இக்கல்லூரி நாட்டுக்கு எந்த தலைவனை உருவாக்கியது , இங்கிருந்து தேசியவாதியாக எந்த தலைவன் எழும்பினான் என்ற கேள்வி இங்கு அவசியம், ராகுல் கேட்காத கேள்வியினை நாம் கேட்கலாம்.அப்படி கேட்டால் பாளை கல்லூரியில் இருந்து என்ன பதில் வருமென்றால் நாங்கள் உருவாக்கியவர்கள் வை.கோ, வலம்புரி ஜாண் என பதில்வருமே தவிர ஒரு தேசாபிமானி பெயர் வராது.
காங்கிரஸ் எனும் தேசிய கட்சி தமிழ்நாட்டில் மங்கி போய் திராவிடம் எழும்ப இக்கல்லூரி ஆதவளித்த காலம் உண்டா என்றால் உண்டு.காமராஜரை வீழ்த்தி திராவிடத்தை உயர்த்தி பிடித்து காங்கிரஸ் மண்ணோடு மண்ணாகி போக இதே கல்லூரி காரணம் என்பதை ராகுல் மறந்து பல்லிளித்தது காங்கிரசின் துரதிருஷ்டம்
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் பக்கம் அவர் செல்லவுமில்லை நெல்லையில் தாமிரபரணி சம்பவம் பற்றி பேசவுமில்லை.
நெல்லையின் இதர சிக்கல் உள்ளிட்டவை பற்றி தெரிந்து கொள்ள அவருக்கு ஆர்வமுமில்லை
நெல்லையில் தேசிய அடையாளமான கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி, பாரதி இல்லம், வ.உ.சி நினைவகம், வாஞ்சிநாதன் இல்லம், வ.வே.சு அய்யர் ஆசிரமம் என தேசிய அடையாளம் எதையும் அவர் கண்டு கொள்ளவில்லை பாளை கல்லூரிக்கு சென்ற அவருக்கு தான் ஒரு சமயவாதி அல்ல என்பதை காட்ட நெல்லையப்பர் கோவிலுக்கு செல்ல தெரிந்திருக்கின்றது.ஆனால் அங்கு கோவிலை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்பும், காலில் நீர் ஊற்றிவிட்டு ஆலயம் உள்ளே செல்லமுடியாத அவலம் புரியவில்லை
கோவிலின் எதிரே திட்டமிட்டு உருவாக்கிய சாலைகளும் திட்டமிட்டு உருவாக்கபட்டு அழிக்கபட்டு குப்பை மேடான கோவில் குளங்களும் தெரியவில்லை
ஆம் தான் ஒரு கிறிஸ்தவன் என்பதையும் இந்து ஆலயமெல்லாம் பற்றி தனக்கு கவலை இல்லை அல்லது அதுபற்றி தெரியாது என்பதையும் தான் யாரோ இழுத்து வந்த ஆடு என்பதையும் சொல்லிவிட்டார் ராகுல்
நெல்லையிலும் தூத்துகுடியிலும் காங்கிரஸ் செத்தே விட்டது அதன் இடத்தை திமுக மிக அழகாக கைபற்றி காங்கிரஸை கழுத்தறுத்துவிட்டதுஆனாலும் திமுகவுக்கு ஆதரவான பயணத்தை அவர்கள் சொன்னபடியே செய்திருக்கின்றார் ராகுல், காங்கிரஸ் அபிமானிகள் தலையில் அடித்து அழுது கொண்டிருக்கின்றனர்.
ஒரு தேசியவாதியாக அல்லாமல் ஒரு தேசிய சிந்தனாவாதியாக அல்லாமல் ஒரு கிறிஸ்துவ திராவிடனாக திருநெல்வேலி வந்து சென்றிருக்கின்றார் ராகுல் என்பதை விட சொல்ல ஒன்றுமில்லை. திராவிட கைகூலிகள் அவரை மிக மிக தவறாக வழிநடத்துகின்றனர்.
நெல்லை வந்த ராகுல் செய்த ஒரே ஒரு முன்னெச்செரிக்கையான விஷயம் பிரபல தீவிரவாதியும் அமித்ஷாவினயே சோலி முடிக்க சதி செய்தவருமான "நெல்லை கண்ணன்" என்பவரை சந்திக்காமலே ஓடிவிட்டார், அதில் மட்டும் மிக சரியாக இருந்திருக்கின்றார்.
ராகுல்காந்தி கிறிஸ்துவராகத் தன்னைக் காட்டிக்கொண்டு அதை மையமாக வைத்து வாக்கு சேகரிப்பது திமுகவுக்கு உதவும். ஆனால் பாவம்..காங்கிரஸுக்கு உதவாது. அவங்க அதிகபட்சம் 25 தொகுதிகளோடு முடங்கவேண்டியதுதான்.
ReplyDeleteஊடகங்களே கட்சி சார்பாகத்தான் செயல்படுகின்றன. அதனால் அதனை மீறி அவங்களால கேள்விகள் கேட்கமுடியாது. நக்கீரன் கோபால், திமுக பெரும் வெற்றி பெறும் என்று அடித்துச் சொல்லி, கருணாநிதி தொலைக்காட்சியில் வாக்கு எண்ணிக்கை நடக்க ஆரம்பித்த காலையில் வந்து உட்கார்ந்து, பிறகு பத்து மணி அளவில் திமுக படுதோல்வி என்பதை உணர்ந்து முகத்தை மூடிக்கொண்டு 2011ல் சென்றது நினைவுக்கு வருகிறது.
ராகுல் காண்டிக்கு அரசியல் வெறும் பொழுதுபோக்காகவே இருப்பதுதான் பிரச்சினை! பூணூல் போட்ட காஷ்மீரி பிராமணன் என்று தன்னை அறிவித்துக் கொண்டது இப்போது மீனவர்களுடன் கடலில் குதிப்பது, targeted ஆடியன்ஸோடு பேசுவது என்று ஷோ காட்டுவதெல்லாம் மிகப்பழைய டெக்னிக். யாருக்குப் பிரயோசனம் என்பது எனக்கு இன்னமும் புதிராகவே இருக்கிறது. கேரளாவில் ஆட்டம்போடுகிறவர ஏன் மேற்குவங்கத்தைத் தவிர்க்கிறார்?
Deleteஊடகங்கள் தங்களை விற்பதற்குத் தயாராகவே இருக்கின்றன. இபடியான paid media culture குறித்து பி சாய்நாத் ஹிந்துவில் கொதிப்போடு எழுதிய கட்டுரைக்கான லிங்க் நாலாவது தூண் என்று தேடினால் கிடைக்கும்.