Showing posts with label Defeat Congress. Show all posts
Showing posts with label Defeat Congress. Show all posts

அப்பாலே தூரப் போ! காங்கிரஸ் சாத்தானே! யெஸ் பேங்க்!

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு CAA NPR NRC இவைகளை வைத்து ஒருசில பல்கலைக்கழகங்கள், டில்லியின் சிலப்பகுதிகளை கலவரபூமியாக்கியது போதவில்லையாம்! கடந்த 5 நாட்களாக டில்லி கலவரம் பற்றி விவாதிக்கவேண்டும் என்று ரகளை, ஒரே அமளி! சபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக  7 காங்கிரஸ் எம்பிக்கள் இந்தக் கூட்டத் தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கிறார்கள். இரு அவைகளும் வருகிற 11 ஆம் தேதிவரை ஒத்திவைக்கப் பட்டிருக்கின்றன. எதையும் பேசி விவாதித்து முடிவு செய்யவேண்டும் என்கிற ஜனநாயக நடைமுறை காற்றில் பறக்கவிடப் பட்டிருக்கிறது.

    வீடியோ 16 நிமிடம்    

ஒரு தொடர் உரையாடல்களைநிகழ்த்தி ஒரு தெளிவுக்கு வரவேண்டும் என்கிற நடைமுறை கும்பலாகச் சேர்ந்து கூக்குரல் எழுப்புவது, கோஷமிடுவது, காகிதங்களைக் கிழித்து வீசுவது, மற்றவர்களைப் பேசவிடாமல் ரகளை செய்வது இதெல்லாம் நாடாளுமன்றத்தில் தினசரி நிகழ்ச்சி என்றாகி விட்டது. இந்த அசிங்கத்துக்கு இப்படி ஒரு சப்பைக்கட்டு வேறு!


இந்தச் செய்திக்கு தினமலர் நாளிதழில் ஒரு வாசகர் பின்னூட்டம்: காங்கிரஸ் கட்சியை ஒரு 150ஆண்டுகளுக்குத் தடை செய்து விட வேண்டும்! அந்த அளவுக்குக் காங்கிரஸ் கட்சி ஜனநாயக சீரழிவுகளின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது.


யெஸ் பேங்க் மீது மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. HDFC வங்கியின் ஆதித்ய பூரி இந்த விஷயத்தைப் பற்றித் தனது கருத்துக்களை 9 நிமிட வீடியோவில் சொல்கிறார். தொடர்ந்து   கடந்த சில  வருடங்களாகவே யெஸ் பேங்க் தடுமாறி வருவதும், அன்னிய மூலதனம் வரும், வருகிறது என்றே சொல்லிக் கொண்டிருந்ததும், வங்கித்துறை விஷயங்களைக் கவனித்துவருகிறவர்களுக்கு நன்கு தெரிந்த  செய்திதான்! ஏதாவது வங்கி சிக்கலில் மாட்டிக் கொள்ளுமானால், பொதுத்துறை வங்கி ஒன்றுடன் இணைத்துவிட்டுப் பிரச்சினையை அப்படியே மறக்கடித்துவிடுவது முந்தைய ஆட்சிக் காலத்து நடைமுறை! பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பதிலாக இன்னும் பல புதுப்பிரச்சினைகளைக் கிளப்பி விடுவதைப் பற்றி யார் கேட்கப்போகிறார்கள்? யார் கவலைப்படப்போகிறார்கள்?

நிதியமைச்சர் விரிவாகவே கேள்விகளுக்கு 
பதிலளிக்கிறார் வீடியோ 33 நிமிடம் 

ஆனால் தன்னைப் பெரிய பொருளாதார மேதை என்று நினைத்துக் கொண்டு இருக்கிற பானாசீனாவுக்கு மெல்வதற்கு ஒரு புது விஷயம் கிடைத்துவிட்டது!


இந்த ஒன்று மட்டுமல்ல, அப்பச்சி வேகவேகமாக இன்னொரு நாலைந்து ட்வீட்டுகளையும் தட்டி விட்டிருக்கிறார் என்பதில் திருடன் திருடன் என்று முந்திக்கொண்டு கூவுகிற மாதிரிப் புலப்படுகிறது. 


அதிசயமாக, டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் இதில்   ஒரு சஸ்பென்ஸ் வைத்துக் கேள்வி எழுப்புகிறார்! 



பதறாமல் இருப்பது யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு நல்லது தான்! ஆனால் நம்மூர் சூழலில் அது தவிர்க்க முடியாதது. பானாசீனா மாதிரிப் பெருச்சாளிகள் வெட்கமில்லாமல் கருத்து சொல்வதையும் கூட சகித்துக் கொள்ள வேண்டுமா?

அப்பாலே போ சாத்தானே என்று எப்போது தள்ளி வைக்கப் போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்           

1984 போபால் விஷவாயு சம்பவம்! குற்றவாளி யார்?

போபால் விஷவாயு துயரசம்பவம் நடந்ததன் 35 வது ஆண்டு நிறைகிற தருணம் இன்று டிசம்பர் 3. 1984 ஆம் ஆண்டு ராஜீவ் காண்டி பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நடந்த முதல் விபரீதம் டில்லியில் காங்கிரஸ் காரர்கள் சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறையில்  ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது என்றால் அடுத்து டிசம்பர் 3 அன்று யூனியன் கார்பைட் ஆலையிலிருந்ந்து வெளியேறிய சயனைட் விஷவாயு தாக்குதலில் 3900 பேர் மரணம் என்று முதல்நாளில் ஆரம்பித்தது வரிசையாக 25000 எண்ணிக்கைக்கு உயர்ந்ததும், பல லட்சம் பேர் இன்று வரை பெருத்த பாதிப்புக்கு உள்ளாகியிருந்தும் கூட சரியான சிகிச்சை கூடப் பெறமுடியாமல் தவித்து வருவதும் ராஜீவ் காண்டி ஆட்சி செய்ய ஆரம்பித்த நாட்களின் அடுத்த பெரிய விபரீதம்.



   NatGeo 2014 போபால் டாகுமெண்டரி வீடியோ 62 நிமிடம் 

யார் குற்றவாளி?

தினமணி தலையங்கத்தின் கேள்வி! சரியான விடை, கயவர்களைத் தேர்ந்தெடுத்த நாம் தான்!
 

போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்க உளப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் மத்திய அரசால் எடுக்கப் படவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.

சுமார் 23,000 பேரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த சம்பவத்தில் அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல் மெத்தனமாக இருந்தது என்பதும், குறைந்தபட்ச  இழப்பீட்டைத்தான் அரசு பெற்றுத்தந்தது என்பதும்தான் இதுவரையிலும் விவாதமாக இருந்து வந்தது. ஆனால் இப்போதுதான் அம்பலமாகியிருக்கிறது, குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியும் பறித்த கதை. 

 
வாரன் ஆன்டர்சனை போபாலிலிருந்து தனி விமானத்தில் தில்லிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குத் தப்பவிட்டனர் என்ற உண்மை இப்போது வெளியுலகுக்குத் தெரிந்த பிறகு, அதற்குக் காரணமே அப்போதைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங்தான் என்று கூசாமல் பழிகூறி பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது காங்கிரஸ். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும் இந்தப் பதிலை கேட்டுக்கொண்டு சும்மா இருக்கின்றன.

அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு இதில் என்ன பங்கு என்று யாரும் கேள்வி எழுப்புவதற்கு முன்னதாகவே ""ராஜீவ் காந்தி குற்றமற்றவர், அவர் இதில் சம்பந்தப்படவே இல்லை'' என்று மறுக்கிறார் கட்சியின் செய்தித் தொடர்பாளர். ஏன் இந்த அவசரம், எதற்காக இத்தனை பதற்றம்? "எங்க அப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்வதைப்போலத்தான் இதுவும்.

காங்கிரஸ் கட்சியின் முதல்வர் என்ற முறையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாமல் அர்ஜுன் சிங் இத்தகைய முடிவை எடுத்திருக்க மாட்டார். ஆனாலும், பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது தானே வழக்கம். 
பதில் ஏதும் அளிக்காமல். அர்ஜுன் சிங்கும் சும்மா இருக்கிறார்,  அர்ஜுன் சிங்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி "சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுமே என்று அஞ்சியே வாரன் ஆன்டர்சன் அனுப்பி வைக்கப்பட்டதாக'வும் அர்ஜுன் சிங் அந்த நோக்கிலேயே செயல் பட்டதாகவும் கூறி அவரையும் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். இது  இந்திய அரசின் நிர்வாக லட்சணம் எப்படி இருக்கிறது என்பதையே பறைசாற்றுகிறது.
 

யூனியன் கார்பைடு நிறுவனப் பங்குகளை "டவ் ' நிறுவனத்துக்கு விற்பனை செய்தபோது, கார்பைடு நிறுவனத்தின் இழப்பீடுகளில் "டவ் ' நிறுவனத்தைத் தொடர்புபடுத்த மாட்டோம் என்று அப்போதைய காங்கிரஸ் அரசு உறுதி அளித்ததாக சில தினங்களுக்கு முன்பு ஒரு புகார் எழுந்தது. இந்தப் புகாரும் நிரூபிக்கப்படுமேயானால், அதைவிட மோசமான விவகாரம் எதுவும் இருக்க முடியாது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கை நடத்தி, முதல் குற்றவாளியான வாரன் ஆன்டர்சன் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலேயே தீர்ப்பு வழங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதன் காரணமாக, இது குறித்து 10 நாள்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி அமைச்சர் குழுவை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். இதெல்லாம், கொதித்துப்போய்க் கிடக்கும் மக்கள் மனதை சற்று குளிர வைக்க மட்டுமே. இதனால் ஏதோ புதிதாக ஒரு குற்றப்பத்திரிகை தயாரித்து, தண்டனை பெற்றுவிடுவார்கள் என்று நம்புவதற்கில்லை.

ஏனென்றால் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு போபால் விஷ வாயு விபத்து வழக்கில் சட்ட ஆலோசனை அளித்த அபிஷேக் மனு சிங்வி, அதில் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டே காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளராக இருக்கும்போது நாம்தான் மத்திய அரசைப் புரிந்து நடக்க வேண்டும்.  இனியும் இந்த தேசத்தை இவர்கள்தான் காப்பாற்றப் போகிறார்கள் என்று நினைத்தால் அது அவர்களின் தவறு அல்ல.
 

நிலம், நீர், காற்று என்று அனைத்தையும் பாழாக்கும் தோல் பதனிடும் ஆலைகளும் சாயப்பட்டறைகளும் ரசாயன உர ஆலைகளும் நிறுவப்பட உகந்த இடம் இந்தியாதான் என்று மேற்கத்திய நாடுகள் எப்போதோ தீர்மானித்துவிட்டன. அன்னியச் செலாவணி கிடைக்கிறது, வேலைவாய்ப்பு பெருகுகிறது என்று புளகாங்கிதம் அடைந்து நம்முடைய அரசியல் தலைவர்கள் அவற்றுக்கு நடைபாவாடை விரிக்கின்றனர் என்று நம்மை நம்ப வைக்கிறார்கள் என்றாலும், அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இதில் லாபம், கமிஷன் எல்லாமும் என்பது நாம் சொல்லாமலேயே விளங்கும்.
 

மேற்கத்திய நாடுகள் இந்தியாவைத் தங்களுடைய குப்பைத் தொட்டியாகவே நினைப்பதை அவ்வப்போது அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் நகரக் கழிவுகளையும் சுத்திகரிக்கப்படாத மருத்துவமனைக் கழிவுகளையும் கன்டெய்னர்களில் ஏற்றிவரும் வெளிநாட்டுக் கப்பல்கள் உறுதிப்படுத்தி வருகின்றன.

அமெரிக்காவில் ஒரு சாதாரணமான சத்துமாவை, ஊட்டச்சத்து மாவு என்று விற்பனை செய்ய வேண்டும் என்றால் அந்த நாட்டின் உணவுத் துறையின் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டாக வேண்டும். அமெரிக்காவுக்கு ஒரு உணவுப் பொருள் அல்லது மருந்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள அந்த ஏற்றுமதி நிறுவனம், சீரிய தயாரிப்பு முறைகளை (குட் மானுபேக்சரிங் புராஸஸ்) அமெரிக்கா நிபந்தனைகளுக்கு ஏற்ப கொண்டிருக்க வேண்டும்.  


ஆனால் அமெரிக்கர்கள் இந்தியாவில் தொழில் செய்ய வேண்டும் என்றால் இந்தியச் சட்டம் அவர்களைக் கட்டுப்படுத்தாது. இதுதான் யதார்த்த நிலைமை.

விஷவாயு கசிவு நேர்ந்தபோது, ஆன்டர்சன் போபாலில் இருந்திருந்தால், விஷவாயு இந்தியர்களை மட்டுமே கொன்றிருக்குமா, இல்லை, அவரைக் கட்டுப்படுத்தவோ, அவருக்குப் பாதிப்பு ஏற்படுத்தவோ தனக்கு அதிகாரம் இல்லை என்று சும்மா கடந்துபோயிருக்குமா?


oooOooo 

தங்களால் ஒன்றும் செய்ய முடியாது , எதையும் கட்டுப் படுத்தவோ, சரியான முறையில் நிர்வகிக்கவோ முடியாது என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டே இன்னொரு பேரழிவுக்கு இந்த நாட்டை அணு உலை விபத்து நட்ட ஈடு  வரையறை செய்யும் சட்ட முன்வரைவு என்று தைரியமாக, அடிப்படை நாணயமோ, நேர்மையோ, குறைந்தபட்சம் முதுகெலும்போ இல்லாத காங்கிரஸ் கட்சி அரசு, ஐ மு கூட்டணிக் குழப்பமாக முயல்கிறது என்றால்............

அதற்கு முதல் காரணம், இந்தக் கையாலாகாதவர்களைத் தேர்ந்தெடுத்த நாம் தான் முதல் குற்றவாளி!

தவறைத் திருத்திக் கொள்ளக் கொஞ்சமாவது முயற்சிக்கப் போகிறோமா?

நீங்கள் தான் சொல்ல வேண்டும்! உங்களுக்குத் தெரிந்த அத்தனை பேரிடமும்! அழுத்தமாக!

கார்டூன்கள், தலையங்கத்திற்கு தினமணி நாளிதழுக்கு நன்றியுடன்! இப்படி எழுதியது ஜூன் 2010 இல். ஒரு மீள் நினைவாக. கொலைகாரக் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தலையெடுக்க விடக்கூடாதென்ற வெறியை விதைத்த பல்வேறு காரணங்களில் போபால் விஷவாயு சம்பவத்தைக் காங்கிரஸ் அலட்சியமாகக் கையாண்ட விதமும் ஒன்று.

   

சண்டேன்னா மூணு! அரசியல்! கர்மா தியரி! Re Learning!

இன்றைய செய்திகளை இணையத்தில் வாசித்துக் கொண்டு இருந்த போது இந்த TOI செய்திக்கு வந்திருந்த வாசகர் கமென்ட்டிலேயே டாப் என்று எடுத்துப்  போட்டிருந்த வரிகள் இன்றைய அரசியல் நிலவரத்தை, வாக்காளர் மனநிலையை, காங்கிரசின் முடிவு காலத்தை சிம்பிளாக எடுத்துச் சொல்கிற மாதிரி இருந்ததைப் பார்த்தேன்! அதுவே இன்றைய பதிவின் opening ஆகவும்! "Simple thing is that time for Congress is up and all its past bad karmas are catching up. Everyone will pay...and it will be a hefty price for torturig Hindus." யாரோ ஒரு ஹிந்து அபிமானி அல்லது RSSஅபிமானி வெறுப்பில் உமிழ்ந்து விட்டுப் போன வார்த்தைகள் என்று ஒதுக்கிவிட்டுப் போய்விட முடியாதபடி, காங்கிரஸ் கடைப்பிடித்து வந்த pseudo secularism, மைனாரிடிகள் நலனைப் பாதுகாப்பது என்பது பெரும்பான்மை சமூகத்தை அடியோடு புறக்கணிப்பது அல்லது ஏறி மிதிப்பது என்றாகிப்போனதில் இயல்பாகவே எழுகிற அதிருப்தியின் வெளிப்பாடு! தேர்தல்கள் வருகிறது என்றால் இன்றைய காங்கிரஸ் பயந்து, பதுங்கி ஓடுகிற பரிதாபம் ஒன்றே காங்கிரஸ் தலைமையை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிற ஒரு குடும்பத்தின் யோக்கியதை இன்னதென்று வெளிக்காட்டிவிடுகிறதே!    
     


இங்கே தமிழக காங்கிரஸ்காரர்களுடைய standard dialogue ஆகத் தங்களுடைய பேச்சை ஆரம்பிக்கும்போது காங்கிரஸ் கட்சி என்று சொல்வதற்குப் பதிலாக, காங்கிரஸ் பேரியக்கம் என்று சொல்வார்கள்! ஆனால் காங்கிரஸ் பெரிய அளவிலோ அல்லது ஒரு இயக்கமாகவோ நேரு காலத்திலிருந்தே வளர்க்கப் படவில்லை என்பதும், தலைமை தாங்க நேரு வாரிசுகளைத் தவிர, கட்சியில் இருந்து வேறு எவரையும் தேர்ந்தெடுக்க முடியாத சவலைப்பிள்ளைகளாக அன்னை இந்திராவாலும்  அன்னை சோனியாவாலும் ஆக்கப்பட்ட ஒரு கூட்டமாகவே சுருங்கி கிடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?  மூன்று மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்தவேண்டியிருப்பதில் நேற்றைக்கு ஹரியானா, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு வருகிற அக்டொபர் 21 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தேர்தலை அறிவிக்க வருகிற ஜனவரி வரை அவகாசமிருக்கிறது. கூடவே காலியாக இருக்கும் 64 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்களும்!

 
ஒரு காலத்தில் மேற்கே கத்தோலிக்கப் பாதிரிமார்கள் ரகசியமாகக் கூடி விவாதிப்பதுதான் conclave என்று இருந்தது காலப்போக்கில் வடக்கத்திய ஊடகங்கள் ஒவ்வொரு வருடமும் ஏதோவொரு theme இல் ஒரு conclave நடத்துவது வாடிக்கையாகி விட்டது. அதிகாரத்தில் உள்ளவர்கள், செல்வாக்கு மிகுந்த தொழிலதிபர்கள் என்று ஒரு கதம்பமான பங்கேற்பாளர்களை வைத்து ஓரிருநாள் நடத்துவது ஒருவிதமான வணிக உத்தியாக ஆகிவிட்டது. இவைகளில் நான் அதிக கவனம் செலுத்துவதில்லை என்றாலும் சுத்தமாகத் தவிர்த்து விடுவதும் இல்லை.  ஆனால் விப்ரோ நிறுவனத்தின் தலைவராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் ரிஷாத் பிரேம்ஜி இனி வரும் காலத்தில் வேலைவாய்ப்புக்கள் குறித்து ராகுல் கன்வலுடன் உரையாடுவதைப் பார்த்தபோது இந்த மாதிரி conclave ஊரான் காசில் மஞ்சக்குளிப்பதுதான் என்றாலும் கொஞ்சம் உபயோகமான தகவல்களும் கிடைப்பதை மறுக்க முடியாது. இணைப்பில் வீடியோவாகப்பார்க்கலாம் 32 நிமிடங்கள்.

Over the next 5 years, 9% of India's 600 million workforce will hold jobs that do not exist yet, Rahul Kanwal cited a Nasscom report. So how is Premji thinking about bringing up a young child in a world like this? "I think the biggest skill is learnability and continuous learning, that is the most important non-technical skill you can develop," says Premji.

He says that people often fixated on one skill and he would rather teach his child on how to be always open to new skills."Those who don't have learnability get fixated on ideas and then get left behind," he adds.  

தொடர்ந்து கற்றுக்கொள்வதும், புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வதும் தான் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு ஆன வழி என்பதை வலியுறுத்துகிறார் ரிஷாத். Relearning, Re skilling இல்லாமல் போனால் பின்தங்கிவிட வேண்டியதுதான் என்கிறார். வேலைவாய்ப்பு என்ற ஒரு விஷயத்துக்காக மட்டுமே அல்லாமல், அரசியல் கட்சிகளுக்கும் இந்த விஷயத்தைப் பொருத்திப் பார்த்தால் காங்கிரசுக்கு இந்திராவின் வாரிசுகளே முடிவுரை எழுதிவிட்ட மாதிரித்தான் கள நிலவரம் புலப்படுத்துகிறது. 

கர்மா துரத்துகிறது என்று சொல்வதிலும் தவறே இல்லை! விதைத்ததைத்தானே அறுவடை செய்தாக வேண்டும்!

யோசித்துப் பாருங்கள். மீண்டும் சந்திப்போம்.               

இட்லி வடை பொங்கல்! #44 அரசியல்! 2 மாநிலத்தேர்தல்கள்!

சோனியாG காங்கிரசுக்கு பயமுறுத்துகிற மிகப்பெரிய சவாலாக  அக்டோபர் 21 அன்று அறிவிக்கப்பட்டிருக்கிற மஹாராஷ்டிரா, ஹரியானா இரண்டு மாநில சட்டமன்றத் தேர்தல்களோடு, 64 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்தே அறிவிக்கப் பட்டிருக்கிற இடைத்தேர்தல்களும் சேர்ந்து கொண்டிருக்கிறது. மஹாராஷ்டிராவில் சரத் பவாரின் NCP கட்சியோடு சோனியாG காங்கிரஸ் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், மீதமுள்ள 38 தொகுதிகளை கூட்டணியில் சேரவருகிற உதிரிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்றும். முந்திக்கொண்டு   ஒரு உடன்பாட்டைச் செய்து முடித்துவிட்டது. அதனால் என்ன? ஜனங்கள் காங்கிரசுக்கு உயிர் கொடுத்து விடுவார்களா என்ன? 


2014 சட்டசபைத்  தேர்தல்களில் பிஜேபியோடு முறுக்கிக் கொண்டு சிவசேனா தனித்தே நின்றதில் வெறும் 63 இடங்களும்  பிஜேபிக்கு 122  இடங்களும் கிடைத்த அனுபவத்தில் இந்த முறை சிவசேனா கொஞ்சம் அடக்கி வாசிக்கிற மாதிரித்தான் தெரிகிறது. போதாக்குறைக்கு இரு நாட்களுக்கு முன் நாசிக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே அயோத்தி விவகாரத்தில் சில ஓட்டைவாயர்கள் நாட்டின் உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துக் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் என்று மறைமுகமாக சிவசேனாவின் அதீத உபதேசங்களுக்குப் பதில் சொல்கிற மாதிரி  இடித்துச் சொன்னதைத்தாண்டி, பெரிதாக தாக்கரேவைக் கண்டுகொள்ளவில்லை. பிஜேபி சிவசேனா தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் இன்னும் முடியவில்லை என்பதோடு உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவைக் களமிறக்கி, துணை முதல்வராக்க வேண்டும் என்கிற கனவு என்னாகுமோ என்ற சஸ்பென்சும் நீடிக்கிறது. 

தங்களுடைய ஆட்சி குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியான விமர்சனம் குறித்து பேசிய மஹாராஷ்டிரா முதலமைச்சர்  தேவேந்திர  பட்னவிஸ், ’நான் சாம்னா பத்திரிக்கையை வாசிக்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமைச்சரவையின் சார்பில் எடுக்கப்பட்ட அத்தனை முடிவுகளும் சிவசேனா அமைச்சர்களின் ஒத்துழைப்புடன் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள்தான்’ என்று விளக்கமளித்தார். அடுத்த முறையும் நீங்கள் முதல்வராக பதவியேற்பீர்களா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, அதில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? என்று பதிலளித்தார் 

ஹரியானா காங்கிரஸ்  கதையைச் சொல்லவே வேண்டாம்! அங்கே காங்கிரஸ் கட்சி, 46% ஜாட் மற்றும் தலித் வாக்குகளை மட்டுமே நம்பிக் களமிறங்க வேண்டிய நிலைமை! அந்த 46% வாக்குகளில் காங்கிரசுக்கு எவ்வளவு தேறும் என்பது கூட அவர்களால் கணிக்க முடியவில்லை.
Replying to
😂
😂
😂
😂
😂
Party (JDS) with 37 seats and outrightly Rejected Party ( CONgress) with 80 seats Thanks Pappu's of both parties
Quote Tweet
ANI
@ANI
·
HD Deve Gowda, JD(S) on Karnataka Assembly by-polls: HD Kumaraswamy, who was the Chief Minister heading the coalition government has already declared that we want to contest all 15 constituencies. The suffering he faced at the hands of Congress, he does not want it anymore.
3:19 PM · Sep 21, 2019

இது கர்நாடகத்தில் 15 அசெம்பிளி இடைத்தேர்தல்களிலும் தனித்தே போட்டி என்று அறிவித்த தேவே கவுடா கட்சியைக் கலாய்த்து வந்த முதல் ட்வீட்! அதற்கு கொஞ்சமும் சளைக்காத இந்தச் செய்திக்கு என்னென்ன எதிர்வினையோ? மூன்றாம் கலீஞர் வீராவேசமாகப் பேசியதெல்லாம் வீண்தானா?

நாங்குநேரி தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு, திமுக கொடுக்குமா? அல்லது தானே போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசினார்.இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும், விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடும் என்றும்  அறிவித்துள்ளார். 


காமெடிச் செய்திகள் வேறெதுவும் சிக்கவில்லை என்பதால் இந்த ஒருமாதப்பழசு! 

மீண்டும் சந்திப்போம். 
        

A Wednesday! ஏன் காங்கிரசை நிராகரிக்க வேண்டும்?

இந்தப்பக்கங்களில் 2009 முதலே காங்கிரசைக் குறித்த விமரிசனங்களோடு , காங்கிரசைத் தோற்கடியுங்கள், Defeat Congress என்று மிக வெளிப்படையாகவே சொல்லி வந்திருக்கிறேன். ஐயோ, 134 வருடப் பாரம்பரியம் உள்ள கட்சியாயிற்றே, காந்தி நேரு போன்ற தலைவர்கள் இருந்த கட்சியாயிற்றே, அப்படிச் சொல்லி விடலாமா என்று சிலருக்கு சந்தேகம் எழலாம். அப்படி சந்தேகப்படுகிறவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் கதை, வரலாறு தெரியாது என்று கொஞ்சம் சொல்லிக் கொடுக்கிற பதிவுகள் இங்கே நிறைய இருக்கின்றன. காங்கிரசின் கதை என்பது ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத பலகால கட்டங்களைக் கொண்டது. அல்லது காங்கிரஸ் என்ற பெயரில் வெவ்வேறுநபர்களின் ஆளுமையின் கீழ் இருந்த வெவ்வேறு குழப்பங்களைக்  குறிப்பிடுகிற ஒரு பெயர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்! 

இப்படிக் கொள்கைகள் எல்லாம் காங்கிரசுக்கு இருந்ததா? இருக்கிறதா? என்பதில் ஆரம்பிக்கிற  குழப்பம், என்றைக்கும் தீருவதாயில்லை! 1885 இல் மாட்சிமைதாங்கிய ராணியின் சர்க்கார் அனுமதியோடு ஆரம்பிக்கப்பட்ட காங்கிரசா இன்றைக்கு இருப்பது? ஸ்ரீ அரவிந்தர், திலகர், கோகலே காலத்தைய காங்கிரசா இன்றைக்கிருப்பது? 1920 க்குப் பிறகு,மகாத்மா காந்தி வந்தபிறகு 1942 இல் வெள்ளையனே வெளியேறு என்று இயக்கம் நடத்திய காங்கிரசா இன்றைக்கு இருப்பது?

நேரு காலத்தில் இருந்த காங்கிரசா இது? கட்சியை உடைத்து இண்டிகேட் ஆக்கிய இந்திரா காலத்து காங்கிரசா இன்றைக்கிருப்பது?

இன்றைக்கிருக்கிற காங்கிரசின் சரித்திரம் சீதாராம் கேசரியை ஓரம் கட்டிவிட்டு, அன்டோனியோ மைனோ என்கிற சோனியா கட்சித்தலைவர் ஆனதிலிருந்து தொடங்குகிறது என்பதைப் புரிந்துகொண்டீர்களானால், மற்ற விஷயங்களைப் புரிந்துகொள்வது எளிது!  ஏன் இவர்களை நிராகரிக்கவேண்டும் என்பதையும் சேர்த்துத்தான்!  

காங்கிரஸுக்கு இந்தியா ஒரு நாடு கிடையாது, ஒரு இராணுவ தளவாடங்கள் விற்கும் சந்தை! என்று முகநூலில் இதைப் பகிர்ந்திருக்கிறார் செல்வம் நாயகம் 
"இராணுவ தளவாடங்கள் விற்க ப்ளாக் ஆப்ஸ் என்ற இங்கிலாந்து நிறுவனத்தை ராகுல் காந்தி நிறுவியுள்ளார். அவர் இங்கிலாந்து பிரஜா உரிமையை (இந்தியாவுக்கு தெரியாமல் சட்ட விரோதமாக) பெற்றுள்ளார்" போன்ற விவரங்கள் கசிந்ததை அடுத்து, ராகுலிடம் அது பற்றி பேட்டி எடுக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார் நிருபர் விவேக்.
"உன்னையும், உனக்கு என் தொலைபேசி எண்ணை தந்தவனையும் முடித்து விடுவேன்" என்று ராகுல் மிரட்ட, அந்த நிருபர் பேட்டி டில்லியில் இருக்கும் ப்ளாக் ஆப்ஸ் நிறுவனத்தை நாடியிருக்கிறார். அங்கிருந்தும் துரத்தி விடப்பட்டிருக்கிறார் அவர். அதன் பின், பேட்டி எடுக்கும் முயற்சியை கை விட்டிருக்கிறார்.
இதை 2017இல் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் நிருபர் விவேக்.
"ராகுல் மூளை சரியில்லாதவர் / ஆளுமை பிரச்சினை உள்ளவர் (personality problems)" என்ற ரீதியில் பத்திரிக்கையாளர் (காங்கிரஸ் ஆதரவாளர்) சயீது நாக்வி அமெரிக்கர் போலஃபிடம் (Poloff) 2005இல் தெரிவித்ததை விக்கி லீக்ஸ் வெளியிட்டிருந்தது. கொலை செய்யும் அளவுக்கு மூளை சரியில்லாதவர் போல....
(சயீது நாக்வி மகள் சபா நாக்வி தொலைக்காட்சி விவாதங்களில் வருபவர்)
அதே விக்கிலீக்ஸ், "ராஜீவ் காந்தி தான் ஸ்வீடனின் இராணுவ தளவாட நிறுவனம் சாப்-ஸ்கானியாவுக்கு (Saab-Scania) ஏஜண்ட். சாப்-ஸ்கானியா தளவாடங்களை இந்தியாவில் விற்க அவர் முயற்சித்தார்" என்ற 1975 விவரத்தையும் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் முதல் ஊழல், இராணுவங்களுக்கு ஜீப் வாங்கியது. அதை செய்தவர் நேரு. அந்த பாரம்பரியத்தை இந்திராவும் தொடர்ந்தார். இப்போது இந்தியாவில் விசாரணை கைதியாக இருக்கும் அகஸ்ட்டா வெஸ்ட்லாண்ட், யூரோஃபைட்டர் இராணுவ தளவாட ஏஜண்ட் கிறிஸ்ட்டியன் மிஷலின் தந்தை உல்ஃப்கங் மிஷல் ஒரு இராணுவ தளவாட ஏஜண்ட் இந்திராவின் நெருங்கிய நண்பர்.
நேரு, இந்திராவை அடுத்து ராஜீவ். போஃபர்ஸில் சிக்காமல் தப்பித்தார்.
பின் சோனியா, ராகூல், ராபர்ட் வாத்ரா, பிரியங்கா வாத்ரா...
காங்கிரஸுக்கு இந்தியா ஒரு நாடு கிடையாது, ஒரு இராணுவ தளவாடங்கள் விற்கும் சந்தை. இந்திய வளங்களை வெளிநாட்டுக்கு விற்று பணம் கொழிக்கும் பூமி. 1947இலிருந்து பாரதத்தை சூறையாடி வருகிறது இந்த குடும்பம். இந்த குடும்பத்தை சார்ந்தவர்களும் வாரிசு அரசியலை ஆதரிப்பதில் ஆச்சரியமில்லை.
11:12 PM - 10 Oct 2017 - Shri Rahul Gandhi's first words when I made a cold call to him apropos backops was 'I'll finish you and the person who gave my number off'
11:17 PM - 10 Oct 2017 - Let's be equally fair or unfair. I went to Backops registered office in deen dayal upadhay marg. I was kicked out literally for asking why
Apr 8, 2013 - Rajiv Gandhi 'worked as middleman' in aircraft deal: WikiLeaks
1975 October 21 - SWEDISH EMBOFF HAS INFORMED US THAT MAIN INDIAN NEGOTIATOR WITH SWEDES ON VIGGEN AT NEW DELHI END HAS BEEN MRS. GANDHI'S OLER SON, RAJIV GANDHI
2005 March 3 - Naqvi claimed that it is increasingly
common knowledge that Rahul suffers from "personality
problems" of an emotional or psychological nature that are
severe enough to prevent him from functioning as PM.


காங்கிரசை ஏன் முழுதாய் நிராகரிக்கவேண்டும் என்பதற்கு நிறையக்காரணங்கள் இருக்கின்றன.  

மாறாக, ஏன் இவர்களை இனியும் கூட ஆதரித்தே ஆக வேண்டுமென்பதற்கு வலுவான காரணம் இருக்கிறதா?

மாற்றுக கருத்துக்கள் நாகரீகமான உரையாடலாக வரவேற்கப்படுகின்றன. விருந்தினர் பதிவாக எழுத விரும்பினால்  அதையும் வரவேற்கிறேன்!