அப்பாலே தூரப் போ! காங்கிரஸ் சாத்தானே! யெஸ் பேங்க்!

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு CAA NPR NRC இவைகளை வைத்து ஒருசில பல்கலைக்கழகங்கள், டில்லியின் சிலப்பகுதிகளை கலவரபூமியாக்கியது போதவில்லையாம்! கடந்த 5 நாட்களாக டில்லி கலவரம் பற்றி விவாதிக்கவேண்டும் என்று ரகளை, ஒரே அமளி! சபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக  7 காங்கிரஸ் எம்பிக்கள் இந்தக் கூட்டத் தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கிறார்கள். இரு அவைகளும் வருகிற 11 ஆம் தேதிவரை ஒத்திவைக்கப் பட்டிருக்கின்றன. எதையும் பேசி விவாதித்து முடிவு செய்யவேண்டும் என்கிற ஜனநாயக நடைமுறை காற்றில் பறக்கவிடப் பட்டிருக்கிறது.

    வீடியோ 16 நிமிடம்    

ஒரு தொடர் உரையாடல்களைநிகழ்த்தி ஒரு தெளிவுக்கு வரவேண்டும் என்கிற நடைமுறை கும்பலாகச் சேர்ந்து கூக்குரல் எழுப்புவது, கோஷமிடுவது, காகிதங்களைக் கிழித்து வீசுவது, மற்றவர்களைப் பேசவிடாமல் ரகளை செய்வது இதெல்லாம் நாடாளுமன்றத்தில் தினசரி நிகழ்ச்சி என்றாகி விட்டது. இந்த அசிங்கத்துக்கு இப்படி ஒரு சப்பைக்கட்டு வேறு!


இந்தச் செய்திக்கு தினமலர் நாளிதழில் ஒரு வாசகர் பின்னூட்டம்: காங்கிரஸ் கட்சியை ஒரு 150ஆண்டுகளுக்குத் தடை செய்து விட வேண்டும்! அந்த அளவுக்குக் காங்கிரஸ் கட்சி ஜனநாயக சீரழிவுகளின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது.


யெஸ் பேங்க் மீது மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. HDFC வங்கியின் ஆதித்ய பூரி இந்த விஷயத்தைப் பற்றித் தனது கருத்துக்களை 9 நிமிட வீடியோவில் சொல்கிறார். தொடர்ந்து   கடந்த சில  வருடங்களாகவே யெஸ் பேங்க் தடுமாறி வருவதும், அன்னிய மூலதனம் வரும், வருகிறது என்றே சொல்லிக் கொண்டிருந்ததும், வங்கித்துறை விஷயங்களைக் கவனித்துவருகிறவர்களுக்கு நன்கு தெரிந்த  செய்திதான்! ஏதாவது வங்கி சிக்கலில் மாட்டிக் கொள்ளுமானால், பொதுத்துறை வங்கி ஒன்றுடன் இணைத்துவிட்டுப் பிரச்சினையை அப்படியே மறக்கடித்துவிடுவது முந்தைய ஆட்சிக் காலத்து நடைமுறை! பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பதிலாக இன்னும் பல புதுப்பிரச்சினைகளைக் கிளப்பி விடுவதைப் பற்றி யார் கேட்கப்போகிறார்கள்? யார் கவலைப்படப்போகிறார்கள்?

நிதியமைச்சர் விரிவாகவே கேள்விகளுக்கு 
பதிலளிக்கிறார் வீடியோ 33 நிமிடம் 

ஆனால் தன்னைப் பெரிய பொருளாதார மேதை என்று நினைத்துக் கொண்டு இருக்கிற பானாசீனாவுக்கு மெல்வதற்கு ஒரு புது விஷயம் கிடைத்துவிட்டது!


இந்த ஒன்று மட்டுமல்ல, அப்பச்சி வேகவேகமாக இன்னொரு நாலைந்து ட்வீட்டுகளையும் தட்டி விட்டிருக்கிறார் என்பதில் திருடன் திருடன் என்று முந்திக்கொண்டு கூவுகிற மாதிரிப் புலப்படுகிறது. 


அதிசயமாக, டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் இதில்   ஒரு சஸ்பென்ஸ் வைத்துக் கேள்வி எழுப்புகிறார்! 



பதறாமல் இருப்பது யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு நல்லது தான்! ஆனால் நம்மூர் சூழலில் அது தவிர்க்க முடியாதது. பானாசீனா மாதிரிப் பெருச்சாளிகள் வெட்கமில்லாமல் கருத்து சொல்வதையும் கூட சகித்துக் கொள்ள வேண்டுமா?

அப்பாலே போ சாத்தானே என்று எப்போது தள்ளி வைக்கப் போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்           

6 comments:

  1. துள்ளி வருகுது வேல்..
    பகையே சுற்றி வாராதே போ!..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!

      அன்னை பராசக்திதான் இந்த தேசத்தைக் காப்பாற்றவேண்டும் ! ஜனங்களாக நல்லது கெட்டதை அறிந்து செயல்படப்போகிறார்களா என்ன?!

      Delete
  2. சாத்தான் என்ற ஒன்று
    நமது வழியில் கிடையாதே...

    ReplyDelete
    Replies
    1. நமது வழியில் கிடையாதுதான்! அதற்காகவே இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறதே!

      Delete
  3. எல்லாம் முந்தைய வினை...

    ReplyDelete
    Replies
    1. இப்போதைய கோளாறுகளுக்கு மூலகாரணமாக இருப்பதும் தேசம் பிரிவினையானதும் முந்தைய வினை என்றா நினைக்கிறீர்கள்? ஸ்ரீ அரவிந்தர் அப்படி நினைக்கவில்லை. மனிதத்தவறு என்றுதான் அந்த நாட்களிலேயே சொன்னார்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!