வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! #அரசியல்தமாஷா

நேற்று வரை நான் எதற்காக மெஜாரிடியை நிரூபிக்க வேண்டும் என்று மிதப்பாகக் கேள்வி எழுப்பிக் கொண்டு இருந்த மத்தியப்பிரதேச காங்கிரஸ் முதலமைச்சர் கமல்நாத், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு அப்புறம் சுருதி குறைந்து, இன்று நடுப்பகல் 12 மணிக்கு நிருபர்களைச் சந்திக்கிறாராம்! நிருபர்களிடம் கொஞ்சம் கொட்டித்தீர்த்த கையோடு தன்னுடைய ராஜினாமாவையும் சமர்ப்பிப்பார் என்பது இன்றைய அரசியல் தமாஷாக்களில் முதலாவது! கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறவரை காங்கிரஸ்காரன் நாற்காலியை விடவே மாட்டான் என்று இந்தப் பக்கங்களில் நான் பலமுறை சொல்லிவருவது ஏன் என்று இப்போதாவது விளங்கிக்கொள்ள முடிகிறதா?


வேண்டுமானால் பிஜேபி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரட்டுமே என்று காங்கிரஸ் விரித்த வலையில் பிஜேபி சிக்கிக் கொள்ளவில்லை என்பது முதலாவது அடி! 16 MLAக்கள் ராஜினாமா மீது வீடியோ conference இல் சபாநாயகர் அவர்களுடன் பேசிப் பார்க்கட்டுமே என்ற உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை சபாநாயகர் ஏற்கவில்லை. இன்னும் இருவார அவகாசம் வேண்டுமென்று சபாநாயகர் வேண்டியதை நீதிமன்றம் ஏற்கவில்லை. வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்கு சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும், நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்புச் செய்யவும் உத்தரவிட்டபிறகு, சபாநாயகர் 16 MLAக்கள் ராஜினாமாவை ஏற்பதாக நேற்று  அறிவித்த போதே கமல்நாத் ஆட்சியின் கதையும் முடிந்து போனது. தங்கள் MLAக்களை அவர்களது விருப்பத்துக்கு எதிராக யாரோ பிடித்து வைத்திருப்பதாகவும் மீட்டுத்தரவேண்டும் என்றும் காங்கிரஸ் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதையை, அந்த 16 MLAக்களும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்து தாங்கள் சுயவிருப்பத்தின் பேரிலேயே பெங்களூருவில் தங்கி இருப்பதாகச் சொல்லி முறியடித்தனர் என்பது கூட சபாநாயகர் நேற்று ராஜினாமாவை ஏற்பதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்! காங்கிரஸ் வக்கீல்கள் கடினமாக முயற்சித்தும் கூடக் கரியைப் பூசிக் கொண்டதுதான் மிச்சம்! 

         
கொரோனா வைரசை தீனத்து வைரஸ் என்று அமெரிக்க அதிபர் தொடர்ந்து சொல்லிவருவதில் சீனா நிதானமிழந்திருக்கிறது. சில அமெரிக்க ஊடகங்களின் நிருபர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு ஆணை பிறப்பித்திருக்கிறது. வர்த்தகப்போரில் கூட சீனா நிதானமிழக்காமல் அமைதியாக இருந்தது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவில் வைத்துக் கொண்டு இந்த 18 நிமிட வீடியோவில் சில கான்ஸ்பிரசி தியரிகளை பற்றி என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்! நேற்றிரவு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னாலேயே இங்கே ஆல் இன் ஆல் அழகுராஜா ப. சிதம்பரம் பிரதமருக்கு யோசனை சொல்லவும் கிளம்பிய வேடிக்கையைக் கவனித்தீர்களா? பிரதமர் உரைக்குப் பின்னால் பம்மிப் பம்மி நாலைந்து ட்வீட் போட்டதோடு சரி!


மனோபாலா வேஸ்ட்பேப்பர் என்றொரு யூட்யூப் சேனல் நடத்திக் கொண்டிருக்கிறார் போல.தமிழ் சினிமாவைப் பிடித்திருக்கிற வியாதி என்னவென்று பேசுகிறார்கள். தமிழகத்தைப் பிடித்திருக்கிற பெரும் வியாதியே சினிமா தானே! 22 நிமிடட் காமெடிக் கொடுமை!  

மீண்டும் சந்திப்போம் 


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!