வாய்ஸ் கொடுத்தது போதுமே! #அரசியல் #வாய்ஸ்

வழக்கம் போல ரஜனிகாந்த் இன்றைக்கும் நிறையக் குழப்பிவிட்டுப் போயிருக்கிறார். பொழிப்புரை தர ரங்கராஜ் பாண்டே, தமிழருவி மணியன் என்று யாரும் இன்னமும் கிளம்பவில்லை. எனக்கென்னவோ இந்த மனிதர் மீதோ அல்லது இவர் பேசும் அரசியல் மீதோ என்றைக்குமே நம்பிக்கை இருந்ததில்லை என்பதால் அதிகம் சட்டை செய்ததில்லை. இப்போதும் அப்படியே கடந்து போய்விடவே விரும்புகிறேன். ஊடகங்களுக்கு இரண்டு மூன்றுநாள் தீனி கிடைத்துவிட்டது என்பதற்கு மேல் பெரிதாக எதுவும் இப்போது தெரியவில்லை. முகநூலில் சேட்டைக்காரன் பதிவர் இப்போது ஒரு சிச்சுவேஷன் சாங்! அட கழுத, அது கிடக்கட்டும் போடா! என்று இந்தப்பாட்டைப் பகிர்ந்திருக்கிறார்.

   
நண்பர் மணி ஜி ( ஏதோ அந்தநாட்களில் வலைப்பதிவுகளில் அறிமுகம். அதனால் அப்படிச் சொல்லிக் கொள்ளலாமோ என்று எனக்கு, கொஞ்சம்  டவுட்டு) வேறுவிதமாக இந்த விஷயத்தைப் பற்றி சுருக்கமான கட்டுரை வரைந்திருக்கிறார்.

இதான் தென்னை மரம். நல்லா உசரமா வளரும். தேங்காய் காய்க்கும்.இளநி கிடைக்கும். தேங்காயை மசாலாவுக்கு , சட்னி அரைக்க ஊஸ் பண்ணிக்கலாம்.
ம்ம்...அப்புறம்..
தென்னை நார் கயிறு திரிக்க உதவும் . கொட்டாங்குச்சி தட்டிப்பாத்தா தாளம் வரும். தென்னங்கீத்து பாடை கட்ட உதவும்..
எல்லாம் சரிங்க சார்..ஆனா நீங்க மாட்டைப்பத்தி பேசப்போறேன்னு சொன்னிங்களே?
அங்கதாங்க வரேன்.. இப்படியாப்பட்ட மரத்துலதான் மாட்டை கட்டுவாங்க..
வர்ர்றட்டா....லக...லக...லக...


ஒருவழியாக நேற்று  தமிழக பிஜேபிக்கு தலைவரை அகில இந்தியத் தலைமை நியமனம் செய்து விட்டது. ஜோதிராதித்ய சிந்தியா பிஜேபிக்கு வந்த பரபரப்பில் யாரும் கண்டுகொள்ளவில்லையோ என சந்தேகம். தமிழக அரசியல் களம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பது இன்றைக்கு வெளிப்பட்டிருக்கிறது. 


ஒய்யாரக்கொண்டையாம், தாழம்பூவாம்...
-------------------------------------------------
கொஞ்சம் அமைதியா ஒதுங்கி இருக்கலாம்னு இருந்தேன்.
7.30- வலிய வந்து கதவை தட்டியிருக்கிறது.
பாஜக-வின் தமிழகத் தலைவராக எல்.முருகன் என்பவரை நியமித்திருக்கிறது தலைமை. மகிழ்ச்சி தான்.
அங்கே பெரியார் இல்லை. சாதி ஒழிப்பு முழக்கம் இல்லை. சமூகநீதி என்ற கோஷமில்லை. ஆனாலும் இரண்டாவது முறையாக சாத்தியப்படுத்தியுள்ளது பாஜக தலைமை.
இதற்கு முன்பு, டாக்டர் கிருபாநிதி என்பவரை நியமித்திருந்தது.
இப்போது, “அந்த கிருபாநிதிங்கிற பட்டியலினத் தலைவரை, பொதுச் செயலாளரா இருந்த இல.கணேசன் உட்பட பலரும், எப்படியெல்லாம் அவமரியாதை செய்திருக்கிறார்கள் தெரியுமா” என்று ஒரு ‘புரட்சிக் குரலும்’...
“என்னதான் இருந்தாலும் அது, ஆர்.எஸ்.எஸ் பின்னணி. பட்டியலினத் தலைவர் எல். முருகனை சுந்திரமாக செயல்பட விடாது.. அடிமையாகவே நடத்துவார்கள். பட்டியலின மக்களின் ஆதரவு-பலம் இரண்டையும் கணக்கிட்டு இப்படி நியமித்துள்ளது இந்துத்துவா” என்ற மற்றொரு புரட்சிக் குரலையும் தோழர்கள் எழுப்பி வருகிறார்கள்.
தலித்களை குறிவைத்து காய் நகர்த்துகிறது பாஜக என்கிறார் மற்றொரு தோழர். எல்லாமும் நியாயம் தான்.
என்ன செய்ய? காங்கிரஸ் கட்சி கூட இரண்டு முறை, பட்டியலினத்தவரை மாநில தலைவராக நியமித்துவிட்டது.
ஆனால், சமூகநீதி பேசிய திராவிடர் கழகத்தில்? திமுக-வில்? அதிமுக-வில்? இன்னமும் சாத்தியப்படவில்லையே...
ஏன், ஒலக புரட்சி பேசும் கம்யூனிஸ்ட் கட்சியில் இன்னும் சாத்தியப்படவில்லையே?
கொள்கை வேறு, ஆதிக்கபுத்தி வேறு என்றிருப்பதுதானே! அதை விட்டுக்கொடுக்க முடியாதது தானே? பெரியாரை- அவரது கொள்கையை அவமதிப்பது அவர்கள்தானே?
சரி, அப்படியே பட்டியலினத்தவரை தலைவராக நியமித்தாலும், சுதந்திரமாக செயல்பட ஐயா, வீரமணி மட்டும் விட்டுவிடுவாரா? தளபதி ஸ்டாலினும் விட்டுவிடுவாரா, என்ன?
என்னமோ பாஜக ‘தலைமைகள்’ மட்டும்தான் சுதந்திரமாக செயல்பட விடாது என்பது மாதிரியும்...? திக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் தலைமைகள் எல்லாம் பட்டியலினத்தவரை சுதந்திரமாக செயல்பட விடுவதைப் போலவும் கதைக்காதீர்கள் அப்பனே...!
பா.ஏகலைவன் பத்திரிகையாளர்.
நண்பர் உண்மைத்தமிழனும் இந்த இரண்டு செய்திகள் மீது முகநூலில் வழக்கம் போலப் பொங்கி இருக்கிறார்.

சுபவீ செட்டியார் இதிலும் ரொம்ப லேட் 

இவர்களோடு நானும் சேர்ந்து பொங்கித் தான் தீர வேண்டுமா? வேண்டாமே, பார்த்துச் சிரித்துவிட்டு, போய்க்கொண்டே இரு என்கிறது மனசு!

மீண்டும் சந்திப்போம்.      

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!