இந்திய அரசியல், அதிலும் தமிழக அரசியல் வெறும் அக்கப்போர்களால் ஆனது என்பதை அனுபவ சத்தியமாகப் பார்த்து வந்திருக்கிறோம்! நாளுக்குநாள் அதிகரித்துவருகிறதே தவிர குறைகிற வழியாய்க் காணோம்! இதில் எந்த அக்கப்போருக்கு முன்னுரிமை கொடுத்து எழுதுவது என்கிற அக்கப்போர் வேறு! முதலில் ரஜினிகாந்துக்கு பொழிப்புரை தேவைப் படுகிற அக்கப்போரைப் பார்த்துவிடலாமா?
ரஜனிகாந்த் கேட்டுக்கு வெளியே வந்து சுமார் 3 நிமிடம் பேசியதற்கு ரங்கராஜ் பாண்டே சுமார் 30 நிமிட பொழிப்புரை கொடுத்ததை சுபவீ செட்டியார் இது பார்ப்பனீயச் சதி என்று புறந்தள்ளிவிட்டு தமிழருவி மணியன் வந்து பொழிப்புரை தந்திருக்கலாம் என்று சொல்லியிருந்தார். பாண்டே பார்ப்பனர்தான், ஆனால் பாப்பாத்தியைக் கட்டிக் கொண்டதாலேயே ரஜனியும் பாப்பான்தான் என்றாக்கின அவசரம் அவஸ்தை சுபவீ செட்டியாருக்கு நிறையவே இருந்தது. ஆனாலும் அவர் வேண்டுகோளை தமிழருவி மணியன் நிறைவேற்றி விட்டார் என்பதில் சுபவீ செட்டியார் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்! நேற்றைக்கு இந்த 58 நிமிட பொழிப்புரை நேரலையில் ஒளிபரப்பானபோது ஆடியோ சுத்தமாக இல்லை. இப்போது ஆடியோ சரியாக இருக்கிற வீடியோவை வலையேற்றி இருப்பது இங்கேயும். கூடவே ஒரு கருத்துக்கணிப்பு முடிவையும் வெளியிட்டிருக்கிறார்கள். சரியான குசும்பு!
ரஜனிகாந்த் கேட்டுக்கு வெளியே வந்து சொன்னதில் ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம் என்றார். மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜனி ஒன்றரை மணிநேரம் பேசியதில் என்ன நடந்தது என்று ரங்கராஜ் பாண்டே சொன்னதைத்தான், இங்கே தமிழருவி மணியனும் ஒருமணிநேரமாக நீட்டி முழக்கிச் சொல்கிறார். சுபவீ செட்டியார் இதற்கு எப்படி ரியாக்ட் செய்யப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பவன் நான் ஒருவன்தான் இருப்பேன் போல!
அபிஷேக் மனு சிங்வி மாதிரி காசுக்கார வக்கீல் வக்காலத்து வாங்கிப்பேசும்போது, இந்த கொடுக்கல் வாங்கலில் என்ன தவறு இருக்கமுடியும் என்றுதான் தோன்றும்! ஆனால் நடந்தது வக்கீல் வக்காலத்து வாங்குகிற மாதிரித்தானா?
முதலில் M F ஹுசைன் வரைந்து கொடுத்த ராஜீவ் காண்டியின் படம் பிரியங்காவுடையது தானா? அல்லது காங்கிரஸ் கட்சியின் சொத்தா? அப்புறம் அதன் விலை சந்தைமதிப்பில் 2 கோடி ரூபாய் இருக்கும் என்று யார் மதிப்பீடு செய்தார்களாம்? அதற்கப்புறம் ராணா கபூர் என்ன காரணத்துக்காக அவ்வளவு விலை கொடுத்து அந்தப்படத்தை வாங்கினாராம்?
#பணவாசனை அடிக்கிற இடங்களில் எல்லாம் நம்மூர் பானாசீனா இருப்பார், அப்படியே காங்கிரஸ் கட்சியும் இருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம். ஆக யெஸ் பேங்க் விவகாரத்தில் இன்னும் பூதங்கள் வெளியே வந்து கொண்டே இருக்கும் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.
சேகர் குப்தா இந்த 26 நிமிட வீடியோவில் யெஸ் பேங்க் விவகாரத்தைக் கொஞ்சம் பாலிஷ் போட்டுச் சொல்வது என்ன? காங்கிரஸ் சார்புள்ள ஊடகக்காரர்தான்! மாற்றுக் கருத்து என்ன, எப்படி நகாசு செய்து செய்தியைச் சொல்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யெஸ் பேங்க் விவகாரம் இன்னும் சிலகாலத்துக்குப் பரபரப்பாகப் பேசப்படும் விஷயமாகத்தான் இருக்கும். ஒரு முன்னாள் வங்கியாளனாக, என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள எனக்கு மட்டும் விருப்பமிருக்காதா என்ன!!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!