கொரோனா வைரஸ் தொற்றை வைத்து இந்தியப் பங்குச் சந்தை இன்றைக்கு மறுபடியும் ஆட்டம் கண்டிருக்கிறது. நாமறிந்த பதிவர்களில் எங்கள் Blog #KGG ஒருவர்தான் பங்குச்சந்தையைப் பற்றிப் பேசக் கூடியவர். ஏதாவது சொல்லியிருக்கிறாரா என்று பார்த்ததில் இது வரை எதுவும் கண்ணில் படவில்லை. பங்குச்சந்தை அரசியல் எனக்குப் பிடிபடாதது. அதனால் தெரிந்த இந்திய அரசியல்களத்தைப் பற்றியே பேசலாமா?
மத்திய பிரதேசத்தில் பிஜேபியின் சிவராஜ் சவுகான் இன்றிரவு முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று தகவல்கள் சொல்கின்றன. ஏற்கெனெவே 3 முறை ம,பி. முதல்வராக இருந்தவருக்கே இன்னும் வாய்ப்பளிப்பதில் கட்சிக்குள்ளேயே கருத்தொற்றுமை இல்லை என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். போதாக் குறைக்கு காங்கிரசின் பிரஜாபதி சபாநாயகராக நீடிக்கக் கூடாது என்று பிஜேபி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்போவதாக, சட்டசபை கூடியவுடனேயே நம்பிக்கையில்லாத்தீர்மானத்தை முதலில் எடுத்துக் கொள்ளவேண்டுமென்று ஆளுநர் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஆக, மத்தியப்பிரதேசத்தில் இன்னமும் அரசியல் நிலவரம் தெளிவற்றதாகத்தான் நீடிக்கிறது. காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிகிற வரை குழப்பத்துக்குப் பஞ்சமில்லை.
கம்முனா கம்மு கம்முனாட்டி கோ
கோதாவரி! கதாபாத்திரத்துக்கு இந்தப் பெயரை வைத்த தமிழ்த்திரைப்பட இயக்குனர், கதாசிரியர் எவரையாவது அறிவீர்களா? இயக்குனர், நடிகர், கதாசிரியர் என்பது தவிர #அரட்டைஅரங்கம் என்ற டிவி டாக் ஷோ, என்று பலவிதமாகவும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த விசு என்கிற எம் ஆர் விசுவநாதன் நேற்று காலமானார். துக்ளக் வாசகர்கள் குழுவை ஒரு அறக்கட்டளையாகப் பதிவு செய்த நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பில் விசுவைக் கடைசியாகப் பார்த்தது. இந்தப்பக்கங்களிலும் பகிர்ந்திருந்தது நினைவிருக்கிறதா? ஆழ்ந்த இரங்கல்கள் என்று எழுதும் போது, அவருடைய மூன்று மகள்களும் திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வருவதில். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் அவர்கள் எவரும் இந்தியாவுக்கு வந்து இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி நெஞ்சைப் பிசைகிறது. பதிவர் உண்மைத்தமிழன் அவரது தளத்தில் ஒரு விரிவான அஞ்சலிக்கட்டுரையை எழுதியிருக்கிறார்.
இந்த 20 நிமிட வீடியோவில் இருக்கும் காமெடி வால்யூ ஒன்றுக்காக மட்டுமே இங்கே பகிர்கிறேன். மற்றபடி ரவீந்திரன் துரைசாமியின் அரசியல் மேதாவித்தனம் எப்படிப்பட்டது என்பதற்காக இல்லை. இசுடாலின், ரஜனி இருவரில் யார் உயர்ந்தவர் என்ற லூசுத்தனமான கேள்வியை எழுப்பிக்கொண்டு இசுடாலின் வெர்சஸ் மற்றவர்கள் என்பதுதான் சரியென்று சொல்வதுமே மிகவும் தவறான வாதம்!
மீண்டும் சந்திப்போம்.
உண்மைத்தமிழன் கட்டுரை பின்னர் படிக்க வேண்டும்.
ReplyDeleteபடித்துவிட்டு, மனப்பூர்வமான அஞ்சலிக்கட்டுரைதானா என்பதைக் கொஞ்சம் சொல்லுங்களேன் ஸ்ரீராம்!
Deleteவிசு அவர்கள் வசனத்தில் முத்திரை பதித்தவர். அவர் கடைசி ஊர்வலத்தில் அவர் மகள்களை காண்பித்தார்களே? (அவர்களில் இருவரை நான் முன்பே பார்த்திருக்கிறேன் )
ReplyDeleteவாருங்கள் பந்து!
Deleteநான் முன்னம் வாசித்த செய்தி தவறாக இருந்திருக்கலாம். மகள்கள் கலந்துகொண்டார்கள் என்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி. நான் பொதுவாக இறுதிச்சடங்குகள், ஊர்வலம் போன்ற விஷயங்களில் வீடியோ எதையும் பார்ப்பதில்லை என்பதால், ஒரு தவறான தகவலைப் பகிர்ந்ததற்கு வருந்துகிறேன்.