கொரோனா வைரஸ் தொற்றினால் இத்தாலியில் நேற்று நிலவரப்படி பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது என்பதில் ஐரோப்பிய நாடுகளுடனான போக்குவரத்தை அமெரிக்காவும் பிரிட்டனும் தடை செய்துவிட்டன. Highlighting the challenge facing Italy, the worst-affected country in Europe, the daily death toll jumped by 189 to 1,016 என்பதோடு நிற்கவில்லை செய்தி. The Vatican on Thursday (Mar 12) closed all Catholic churches across Rome to stem the spread of a coronavirus pandemic that has killed more than 1,000 people across Italy. The papal vicar for Rome said the churches would reopen when a broader Italian government crackdown on public gatherings expires on Apr 3 என்று தேவாலயங்கள் மூடப்படுவதாகவும் ஏப்ரல் 3ஆம் தேதிக்குப் பிறகு திறக்கப்படலாம் என்றும் சொல்கிறது. இத்தாலி இன்றைக்கு அக்கம்பக்கத்து நாடுகளால் தீண்டத்தகாத நாடாகப்பார்க்கப்படுகிற அளவுக்கு நிலைமை மோசம். அதுபோக உலகமெங்கும் பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றன. இன்றைக்கு இந்தியபங்குச் சந்தையிலும் கடுமையான வீழ்ச்சி - முக்கால் மணிநேரம் வர்த்தகம் நிறுத்திவைப்பு என இங்கும் கொரோனா வைரசின் தாக்கம் எதிரொலித்து இருக்கிறது.
சேகர் குப்தா எதற்காக இந்த 20 நிமிட காமெடியை வலையேற்றியிருக்கிறார் என்பது எனக்கு நிஜமாகவே புரியவில்லை. இப்போது கொரோனா என்றும் Covid 19 என்றும் சொல்லப்படுகிற நோய்த்தொற்றுக்கு ஆரம்ப காலங்களில் வூஹான் வைரஸ் என்றுதான் பெயரிடப் பட்டிருந்தது. இப்போது அதே பெயரில் அழைத்தால் சீனர்களுக்கு எரிச்சல் வருகிறது. இந்த வைரஸ் ஏதோ தற்செயலான விபரீதம் இல்லை. சீன ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்பட்ட ஒன்றென்பது முன்பே கசிந்த தகவல்தான். இப்போது சீனர்கள் இந்த நோய்த்தொற்றை அமெரிக்க ராணுவம் தான் வூஹானில் இறக்குமதி செய்தது என்று பிளேட்டைத் திருப்பிப்போட ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது சேகர் குப்தா காமெடியைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இந்தக்காமெடி இப்போது எதற்காக? புரியாவிட்டால் போகிறது! கொஞ்சம் தமிழ்நாட்டு விவகாரங்களையும் பார்த்துவிடலாமா?
இது சேட்டை இல்லையென்றால் வேறெதுதான் சேட்டை!? கூப்பிடுங்கள் வடிவேலுவை!
இது ரஜனிகாந்தின் குழப்பமான அரசியல் நிலைபாடு மீது இன்றைக்கு நடிகர் வடிவேலுவின் காமெடி! சாமி கும்பிட வந்தவரைக் கும்பலாக மறித்துக் குண்டக்க மண்டக்க கேள்விகளைக் கேட்கிற கேணத்தனமான ஊடகங்கள் செய்தது சரி என்றால் வடிவேலு காமெடி செய்ததும் சரிதான்!
வரட்டா? மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!