சண்டேன்னா மூணு! அதிசயம்! ஆச்சரியம்! அரசியல்!

இந்த வலைப்பக்கங்களில் 2008 முதல் வெவ்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். 1200 பதிவுகளையும் தாண்டியாகிவிட்டது. ஆனால் இரண்டுமாதங்களாக 2009  அக்டோபரில் எழுதிய ஒரு பதிவு, சீனப் பெருமிதத்திற்கு வயது அறுபது! தத்துவம் யாருக்கு வேண்டும்? தொடர்ந்து அதிகமாக வாசிக்கப்படுகிற பதிவாக இருந்துவருவதைக் கவனித்து வருவதில் நிறைய ஆச்சர்யங்கள்! சீனா செய்திகளில் மட்டுமல்ல, வலைப்பதிவுகளிலும் அதிகம் கவனிக்கப்படுகிற விஷயமாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்வதா? ஆனால் சீனப் பெருமிதத்தை, 2019 அக்டோபரில் சீனா எழுபது என்று நடத்திக் காட்டிய அலப்பறைகளை கொரோனா வைரஸ் தொற்று, அனேகமாக அடித்துக் காலிசெய்து விட்டது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அடி பலம்தான், ஆனால் மீண்டெழுகிற திறமையும் சீனர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது என்பதையும் சேர்த்தே சொல்லியாகவேண்டும்.


இந்த 6 நிமிட வீடியோ 3 நாட்களுக்கு முந்தையது. இதில் சொல்லப்படும் புள்ளிவிவரங்களும் பழசுதான்! ஆனால் நிலைமை என்னவென்று புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். அதைவிட As WHO director general Tedros Adhanom Ghebreyesus warned recently: “Countries invest heavily in protecting their people from terrorist attacks, but not against the attack of a virus, which could be far more deadly and far more damaging economically and socially.”  என்று சொன்னது இன்னும் அதிகப் பொருத்தமாக இருக்கும். உலகமயமாக்கல், உற்பத்திச் செலவைக் குறைப்பது என்ற விஷயங்களில் உலகம் சீனாவின் பிடியில் சிக்கியிருப்பதைக் கவனிக்க வேண்டாமா? இன்னமும் கூட மலிவான மருந்துகளை சீனா தான் தயாரித்து உலகச்சந்தையில் தள்ளிக் கொண்டிருக்கிறது. ஆன்டிபயாடிக் மருந்துகளுக்காக அமெரிக்கா சீனாவைத்தான் முழுதும் நம்பி இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை! வர்க்கப்போரில் டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் கைகளை முறுக்கியதாகச் சொல்லப்பட்டது. ஆனால் சீனா அமெரிக்காவுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் உட்பட மருத்துவப் பொருட்களை விற்பதை நிறுத்தி இருந்தால், ஒரு போரின் நாசத்தை விட அதிக சேதாரத்தை அமெரிக்கப்பொருளாதாரத்துக்கு உண்டாக்கி இருக்கமுடியும்.

Moreover, this is not the first time China has considered weaponizing its dominance in global medical supplies and APIs. Last year, Li Daokui, a prominent Chinese economist, suggested curtailing Chinese API exports to the US as a countermeasure in the trade war. “Once the export is reduced,” Li noted, “the medical systems of some developed countries will not work.” That is no exaggeration. A US Department of Commerce study found that 97% of all antibiotics sold in the US come from China. “If you’re the Chinese and you want to really just destroy us,” Gary Cohn, former chief economic adviser to US President Donald Trump, observed last year, “just stop sending us antibiotics.” என்று பிரம்ம செலானி தன்னுடைய செய்திக் கட்டுரையில் மேற்கோள் காட்டியிருப்பது நிஜம்தான்.  இந்திய மருந்துப்பொருள் உற்பத்தியிலும் கூட சீனாவின் மலிவான மருந்து மூலப்பொருட்களைத் தான் முக்கால்வாசி நம்பியிருக்கிறோம்.


பிரம்ம செலானி மேலே சுட்டி கொடுத்திருக்கும் செய்திக் கட்டுரை மீது சரியான கேள்வியைத்தான் எழுப்பியிருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று மட்டும் சீனாவாக அல்லாமல் வேறொரு நாட்டில் இருந்து  புறப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? 

      
Quint  தளத்தின் இந்த 7 நிமிட வீடியோவில் கொஞ்சம் ஓவராகவே குதிக்கிறார்கள். தேவையே இல்லாமல் சீனபூச்சாண்டி காட்டுகிறார்கள்.  இங்கே ஊடகங்களுக்கு அரசியல் இல்லையென்று யார் சொன்னது?

கானா பூச்சாண்டி! 

கல்லூரி முதல் வருடம் என்று நினைவு. ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டியூட் வாசலில் நண்பனின் ( ஒரு) காதலிக்காக காத்திருந்தோம். படிக்கட்டில் யாரோ இறங்கி வரும் சத்தம் கேட்டது. ஆனால் வந்தது அவள் இல்லை. யாரோ அவன். நான் டேய் வேற எவனோடா என்றேன். அந்த ஒரு வார்த்தை பற்றிக்கொண்டது. அவன் என் கன்னத்தில் அறைந்தான். நான் எனக்குத்தெரிந்த ஒரு தாதாவிடம் அடைக்கலம் புகுந்தேன். அறைந்தவனும் அவரும் முன்பே பரம விரோதிகள். அது எனக்குத்தெரியாது. பெரிய பிரச்சனையாகியது. நானெல்லாம் இடுப்பில் சைக்கிள் செயினை கட்டிகொண்டே சுற்றினேன் 
ஐயப்பனும் கோஷியும் இன்றுதான் அமேசானில் பார்த்தேன். சினிமா இனிமேல் ஒரு ஊரில் ஒரு ராஜா என்றெல்லாம் கதை விடுதல் நடக்காது. ஒரு சின்ன சம்பவம் அல்லது ஒரு பொறி.ஒட்டி நடக்கும் அல்லது நடந்தவை.. இதை மலையாள திரை மொழி வித்தகர்கள் சரியாக பிடிக்கிறார்கள்.. ஐயப்பனும் , கோஷியும்... .. டோண்ட் மிஸ்..
மணி ஜி Sivakumaran Ramalingam

ஆனையை கண்டா நிறுத்து நான் ஓட்டறேன்னு கோஷி சொல்வான். அதுக்கு ட்ரைவர் ஆனையையான்னு கேப்பார். சம்திங்..க்ளா!ஸ்

ஒரு முன்னாள் ராணுவக்காரன்! ஒரு போலீஸ் எஸ் ஐ! இருவருக்கிடையிலான ego clash தொடர்ந்து கொண்டே போவதான ஒரு கதைக்களம். கொஞ்சம் கூடத் தொய்வில்லாமல் படத்தை பிருத்வி ராஜும், பிஜு மேனனும் கடைசிக் காட்சிவரை நகர்த்திக் கொண்டு போகிறார்கள் என்பதைத் தாண்டி படத்தில் என்ன கதை என்ன சொல்ல வருகிறார்கள் என்பதெல்லாம் கேட்கக் கூடாத கேள்விகள்! மம்மூட்டி, துல்கர் சல்மான் நடித்த சமீபத்தைய காவியங்களைப் பார்த்திருந்தால் மணி ஜி நிச்சயமாக மலையாளத் திரையுலகுக்கு இப்படி ஒட்டுமொத்தமாக சர்டிபிகேட் கொடுத்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். மணிஜி அந்த field க்குள் இருந்து வியக்கிறார். வெறும் பார்வையாளனாக இருந்து என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன் என்பதில் அரசியல் எதுவுமில்லை!  

ச்சும்மா ஜாலிக்கு! ஒரு மாறுதலுக்காக. மீண்டும் சந்திப்போம்.    

2 comments:

  1. சீனா ஆய்வகத்தில் கோரானா வைரஸ் உருவாக்கினார்களா குறித்து தனியாக எழுத முடியுமா? என்று கோரிக்கை வைக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      வூஹானில் உள்ள சீன ஆய்வகத்தில் இருந்து கிளம்பியதுதான் இந்த கொரோனா வைரஸ். நவம்பர் 2019 இலேயே இந்த வைரஸ் தொற்று பரவ ஆரபித்துவிட்டாலும் தாய்லாந்தும் வியட்நாம் என்று வெளியேயும் பரவ ஆரம்பித்த பிறகே விவகாரம் உலகுக்குத் தெரியவந்தது.

      பிரம்ம செலானியின் கட்டுரைக்குச் சுட்டி கொடுத்திருக்கிறேன். அங்கேயும் விவரங்கள் இருக்கின்றன. தனியாக எழுதுவானேன்?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!