Showing posts with label கொரோனா. Show all posts
Showing posts with label கொரோனா. Show all posts

சண்டேன்னா மூணு! ரஜனி வாய்ஸ்! ரங்கராஜ் பாண்டே பார்வை! நச்சுன்னு ஒரு கமெண்ட்!

கொரோனா கால அரசியல் மிக விசித்திரமாகத்தான் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது போல! எப்போதாவது செலெக்டிவாக வாய்ஸ் கொடுக்கும் ரஜனி கூட டாஸ்மாக் கடை திறப்பு விவகாரத்தில் லேட்டாக இருந்தாலும் லேட்டஸ்ட்டாக ஒரு காமெடி செய்திருக்கிறார். என்ன என்பதை ஒரு 2 நிமிட வீடியோவில் பார்த்து விடலாம்  ரஜனி காமெடியை விட சாணக்யா தளத்தில் வெளியான இந்தப் படம் மிகவும் தெளிவாக நிலைமையைச் சொல்லிவிடுகிறது.

 
அப்புறமும் என்ன பஞ்சாயத்து? வாய்ஸ், சவுண்ட் உடறது?   
 
கேட்டுக்கு வெளியே வந்து நிருபர்களிடம் பேசவில்லை. சும்மா ட்வீட்டரில் ஒரு கீச்சு! அவ்வளவுதான்! அதற்கே தராசு ஷ்யாம் லபோதிபோவென அடித்துக் கொள்கிறார் கொரோனா விபத்தில் நீண்ட தூக்கத்திலிருந்து ரஜனிகாந்த் இப்போதுதான் விழித்துக் கொண்டிருக்கிறாரா என்பது ஷ்யாம் வெளிப்படுத்தியிருக்கிற சந்தேகம். ஆக ரஜனி என்ன பேசினாலும் எதிர்ப்பது என்று ஒரு கும்பல் அலைவது தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.ரஜனியும் சரி, எதிர்க்கிற கும்பலும் சரி கஜானாவை நிரப்ப வேறு நல்ல வழிகள் எவை என்பதைச் சொல்ல ஒரு சின்ன முயற்சிகூடச் செய்ய முடியவில்லை என்பது தமிழக அரசியல் களத்தின் ஆகப்பெரிய பரிதாபம்! குறைகளைமட்டுமே ஊதிப்பெரிதாக்குவோம் என்று அலைகிறவர்களிடம் நேர்மறையான சிந்தனை செயல்களை எதிர் பார்க்க யூடியுமா என்ன?


பாண்டே பார்வை என்கிற தலைப்பில்  இந்த 31 நிமிட வீடியோவில் ரங்கராஜ் பாண்டே அதிமுக - பாஜக உறவில் விரிசல் ஆரம்பம் என்று விரிவாகப் பேசியிருக்கிறார். எனக்கு வருகிற சந்தேகம் எப்போது இந்த இரண்டுகட்சிகளுக்கும் சுமுகமான உறவு இருந்தது என்பது தான்! காரியத்துக்காக பரஸ்பரம் சொறிந்து கொண்டதையெல்லாம் சுமுக உறவு என்று எடுத்துக் கொள்ள முடியுமா? 



ரசனிகாந்து வாய்ஸ் கொடுத்துவிட்டார்! ரங்கராஜ் பாண்டேவும் தன்னுடைய எக்ஸ்பெர்ட் கருத்தை நீட்டி முழக்கிச் சொல்லிவிட்டார் என்பதெல்லாம் சரி! ஆனால் மேலே ஜயகாந்த் என்றொருத்தர் நச்சுன்னு ஒரு கருத்தைச்  சொல்லி  முடித்துவிட்டாரே, அதற்கென்ன சொல்வீர்களாம்?

மீண்டும்  சந்திப்போம். 

மண்டேன்னா ஒண்ணு! #கொரோனா அரசியல்! சீனத்துச்சண்டியர் முண்டா தட்டுகிறார்!

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முடிகிறதோ இல்லையோ அதைவைத்து படு கேவலமாக அரசியல் செய்வதில் இங்கே கழகங்களுக்குத் தாங்களும்  சற்றும் இளைத்தவர்களில்லை என்று சீனத் தம்பட்டங்கள் கிழிந்து தொங்கிப் போனபிறகும் கூட விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிற வேடிக்கை,  விசித்திரத்தைக் கவனிக்கிறீர்களா? 

 

அதென்னவோ டூத் பேஸ்ட் விளம்பரங்களாகட்டும், அந்தநாளைய ராம்ஜேத் மலானிகளாட்டும், இன்று சீனாவாகட்டும் பத்து இல்லையென்றால் பத்தாது போலிருக்கிறது! கேப்டன் அமெரிக்கா என்னவானார் என்பதுள்ளிட்டு ஒரு பத்துக்கேள்விகளை  அமெரிக்காவிடம் கேட்கிறதாம் சீனா! வீடியோ 4 நிமிடம். 



வடகொரிய அதிபர்கிம் ஜாங் உன்  உயிரோடிருக்கிறாரா என்பதையே கேள்விக்குறியாக்கி கண்காது மூக்கெல்லாம் வைத்து பரபரப்புச் செய்திகளை அமெரிக்க ஊடகங்கள் கடந்த மூன்று வாரங்களாக ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கிற விதமாக கிம் கிறுக்கன் பொது மக்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டாராம்! தவறான அறுவைச் சிகிட்சை, மூளைச்சாவு, அடுத்துப் பதவியேற்கப்போவது யார், கொரிய தீபகற்பத்தில் போர் மூளுமா இப்படிச் செய்திகளை தந்தி மாதிரி முந்திக்கொண்டு தந்ததெல்லாம் பொய்யாகிப்போய்விட்டது. ஏற்கெனெவே கொரோனா வைரஸ் தொற்றைப் பரவவிட்டதில் உலகாநாடுகளிடம் கெட்டபெயரைச் சம்பாதித்துக்கொண்டிருக்கும் சீனா, கிம் ஜாங் உயிரோடிருப்பதில் கொஞ்சம் நிம்மதிப்பெருமூச்சு விடுகிற மாதிரி! என்னதான் சீனா ராணுவ ரீதியில் பலசாலிதான் என்றாலும், சீனப் பொருளாதாரம் செம அடி வாங்கியிருக்கிற சூழலில் ஒரு போரையும் சமாளிக்கவேண்டுமென்றால் மெத்தக்கனம் தான்! ஆனாலும் தென்சீனக்கடலில் தன்னுடைய முழு ஆதிக்கத்தைக் காட்டிக் கொள்வதற்காக, மலேசியா அருகே அமெரிக்கக் கடற்படைக் கப்பலொன்றை சீனக்கடற்படை வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருக்கிறது. 

 

சீனத்துச் சண்டியர் எதைப்பற்றியும் கவலைப்ப்டாமல் தொடர்ந்து முண்டா தட்டுகிறார்!  டிஜிட்டல் கரன்சியை பரீட்சார்த்தமாக வெள்ளோட்டம் விட்டிருக்கிறார்கள். பிட் காயின் பற்றிக்  கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ப்ளாக் செயின் டெக்னாலஜி பகுறி இந்தப்பக்கங்களில் முன்னர் எழுதியது நினைவு இருக்கிறதா? டிஜிட்டல் கரன்சிக்கு மாறுவது உட்பட பிளாக் செயின் டெக்னாலஜிக்கு  மாறுவது பற்றி ஷி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சி ப்ளீனத்தில் பேசியத்தைக் கூட முன்பு  எஹுதியிருக்கிறேன். இந்த 25 நிமிட வீடியோவைக் கொஞ்சம் பாருங்கள். சிலவிஷயங்கள் புரியவரலாம். 

மீண்டும் சந்திப்போம்.   

இட்லி வடை பொங்கல்! #68 கொரோனா களேபரங்கள்! மம்தா! சீனப்பூச்சாண்டி! பானாசீனா!

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதில் மேற்கு வங்க அரசு இயந்திரம் முற்றிலுமாகச் செயலிழந்து போய்க் கிடப்பது அம்பலமாகியிருக்கிறது. இதுவரை கொரோனாவுக்காக சோதனை செய்யப்பட்டது ஏழாயிரத்துச் சொச்சம் நபர்களிடம் தான் என்பது இந்தியாவிலேயே ஆகக்குறைந்த எண்ணிக்கை என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை. குழாயடிச் சண்டைக்காரியாக எதற்கெடுத்தாலும் கலகக் குரல்  எழுப்பும் மம்தா பானெர்ஜி நெருக்கடி, பிரச்சினை என்று வரும்போது தனது கையாலாகாத்தனத்தை மூடிமறைப்பதில் மட்டுமே குறியாக இருந்தார். டைம்ஸ்  நவ் டிவியின் 26 நிமிட விவாத வீடியோ இங்கே   யூட்யூப் தள வீடியோக்களை இணைக்க முடியவில்லை என்பது ப்ளாக்கர் தளம் விட்டுவிட்டு எனக்கு கொடுத்துவரும் குடைச்சல்.  


#FCC #FederalCommunicationsCommission  #ChinaMobile #ChinaUnicomAmericas #ChinaTelecomAmericas #PacificNetworksCorp #ComNet  


அமெரிக்காவின் FCC...அமெரிக்க தொலைத்தொடர்புக்கான நிர்வாக அமைப்பு.  கடந்த வருடம் மே மாதம், சீன கம்யூனிச அரசுக்கு சொந்தமான China Mobile நிறுவனம் ...அமெரிக்காவில் இயங்குவதற்கு அனுமதி மறுத்தது FCC. காரணம்...அதன் மூலம், அமெரிக்காவிற்குள்... சீனா தன்னுடைய உளவு வேலையை நிகழ்த்தும் என்று கூறியது.கடந்த மாதம்...அமெரிக்க நீதித்துறை ...சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களை அமெரிக்காவுக்குள் இயங்க அனுமதிப்பதை தடை செய்யும்படி சிபாரிசு செய்தது.

இந்த நிலையில்...அமெரிக்காவில் இயங்கி கொண்டிருக்கும் China Telecom Americas , China Unicom Americas, Pacific Networks Corp, இதன் துணை நிறுவனமான ComNet [USA] LLC ஆகிய சீன அரசு நிறுவனங்களை ...தங்களுக்கு சீன தொடர்பு இல்லை என்று நிரூபிக்காவிட்டால்..தடை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது..FCC.

சீன அரசு நிறுவனத்திற்கு எப்படி சீன தொடர்பு இல்லாமல் இருக்கும் ? பின் ஏன் இப்படியான அறிவிப்பு ? என்று அபத்தம் போல தோன்றினாலும் தகுந்த காரணம் உண்டு.

உலகமயமாக்கலுக்கு பின்...உலக வியாபார ஒப்பந்தங்களின் படி ...அனுமதி அளிக்கப்பட்ட பிற நாட்டு நிறுவனத்தை வெளியற்றவோ..தடை செய்யவோ ..தகுந்த காரணங்களை கூற வேண்டும்.

அந்த சீன அரசு நிறுவனங்களால்..தங்களுக்கு சீன தொடர்பு இல்லை என்று நிரூபிக்க இயலாது என்பதால் தான் அப்படியொரு கேள்வி.



தாமதமாகவேனும் அமெரிக்காவும், இந்தியாவும், இதர உலக நாடுகளும் விழித்துக் கொண்டு காய்களை நகர்த்துகின்றன.இதற்கான எதிர்வினைகள் தான்...'உள்நாட்டு குழப்பங்கள்' உட்பட வேறு வகைகளில்...வேறு வடிவங்களில் ..வெளிப்படுகிறது.



அருண் ஜெயிட்லியையே குறைசொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவர் மேலே போய்ச்சேர்ந்து விட்டார்.  பானாசீனா மீதான வழக்குகள், விசாரணையின் நிலையென்ன? யாருக்காவது தெரியுமா?  


மீண்டும் சந்திப்போம்.

கொரோனா வைரஸ் காலத்திலும் கூட சிரிப்புக்குப் பஞ்சமில்லை!

கொரோனா வைரஸ், 21 நாள் ஊரடங்கு நாட்களில் முதல்வாரம் வெற்றிகரமாகக் கடந்து போய்விட்டது. என்னென்ன நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன என்பதைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தீர்களானால், ஊடகச் சேட்டைகள் நிறையவே குறைந்திருக்கின்றன, நாளிதழ்கள் விளம்பரங்கள் இல்லாமல் மிகவும் இளைத்துப் போய் வருகின்றன, டிவி சேனல்களில் மெகாசீரியல்கள் அப்படியே ப்ரொடக்ஷன் நின்றுபோய், முன்பு எப்போதோ ஒளிபரப்பான சீரியல்களை தூசுதட்டி எடுத்து நேரத்தைக் கடத்த ஆரம்பித்து விட்டன, சேனல் விவாதங்கள் பார்ப்பவர் அதிகம் இல்லாமல் போரடிக்க ஆரம்பித்துவிட்டன இப்படி ஏகத்துக்கும் நல்ல விஷயங்களாக இந்த ஒருவாரத்தில் நடந்திருக்கின்றன என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும், ஏனென்றால் தொலைகாட்சி ஊடகங்கள் இந்த அளவுக்கு மவுசு இழந்து கிடந்ததே இல்லை. ராமானந்த சாகர்  எடுத்த ராமாயணமும், பி ஆர் சோப்ரா எடுத்த மகாபாரதமும் DD National, DD Bharti சேனல்களில் மறுஒளிபரப்பு செய்ய ஆரம்பித்ததில் தூர்தர்ஷனுக்கு பார்வையாளர்கள் படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். எப்போதும் வீட்டுக்குள் அடைந்து கிடக்காத வீட்டுக்காரர் இரவு 11 மணி ஆனதுகூடத் தெரியாமல் புத்தகவாசிப்பில் மூழ்கிக்கிடக்கிறார் என்று  முகநூலில் ஒரு  அம்மணி படம் போட்டு ஸ்டேட்டஸ் போடுகிறார்.  இப்படி நல்ல விஷயங்களுடைய பட்டியல் நீண்டுகொண்டே போகிறது!


ஆதன் தமிழ் சேனல், அதன் நெறியாளர் மாதேஷ் இப்படி இரண்டையும் நான்மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டதே இல்லை. அதுபோலவே மூத்த பத்திரிகையாளர் மணி! இந்த ஆசாமி பத்திரிகையாளராக என்ன எழுதிக் கிழித்தார் என்பது உண்மையிலேயே தெரியாது. இங்கே மாதேஷும் மணியும் தொலைபேசியிலேயே ஒரு நேர்காணலை நடத்தி இருக்கிறார்கள் என்பது ஏப்ரல் முதல் தேதி காமெடி என்பதற்குமேல் பிரமாதமாக சொல்வதற்கில்லை. நிதி நெருக்கடி நிலைமை வருமா என்பதே தெரியாமல், அதன்மீது வளவளவென்று பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

முகநூலில் நான் தொடர்ந்து கவனிக்கிற சிலபேர்களில் B R  மகாதேவனும் ஒருவர். அவர் வேறுசில விஷயங்களைக் கவனப்படுத்தி  ஒரு தொகுப்பாக எழுதியிருக்கிறார்.

கொரானா அரசியல்

நோய் பரவி பேரிழப்பு ஏற்பட்டால் உயிர் இழப்பு சார்ந்த வேதனை மட்டுமல்லாது நிவாரணப்பணி, பொருளாதார மீட்பு நடவடிக்கை சார்ந்தும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தி தேசத்தை மேலும் முடக்கலாம்.

பெரிதாக இழப்பு எதுவும் நடக்கவில்லையென்றால், ஊரடங்கு, தேசத்தின் ஒற்றுமை, மக்களின் பொறுப்புணர்வு, தற்காப்பு நடவடிக்கைகள், மருத்துவ – சுகாதார – காவல் பணியாளர்களின் கடின முயற்சி எல்லாம் ஒன்றுமில்லை. நோய் வீரியம் குறைவு என்று சொல்லிவிடலாம்.

தீமை நடந்தால் பழி மத்திய அரசின் மீது. நன்மை நடந்தால் புகழ் மத்திய அரசுக்குக் கிடைக்கக்கூடாது. தேச விரோத சக்திகளின் செயல் திட்டம் இதுவே.

ஏற்கெனவே தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து திருட்டுத்தனமாக இந்தியா வந்து பல மசூதிகளில் கூட்டங்கள் கூட்டி நோயைப் பரப்பச் செய்த சதித்திட்டம் மெள்ள அம்பலமாகத் தொடங்கியிருக்கிறது. அதை திசை திருப்ப செயல் திறன் இன்மை, அலட்சியம் என்ற போர்வையில் திட்டமிட்டே மக்கள் ஊரடங்கை மீற ஒவ்வொரு மாநில அரசும் தன்னால் ஆன திருபு வேலைகளைச் செய்துவருகிறது.

கொல்ல முயற்சி செய்தவனின் கை ரேகை பதிந்த கத்தியை காட்சிப் பொருளாக வைத்து பலரையும் தொட வைத்துவிட்டால் கொலைகாரனைத் தப்புவித்துவிட முடியும் அல்லவா. அதுதான் இப்போது நடந்து வருகிறது.இப்போதைக்கு கொலைகாரன் பிடிபடாவிட்டாலும் பரவாயில்லை; குத்துப் பட்டவன் இறக்காமல் இருந்தாலே போதும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

கொலைத் தொழிலை ஒரு கலையாகக் கற்றிருக்கும் கூட்டத்திடமிருந்து இப்படித்தான் தப்பியாக வேண்டியிருக்கிறது.

*
இன்றைய நாட்டு நடப்புகளை வேறொரு கோணத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது.இந்தியாவில் கொரானா நோய்ப் பரவல் இல்லை. சமூகத் தொற்றாக மாறவில்லை.அயல் நாட்டில் இருந்து வந்தவர்கள் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டிருக்கிறார்கள். அல்லது கனிகா கபூர் போன்ற பிரபலங்கள் விருந்துக் கூட்டம் நடத்தியும் இத்தாலியில் இருந்து கேரளா வந்த கிறிஸ்தவ குடும்பம் ஊரெல்லாம் சுற்றி வந்தும் அவர்களிடமிருந்து பிறருக்குப் பரவவில்லை.

அடுத்ததாக 21 நாள் ஊரடங்கு என்பது நிச்சயம் நோய்த்தொற்றுச் சங்கிலியை முடக்கித்தான் போட்டிருக்கிறது. சந்தைகளில், பேருந்து நிலையங்களில் மக்கள் கூடுவதை நாம் பெரிதும் நோய் சார்ந்த பயத்துடன் பார்க்கவேண்டாம் என்றே இதுவரையான நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஏனென்றால் கோயம்பேடு, கோவை என பேருந்து நிலையங்களில் மக்கள் கூடி நின்ற பின்னரும் பின் வந்த நாட்களில் அது நோயாக வெடித்திருக்கவில்லை. அதிகபட்சம் ஐம்பது மணிநேரத்துக்குள்ளான ஆயுள் கொண்ட கொரோனா கோயம்பேட்டில் கூடி நின்றவர்கள் மூலம் மாநிலம் முழுவதும் இத்தனை நாட்களுக்குள் பரவியிருக்கவேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை.

அதாவது, நோய்த் தொற்று இல்லாத ஆயிரம் பேர் ஒரு இடத்தில் கூடி நின்றாலும் பெரிய இழப்பு இல்லை என்பதுதான் மருத்துவ உண்மை. அதற்காக மக்கள் பெருந்திரளாகக் கூடுவதை அனுமதிக்க முடியாதுதான். அது நிச்சயம் தவறுதான். ஆனால், அது தொடர்பான அச்சம் தேவையில்லை என்றே தோன்றுகிறது (உயிரிழப்புகள் பெருகாததால்).

அது அரசியல்வாதிகளின் சதி அல்லது செயல்திறன் இன்மை மட்டுமே (முதலாவதே உண்மையாக இருக்க அதிக வாய்ப்பு). அதை வேறு வகையில்தான் கையாளவேண்டும்.

இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் சீனர்களைக் கட்டிப் பிடித்து வெளிப்படுத்திய போலி நட்புணர்வு (ஆட்சியாளருக்கு எதிரான ஆட்டுமந்தைச் செயல் மட்டுமே), ஒரே நேரத்தில் பலர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து குவிவதால் ஏற்படும் சிக்கல் இவையே அங்கு இத்தனை உயிரிழப்புகள் ஏற்படக் காரணம்.

இந்தியாவிலும் பலர் நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் (மூன்றாம் கட்டத்துக்குச் சென்றால்) நிச்சயம் இழப்பு அதிகரிக்கும். ஆனால், ஊரடங்கு ஒப்பீட்டளவில் சரியான நேரத்தில், சரியான முறையில் அமலாகிவிட்டதால் கொஞ்சம் தைரியமாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு நோய் சார்ந்து அல்ல; பிற வழிகளில்தான் பிரச்னையைத் தரப்போகிறது. இந்தியப் பொருளாதாரமும் சமூக ஒழுங்கும்தான் பெரிதும் பாதிக்கப்படப் போகிறது.

தேசம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத புயல், வெள்ளம் வந்து போனதுபோல் ஒரு பெரும் சேதம் ஏற்படவாய்ப்பிருக்கிறது. ஆனால், உயிரிழப்பைவிட இது ஒப்பீட்டளவில் சமாளிக்க முடிந்த பிரச்னையே. கத்திக் குத்து அல்ல; சாட்டையடிதான்.

கொரானா வைரஸ் பற்றிய மருத்துவர்கள் சொல்லும் முக்கியமான விஷயம் என்னவென்றால், அது தன்னளவில் அபாயகரமானது அல்ல. ஏற்கெனவே நோய்வாய்ப்பட்ட உடம்பைத்தான் அது மேலும் பாதிக்கும். அந்த நோய்களைத்தான் தீவிரப்படுத்தும்.

அதை அப்படியே சமூக அளவில் பொருத்திப் பார்த்தால், இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதம், பிரிவினைவாதம், எதிர் பொருளாதாரச் செயல்பாடுகள் போன்றவற்றைத்தான் அது மேலும் தீவிரப்படுத்தும்.

இதற்கான மருந்து மருத்துவ நெருக்கடி நிலை அல்ல.  

         
  மீண்டும் சந்திப்போம். 

சண்டேன்னா மூணு! #வாழ்த்துவோம்! #கொரோனா #வரலாறு

கொரோனா வைரஸ் தொற்று களேபரங்களில் மனதை நெகிழச் செய்யும் சில நல்ல செய்திகளும் உண்டே! கொரோனா வைரஸ் தொற்றைப் பரிசோதனை செய்யும் கிட் தயாரிப்பதில் MyLabs என்ற இந்திய நிறுவனம் அரசின் பரிசோதனைக்குப் பிறகு அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது என்பதில் இதைத் தயாரிப்பதை ஆறே வாரங்களில் சாதித்த வைராலஜிஸ்ட் புனே நகரைச் சேர்ந்த மினால் டகவே போசலே என்கிற மராத்தியப் பெண்மணி! நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும் 10 பேர் கொண்ட தனது குழுவுடன் டெஸ்ட் கிட் தயாரித்ததுடன் தீவீரப் பரிசோதனைக்குப்பிறகு அரசின் அனுமதி பெறுவதற்காக அனுப்பியபிறகே, மகப்பேறுக்காக மருத்துவமனையில் சேர்ந்து, ஒரு பெண் குழந்தையையும் ஈன்றெடுத்திருக்கிறார். தாயையும் சேயையும் மனம் கனிந்து வாழ்த்துவோம்!

  
We started the development process for Covid-19 six weeks ago on an emergency basis looking at the national crisis and need for an indigenous accurate solution for improved management. We have developed a unique formulation for test reagents that increases the catalytic activities of the enzymes, reducing the enzyme unit requirement, resulting in reduced cost”, said Minal, who has a decade long experience in the diagnostic field, and also worked on the swine flu disease at NIV, Pune, during the 2009 outbreak. On March 18 evening, within an hour of submitting the proposal for FDA approval, she got admitted to a hospital for a c-section and the very next day, Minal delivered her baby girl என்கிறது செய்தி. MyLabs தயாரிப்பைப் பற்றி ஒருவாரத்துக்கு முன்பே செய்தி வந்துவிட்டாலும், கண்டுபிடிப்பின் பின்னால் இருந்த மினால் பற்றிய செய்தி இப்போது தான் ஓரிரு நாட்களாக வந்து கொண்டிருக்கிறது.


ராகுல் காண்டி! முன்னெல்லாம் ட்வீட்டரில் மட்டும் தான் உளறிக்கொண்டிருந்தார். இப்போது கலீஞர், இசுடாலின் வழியில் கடிதமும் எழுத ஆரம்பித்து விட்டாராம்! #வாரிசுத்தொற்றுநோய்   காங்கிரசுக்கு சோதனைமேல் சோதனை கொடுத்துக் கொண்டே இருக்கிறது  என்பதில் சந்தேகம் யாருக்காவது இருக்கிறதா? உங்களுக்காகவே கீழே உள்ள செய்தி. 
   
”It is my choice," என்று சைனா வைரஸ் பாதிப்பை மறைத்து ஊர்சுற்றியதோடு நில்லாமல், மருத்துவ மனையில் ஏர்கண்டிஷன் வேலை செய்யவில்லை, டாக்டர் மூஞ்சி சரியில்லையென்றெல்லாம் கூப்பாடு போட்டவர் கனிகா கபூர்! தற்போது நான்காவது முறையாக சைனா வைரஸ் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. சிகிச்சை பலனளிக்கவில்லையோ என்று உறவினர்கள் கவலைப்படுகிறார்கள்.
இந்த நேரத்தில் இதைச் சொல்வது கொடூரம்தான்! இருந்தாலும் கொழுப்பெடுத்து ஊர்சுற்றுகிறவர்கள் பாலிவுட் பிரபலமாக இருந்தாலும் சரி, பல்லாவரம் குப்புசாமியாக இருந்தாலும் சரி, சைனா வைரஸ் பலிவாங்கியே தீரும்!
ஒழுங்கு மரியாதையா அரசாங்கம் சொல்றதைக் கேளுங்கடா! 21 நாள் உசிரோட இருந்தா அப்புறம் ஊர்சுத்துறதைப் பத்தி யோசிக்கலாம்.


TOI செய்தியை மேற்கோள் காட்டி கனிகா கபூர் பெயர் சொல்லி எழுதியிருந்தாலும் கடைசி இரண்டு லைனில் யாருக்குச் சொல்கிறார்? #புரிந்தவர்பிஸ்தா 
இங்கே ராமச்சந்திர குகா மட்டும்தான் வரலாறு எழுதுவாராமா? 
ஐரோப்பிய நாடுகளிலெ வத வத என முன்னாள் அரச குடும்பங்கள் உண்டு. எல்லாருமே இளவரசர் இளவரசி தான். சவூதியிலே கிட்டத்தட்ட முப்பதாயிரம் இளவரசர்கள் இருப்பது போல.
அப்படி ஒரு அரச குடும்பத்தின் இளவரசி தான் இப்போது மர்க்யா ஆனது. வயது 86. அவர் முன்னூறு வருடங்களுக்கு முன்பு ஆண்ட ஸ்பெயின் அரசரின் ஆண் வழிபேத்தி. அவருடைய தாத்தாவுக்கு தாத்தா இத்தாலியிலே ஒரு குட்டி கிராமத்துக்கு சிற்றரசர் போல இருந்தவர்.
ஐரோப்பிய அரச குடும்பங்கள் அவர்களுக்குள்ளே தான் மணம் முடித்துக்கொள்வார்கள் என்பதால் இருக்கும் ஏழெட்டு அரச குடும்பங்களும் மாமன் மச்சான் உறவு தான் இந்த இளவரசியின் சகோதர் நெதர்லாண்டு நாட்டு இளவரசியை மணமுடித்தார். இங்கிலாந்து அரசிக்கு ஸ்பெயின் நெதர்லாட்டு நாட்டு அரசர்கள் எல்லாம் தூரத்து மச்சினன்கள் முறை வரும்.
இறந்த இளவரசியின் விக்கி பீடியா பக்கம் https://en.wikipedia.org/…/Princess_Maria_Teresa_of_Bourbon…
இதிலே என்ன போர்பன் என பிஸ்கட் பேரு இருக்குன்னு சிலரும் அதென்னா விஸ்கி பேரா இருக்குன்னு பலரும் கேட்கலாம். பிரெஞ்சு அரச குடும்பத்தின் பெயர் அது. ஊரின் பெயரும் கூட.
எல்லா ஐரோப்பிய அரச குடும்பமும் சார்ல்மெலே எனும் ஆளிடம் இருந்து தான் தொடங்குகிறது. அதெப்படி என்றெல்லாம் கேட்ககூடாது. வெள்ளைத்தோல் வெள்ளைக்காரன் எழுதுவது தான் வர்லார். அதை அப்படியே அடிமை இந்துக்கள் படிச்சிக்கிடனும் இல்லாட்டி ஏ பார்ப்பானீய என பாயாசம் காய்ச்ச ஆரம்பிச்சுடுவாங்க.

வரலாறு புரிகிறதா? மீண்டும் சந்திப்போம்.

இட்லி வடை பொங்கல்! #64 #கொரோனா #அரசியல் படுத்தும் பாடு!

இட்லி வடை பொங்கல் என்ற தலைப்பில் எழுதி ஐந்து வாரங்களாகி விட்டது! ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்தத் தலைப்பில் நடப்பு அரசியல் நிலவரங்களை எழுதிக் கொண்டிருந்ததில் ஏற்பட்ட தடங்கலுக்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்! சதீஷ் ஆசார்யா! முன்னொரு காலத்தில் என்னுடைய அபிமான கார்டூனிஸ்டாக இருந்தவர்! காரணமில்லாத வெறுப்புடன் கார்டூன்களை வரைகிற மாதிரி எனக்குத் தோன்றியதால் அபிமான லிஸ்டில் இல்லை என்றாலும் அவர் வரைகிற கார்டூன்கள் என்னுடைய பார்வைக்கு வந்து கொண்டுதானிருக்கின்றன.

   
இன்றுமுதல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமானந்த சாகர் எடுத்த ராமாயணம் தொடர் காலை, இரவு இருநேரமும் எட்டு மணிக்கு மறு ஒளிபரப்புச் செய்யப் படுவதையும், பிழைப்புக்காக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த மக்களில் பலர்  தற்போது வேலைவாய்ப்பில்லாமல் தவிப்பதால் சொந்த ஊருக்கு  கால்நடையாகவே திரும்பிக் கொண்டிருக்கிற அவலத்தையும் முடிச்சுப்போட்டு விஷமத்தனமான கேள்வியை எழுப்பியிருக்கிறார். ஆனால் இணையத்தேடலில் ராமாயணம் சீரியல் பற்றிய தேடல் எண்ணிக்கை மிக அதிகமாகவே தூர்தர்ஷன் வெப்சைட் திணறியதாகச் செய்திகள் சொல்கின்றன.

சதீஷ் ஆசார்யா   கொஞ்சம் பரவாயில்லை என்று நினைக்க வைக்கிறமாதிரி, இந்தியாவைக்குறித்து மிகவும் கேவலமாக எழுதிக் கொண்டிருக்கிற ஊடகக்காரர் ஒருவரைப் பற்றி முகநூலில் நண்பர் ராஜசங்கர் கொஞ்சம் ஆவேசத்துடன் எழுதியிருப்பதை வாசித்தேன். The Callousness of India’s COVID-19 Response என்ற தலைப்பில் நேற்றைக்கு வித்யா கிருஷ்ணன் என்கிற முன்னாள் ஹிந்து நாளிதழ் ஜர்னலிஸ்ட் எழுதிய விஷமத்தனமான கட்டுரையையும் வாசித்தேன். நடிப்புச் சுதேசிகள் என்று மகாகவி பாரதி அன்றைக்கே இவர்களைப் போல்வாரைப் பற்றி நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத்திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே --வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாடிவைத்தது நினைவுக்கு வருகிறது 

3 நிமிடம் 

இக்கட்டான இந்த நேரத்தில்...தங்கள் மாநிலங்களில் பணி நிமித்தம் வந்து தங்கி இருக்கும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும்.. அரிசி,பருப்பு, சமையல் எண்ணெய் , இன்ன பிற உதவிகள் அனைத்தும் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் - மத்திய அரசு
இந்த விஷயத்தில்....பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழக அரசு செயல்படுகிறது என்று தான் சொல்லவேண்டும்.
பிற மாநில தொழிலாளர்களுக்கும் உதவி பொருட்கள் கிடைக்கும் என்பதை.. தமிழக முதல்வர்..நேரடியாகவே அறிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த ...நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் பலனை ...இது போன்ற பேரிடர் காலங்கள் முழுமையாக உணர்த்துகிறது.
இது ஒருபக்கம் இருக்கட்டும்! இன்னொரு முக்கியமான கேள்வியை இங்கே கேட்டிருக்கிறார்:  
உலகத்துல எந்த நாட்டுலேயும் ஒரு விசாவுல உள்ளே போயி அந்த விசாவுக்கு சம்பந்தம் இல்லாத வேலையை செய்ய முடியாது. அப்படி இருக்க,
1. எப்படி இத்தனை வேற்று நாட்டு இஸ்லாமியர்கள் (தாய்லாந்து, துருக்கி மலேஷியா, யூகிர், சைனா, கில்கிஸ்தான்) இந்தியாவுக்குள் வருகை புரிந்தனர்?
2. எந்த விசா கேட்டகிரியில வந்தாங்க?
டூரிஸ்ட் விசாவா இருந்தாலும் பிஸினஸ் விசாவா இருந்தாலும், அப்படியே உண்மையை சொல்லி ரிலீஜியஸ் விசா வாங்கி வந்தாலும் இங்கே தங்குமிடத்தில் அதாவது இந்தியாவில் இரண்டு லோக்கல் கார்டியன் அல்லது கிளையென்ட் அல்லது லோக்கல் ரிலீஜியஸ் இன்ஸ்டிடியூஷன் ஏதாவது ஒன்றின் தகவல்கள் நமது குடியுரிமை அதிகாரியிடம் தரப்படவேண்டும்.
தந்தார்களா? அப்படி தரப்பட்டது நுண்ணறிவு துறை போலீஸிடம் பகிரப்பட்டதா??
அப்படி பகிரப்பட்ட தகவல்கள் சரிப்பார்க்கப்பட்டு மீண்டும் குடியுரிமை அதிகாரி வசம் வந்ததா??
அப்படி வந்திருந்தால், இரண்டு வாரங்களாக இவர்கள் சென்ற இடங்களை வெகு சுலபமாக கண்டறியலாமே??
தரப்பட்ட விசாவிற்கு சம்பந்தம் இல்லாத வேலையை செய்ததாக, விசா ரூல்ஸை மீறியதாக இதுவரை இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டதா??
எனக்கு தெரிந்து இல்லை.
ஒரு பத்து பேரை குடியுரிமை வழக்கில் போட்டு காய்ச்சி எடுத்தா தான் அடுத்தவனுக்கு பயம் வரும், இல்லேனா வேறொரு வழியில் அவனுங்க உள்ளே நுழைவானுங்க.
மார்க் மை வேர்ட்ஸ்...
எச்சரிக்கையாக இருக்கவேண்டியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? 
பிஜேபியின் H ராஜா கம்யூனிஸ்டுகளின் ஏழைப் பங்காளர்கள் வேடத்தைத் தோலுரிக்கிறாரா? அல்லது மத்தியில் ஆளும் கட்சியில் தேசியச் செயலாளராக இருந்தும் தனக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று பொருமுகிறாரா?
விடைதெரிந்தவர்கள் வந்து பதில் சொல்லலாம்! மீண்டும் சந்திப்போம்.    

மண்டேன்னா ஒண்ணு! #கொரோனா #அரசியல் இன்று!

கொரோனா வைரஸ் தொற்றை வைத்து இந்தியப் பங்குச் சந்தை இன்றைக்கு மறுபடியும் ஆட்டம் கண்டிருக்கிறது. நாமறிந்த பதிவர்களில் எங்கள் Blog #KGG ஒருவர்தான் பங்குச்சந்தையைப் பற்றிப் பேசக் கூடியவர். ஏதாவது சொல்லியிருக்கிறாரா என்று பார்த்ததில் இது வரை எதுவும் கண்ணில் படவில்லை. பங்குச்சந்தை அரசியல் எனக்குப் பிடிபடாதது. அதனால் தெரிந்த இந்திய அரசியல்களத்தைப் பற்றியே பேசலாமா?

       
மத்திய பிரதேசத்தில் பிஜேபியின் சிவராஜ் சவுகான் இன்றிரவு முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று தகவல்கள் சொல்கின்றன. ஏற்கெனெவே  3 முறை  ம,பி. முதல்வராக இருந்தவருக்கே இன்னும் வாய்ப்பளிப்பதில் கட்சிக்குள்ளேயே கருத்தொற்றுமை இல்லை என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். போதாக் குறைக்கு காங்கிரசின் பிரஜாபதி சபாநாயகராக நீடிக்கக் கூடாது என்று பிஜேபி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்போவதாக, சட்டசபை கூடியவுடனேயே நம்பிக்கையில்லாத்தீர்மானத்தை முதலில் எடுத்துக் கொள்ளவேண்டுமென்று ஆளுநர் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஆக, மத்தியப்பிரதேசத்தில் இன்னமும் அரசியல் நிலவரம் தெளிவற்றதாகத்தான் நீடிக்கிறது. காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிகிற வரை குழப்பத்துக்குப் பஞ்சமில்லை.

கம்முனா கம்மு கம்முனாட்டி கோ 
     
கோதாவரி!  கதாபாத்திரத்துக்கு இந்தப் பெயரை வைத்த தமிழ்த்திரைப்பட இயக்குனர், கதாசிரியர் எவரையாவது அறிவீர்களா? இயக்குனர், நடிகர், கதாசிரியர் என்பது தவிர #அரட்டைஅரங்கம் என்ற டிவி டாக் ஷோ, என்று பலவிதமாகவும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த விசு என்கிற எம் ஆர் விசுவநாதன் நேற்று காலமானார். துக்ளக் வாசகர்கள் குழுவை ஒரு அறக்கட்டளையாகப் பதிவு செய்த நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பில் விசுவைக் கடைசியாகப் பார்த்தது. இந்தப்பக்கங்களிலும் பகிர்ந்திருந்தது நினைவிருக்கிறதா? ஆழ்ந்த இரங்கல்கள் என்று எழுதும் போது, அவருடைய மூன்று மகள்களும் திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வருவதில். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் அவர்கள் எவரும் இந்தியாவுக்கு வந்து இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி நெஞ்சைப் பிசைகிறது. பதிவர் உண்மைத்தமிழன் அவரது தளத்தில் ஒரு விரிவான அஞ்சலிக்கட்டுரையை எழுதியிருக்கிறார். 

                                                 
இந்த 20 நிமிட வீடியோவில் இருக்கும் காமெடி வால்யூ ஒன்றுக்காக மட்டுமே இங்கே பகிர்கிறேன். மற்றபடி ரவீந்திரன் துரைசாமியின் அரசியல் மேதாவித்தனம் எப்படிப்பட்டது என்பதற்காக இல்லை. இசுடாலின், ரஜனி இருவரில் யார் உயர்ந்தவர் என்ற  லூசுத்தனமான கேள்வியை எழுப்பிக்கொண்டு  இசுடாலின் வெர்சஸ் மற்றவர்கள் என்பதுதான் சரியென்று சொல்வதுமே மிகவும் தவறான வாதம்!

மீண்டும் சந்திப்போம்.   

சண்டேன்னா மூணு! #கொரோனாவைரஸ் #அரசியல் #ரஜனிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடி வேண்டிக் கொண்டபடி இன்று நாடெங்கும் மக்களே முன்வந்து ஊரடங்கை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒழுங்கு, சுயகட்டுப்பாடு மிகவும் அவசர அவசியமாகத் தேவைப் படுகிற நேரம் இது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவிவருவதில், வளர்ந்த நாடுகளே தடுமாறிக் கொண்டிருக்கின்றன. வர்த்தகப்போரில் மட்டுமல்ல, இந்த நோய்த்தொற்று பரவலைக் கையாளுவதிலும் கூட அமெரிக்கா தோற்று வருவதாக கடுமையான விமரிசனங்கள் வருகின்றன. நோய்த் தொற்று சீனாவிலிருந்துதான் ஆரம்பித்தது என்ற சர்ச்சையைத் தாண்டி, மருத்துவ உபகரணங்கள் சீனாவிடமிருந்துதான் வந்தாக வேண்டும் என்கிற கள யதார்த்தம் மிகவும் உறுத்தலாகத் தெரிகிறது. கொரோனா வைரசை சோதனை செய்வதற்கான கிட்  தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்ய இந்திய அரசு பேசி வருவதாகத் தெரிகிறது.

        
இது ஊரடங்கு உத்தரவல்ல! ஊரையும் மக்களையும் காப்பாற்றிக் கொள்ளச் செய்யப்படும் அக்கறை என்ற வாசகங்கள் சரிதான்! ஆனால் இது வெறும் டீசர் மட்டும் தான்! மெயின் பிக்சருக்கும் தயாராக இருக்கவேண்டும் என்று பிரதமர் சூசகமாகச் சொன்னதையும் புரிந்து கொள்ள வேண்டுமே! 

வீடியோ 35 நிமிடம் 

குவாரன்டைனுக்கு அனுப்பப் பட்ட பிறகும் கூட தான் ஒரு சினிமா பிரபலம் என்று காட்டிக் கொள்ளும் கனிகா கபூர் மாதிரியான பந்தா பேர்வழிகள் நிறைய உள்ள நாடு இது! இவர்போல சினிமா பந்தா பேர்வழிகளை  நிரந்தரமாக விலக்கி வைப்பது உத்தமம்! வீண் வதந்தி பரப்புகிறவர்களையும் சேர்த்துத் தான்! 


கொரோனா வைரஸ் உலக அரசியல், பொருளாதாரம், எல்லாவற்றிலும் அதிரடி மாற்றங்களை உருவாக்கி விட்டதா? வளர்ந்த மேற்கத்திய நாடுகள் தடுமாறுவதில், வளரும் நாடுகள் எதுவும் தயாராக இல்லாத சூழ்நிலையில், அடுத்தது என்ன என்பதை எவராலும் கணிக்க முடியாது என்று சொல்ல நினைத்தாலும் இங்கே இந்தச் செய்தி வேறுவிதமான சூழ்நிலையை சொல்கிறது.  சீனா உலகத்தின் நட்ட நடுநாயகமாய் ஆவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. American Tianxia பற்றி சால்வடோர் பாபோன்ஸ் இப்போது என்ன எழுதுவார் என்று யாருக்காவது கவலை இருக்கிறதா? ஒபாமா மாதிரியே டொனால்ட் ட்ரம்பும் கிடைத்த வாய்ப்புக்களை அலட்சியப் படுத்தி Making America Great Again என்பதை  வெறும் கோஷமாகக் குறுக்கிவிட்டார் என்று சொல்லி விடலாமா?

    
முதலிலேயே தமிழருவி மணியனை நான் ஒரு காமெடி வால்யூவுக்காக மட்டுமே  பொருட்டாக எடுத்துக் கொள்கிறேன் என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். ரஜனிகாந்த் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்: எந்த நம்பிக்கையில் மனிதர் இத்தனை bold ஆகச் சொல்கிறார்? ரஜனிக்கே அதுபற்றிய தெளிவான பார்வை இருக்குமா? வீடியோ 42 நிமிடம்

மீண்டும் சந்திப்போம்.     

சண்டேன்னா மூணு! அதிசயம்! ஆச்சரியம்! அரசியல்!

இந்த வலைப்பக்கங்களில் 2008 முதல் வெவ்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். 1200 பதிவுகளையும் தாண்டியாகிவிட்டது. ஆனால் இரண்டுமாதங்களாக 2009  அக்டோபரில் எழுதிய ஒரு பதிவு, சீனப் பெருமிதத்திற்கு வயது அறுபது! தத்துவம் யாருக்கு வேண்டும்? தொடர்ந்து அதிகமாக வாசிக்கப்படுகிற பதிவாக இருந்துவருவதைக் கவனித்து வருவதில் நிறைய ஆச்சர்யங்கள்! சீனா செய்திகளில் மட்டுமல்ல, வலைப்பதிவுகளிலும் அதிகம் கவனிக்கப்படுகிற விஷயமாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்வதா? ஆனால் சீனப் பெருமிதத்தை, 2019 அக்டோபரில் சீனா எழுபது என்று நடத்திக் காட்டிய அலப்பறைகளை கொரோனா வைரஸ் தொற்று, அனேகமாக அடித்துக் காலிசெய்து விட்டது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அடி பலம்தான், ஆனால் மீண்டெழுகிற திறமையும் சீனர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது என்பதையும் சேர்த்தே சொல்லியாகவேண்டும்.


இந்த 6 நிமிட வீடியோ 3 நாட்களுக்கு முந்தையது. இதில் சொல்லப்படும் புள்ளிவிவரங்களும் பழசுதான்! ஆனால் நிலைமை என்னவென்று புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். அதைவிட As WHO director general Tedros Adhanom Ghebreyesus warned recently: “Countries invest heavily in protecting their people from terrorist attacks, but not against the attack of a virus, which could be far more deadly and far more damaging economically and socially.”  என்று சொன்னது இன்னும் அதிகப் பொருத்தமாக இருக்கும். உலகமயமாக்கல், உற்பத்திச் செலவைக் குறைப்பது என்ற விஷயங்களில் உலகம் சீனாவின் பிடியில் சிக்கியிருப்பதைக் கவனிக்க வேண்டாமா? இன்னமும் கூட மலிவான மருந்துகளை சீனா தான் தயாரித்து உலகச்சந்தையில் தள்ளிக் கொண்டிருக்கிறது. ஆன்டிபயாடிக் மருந்துகளுக்காக அமெரிக்கா சீனாவைத்தான் முழுதும் நம்பி இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை! வர்க்கப்போரில் டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் கைகளை முறுக்கியதாகச் சொல்லப்பட்டது. ஆனால் சீனா அமெரிக்காவுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் உட்பட மருத்துவப் பொருட்களை விற்பதை நிறுத்தி இருந்தால், ஒரு போரின் நாசத்தை விட அதிக சேதாரத்தை அமெரிக்கப்பொருளாதாரத்துக்கு உண்டாக்கி இருக்கமுடியும்.

Moreover, this is not the first time China has considered weaponizing its dominance in global medical supplies and APIs. Last year, Li Daokui, a prominent Chinese economist, suggested curtailing Chinese API exports to the US as a countermeasure in the trade war. “Once the export is reduced,” Li noted, “the medical systems of some developed countries will not work.” That is no exaggeration. A US Department of Commerce study found that 97% of all antibiotics sold in the US come from China. “If you’re the Chinese and you want to really just destroy us,” Gary Cohn, former chief economic adviser to US President Donald Trump, observed last year, “just stop sending us antibiotics.” என்று பிரம்ம செலானி தன்னுடைய செய்திக் கட்டுரையில் மேற்கோள் காட்டியிருப்பது நிஜம்தான்.  இந்திய மருந்துப்பொருள் உற்பத்தியிலும் கூட சீனாவின் மலிவான மருந்து மூலப்பொருட்களைத் தான் முக்கால்வாசி நம்பியிருக்கிறோம்.


பிரம்ம செலானி மேலே சுட்டி கொடுத்திருக்கும் செய்திக் கட்டுரை மீது சரியான கேள்வியைத்தான் எழுப்பியிருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று மட்டும் சீனாவாக அல்லாமல் வேறொரு நாட்டில் இருந்து  புறப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? 

      
Quint  தளத்தின் இந்த 7 நிமிட வீடியோவில் கொஞ்சம் ஓவராகவே குதிக்கிறார்கள். தேவையே இல்லாமல் சீனபூச்சாண்டி காட்டுகிறார்கள்.  இங்கே ஊடகங்களுக்கு அரசியல் இல்லையென்று யார் சொன்னது?

கானா பூச்சாண்டி! 

கல்லூரி முதல் வருடம் என்று நினைவு. ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டியூட் வாசலில் நண்பனின் ( ஒரு) காதலிக்காக காத்திருந்தோம். படிக்கட்டில் யாரோ இறங்கி வரும் சத்தம் கேட்டது. ஆனால் வந்தது அவள் இல்லை. யாரோ அவன். நான் டேய் வேற எவனோடா என்றேன். அந்த ஒரு வார்த்தை பற்றிக்கொண்டது. அவன் என் கன்னத்தில் அறைந்தான். நான் எனக்குத்தெரிந்த ஒரு தாதாவிடம் அடைக்கலம் புகுந்தேன். அறைந்தவனும் அவரும் முன்பே பரம விரோதிகள். அது எனக்குத்தெரியாது. பெரிய பிரச்சனையாகியது. நானெல்லாம் இடுப்பில் சைக்கிள் செயினை கட்டிகொண்டே சுற்றினேன் 
ஐயப்பனும் கோஷியும் இன்றுதான் அமேசானில் பார்த்தேன். சினிமா இனிமேல் ஒரு ஊரில் ஒரு ராஜா என்றெல்லாம் கதை விடுதல் நடக்காது. ஒரு சின்ன சம்பவம் அல்லது ஒரு பொறி.ஒட்டி நடக்கும் அல்லது நடந்தவை.. இதை மலையாள திரை மொழி வித்தகர்கள் சரியாக பிடிக்கிறார்கள்.. ஐயப்பனும் , கோஷியும்... .. டோண்ட் மிஸ்..
மணி ஜி Sivakumaran Ramalingam

ஆனையை கண்டா நிறுத்து நான் ஓட்டறேன்னு கோஷி சொல்வான். அதுக்கு ட்ரைவர் ஆனையையான்னு கேப்பார். சம்திங்..க்ளா!ஸ்

ஒரு முன்னாள் ராணுவக்காரன்! ஒரு போலீஸ் எஸ் ஐ! இருவருக்கிடையிலான ego clash தொடர்ந்து கொண்டே போவதான ஒரு கதைக்களம். கொஞ்சம் கூடத் தொய்வில்லாமல் படத்தை பிருத்வி ராஜும், பிஜு மேனனும் கடைசிக் காட்சிவரை நகர்த்திக் கொண்டு போகிறார்கள் என்பதைத் தாண்டி படத்தில் என்ன கதை என்ன சொல்ல வருகிறார்கள் என்பதெல்லாம் கேட்கக் கூடாத கேள்விகள்! மம்மூட்டி, துல்கர் சல்மான் நடித்த சமீபத்தைய காவியங்களைப் பார்த்திருந்தால் மணி ஜி நிச்சயமாக மலையாளத் திரையுலகுக்கு இப்படி ஒட்டுமொத்தமாக சர்டிபிகேட் கொடுத்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். மணிஜி அந்த field க்குள் இருந்து வியக்கிறார். வெறும் பார்வையாளனாக இருந்து என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன் என்பதில் அரசியல் எதுவுமில்லை!  

ச்சும்மா ஜாலிக்கு! ஒரு மாறுதலுக்காக. மீண்டும் சந்திப்போம்.