அப்புறமும் என்ன பஞ்சாயத்து? வாய்ஸ், சவுண்ட் உடறது?
கேட்டுக்கு வெளியே வந்து நிருபர்களிடம் பேசவில்லை. சும்மா ட்வீட்டரில் ஒரு கீச்சு! அவ்வளவுதான்! அதற்கே தராசு ஷ்யாம் லபோதிபோவென அடித்துக் கொள்கிறார். கொரோனா விபத்தில் நீண்ட தூக்கத்திலிருந்து ரஜனிகாந்த் இப்போதுதான் விழித்துக் கொண்டிருக்கிறாரா என்பது ஷ்யாம் வெளிப்படுத்தியிருக்கிற சந்தேகம். ஆக ரஜனி என்ன பேசினாலும் எதிர்ப்பது என்று ஒரு கும்பல் அலைவது தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.ரஜனியும் சரி, எதிர்க்கிற கும்பலும் சரி கஜானாவை நிரப்ப வேறு நல்ல வழிகள் எவை என்பதைச் சொல்ல ஒரு சின்ன முயற்சிகூடச் செய்ய முடியவில்லை என்பது தமிழக அரசியல் களத்தின் ஆகப்பெரிய பரிதாபம்! குறைகளைமட்டுமே ஊதிப்பெரிதாக்குவோம் என்று அலைகிறவர்களிடம் நேர்மறையான சிந்தனை செயல்களை எதிர் பார்க்க யூடியுமா என்ன?
பாண்டே பார்வை என்கிற தலைப்பில் இந்த 31 நிமிட வீடியோவில் ரங்கராஜ் பாண்டே அதிமுக - பாஜக உறவில் விரிசல் ஆரம்பம் என்று விரிவாகப் பேசியிருக்கிறார். எனக்கு வருகிற சந்தேகம் எப்போது இந்த இரண்டுகட்சிகளுக்கும் சுமுகமான உறவு இருந்தது என்பது தான்! காரியத்துக்காக பரஸ்பரம் சொறிந்து கொண்டதையெல்லாம் சுமுக உறவு என்று எடுத்துக் கொள்ள முடியுமா?
ரசனிகாந்து வாய்ஸ் கொடுத்துவிட்டார்! ரங்கராஜ் பாண்டேவும் தன்னுடைய எக்ஸ்பெர்ட் கருத்தை நீட்டி முழக்கிச் சொல்லிவிட்டார் என்பதெல்லாம் சரி! ஆனால் மேலே ஜயகாந்த் என்றொருத்தர் நச்சுன்னு ஒரு கருத்தைச் சொல்லி முடித்துவிட்டாரே, அதற்கென்ன சொல்வீர்களாம்?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!