மண்டேன்னா ஒண்ணு! #கொரோனா அரசியல்! சீனத்துச்சண்டியர் முண்டா தட்டுகிறார்!

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முடிகிறதோ இல்லையோ அதைவைத்து படு கேவலமாக அரசியல் செய்வதில் இங்கே கழகங்களுக்குத் தாங்களும்  சற்றும் இளைத்தவர்களில்லை என்று சீனத் தம்பட்டங்கள் கிழிந்து தொங்கிப் போனபிறகும் கூட விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிற வேடிக்கை,  விசித்திரத்தைக் கவனிக்கிறீர்களா? 

 

அதென்னவோ டூத் பேஸ்ட் விளம்பரங்களாகட்டும், அந்தநாளைய ராம்ஜேத் மலானிகளாட்டும், இன்று சீனாவாகட்டும் பத்து இல்லையென்றால் பத்தாது போலிருக்கிறது! கேப்டன் அமெரிக்கா என்னவானார் என்பதுள்ளிட்டு ஒரு பத்துக்கேள்விகளை  அமெரிக்காவிடம் கேட்கிறதாம் சீனா! வீடியோ 4 நிமிடம். 



வடகொரிய அதிபர்கிம் ஜாங் உன்  உயிரோடிருக்கிறாரா என்பதையே கேள்விக்குறியாக்கி கண்காது மூக்கெல்லாம் வைத்து பரபரப்புச் செய்திகளை அமெரிக்க ஊடகங்கள் கடந்த மூன்று வாரங்களாக ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கிற விதமாக கிம் கிறுக்கன் பொது மக்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டாராம்! தவறான அறுவைச் சிகிட்சை, மூளைச்சாவு, அடுத்துப் பதவியேற்கப்போவது யார், கொரிய தீபகற்பத்தில் போர் மூளுமா இப்படிச் செய்திகளை தந்தி மாதிரி முந்திக்கொண்டு தந்ததெல்லாம் பொய்யாகிப்போய்விட்டது. ஏற்கெனெவே கொரோனா வைரஸ் தொற்றைப் பரவவிட்டதில் உலகாநாடுகளிடம் கெட்டபெயரைச் சம்பாதித்துக்கொண்டிருக்கும் சீனா, கிம் ஜாங் உயிரோடிருப்பதில் கொஞ்சம் நிம்மதிப்பெருமூச்சு விடுகிற மாதிரி! என்னதான் சீனா ராணுவ ரீதியில் பலசாலிதான் என்றாலும், சீனப் பொருளாதாரம் செம அடி வாங்கியிருக்கிற சூழலில் ஒரு போரையும் சமாளிக்கவேண்டுமென்றால் மெத்தக்கனம் தான்! ஆனாலும் தென்சீனக்கடலில் தன்னுடைய முழு ஆதிக்கத்தைக் காட்டிக் கொள்வதற்காக, மலேசியா அருகே அமெரிக்கக் கடற்படைக் கப்பலொன்றை சீனக்கடற்படை வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருக்கிறது. 

 

சீனத்துச் சண்டியர் எதைப்பற்றியும் கவலைப்ப்டாமல் தொடர்ந்து முண்டா தட்டுகிறார்!  டிஜிட்டல் கரன்சியை பரீட்சார்த்தமாக வெள்ளோட்டம் விட்டிருக்கிறார்கள். பிட் காயின் பற்றிக்  கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ப்ளாக் செயின் டெக்னாலஜி பகுறி இந்தப்பக்கங்களில் முன்னர் எழுதியது நினைவு இருக்கிறதா? டிஜிட்டல் கரன்சிக்கு மாறுவது உட்பட பிளாக் செயின் டெக்னாலஜிக்கு  மாறுவது பற்றி ஷி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சி ப்ளீனத்தில் பேசியத்தைக் கூட முன்பு  எஹுதியிருக்கிறேன். இந்த 25 நிமிட வீடியோவைக் கொஞ்சம் பாருங்கள். சிலவிஷயங்கள் புரியவரலாம். 

மீண்டும் சந்திப்போம்.   

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!