இட்லி வடை பொங்கல்! #69 கொரோனா அலப்பறைகள்! ரங்கராஜ் பாண்டே! ராஜசங்கர்!

கொரோனா தாக்கமும் கூட ஒரு மெகா சீரியல் ரேஞ்சுக்குப் போய்க்கொண்டிருப்பதில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதிலேயே பெருங்குழப்பம் ஏற்பட்டிருந்தால் அதில் ஆச்சரியப் பட ஒன்றுமே இருக்காது. ரங்கராஜ்  பாண்டே மாதிரி குழப்பங்களைக் கூடச் செய்தியாகத் தருகிற கலை தெரிந்தவர் இப்போது என்ன சொல்கிறார்? வீடியோ 34 நிமிடம் 

 

ஒன்னு ராணுவத்தையும் மத்திய ரிசர்வ் போலீஸையும் இறக்கி மாநில ரிசர்வ் போலீஸையும் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து ஊரடங்கை அமல் படுத்தி வெற்றிகரமாக கொரோனா வை கட்டுப்படுத்தியிருக்கவேண்டும். அது செய்ய முடியவில்லையா சரி இனிமே மாநில அரசுகள் பிரச்சினை எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லி கை கழுவியிருக்கவேண்டும்.

இரண்டும் செய்யாமல்

மத்திய அரசு திட்டமிடும் உத்தரவு போடும் ஆனால் மாநில அரசுகள் செஞ்சால் செய்யலாம் செய்யாவிட்டால் இல்லை என்றால் இந்த ஊரடங்கு தோல்வியடைந்தால் அதற்கான பொறுப்பு மத்திய அரசுமீது தான் விழும்.

எதுக்கு இந்த மே 4க்கு அப்புறம் செய்யவேண்டியதை மத்திய அரசு அறிவிக்கவேண்டும்??
மாநில அரசுகளே செய்து கொள்ளலாம் என விட்டுவிடவேண்டியது தானே? ரயில் விமானப் போக்குவரத்தையும் மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் இயக்குவோம் என சொல்லி முடித்திருக்கவேண்டியது தானே?

எதுக்கு இந்த வேண்டாத வெளங்காத வேலை?

சரி அப்படியே திட்டம் போட்டு காட்டினார்கள் சரி எப்படி அதை செய்வது?
பைக்கிலே ஒருவர் மட்டும் போலாம் என சொன்னால் எப்படி அதை செய்வது?
போலீஸை பார்த்தபின்னர் ஒரு ஆள் இறங்கி கொண்டால் என்ன செய்வீர்கள்?

நம்மாட்கள் ஸ்பீடு பிரேக்கர் வைச்சாலே அல்லையிலே போகும் ஆட்கள், அவிங்க கிட்டே போயி இதெல்லாம் சொன்னால் நடக்குமா?

சினிமா, பார்க்கு பீச்சு மூடியது ஓக்கே. அதென்னா ஜிம், ஓட்டல், டீக்கடை எல்லாம்?

மக்கள் வேலைக்கு வரனும் ஆனால் சோறு திங்க ஓட்டல் இருக்காது, பஜ்ஜி வடை திங்க டீக்கடை இருக்காதுன்னா எப்படி செய்யறது?
மக்கள் வேலை செய்யலாம் அதுவும் விவசாய வேலையும் செய்யலாம் ஆனால் பஸ் இருக்காது அவிங்க அவிங்க வண்டியிலே போய் செய்யலாமின்னா

அப்படி எத்தினி பேருப்பா வண்டியிலே போயி கூலி வேலை செஞ்சுட்டு வர்றாங்க? அவிங்க சம்பாதிக்கறது அந்த பெட்ரோலுக்கு கட்டுமா?

என்ன இதுன்னே தெரியல இவிங்களோட திட்டம் எல்லாம்.

ம்ஹூம்.

இதிலே ஆங்காங்கே தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளிகளை ஊருக்கு அழைத்து போகவும் திட்டமாம். எப்படி? உற்பத்தி செய்யலாம் ஆனால் வெளிமாநில தொழிலாளிகளை ஊருக்கும் அனுப்பிடலாம்.

இதிலே வேற கொரோனா கேஸ் எல்லாம் பூஜ்ஜியம் வந்தாத்தான் அது கீரீன் சோனுக்கு வருமாம்.

எப்படி எப்போ நடக்கும் அது? பூஜ்ஜியம் ஆவது இன்றைக்கு அல்ல இன்னும் 10 வருடம் ஆனாலும் நடக்காது.

மலேரியா கேஸை பூஜ்ஜியம் ஆக்கவே இன்னும் முடியல. இதிலே கொரானா உடனே பூஜ்ஜியம் ஆகனுமா?

இந்த திட்டம் எல்லாம் போடும் அறிவாளி யாருன்னே தெரியல.

இதுல கோடிக்கணக்கிலே சாவாங்க என உருட்டு வேற. கொரோனா கொடிய நோய் தான் அதைப்பத்தி தனியா எழுதறேன் ஆனா அதுக்கு முன்னாடி பசியிலே உசிரு போனா?

இங்கே மாநில அரசு செய்யும் தப்புக்கும் மோடிக்குத்தான் திட்டு விழப்போவுது.

சரி சரி சொல்லி வைப்போம். தாமரை மலர்ந்தே தீரும்.

நண்பர் ராஜசங்கர் தெளிவான விளக்கவுரையை முகநூலில் ரங்கராஜ் பாண்டேவுக்கு முன்னாலேயே எழுதிவிட்டார். இடுக்கண் வருங்கால் நகுக என்பதற்காகவே கடைசிவரியை எழுதியிருப்பார் போல! 



உங்கள் ஏரியா என்ன வண்ணத்தில்? எதற்கெல்லாம் யெஸ்ஸு எதற்கெல்லாம் தடா என்று சார்ட் போட்டே சொல்லியிருக்கிறார்கள். கொரோனா அலப்பறைகள் எல்லைகடந்து போய்க்கொண்டு இருப்பதாக  உணர்கிறீர்களா? சகித்துக்கொண்டு நாட்களைக் கடத்துவதன்றி வேற்றுவழி இல்லை! 


மீண்டும் சந்திப்போம்.  

2 comments:

  1. பசிப்பிணியை நீக்குவதே முதல் செயலாக இருக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. முடிந்ததைச் செய்துகொண்டுதானே இருக்கிறார்கள் DD! அரசு செய்வதுபோக,நம் ஒவ்வொருவருக்கும் கூட சமுதாய பொறுப்பு இருக்கிறதே!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!