ஒருவிதத்தில் ஜோதிமணி பாவம் தான்! ஆனால் அவரை விட நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த கரூர் தொகுதி மக்கள் மிகவும் பாவம் என்று எவருமே சொல்ல மாட்டேன் என்கிறார்களே! இந்திய அரசியலைக் காங்கிரஸ் எந்த அளவுக்குக் கெடுத்துச் சீரழித்திருக்கிறது என்பதற்கு காங்கிரசுக்கு கிடைத்த புது ரத்தம் ஜோதிமணியே ஒரு நல்ல உதாரணம்.
கிழக்கு வெளியீடுகள் எதையும் வாங்குவதில்லைஎன்று முன் ஒருகாலத்தில் உறுதியாக இருந்ததுண்டு. இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு போல அபத்தமான புத்தகம் படித்த பிறகு அந்த எண்ணம் மேலும் உறுதியானது. ஆனால் என் மகனுக்கு அப்படி சங்கல்பமெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட ஒரு இருபது புத்தகங்களுக்கும் மேல் கிழக்கு வெளியீடுகளாக வாங்கிப் படித்துவிட்டு இங்கே தள்ளிவிட்டிருக்கிறான். அதில் வினய் சீதாபதி எழுதியதன் தமிழ்வடிவமும் ஒன்று. நீண்ட நாட்களுக்கு முன் திருப்பூர் ஜோதிஜி இந்தப்புத்தகம் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வரவே நேற்று முன்தினம் வாசிக்க எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த நாளைய அரசியல் நிகழ்வுகளை நினைவு படுத்திக் கொண்டு வாசிப்பு தொடருகிறது.
என்னமோ ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தை வாசிக்க எடுத்துக் கொண்டதாகப் பீலா விட்டிருந்தது என்ன ஆயிற்று? வெறும் 80 பக்கங்களிலேயே மூடி வைத்தாயிற்று! எங்கள் தொகுதி எம்பி வடித்த காவியங்கள் காவல்கோட்டமும் வேள்பாரியும் எதிரே ஷெல்பில் இருந்தாலும் எடுத்துப்படிக்க இன்னமும் மூடு வரவில்லை!
மீண்டும் சந்திப்போம்.
அண்ணன் ஜோதிஜிக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteசொல்லிட்டாப்போச்சு DD!
Delete