கொஞ்சம் இடைவெளி விட்டு இன்றைக்கு எழுத நினைத்தபோது தான் சில விஷயங்களைப் புரிந்துகொள்ளமுடிந்தது. தி. ஜானகி ராமன் சொன்னமாதிரி எழுத்து வாசிப்பு என்பது அவரவர் ஆத்ம திருப்திக்காக மட்டுமே! உண்மைதான் இல்லையா?!
இப்படியெல்லாம் குழப்பிக்கொள்ளாமல், மாற்றி யோசித்தால் நான் ஜெயமோகனுக்கோ அல்லது உண்மைத்தமிழனுக்கோ போட்டியாக இங்கே நான் எழுத வரவில்லை. அது என்னுடைய வேலையுமில்லை! அடிப்படையில் நான் ஒரு வாசகன் மட்டுமே! நல்ல எழுத்தைக் கொண்டாடும் மனநிலையில் எழுதுவதற்கு ஆரம்பித்தது, இன்றைக்கு எல்லா விஷயங்களையும் தொட்டு எழுதுகிற அளவுக்கு 1250+ பதிவுகளைத் தாண்டி நிற்கிறது.
எனக்குப் பிடித்த பதிவர் சேத் கோடின் இங்கே சொல்கிற மாதிரி ஒவ்வொரு துளித்துளியாக, ஒரு கமிட்மென்ட்டுடன் எதையும் செய்யவேண்டும் என்பதைத்தாண்டி வேறென்ன விசேஷமாகச் சொல்ல இருக்கிறது? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இப்போது வாசிப்பில்!
வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை புத்தகம் வெளிவந்து நீண்ட காலமாகிறது. முக்குலத்தோர் வரலாறு எனக்குப் பரிச்சயமானதுதான் என்பதால் பதிவர் குட்டி டின் என்கிற தினேஷ் ராம் இதற்கு ஒரு விரிவான விமரிசனம் எழுதியதைப் படித்த பிறகும் கூட வாசிக்கத் தோன்றியதில்லை. இப்போது தவற விட்ட நிறைய புத்தகங்களைத் தேடியெடுத்து வாசிக்க அவகாசம் கிடைத்து இருக்கிறது.
மீண்டும் சந்திப்போம்.
காணோமே என்று பார்த்தேன்.
ReplyDeleteஎங்கே போய்விடப் போகிறேன் ஸ்ரீராம்? கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்று வந்தாயிற்று! :-))))
Deleteமின் அஞ்சல் திறந்தாலே உங்கள் பதிவுகள் முதலில் என் கண்களுக்குத் தெரியும். சில நாட்களாக இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
Deleteடிவி விவாதங்கள் செய்திகள் பார்க்காமல், பேசாமல் ஒரு பத்துநாளாவது இருக்கமுடியுமா என்று என்னை நானே சோதித்துக் கொண்டேன் ஜோதிஜி! ஒரு விஷத்தை முறிக்க இன்னொரு விஷத்தைப் பயன்படுத்துவது போல ஹாட்ஸ்டாரில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை ஆரம்பத்தில் இருந்து 579 வது எபிசோட் வரை பார்த்துக்கொண்டிருந்ததில் இரண்டுவாரம் ஓடிப்போய்விட்டது! :-))))
Deleteஎங்கே உங்களைக் காணோம்? நாளுக்கு மூன்று இடுகைகளாக வருமே....
ReplyDeleteவாருங்கள் நெ.த.!
Delete//நாளுக்கு மூன்று இடுகைகளாக// கிண்டலை ரசித்தேன்! எவர் பார்வையிலும் படாமல் இருந்த காரணத்தை மேலே ஸ்ரீராமுக்குக் கொஞ்சமும் ஜோதிஜிக்கு முழுசுமாகச் சொல்லியிருப்பதைக் கவனிக்கவில்லையா?
ஆக, பதிவில் சேத் கோடின் என்ன சொன்னார் என்பதை யாருமே சட்டை செய்யவில்லை!